Notifications
Clear all

அத்தியாயம் 5

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஏனெனில் தீத்திரள் தீரனின் குணமே அது தான். எதை அடைய வேண்டும் என்றாலும் அவனுக்குள் இருக்கும் போராட்ட குணம் அவனை தூங்கவே விடாது. அதை அடைந்த பிறகு தான் ஓய்வே எடுப்பான். அப்படி பட்டவன் தன் உயிரை அவ்வளவு எளிதாக விட்டு விடுவானா என்ன..

உள்ளுக்குள் அவன் போராடிக் கொண்டு தான் இருந்தான். உள்ளே செலுத்தும் மருந்துக்கள் எல்லாம் வேலை செய்யாமல் போராட்டம் செய்தாலும் அவனின் உடம்பில் இருக்கும் வெள்ளை அணுக்களும் சிவப்பு அணுக்களும்  அவனது உயிரை இன்னும் இழுத்துப் பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டு தான் இருந்தது. அதோடு அவனின் மனம் நான் இறக்க மாட்டேன்.. என்று உரைத்துக் கொண்டே இருந்தது. ஒரு சிலருக்கு வில்பவர் ரொம்ப அதிகமாக இருக்கும்.

அவர்களுக்கு பெரிய நோய் வருவதற்கான அத்தனை அறிகுறிகள் இருந்தாலும் ஏன் நோயே வந்தாலும் அவர்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். காரணம் அவர்களின் மனதில் இருக்கும் உறுதி. அந்த உறுதியை தான் இங்கே தீரனும் பற்றிக் கொண்டு இருக்கிறான்.

இதோ அதோ என்று அனைவரையும் பரபரப்பாக வைத்து இருந்த மிட் நைட்டில் தீரன் படுத்து இருந்த அறைக்குள் வெளிநாட்டு மருத்துவர் உள்ளே நுழைந்தார்..

அவருக்கு வயதும் அதிகம், அனுபவமும் அதிகம். தன் அனுபவங்களை கொண்டு தீரனை முழுமையாக சோதித்துப் பார்த்தவர்,

“இங்க இவரை காப்பாத்த முடியாது.. என்னோட மருத்துவமனைக்கு அழைச்சுட்டு போகலாம். அதுவும் இன்னைக்கு ஒரு நாள் தான் நமக்கு டைம் இருக்கு” என்று அவர் சொல்லி விட, தனி விமானம் பிடித்து அவரோடு தீரனை அழைத்துக் கொண்டு மொத்த குடும்பமும் போனது.

தீரன் போன நேரம், சரியாக இங்கே அவனின் உயிரணுவோ அதிரல் என்னும் பெண்ணவளின் கரு முட்டைக்குள் நுழைந்து அவனின் வாரிசாக உருவம் எடுக்க ஆரம்பித்தது அந்த நொடியில்.

தீரனை காப்பாற்ற அவனை சேர்ந்த அத்தனை பேரும் கிளம்பி விட, இங்கே அவனின் வாரிசை சுமக்க வந்த பெண்ணவளை பற்றி யாரும் கவலைக்கொள்ளவே இல்லை.

வெற்றியோ போவதற்கு முன்பு,

“டாக்டர் அந்த பிராசசை கேன்சல் பண்ணிடுங்க.. அண்ணனை காப்பாத்திடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க” என்று அவசரத்தில் சொல்லிவிட்டு கிளம்பி வெளிநாடு போய் விட்டான்.

மருத்துவரோ திகைத்துப் போய் விட்டார்.

ஆக்சுவலி அதிரலின் கருமுட்டை நாளைக்கு தான் வெடிக்கும் நிலையில் இருக்கும் எனவே பதினான்காவது நாள் இன்ஜெச்ட் பண்ணலாம் என்று மருத்துவர் வெற்றியிடம் சொல்லி இருந்தார். அதனால் இன்னும் எந்த ப்ராஸசும் தொடங்கவில்லை என்று எண்ணியே வெற்றி மருத்துவரிடம் இந்த விசயத்தை சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி விட்டான்.

ஆனால் இயற்கையில் எது எப்படி நிகழும் என்று யாராலும் வரையறுத்து சொல்ல முடியாதே.. இதோ நாளைக்கு தான் வெடிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த கரு முட்டையோ இன்றைக்கே வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டு இருந்தது,

இதை விட்டால் இனி ஒரு மாதம் காத்திருக்க வேண்டி வருமே என்று மருத்துவர் தீரனின் உயிரணுவை இன்ஜெச்ட் செய்து விட்டார். ஆனால் வெற்றியோ கேன்சல் செய்ய சொல்லி சொல்லி விட்டான்.

அதை சொல்ல முயன்ற மருத்துவரின் பேச்சை கூட கேட்க நேரமில்லாமல் எப்படியாவது அண்ணனை வெளிநாட்டுக்கு கூட்டிட்டி போய் காப்பாற்றி விட வேண்டும் என்கிற முனைப்பில், போகும் அவசரத்தில் தனி விமானத்தை பிடித்து அதற்குரிய அணைத்து ப்ரோசிஜர்களையும் பார்க்க வேண்டி வைத்து விட்டான்.

ஏனெனில் அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் அண்ணின் உயிர் போய்க்கொண்டு இருக்கும். எனவே அவன் இருந்த பரபரப்பில் எதையுமே நிறுத்தி நிதானமாக செய்ய அவகாசம் இல்லை.

மருத்துவரிடம் இன்பார்ம் பண்ணியாச்சு.. அவர் ப்ரோசிஜரை ஸ்டாப் பண்ணிடுவார் என்று எண்ணியவன் அதன் பிறகு அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. யோசிக்க நேரமும் இல்லை. அவன் சிந்தை முழுவதும் அவனின் அண்ணன் மட்டுமே நிரம்பி இருந்தான்.

ஐவிஎப் பண்ணிவிட்டு அவளை அப்ஜெர்வேஷனில் வைத்து இருந்த மருத்துவர் தயக்கத்துடன் வந்து விசயத்தை சொன்னார்.

“ப்ராஸசை கேன்சல் பண்ணிட சொல்லிட்டாங்க ம்மா” என்று அவர் சொல்ல, தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தாள் அதிரல்.

--

“என்ன மேடம் கடைசி நேரத்துல வந்து இப்படி சொல்றீங்க.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து சொல்லி இருக்கக் கூடாதா?” கண்ணீருடன் கேட்டவளுக்கு எந்த ஆறுதலையும் அவரால் தர முடியவில்லை.

“சாரிம்மா” என்று அவர் கைக்கூப்ப,

“டாக்டர் ப்ளீஸ்.. இப்ப தானே இன்ஜெக்ட் செய்தீங்க.. அதை நீங்கே எடுத்து விடுறீங்களா?” அப்பாவியாய் கேட்ட பெண்ணவளை கண்டு அவரின் உள்ளம் உருகியது.

“அது இன்னேரம் உள்ள போய் இருக்கும் ம்மா. இனி அதை எடுக்குறது ரொம்ப கஷ்ட்டம்.. அதை விட இன்னும் செலவு அதிகம் ஆகும்.. கொஞ்ச நாள் பொறு.. நான் பக்குவமா அவங்க கிட்ட விசயத்தை சொல்லி மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கிறேன்..” என்றார் நம்பிக்கை கொடுக்கும் விதமாக.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்.. தங்கச்சிக்கு கட்டுன காசை மறுபடியும் கேட்பாங்களா?” அவளின் கண்களில் தெரிந்த இயலாமையில் மென்மையாக சிரித்த மருத்துவர், அவளின் கையை பிடித்து அழுத்தியவர்,

“அப்படி எல்லாம் சீப்பா பிகேவ் பண்ண மாட்டாங்க அதிரல். நீ எதுக்கும் கவலை படாம இரு.. பார்த்துக்கலாம்” என்று சொல்லி விட்டு அவர் போக, மனம் கணத்துப் போனவள் தன் வயிற்றில் கையை வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டாள்.

இதோ அதோ என்று நாட்கள் வேகமாக நகர, நேத்திராவை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் என்று இதய மருத்துவர் சொல்ல, மகப்பேறு மருத்துவரிடம் வந்து நின்றாள் அதிரல்.

“பணம் எதுவும் கட்ட வேணாம்.. எல்லாவற்றையும் நான் பார்த்துக்குறேன்..” என்றவர் அவர்களின் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்.

வெளிநாட்டுக்கு கூட்டிட்டுப் போன தீரனின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அவன் நலமாகும் காலம் வெகு விரைவில் உள்ளது என்று மருத்துவர்கள் சொல்ல அத்தனை பேரின் நெஞ்சிலும் பால் சுரந்தது. ஆனால் ஒருவனுக்கு மட்டும் நெஞ்சு எரிந்துப் போனது.

தீத்திரள் தீரன் பூரண நலத்தோடு திரும்பி வரப் போவதை செல்வாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நிலைக் கொள்ளாமல் அங்கும் இங்குமாய் அலைந்தவன், கிளம்பி வெளிநாட்டுக்கு வந்து விட்டான்.

தீரன் அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு திடுதிப்பென்று செல்வா வந்து நிற்பதை பார்த்த தேவாவுக்கு நெஞ்சு திக்கென்று ஆனது.

“இங்க என்னடா பண்ற? முதல்ல எதுக்கு இங்க வந்த” அடிக்குரலில் கேட்ட அண்ணனை முறைத்துப் பார்த்த செல்வா,

“நான் வரது இருக்கட்டும்.. இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு” மனம் பொறுக்க முடியாமல் சீறினான்.

“என்ன நடக்குது..?” எதுவும் தெரியாதவனாய் தேவா திருப்பி அவனையே கேட்டான்.

“என்ன ஸ்மார்ட்டா கேக்குறன்னு நினைப்பா” கண்களில் பாம்பின் சீற்றத்தோடு கேட்டவனை அடக்க முடியாமல்,

“செல்வா நீ ரொம்ப தப்பா திங்க் பண்ணிக்கிட்டு இருக்க. இது யாருக்கும் நல்லதா இருக்காது” எச்சரித்தான்.

“உன் எச்சரிப்பை எல்லாம் ஓரம் கட்டிட்டு தள்ளி நில்லு. இல்லன்னா நீயும் இப்போ அவன் இருக்குற நிலையில தான் இருப்ப” என்றான் அடங்காத வெறியுடன்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 14, 2026 9:27 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top