“வெயிட் பண்ணுங்க.. இப்படி குழந்தையை வச்சு அப்யூஸ் பண்ற கேஸ் நிறைய இருக்கு.. அவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வீட்டுல அதுக்கு துணை போன ஆளுங்களையும் பிடிச்சு லாடம் கட்டிடலாம்..” என்றவன் அதற்கு உண்டான வேலைகளை பார்க்க தொடங்கினான்.
--
“திரையன்”
“ப்ச் இப்படி கலங்கிப் போகாதீங்க கங்குவன்.. இப்ப இருக்க காலக் காட்டதுல எல்லாமே இந்த மாதிரி ஏதாவது ஒன்றை சின்ன பிள்ளைங்க கடந்து வர்ற மாதிரி தான் சூழ்நிலை இருக்கு. அதுவும் சிங்கிள் பேரன்ட்ஸ் பேபிக்கு இது இன்னும் அதிகம். ஒரு நாளைக்கு மட்டும் தெரிஞ்சு இருபது முப்பது கம்ப்ளைன்ட் வருது. இதுல பேரண்ட்சை குறை சொல்ல முடியாது. ஏன்னா எக்கனாமிக்கள் லெவல்ல நல்லா இருந்தா தான் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும்னு அவங்க வேலை வேலைன்னு ஓடுறாங்க..”
“தாத்தா பாட்டி அம்மா உடன் இருந்தும் கூட நம்ம கண்ணை மறைச்சு சில விசயங்கள் நடக்க தான் செய்து.. அதுக்காக அவங்க பிள்ளைகளை ஒழுங்கா பார்த்துக்கலன்னு நாம சொல்ல முடியுமா? நான் கவனமா இருந்து இருக்கணும். அவ்வளவு தான். உங்க மகன் இப்போ ரொம்ப சின்ன பிள்ளை. போக போக அவன் வளர வளர இதெல்லாம் மறைந்துக் கூட போகும். சோ டோன்ட் ஒரி” என்றவனை நட்புடன் பார்த்தான் கங்குவன்.
“பிரெண்ட்ஸ்” என்றான் கொஞ்சமும் யோசிக்காமல்.
“குட் பிரெண்ட்ஸ்” என்று திரையன் அவனின் கையை பற்றி குலுக்கினான்.
“வாங்க அவனுங்களுக்கு சுளுக்கு எடுக்கலாம்” காவல் துரையில் இருந்து லேடிஸ் கான்ஸ்டபிலை வர செய்து அந்த தவறுக்கு துணை போன பெண்களை எல்லாம் அடித்து உடைத்து விட்டார்கள்.
ஆண் பணியாளர்களுக்கு அதற்கு மேல்.. இரண்டு முட்டியையும் உடைத்து எடுத்து விட்டார்கள். அவர்களின் உதிரம் சொட்டுவதை பார்த்த பிறகே கங்குவனின் ஆற்றாமை அடங்கியது.
அதுவும் அவனது கையாலே அவர்களை போட்டு வெளுத்து எடுத்து விட்டான். அவனின் கோவம் புரிய திரையன் அவனை தடுக்கவே இல்லை.
பின் எல்லோரையும் எச்சரித்து விட்டு, பிள்ளைக்கு முன்பு உடலுறவில் ஈடுபட்ட அந்த இருவரையும் அள்ளிக் கொண்டு வந்த காவலர்கள் லாக்கப்பில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி வெளுத்து எடுத்தார்கள் மேலும்.
“தேங்க்ஸ் திரையன்” என்றான் அவனின் கையை பற்றிக் கொண்டு.
“இது என்னோட டியூட்டி. ஆக்சுவலி நான் இல்லன்னாலும் இதே வேலையை நீங்களும் மிக சிறப்பாக செய்து இருப்பீங்க கங்குவன்” என்றவன்,
“முதல்ல உங்க மகனை சுற்றி நம்பகமான பணியாளர்களை போடுங்க. குறிப்பா கொஞ்சம் வயசானவர்களை போடுங்க.. ஏன்னா அவங்க கண்காணிப்புல வளர்ற குழந்தை இன்னும் கொஞ்சம் பெட்டரா வளருவான். அப்படி இல்லன்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க. எனக்கு தெரிஞ்சு ரெண்டாவது ஆப்ஷன் பெட்டர்” என்றான்.
கங்குவன் அமைதியாக இருந்தான்.
“பாடர் க்ராஸ் பண்றேனோ”
“ப்ச் பிரெண்ட்ஸ் குள்ள என்ன பாடர்”
“அப்போ ஓகே.. நீ கொஞ்சம் கண்சிடர் பண்ணுடா” என்றவனிடம், “யூ டேக் ஜின்” கேட்டான்.
“உனக்கு தான் இப்ப ரொம்ப தேவைப்படும்” என்ற இளந்திரையனை வீட்டில் இருக்கும் பாருக்கு கூட்டிக் கொண்டு வந்தவன், இருந்த ஆட்களை போக சொல்லி விட்டு கூலிங்காய் இரண்டு பாட்டில்களை எடுத்து வைத்தான்.
“டியூட்டி ஓவரா? இல்ல போகனுமா”
“ஆல்மோஸ்ட் முடிஞ்சு” என்றவனிடம் கிளாசை நீட்டினான்.
“சியர்ஸ்” இருவரும் லைட்டாக சாப்பிட்டார்கள். கங்குவனும் அதிகம் எடுத்துக் கொள்ளவில்லை.
லைட்டிங் மிக டிம்மாக இருந்தது. உயர்தரமான செட்டிங்.. விலை உயர்ந்த ஆடம்பர பொருகள்கள், குஷன், சோபா என செவென் ஸ்டார் பீல் கொடுத்தது அவ்விடம்.
“பையன் தூங்கிட்டானா? உன் தங்கச்சி எதுவும் பேசுனாளா?” சிப் பண்ணிக்கொண்டே கேட்டான்.
“ம்ம் தூங்கிட்டானாம்.. ஆனா கொஞ்சம் அரண்டு இருப்பான் போல”
“நாளைக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும் திரையா”
“எஸ்.. கண்டிப்பா அவன் இதுல இருந்து வெளில வரணும். அவன் பார்த்தது ஒண்ணுமே இல்லன்னு அவன் மறந்து போகணும் கங்குவா” இருவருக்கும் வேவ்லென்த் ஒத்துப் போய் விட்டது.
வேரலின் வீட்டுக்கு வருவதற்குள் இருவரும் வாடா போடா என்ற ரேஞ்சுக்கு நெருக்கமாகி இருந்தார்கள். இருவரும் ஒரே காரில் பயணித்தார்கள்.
“வா சாப்பிடலாம்” என்று ஒரு ரோட்டு கடையை கை காட்டினான் திரையன்.
“சாப்பிட மூடு இல்லடா”
“ஏண்டா தண்ணி அடிக்க மட்டும் மூடு இருந்ததா?”
“அது துக்கத்தை ஆத்திக்க அடிச்சது” என்றான் கங்குவன்
“அதுல வெந்துப்போன வயித்தை ஆத்திக்க தான் இப்ப சாப்பிடுறது.. வாடா” என்று அழைத்துக் கொண்டு போனான் திரையன்.
“உனக்கு ஹைஜீனிக் ப்ராப்ளம் இல்லையாடா?”
“ஏன்டா உனக்கு இருக்கா?” திருப்பிக் கேட்டான்.
“இதுவரை இப்படி எல்லாம் இருந்தது இல்ல..” என்றான்.
“எப்பவுமே ஹை-கிளாஸ் மேண்டாலிட்டியோடவே இருக்க கூடாதுடா.. சில நேரம் இப்படி தரை லோக்கலா இறங்கவும் செய்யணும்”
“வா இந்த கடையில நைட் பிரியாணி செம்மையா இருக்கும்..” என்று அவனுக்கு வாங்கி குடுத்து விட்டு தானும் உண்டான் திரையன்.
“நைஸ் ஸ்மெல் மச்சான்” வாசனை பிடித்து முதல் வாயை வைத்தான் கங்குவன்.
“மாப்பிள்ள இப்ப தானே என்னோட சேர்ந்து இருக்க.. இன்னும் போக போக பாரு.. என் லெவலுக்கு உன்னையும் கொண்டு வந்திடுறேன்” என்றபடி இரசித்து உண்டான்.
“அதுக்கென்னடா மாறிட்டா போச்சு” இயல்பாக இருவரும் நெருங்கிப் போனார்கள்.
அளவாக உண்டு விட்டு வேரலின் வீட்டுக்கு வந்தார்கள்.
முதல் முறையாக அவளின் வீட்டுக்குள் நுழைகிறான் கங்குவன்.
“வாடா” என்று அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வர, வீட்டு ஆட்கள் மொத்தமும் கூடத்தில் தான் இருந்தார்கள்.
கங்குவன் ஒரு கணம் திகைத்துப் போய் பார்த்தான். ஒருவரும் தூங்கவில்லை. அவனின் மகனை மடியில் போட்டு தட்டிக் கொடுத்த படி சோபாவில் அமர்ந்து இருந்தாள் வேரல். அவளின் அருகில் பாட்டியும் அம்மாவும் ஒரு பக்கம் அமர்ந்து இருக்க, இன்னொரு பக்கம் அப்பாவும் தாத்தாவும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
என்னவோ ஒரு கூட்டு கிளியாக அவள் வாழ்வது தெரிந்தது. தன் மகனுக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தனை பிறந்தது.
தன் சிந்தனை போகும் போக்கை தடுத்து நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான்.
“வாங்க மிஸ்டர் கங்குவன்” இளமாறனும் முரளியும் எழுந்து அவனை வரவேற்றார்கள்.
அதே போல மாளவிகா பவித்ரா இருவரும் புன்னகையுடன் அவனை வரவேற்றார்கள்.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா கங்குவன்.. ஒருத்தரும் தப்பலையே” இளமாறன் சற்று கோவத்துடனே கேட்டார்.
“இல்லங்க சார் திரையன் வரவும் எல்லாமே பெர்பெக்டா முடிஞ்சுது” என்றான்.
“உட்காருங்க தம்பி” என்ற மாளவிக்க அவனுக்கு குடிக்க நீரை கொடுத்து விட்டு, பணியாளரிடம் காபி போட்டுட்டு வர பணித்தார்.
“என்னவோ போங்க தம்பி எனக்கு மனசே ஆறல.. கண்ணா வந்து சொன்ன உடனே எங்க நெஞ்சு எல்லாம் பதறிப் போச்சு. அதுவும் சின்னவன் முகம் வாடிப் போய் இருந்ததை தாங்கிக்கவே முடியல.. அன்னைக்கு ஸ்கூல் ஓப்பெனிங் அப்ப எப்படி துருதுருன்னு இருந்தான் தெரியுமா? இன்னைக்கு பிள்ளை இப்படி உடைஞ்சு போய் வந்ததை பார்த்து எனக்கு மனசே இல்ல” பாட்டி சொல்ல,
“என் தப்பு தான் மேடம். நான் தான் சரியா கவனிக்கல” கழிவிரக்கத்திலும் குற்ற உணர்விலும் அவன் தலையை குனிய,
“ப்ச் இதுல உங்க தப்பு என்ன இருக்கு மிஸ்டர் கங்குவன்.. பணியாளர்கள் நம்பிக்கையானவர்கள் ன்னு நாம நினைச்சுட்டோம். போனதை விடுங்க.. அதையே நினைச்சு நினைச்சு உங்களை வருத்திக்காதீங்க.. இனி யாரையும் நம்பாம எல்லாத்தையும் நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வந்து வச்சுக்கலாம்.. இது ஒரு பாடம்னு எடுத்துக்கணும்” முரளி அவனை தேற்றினார்.
சிறிது நேரம் பொதுப்படையாக பேசிவிட்டு காபி வர குடித்து விட்டு எழுந்தவன்,
“சரிங்க நான் கிளம்புறேன்.. உங்க எல்லாரோட ஹெல்ப்புக்கும் வெறும் தேங்க்ஸ்ன்னு மட்டும் சொல்ல முடியாது.. அதுக்கும் மேல.. எந்த கைமாறும் எதிர்பார்க்காம செஞ்ச உதவிக்கு என் காலம் முழுவதும் நன்றி உள்ளவனா இருப்பேன். தேங்க்ஸ் சார்” என்று முரளியிடம் பேசியவன்,
அப்பொழுது தான் வேரலையே பார்த்தான். அதுவரை அவளை பார்க்கவே இல்லை அவன். பார்க்க தோன்றவில்லையோ என்னவோ..
அவளிடம் பார்வை செல்லும். ஆனால் அது அவளின் மடியில் படுத்து இருக்கும் அவனின் மகன் மீது சில கணங்கள் நிலைத்து விட்டு மீண்டும் திருப்பி விடும்.
இப்பொழுது தான் அவளை நேருக்கு நேராக பார்த்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் வேரல் நீ இல்லன்னா என் மகனின் நிலையை நினைச்சு கூட பார்த்து இருக்க முடியாது. நீ சரியான நேரத்துக்கு போய் அவனை சேவ் பண்ணிட்ட.. வெரி தேங்க்ஸ்” சொன்னவன் மகனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான்.





