அத்தியாயம் 8

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவள் சென்ற அடுத்த நொடி அந்த காரை அழுங்காமல் குலுங்காமல் ஆதி காரை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார்கள் பணியாளர்கள்..

அவர்களுக்கே தெரிந்து இருந்தது ஆதியும் மயூவும் வேறு வேறு இல்லை என்று.

ஏனெனில் அங்கு ஒவ்வொருவருக்கும் தனி தனி பார்க்கிங் உண்டு.. கேசவன், சீதா, ஆதி மயூ இவருடைய உடன் பிறந்தவர்களுக்கும் தனி தனி பார்க்கிங் உண்டு. ஆனால் மயூவுக்கும் ஆதிக்கும் மட்டும் ஒரே பார்க்கிங் தான்.

இவருக்குரிய இடம் மட்டும் அதிக அளவில், பெரும் கலை நயத்தோடு அமைந்து இருக்கும். வெறும் பார்க்கிங் பிளேசே இப்படி என்றால், மற்றவை எல்லாம் சொல்லவும் வேண்டுமா என்ன...?

காரில் நிலவிய மௌனத்தை இருவரும் கலைக்க முன் வரவில்லை என்றாலும், இருவரின் மனம் ஆயிரம் பேசியது தன்னுடைய துணையிடம்.

அவன் ஏதாவது  பேசுவான் என்று எதிர் பார்த்தாள். ஆனால் அவன் எதுவும் பேசவில்லை. கார் ஓட்டும் அழகில் மனம் கொள்ளை போனாலும் அவனது இறுக்கம் அவளை கலங்கடிக்கவே செய்தது.

அதனால் அவனை கலைக்காமல் அமைதியாகவே வந்தாள். புகழ் பெற்ற அந்த கல்லூரியின் முன் வந்து நிறுத்தினான் காரை.

ஆக்ஸ் போர்டுக்கு இணையாக இந்தியாவில் அதும் மும்பையில் ஏற்படுத்தி இருந்தார்கள் கேசவனின் பெற்றவர்கள். மூன்று தலை முறையாக வழி வழியாக வந்துக்கொண்டு இருக்கிறது கல்லூரி..

மும்பையில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தங்களது கல்லூரியை நிறுவி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் வெற்றிகரமாக...

படித்து முடிக்கும் வேளையில் பிளேஸ்மென்ட்டோடு உயர் கல்விக்கும் வழிவகை செய்து தருகிறார்கள். பாதி சீட் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும், உதவி கோரும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். அதனால் ஏழை மாணவர்களும் அந்த கல்லூரியில் பயின்று வருகிறார்கள்.

இப்படி பல பேரின் வாழ்க்கையை ஏற்றி உயரத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் கேசவனின் வம்சா வழிகள்... அதில் ஆதிக்கு அதிக பங்கு உண்டு...

அதையெல்லாம் எண்ணியவளுக்கு அவனை நெருங்க மட்டும் அச்சமாய் இருந்தது. கதவை திறந்து இறங்கியவளை இழுத்து உள்ளே தள்ளியவன் எட்டி கதவை சாத்தினான்.

அவனது தொடுகையில் அதிர்ந்து போய் விழிகளை விரித்தாள் மயூ.

“ஆதி...” சொல்லி முடிக்கும் முன் அவளது இதழ்களை இறுக்கமாக கவ்விக்கொண்டான் ஆதி. அவனது செயலில் திகைத்தவள் சுற்றிலும் கண்களை ஓட்டினாள்.

அவளது இணங்காத தன்மை அவனை உசுப்பி விட அவளது இடையை வலிக்குமாறு பற்றினான்... ஆனாலும் அவளால் அவனுடன் ஒன்ற முடியவில்லை.

“ம்ம்ம்ம்...” என்று முனகி அவனுடைய பிடியிலிருந்து விலக முயன்றாள்.

தொடர்ந்த அவளது போராட்டம் அவனுள் இன்னும் கோவத்தையே கிளப்பி விட, கொஞ்சமும் யோசியாமல் அவளை வன்மையாக கையாள தொடங்கினான்.

இதழ்களை முற்றுகை இட்டவன், தன் பற்களை கொண்டு அவளது இதழ்களை காயம் செய்ய, அதில் இன்னும் திகைத்து போனாள்.

“விடுங்க ஆதி...”

“...”

“ஆதி நான் போகணும்... ப்ளீஸ்...”

“ஏன் நான் தொடுவது பிடிக்கலையா...?” என்றவன் மேலும் அவளிடம் வன்முறையாக நடக்க தொடங்க..

“கல்லூரிக்கு முன் இதென்ன... இப்படி...” என்றவள் அதன் பின்பே தன் தவறு புரிய

“ஆதி இப்போ வேணான்னு தான் சொன்னேனே தவிர உங்க தொடுகை பிடிக்காம இல்ல..” என்றவள் தன் இரு கரத்தாலும் அவனது முகத்தை தாங்கியவள் மென்மையாக அவனது இதழ்களை கவ்வி தன் இதழுக்குள் இழுத்துக்கொண்டாள். அதில் சற்றே அமைதிக் கொண்டவன் அவளது செய்கையில் தன்னை ஒப்படைத்து நின்றான்.

அவனது செயலில் மனம் கரைந்தவள் மேலும் அவனிடம் ஒன்றி, அவனுக்கு பிடித்தமான வகையில் அவனது இதழ்களை கவ்வி கவி பாடினாள் மயூ..

அவள் தந்த முத்தத்தில் சித்தம் பித்தானவன் அவளை விட மறுக்க, தன் தளிர் விரல்களால் அவனது முகத்தை வருடி அவனது நெஞ்சில் சாய்ந்தவள்,

“முக்கியமான ப்ரோக்ராம் இருக்கு. கண்டிப்பா அட்டென் பண்ணியே ஆகணும் ஆதி... விழா முடுஞ்சவுடன் வந்து விடுகிறேனே...” கெஞ்சியவளிடம்,

“சரி அப்போ நானும் வரேன்..” என்றான்.

“நீங்க வந்தா எனக்கு ஸ்பீச்சே வராது ஆதி...” சிணுங்கினாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “நான் டிசைட் பண்ணிட்டேன்.. சோ நீ எல்லாத்துக்கும் தயாரா இரு..” என்றவன் காரை விட்டு கீழே இறங்கி கரஸ்பாண்டன்ட் அறைக்கு செல்ல, அவளும் அவனின் பின்னோடு சென்றாள் அவனை எப்படியாவது தடுக்கும் நோக்குடன்.

ஆனால் அவளை விட அவன் அதிக வேகமாக இருந்தான். ஆதி கல்லூரியில் காலடி எடுத்து வைத்த செய்தி காற்று தீப்போல பரவ, ஆங்காங்கே கூடி இருந்த மாணவர்கள் முதற்கொண்டு பேராசிரியர்கள் வரை எல்லோரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ள கல்லூரியே பரபரப்பானது.

அதை பார்த்தவளுக்கு இதெல்லாம் தேவை தானா என்று ஒரு பார்வை பார்த்தாள் தன்னவனை. அவனோ அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் ப்ரின்சி சொன்ன விசயத்தை கவனத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தான்...

“சார், நீங்க வருவீங்கன்னு தெரியாது... அப்பாவுக்கு அழைப்பு குடுத்தோம். அவரு பிசின்னு சொன்னாரு...” தயக்கத்துடன் பேசியவரை நிமிர்ந்து பார்த்தான். ‘அதுக்கு என்ன என்பது போல’

“இல்ல சார்... நீங்க இந்த விழால கலந்துக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்... அதான் உங்க பேரை இன்விடேசன்ல போடவான்னு...” முடிக்க முடியாமல் திணறினார் அவர்.

சிறிது நேரம் யோசித்தவன் போனால் போகட்டும் என்று “ம்ம்ம்...” கொட்டினான். அவன் கொடுத்த பில்டப்பில் மயூவிக்கு தான் உதறல் எடுத்தது. ப்ரின்சி அந்த பக்கம் சென்றவுடன் வேகமாய் ஆதியிடம் விரைந்தவள்,

“ஆதி ப்ளீஸ்...” என்றாள்.

“உன்னோட ஸ்பீச் எப்படி இருக்குன்னு நானும் கேட்கிறேன்... தட்ஸ் ஓவர்...” என்றவன் அவளை தன்னிடம் இழுக்க,

“வேலை இருக்கு. நான் போகணும் ஆதி... விடுங்க” என்றவள் அவனிடமிருந்து விலகி வெளியே சென்றுவிட்டாள்.

மனதில் சிறு கோபமும் தாபமும் எழுந்தாலும் கல்லூரியை நினைத்து தன்னை அடக்கிகொண்டான்.

பிரம்மாண்டமான கல்லூரி அரங்கில் மகளிர் தின விழா நிகழ்ச்சி ஆரம்பமானது... நிகழ்ச்சி நிரல், கடவுள் வாழ்த்து, வரவேற்ப்பு உரை எல்லாம் முடிந்த பின், ஆதி தன் மிடுக்கான தோரணையுடன் அரங்கின் உள்ளே நுழைந்தான்.

அவனது ராஜ நடையையும், தோற்றத்தையும், செல்வ செழிப்பு மிக்க வழமையான பொழிவும் அனைவரையும் வசீகரிக்க செய்தது.

அவனது வருகையில் மயூவுக்கு உள்ளுக்குள் பூகம்பம் பிறந்தது... கை காலெல்லாம் ஜில்லென்று இருக்க... ஏசி போட்ட அறையிலும் அவளுக்கு குப்பென்று வியர்த்தது... ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் இயல்பு போலவே தன்னை காட்டிக்கொண்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 20, 2026 11:15 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top