அவனது இணக்கம் லேசாய் பிசகியதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்... அவளது பார்வையில் இருந்த வலியை கண்டு, தன்னையே வெறுத்தவன் அலேக்காக அவளை தூக்கி, அவளது விருப்பம் போல அவ் வீட்டிலிருந்த கட்டிலில் அவளை கிடத்தி அவள் மீது பரவி படர்ந்தான்.
தங்களுடைய முதல் கூடல் பற்றிய கற்பனைகளை இருவருமே பேசி அதன் படி தான் நடக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார்கள். ஆனால் இன்று வரை அதை பற்றி இருவரும் பேசிக்கொண்டது கூட கிடையாது.
இது நாள் வரை இருவரும் வேலை வேலை என்றே இருந்தார்கள். எப்பொழுது ரஞ்சனியுடனான திருமண பேச்சு ஆரம்பித்ததோ அப்பொழுதிருந்து ஆதியின் காதல் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது.
ஆனாலும் வாய் வார்த்தையாக எதுவும் சொன்னது இல்லை. கூடல் பொழுதில் இன்னது இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணியவை யாவும் எண்ணங்களோடு மடிந்து போக...
அந்த காதல் உணர்வுகளுக்கு கொஞ்சமும் சம்ந்தமே இல்லாமல் ஒரு கட்டாயத்தில் அவள் இருப்பதும், அவனோ இது வேண்டவே வேண்டாம் என்ற எண்ணத்துடனும் கூடல் நடப்பதை உணர்ந்து இன்னும் வேதனையாகியதுப் போனது அவனுக்கு.
இவனுக்கே இப்படி என்றால் அவளது உணர்வுகள் அதற்கும் மேல்...
முறையில்லாமல் இந்த உறவை அங்கீகரிக்க வேண்டிய நிலை... ஏதோ திருட்டு தனம் பண்ணுவது போல... உரிமை பட்டவன், உடமைபட்டவன், இருந்தும் யாருக்கோ விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை. இது அத்தனையும் மயூவின் கட்டாயத்தின் பேரிலே... அதனால் இதில் யாரையும் குறை கூறவும் முடியாது..
அவனை அங்கிகரித்தவளால் மனம் முழுமையாக வசப்படவில்லை... ஆனால் இந்த நிகழ்வு நடந்தால் தன்னால் அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் சற்றே விலகுமே என்று எண்ணி உடன் பட்டாள்.
இதை பரிகாரமாய் அவள் செய்கிறாள் என்று அறிந்தாலே ஆதி நொடிந்து போவான் என்பதை அறியாமல் செய்துக்கொண்டு இருக்கிறாள்.
இருவரின் தவமும் வேறு வேறு பாதையில் உணர்வுகளின் பிடியில் இல்லாமல் கடமையே மிஞ்சி இருக்க, அதை தடுக்க காதல் தேவனே சீதாவை அனுப்பி வைத்தார். இருவரது வேதனையையும் அதிகரிக்க முடியாமல்.
“மயூ, கதவை திற... என்ன பண்ற...?” வெளியே நின்று கதவை தட்டினார் சீதா.
இருவரின் உணர்வுகளிலும் துக்கமே இருந்ததில் வெளியே கேட்ட குரல் அவர்களின் காதில் விழவே இல்லை... சீதா இன்னும் சத்தம் அதிகம் கூட்டி தட்ட... அதன் பின்பே இருவரும் சற்றே கலைந்தார்கள்.
அவளின் மார்பில் முகம் வைத்து படுத்திருந்தவனுக்கு ‘அப்பாடா’ என்ற நிம்மதி எழுந்தது. ஆனாலும் உடனே அவளிடமிருந்து அவனால் விலக முடியவில்லை..
உடைகள் எல்லாம் கலையாமல் அப்படியே இருந்தது தான் என்றாலும், அவளது வெண்மையும் தன்மையும் அவனது உடம்பு உணர்ந்து இருக்க பெருமூச்சு விட்டு தன் முகத்தை மறுபடியும் அவளது மார்பில் வைத்து புதைத்துக்கொண்டான்.
மீண்டும் கிடைக்காத சுவர்க்கம் என்பது அவனது புத்தில் உதித்ததோ என்னவோ..? அங்கிருந்து விலகவே மனம் வரவில்லை...
கூடல் வேண்டாம் என்று எண்ணியவனுக்கு அவளை விட மனம் வரவில்லை.
ஒரு இக்கட்டில் தன்னை கொடுக்க வந்தவளுக்கோ இப்பொழுது பெரும் அவஸ்தையாகிப் போனது. கதவு தட்டும் சத்தம் கேட்டும் விலகாமல் தன்னை இறுக்கி பிடித்துக்கொண்டு இருப்பவனை விலக்க முடியாமல், மனமில்லாமல், அவனை கலைக்கவும் மனமில்லாமல் தடுமாறி போனாள்.
ஆனால் வெளியே நின்ற சீதாவுக்கோ மனம் பட படவென்று அடித்துக்கொண்டிருந்தது. வேணான்னு முடிவானதுக்கு பிறகு இதென்ன தொட்டு தொடர்வது என்று கோவம் வந்தது.
ஆனால் அதை இருவரிடமும் காட்ட முடியாது. ஆதியிடமாவது கோவத்தை காட்டி விடலாம். ஆனால் மயூவிடம் அவரால் காட்டவே முடியாது.
அவளது முகம் லேசாய் கசங்கி போனாலே அவரால் தாங்க முடியாது. இதில் தலையில் தணலை அள்ளிக்கொட்டுவது போல எப்படி அவரால் பேச முடியும். அதும் ஆதியை விட்டு விலகி நில் என்று.. முடியாதே...
அவர்கள் இருவரையும் விட இவர் தான் அதிகமாய் கலங்கி போனார்.
ஆனாலும் இதை இப்படியே விடவும் முடியாதே... பலம் கொண்ட மட்டும் கதவை தட்டினார்.
“ஆதி கதவை திற... மயூமா... ” என்று யாருடைய கவனத்தையும் கலைக்காமல் அவர் தட்டினார்.
ஏனெனில் தோட்டத்தில் இருந்த தோட்டக்காரர்கள்.. கேட் காவலாளிகள், அதில்லாமல் பல செக்யுரிட்டி ஆட்கள், வீட்டு வேலையாட்கள் என்று எல்லாருமே அங்கே தான் அங்கும் இங்கும் போய் கொண்டும் வந்துக்கொண்டும் இருந்தார்கள்...
அதற்கும் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக... கையில் வைத்திருந்த இன்டர்காமில் அவர்களை அழைத்தார். அதிலும் முதல் இரண்டு ரிங் எடுக்க படாமல் போனது. அதிலே அவரது டென்சன் அதிக உச்சத்துக்கு போனது.
‘கடவுளே... கொஞ்சமே கொஞ்சம் கருணை காட்டு...’ வேண்டியவர், மீண்டும் தொடர்பு கொண்டார்..
அதில் தங்களது உணர்வுகள் களைந்து இருவருமே விலகிக்கொண்டார்கள் சட்டென்று.. அதன் பின்பே மயூ காலை எடுத்து பேசினாள்.
“சாரி அத்தை..” பேச சங்கடமாய் இருந்தது அவளுக்கு.
“நீ முதல்ல கதவை திற..” என்றார் அவர்.
நிமிர்ந்து ஆதியை பார்த்தாள் அவள். அவன் கட்டிலில் அமர்ந்து தலையை தன் இரு கைகளாளும் பற்றியபடி அமர்ந்து இருந்தான். அவனை இப்படி பார்க்க மனம் சங்கட பட்டது.
“ஆதி...” மெதுவாய் அவனை உசுப்பினாள்.
“போய் கதவை திற” என்றான் அழுத்தமாய். கால்களில் ஏதோ சங்கிலியை பிணைத்து வைத்திருப்பது போல அவளால் நடக்கவே முடியாமல் கால்கள் பின்னிக்கொண்டு இருந்தது.
அவளது தயக்கத்தை கண்டு சினம் கொண்டவன் அவளை அப்படியே கட்டிலில் தள்ளிவிட்டுட்டு அவனே போய் கதவை திறந்தான். அவனது முரட்டு தனத்திலும் இருந்த அக்கறையை கண்டு மனம் மயங்கியவளின் விழிகளில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
இந்த அக்கரையை கூட இருந்து அவளால் அனுபவிக்க முடியாதே என்று கலங்கி போனாள். சட்டென்று வழிந்த கண்ணீரை அவன் பார்க்கும் முன் துடைத்து எறிந்தவள் எழுந்து வெளியே வந்தாள்.
அங்கே ஆதியை முறைத்துக்கொண்டு இருந்தார் சீதா...
“என்ன தாண்டா உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்க... கல்யாணம் வேணான்னு சொல்லிட்டு இப்போ ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா பார்க்கிறவங்க என்னன்னு நினைப்பாங்க...”
“இந்த விஷயம் கை கால் முளைச்சி சம்மந்தி வீட்டுக்கு போனா என்ன ஆகும்னு தெரியும் தானே உங்க ரெண்டு பேத்துக்கும்.. இல்ல உங்க அப்பாவுக்கு தெருஞ்சா அவரு என்ன ஆவாருன்னு தெரியும் தானே...” சுல்லேன்று கேட்டவர்,
“இனி உங்க ரெண்டு பேத்தையும் ஒண்ணா சேர்த்து பார்த்தேன் அவ்வளவு தான்... காலேஜ் போறதுன்னா போய்ட்டு, ஆபிஸ் போறதுன்னா போயிட்டு ஒழுங்கா ரெண்டு பேரும் வீடு வந்து சேருங்க சொல்லிட்டேன். அதை விட்டுட்டு எங்காவது தனியா போனீங்க..” என்று சீதா சொல்ல,
“என்ன பண்றதுன்னு எனக்கு தெரியும்... சும்மா தேவையில்லாம இந்த அதிகாரம் பண்ற வேலையெல்லாம் என் கிட்ட வேணாம்... எந்த அட்வைஸ் பண்றதுனாலும் உங்க மருமகளோட நிறுத்திக்கோங்க...”
“ஏய்... உன் மாமியார் உன் கிட்ட என்னமோ பேசணுமாம். வந்து என்னன்னு கேளு...” என்று குரல் கொடுத்துவிட்டு அவள் போட்டு வைத்திருந்த காபியை எடுத்து பருகினான்.





