Notifications
Clear all

அத்தியாயம் 8

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவனின் குரலில் தூக்கிவாரிப் போட, “தெரியும் சார்” என்றாள் பட்டென்று.

“வந்து உட்காரு” சொன்னவன் வேலையில் ஈடுபட, விஜயன் கையை பிசைந்துக் கொண்டு நின்று இருந்தான்.

“வாட் மேன்.. வேலை எதுவும் இல்லையா?” கடுப்புடன் அவனை முறைத்துப் பார்த்தான் தீரன்.

“இல்ல சார்.. அது” என்று அதிரலை பார்த்தான்.

“ஏன் உனக்கு அசிஸ்ட் பண்ண வேணுமா?” கேட்டவனின் பேச்சில் பதறிப்போய்

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். உங்களுக்கே அவங்க வேலை பார்க்கட்டும்.. நான் கிளம்புறேன்” என்று வாயில் வரை போனவன் திரும்பி தீரனை பார்த்தான் தயக்கத்துடன்.

“இன்னும் என்ன விஜி” வேலையை கெடுத்துக் கொண்டு இருப்பவனை முறைத்துப் பார்த்தான்.

“அது அவங்க போஸ்ட்டிங்” என்று அதிரலை சுட்டி காட்டி கேட்டான்.

“சொன்னா சொன்னது தான்.. இன்னும் ஆறு மாசம் ட்ரைனிங்லயே போடு. அப்பவாவது ஏதாவது கத்துக்கிறாங்கலான்னு பார்ப்போம்” அழுத்தமாக சொன்னவன் அதிரலின் கண்ணீரை சட்டை செய்யாமல்

“கொட்டேஷன் மாடல் ரெடி பண்ணு” என்றான். விஜயனோ எதுவும் செய்ய இயலாமல் வெளியே போனான்.

“ம்ம் சரிங்க சார்” என்று அவள் எழ,

“எங்க போற?”

“என் ப்ளேஸ்க்கு சார்”

“எதுக்கு நேரத்தை ஒப்பெத்தவா.. ஒன்னும் வேணாம்.. இங்கயே பண்ணு” என்று அவனின் சிஸ்டத்தை அவளிடம் திருப்பி செய்ய சொல்ல, அவனின் எதிரில் அவளுக்கு தப்பும் தவறுமாய் வந்தது.

கண்டிக்கும் ஆசிரியை பக்கத்தில் வைத்துக் கொண்டு தேர்வு எழுது என்று சொன்னால் எந்த மாணவனுக்கு தான் பயம் வராது. பயத்தில் தெரிந்ததை கூட தவறாக எழுதி வைப்பார்கள் அல்லவா.. அந்த நிலையில் தான் இப்பொழுது அதிரல் இருந்தாள்.

தெரிந்ததை கூட அவள் தவறாக செய்து வைக்க பொறுமை இழந்துப் போய் நெற்றிக் கண்ணை திறந்தான் தீத்திரள் தீரன்.

--

தீரன் அதிரலை தனக்கு எதிரில் அமரவைத்து கொட்டேஷனை ரெடி பண்ண சொல்லி சொல்ல, அவனின் அருகாமையில் அவளுக்கு தப்பும் தவறுமாக வந்தது. அவளின் வேலையில் எப்பொழுதும் ஒரு நேர்த்தி இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாள். ஆனால் இந்த தீரனை கண்டால் மட்டும் ஏனோ அவளுக்குள் ஒரு பதற்றம் அவளையும் அறியாமல் தொற்றிக் கொள்கிறது.

வருடத்தில் இரண்டு மூன்று முறை அவன் விசிட் அடிக்கும் நேரம் எல்லாம் மெடிக்கல் லீவு கேட்டு வைப்பாள் விஜயனிடம்.

முதல் முறை மட்டும் குடுத்தவன், அடுத்த முறை எல்லாம் சுதாரித்து அவளை முறைத்துப் பார்த்தான்.

“இல்ல சார் எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கு. நான் அவருக்கு அசிஸ்ட் பண்ணல.. ப்ளீஸ் என் லீவை அக்செப்ட் பண்ணிக்கோங்க” என்று கெஞ்சிய கெஞ்சல்களை ஓரம் கட்டி ஓராயிரம் அட்வைஸ் பண்ணி அவளை விடுமுறை எடுக்காமல் பார்த்துக் கொண்டான் விஜயன். அதன் விளைவு இதோ தீரனிடம் சிக்கிக்கொண்டு முழிக்கிறாள் அதிரல்.

அவள் திணறி திணறி டைப் பண்ணும் அழகில் முறைத்தவன் எழுந்து அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்து அவள் என்ன டைப் பண்ணுகிறாள் என்று பார்த்தான்.

பார்த்த உடனே நெற்றிக் கண்ணை திறந்து அவளை எரித்தே விட்டான்.

“ஏய்..” என்று ஒரே ஒரு அதட்டல் தான். அதிரலுக்கு கண்கள் கலங்கி விட்டது. அவன் திட்ட ஆரம்பிப்பதற்குள்,

“ப்ளீஸ் சார் எனக்கு உங்க முன்னாடி அமர்ந்து டைப் பண்ண முடியல. நான் என் ப்ளேஸ்க்கு போறேனே” கெஞ்சினாள்.

கெஞ்சியவளை கூர்ந்துப் பார்த்தவனின் கண்களில் ஏகத்துக்கும் கோவம் வர,

“ஏன் அங்க போய் டைப் பண்ண முடியுதுன்னா அப்போ இங்க டைப் பண்ண உனக்கு என்ன வலிக்கிது. எங்கயும் நீ நகர முடியாது. இங்க தான் டைப் பண்ணனும்” அழுத்தமாக அவன் சொல்லி விட, கண்களில் கரை கட்டி இருந்த கண்ணீர் கன்னத்தில் இறங்கி விட்டது.

“இந்த அழுது சீன் போட்டுட்டுக்கிட்டு இருந்த ட்ரைனிங் பீரியடை இன்னும் ஒரு வருடத்துக்கு எக்ஸ்டர்ன் பண்ணிடுவேன் பார்த்துக்க” மிரட்டியவன்,

“நான் என்ன சிங்கமா புலியா? எதுக்கு இப்படி என்னை பார்த்தா ஓவரா ரியாக்ட் பண்ணிட்டு இருக்க.. கடுப்பை கிளப்பாம கண்ணை துடைச்சுட்டு ஒழுங்கா டைப் பண்ணு” என்றான் எரிச்சலாக.

அதில் அவளுக்கு இன்னும் கண்கள் கலங்கிப் போனது. அழுத்தமாக கண்ணை துடைத்துக் கொண்டு முன்பு எழுதியதை எல்லாம் அழித்து விட்டு முதலில் இருந்து புதிதாக டைப் பண்ணினாள்.

இந்த முறை சரியாக வந்தது. ஆனால் அவளின் விரல்களில் மெல்லிய நெடுக்கம் இருந்தது. அதை கண்ணுற்றவனுக்கு கட்டுக் கடங்காமல் வெறியே வந்து விட்டது.

“ஏய்.. இந்தாடி நான் என்ன உன்னை இங்க வச்சு ரேப்பா பண்ணப் போறேன்.. எதுக்கு ஓவரா நடுங்கிக்கிட்டு இருக்க.. இல்ல என்னை பார்த்தா உன்னை ரேப் பண்ண வந்தவன் மாதிரி தெரியுதா?” அடக்கமாட்டாமல் அவளிடம் வெடித்து விட்டான்.

அவன் பேசிய பேச்சை கேட்டு “சார்” என்று அவள் அதிர,

“பின்ன இப்படி என்னை பார்த்து நடுங்கிக்கிட்டு இருந்தா பிறகு வேற எப்படி எடுத்துக்க தோணும்” கடுப்படித்தவன்,

“நீ இப்படி பிகேவ் பண்ணிட்டு இருந்தா நீ நினைக்காத எல்லாத்தையும் நடத்தி காட்டிடுவேன் பார்த்துக்க” எரிச்சலில் கத்தினான்.

“ஐயோ நான் அப்படி எல்லாம் நினைக்கல சார்” அதிரல் பதற,

“நீ எப்படி நினைச்சியோ ஆனா உன் தேவை இல்லாத பயம் என்னை ரொம்ப சீண்டி விட்டுட்டு இருக்கு. வேடிச்சேன் நீ தாங்க மாட்ட பார்த்துக்க” அவளை போட்டு அரட்டி எடுத்தான்.

“கடவுளே” என்று முணகியவள்,

“சார் ப்ளீஸ்.. நான் உங்களை பத்தி அப்படி எல்லாம் திங்க் பண்ணவே இல்ல..”

“அப்புறம் ஏன் என்னை பார்த்து மட்டும் இப்படி பயப்படுற.. வேற யாரையும் பார்த்து நீ இந்த அளவுக்கு பயப்படலையே.. நிமிர்வா பதில் சொல்லி அவங்க கூட ஒர்க் பண்ணறதை பார்த்து இருக்கனே” கேள்வி கேட்டவனிடம்,

“எனக்கும் அது தான் சார் தெரியால.. நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். ஆனா உங்கக்கிட்ட ஏன் இப்படி பயந்து நடுங்குறேன்னு சத்தியமா எனக்கு தெரியல..” என்றவள்,

“நான் என் ப்ளேஸ்க்கு போய் ஒர்க் பண்ணவா சார்?” தயக்கமாக கேட்டாள்.

“தேவையில்ல.. இங்கயே இருந்து பண்ணு” என்றவன் பின்னாடி நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு அவள் டைப் பண்ணுவதை நோட்டம் விட்டான்.

அவளின் விரல்கள் மெல்லிய நடுக்கத்துடன் கணினியில் நடனம் ஆடுவதை பார்த்தான். அந்த நீள் விரல்களில் அணிந்து இருந்த தங்க மோதிரம் அவளின் விரல்களுக்கு கிரீடம் வைத்தது போல அழகாக இருந்தது. அதோடு அந்த டிசைன் அவனை வெகுவாக ஈர்த்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : September 20, 2026 11:05 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top