அத்தியாயம் 9

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவன் வரவை கண்ட மாணவ மாணவிகள் எல்லோரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆண்களையே வசீகரிக்க வைக்கும் தோற்றம் கொண்டவன் ஆதி...

ஆண்களுக்கே உரிய மீசையோடு அன்றாடம் செய்யும் சேவில் பளபளத்த தாடியும், அடர்ந்த சீகையும், தோரணையுடன் இருந்த அவனது ஆறடி உயரமும் அவனுக்கு வசீகரத்தை வாரி வாரி கொடுத்தது.

அதை கண்ட பெண்கள் அனைவருக்கும் ஏக்கமாய் போனது இவனை மாதிரி ஒரு துணை கிடைக்காதா என்று... ஆதி எட்டா கொம்பாயிற்றே.. அதனால் வெறும் பார்வையால் மட்டும் அவனை கபாலீகரம் செய்தனர்.

வரவேற்பு பெண்களும், சில முக்கிய பேராசிரியர்களும், ப்ரின்சியும் அவனை வாசல் வரை வந்து வரவேற்று மேடை ஏறி அமரும் வரை, கூட இருந்து அவனுக்கு வசதி செய்து கொடுத்தார்கள்.

அதன் பின் மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது...

“பெண்ணின் பெருமையை பற்றி நம்ம கரஸ்பாண்டன்ட் மிஸ் மயூரா தேவி அவர்கள் நம்மோடு பகிர்ந்துக்கொள்ள வருகிறார்கள்...” என்ற குரலுக்கு அடுத்த படியாக மயூவின் குரல் அந்த அரங்கம் முழுவதும் கன கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்தது...

“அனைவருக்கும் வணக்கம்...” என்று தொடங்கியவள், குறிப்பிட்டு ஆதியை வெல்கம் பண்ணி அவனது பிசி செட்யூலுகளுக்கு இடையில் இந்த கல்லூரிக்கு வந்ததுக்கு நன்றி சொன்னவள்,

சங்க காலத்தில் இருந்த பெண்பால் புலவர்கள் முதல் இன்றைக்கு சாதனை படைக்கும் பெண்கள் வரை முழுதான ஒரு அறிக்கையை கொடுத்து அனைவரையும் அசத்தினாள்...

அவளது பேச்சை கேட்ட ஆதி எப்பொழுதும் போல தன்னுள் புன்னகைத்துக் கொண்டான். அவள் பேச ஆரம்பித்தாலே அரங்கம் முழுவதும் கப் சிப் தான். அவளது ஆளுமை பண்பையும், அவளுள் இருக்கும் ஆசிரிய திறமையையும் பார்த்து தான் இந்தியாவில் இருக்கும் அத்தனை கல்லூரியையும், பள்ளிகளையும் அவள் வசம் ஒப்படைத்திருந்தார் கேசவன்.

அவள் பொறுப்பெடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த அனைத்து பள்ளி கல்லூரிகளும் அதிக அளவில் மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்து இருந்ததோடு, அதிக அளவில் நற்பெயர் வாங்கியது மக்களிடையே...

இள மஞ்சள் மற்றும் இளம் ரோஜா வண்ணம் கலந்த பேப்பர் சில்க் சேரியில், ஒற்றையாய் விட்டிருந்த மாராப்பிலும், நவீன அலங்காரமாய் தைத்து இருந்த ரவிக்கையும், அவளை அன்றலர்ந்த மலர் போல காட்டியது.

அதிலும் மிடுக்கோடு கம்பீரமாக இருந்தவளை கண்டு அரங்கத்தில் உள்ள அத்தனை பேரும் வாயில் ஈ போவதை கூட உணராமல் மயூரா தேவியையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

இடை தாண்டி இருந்த கூந்தலை அழகாய் ஸ்டேப் கட்டிங் பண்ணி அலை அலையாய் விரிந்திருந்த கூந்தலை ஒரு பக்கம் மட்டும் வைர பூங்கொத்து பின்நூசியில் அடக்கி இருந்தவள், மற்றைய பக்கம் அப்படியே ப்ரீயாக விட்டு இருக்க அது கூட அவளது அழகை இன்னும் மெருகூட்டியது.

கண்ணில் இட்ட மையும், காதோரம் சொருகி இருந்த தங்கம் வைரம் கலந்த அலங்கார பூங்கொத்து பின்னூசியும், அவள் அணிந்து இருந்த வைரங்களும் அவளை இன்னும் பேரழகாகியாக காண்பித்தது.

அவள் அசையும் போதெல்லாம் இளம் பிங் வண்ணத்தினால் ஆன  வைர தொங்கட்டானும், அதே வண்ணத்தில் ஆன கழுத்தில் அணிந்திருந்த மலர் அலங்கார வைர மாலையும், கையில் இருந்த வைர காப்பு விரல்களின் நுனியில் இருந்து மணிக்கட்டு வரை கொடி போல படர்ந்து அழகாய் பரவி இருந்தது. அதில் மணி மகுடமாய் இருந்த பிங் வண்ண வைர கல்லும், அதன் இடையில் அழகாய் வெள்ளி தங்கம் வளைந்து நெளிந்து ஓடி, இடையை இடையே சிறிய, சற்று பெரிய கற்களும் கொடியோடு பின்னி பிணைந்து இருந்தது. இன்னொரு கையில் வரைத்தாலான கை கடிகாரமும் மினுங்கி மினுங்கி... அவளை இன்னும் இன்னும் கம்பீரமாக காட்டியது.

இளமையில் இருக்கும் செழிப்போடு, இயற்கையில் வந்த கம்பீரமும், கல்வி கொடுத்த நிமிர்வும், அளவில்லாத செல்வ வளமையும், அன்பு கொண்ட உள்ளமும் அவளை பேரரசியாகவும், இளவரசியாகவும் காண்பித்தது..

ஆதி தேவனுக்கு ஏற்ற மயூரா தேவியாக மிளிர்ந்தாள் நம் மயூரா... அதில் ஆதி தேவனுக்கு அவ்வளவு பெருமை...

அரங்கையே தன் வசப்படுத்தி இருந்தாள்... அவள் சொல்லும் சொற்கள் அத்தனையும் வேதம் போல இருந்தது அங்கிருந்தவர்களுக்கு...

முதலில் தமிழில் பேசியவள் அதன் பின்பு ஹிந்தியில் மற்ற மாணவர்களுக்கு புரிவது போல பேசி அனைவரையும் கவர்ந்தாள்.

அதன் பின் சாதனை பெண்கள் என்னும் பட்டியலில் அவர்களின் கல்லூரியில் திறமையாக வேலை செய்யும் துப்புரவு தொழில் முதல் ஆசிரியர்கள் வரை உள்ள பல பெண்களை கெளரவப் படுத்தினாள்...

ஆதி தேவனை அழைத்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க சொல்லி கேட்க, அவனும் தன் மேல் கோட்டை அவிழ்த்து வைத்து விட்டு, முழு கை சட்டையை கையின் மேல் புறம் மடித்து ஏற்றியவன், மிக எளிமையாய் அவர்களுக்கு பரிசு வழங்கினான்.

புல் சூட்டில் இருந்த பொழுது ஒரு அழகு என்றால், இப்பொழுது கோட் இல்லாமல், கையை மேலே மடக்கி விட்டு இயல்பாய் இருந்த இந்த தோற்றம் அதை விட அழகாய் மனதை கவர்ந்தது...

யாருடைய கவனத்தையும் கலைக்காமல், “எதுக்கு இப்போ கையை ஏத்தி விட்டு இருக்கீங்க. கை சட்டை கசங்கி போகும்..” என்றவளின் பொறாமையை கண்டு சிரித்தான்.

ஏனெனில் கன்னி பெண்களின் பார்வை முழுவது அவனின் உரம் மிகுந்த கைகளிலே இருந்தது.

அடர்ந்த முடி சுருண்டு இருந்த கைகளில் வைர கடிகாரமும், வெள்ளி தங்கமும், தங்கமும், வைரமும் கலந்து செய்ய பட்ட கை செயினும் அவனுக்கு இன்னும் அழகை கூட்டி கம்பீரத்தையும் கொடுத்தது.. அதிலிருந்து பார்வையை மீட்க முடியாமல் சிக்கிக்கொண்டு இருந்தது பெண்களின் மனமும், பார்வையும்...

அதை கண்டவளுக்கு உள்ளுக்குள் படபடப்பாய் போனது.

அதை உணர்ந்தவன் லேசாய் சிரித்து,

“நீ பேச்சு சுவாரஸ்யத்தில முந்தானையை உன் இடுப்பில் சொருகி இருக்க...”

“அதுக்கு...” அவள் சற்றே விக்கித்தாள்.

“அதுல லேசா உன் ஹிப் தெரியுது... நீ அப்படி இருக்கும் போது நான் புல் சூட்ல இருந்தா நல்லா இருக்காதுன்னு தான் என் கோட்டை கழட்டினேன்.. இப்போ ரெண்டு பேரும் மேட்ச்சா இருக்க மாதிரி இருக்கும் இல்லையா...? இன்னும் ஒன்னு...” என்றான்.

“என்ன...”

“உன் முந்தானையும் கசங்கி தான் இருக்கு..” என்றவனின் விளக்கத்தில் கண்கள் கலங்கியது...

“ஆதி...”

“நீ எப்படி இருக்கியோ அது மாதிரி தான் நானும் இருப்பேன்..” என்று சொன்னவன் நகர்ந்து சென்று பரிசுகளை கொடுக்க தொடங்கினான்.

மயூவுக்கு தான் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது. அதும் அவன் அடுத்து செய்த செயல்களில் இன்னும் கலங்கியது.

தன் உதவியாளரை அருகில் அழைத்து அந்த நிகழ்வை போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தவரிடமிருந்து இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டவை மட்டும் தனியாக வாங்கி வர சொல்லி பணித்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 20, 2026 11:16 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top