அத்தியாயம் 2

 
Admin
(@ramya-devi)
Member Admin

காலையில் நடந்த சம்பவம் அனைவரையும் கஷ்டப்படுத்தினாலும், மயூவின் புடவையும் நகையும் அனைவரையும் கவரவே செய்தது. இதில்லெல்லாம் அண்ணனை, மாமனை அடிச்சுக்கவே முடியாது என்று எண்ணிக்கொண்டார்கள் இளையவர்கள்.

குறுங்கண் ஓரம் அமர்ந்திருந்தவளின் உள்ளம் நொந்து கண்களில் கண்ணீர் வடிய, தன் நிலையை எண்ணி உயிர் கரைந்துக் கொண்டிருந்தாள்.

‘இது எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான் மயூ. உன்னால மட்டும் தான் எனக்கு இந்த நிலைமை. உன்ன கஸ்டபடுத்தி பார்க்கயில எனக்கு உயிர் போகுது. ஆனாலும் நீ செஞ்ச தப்புக்கு கண்டிப்பா தண்டிப்பேன்.’ ஓர விழியால் அவளை பார்த்த படி வந்தான் ஆதி.

‘நான் எனக்காக அழலங்க, என்னை தண்டிக்கிறேன்னு உங்களை வருத்திக்கிட்டு இருக்கீங்களே அதை நினைச்சு தான் நான் அழறேன். உங்களை என்னால இப்படி பார்க்க முடியலையே. உங்க வலி என் வலி. நீங்க என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் நான் தாங்குவேன். ஆனா நீங்க தாங்குவீங்களா...? என்னை கஷ்டப்படுத்திட்டு நீங்க கஷ்டபடுறிங்களே...’ உள்ளம் நொந்து உருகிக்கொண்டிருந்தாள்.

கோயிலில் பூசை அமர்க்கலாமாக ஆரம்பமானது. தாம்புல தட்டில் பழங்களோடு ஆதி மற்றும் ரஞ்சனி பெயர் போட்ட திருமணப்பத்திரிக்கையும் இருந்தது. ஒருவரின் மனதில் கூட மகிழ்ச்சி இல்லை. ஆனாலும் கட்டாயத்தின் பேரில் அனைவரும் அதில் கலந்துக்கொண்டிருந்தனர்.

‘இறைவா உங்கள் முன் ஆரம்பிக்க போகும் உறவு நல்லபடியாய் அமையவேண்டும். என் ஆதி அந்த பெண்ணோடு நன்றாக வாழ வேண்டும்.’ மனமுருக வேண்டிக்கொண்டாள் மயூ.

‘நீ என்ன வேண்டிக்கொண்டாலும் அது நடக்காது கண்ணம்மா, என் வாழ்க்கை அது என்றும் உன்னோடு மட்டும் தான். அது இதோ என் எதிரில் இருக்கும் இறைவன் நினைத்தால் கூட மாற்ற முடியாது. நீயே நான். நான் என்பதே நீ. இதை தெரிந்து கொள்.’ என்று நினைத்துக்கொண்டான்.

அதன் பின் படையல் இட்ட பொங்கலை அனைவருக்கும் பரிமாற, ஆதிக்கு ரேணு எடுத்து வர அவளை முறைத்தான். அவனது கோபத்தில் வந்த வழியே திரும்பி சென்று,

“இதுக்கு தான் நான் போகமாட்டேன்னு சொன்னேன் கேட்டீங்களா..? போங்க நீங்களே கொண்டு போய் குடுங்க. இல்லன்னா அண்ணன் சாப்பிட மாட்டாரு.” என்று பொங்கலை மயூவின் கைகளில் வைத்தாள்.

‘எப்போதுமே தன்னை மாத்திக்க மாட்டாரா..? இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் தலைகீழாய் போக போகிறதே, அப்போது என்ன பண்ண போறாராம்…?’ சொல்லொண்ணா பாரம் மனதை அழுத்த ஆதியிடம் சென்றாள்.

“ஏன் இப்படி பண்றீங்க”

......

“உங்க கிட்ட தான் பேசுறேன்...” அவனிடம் எந்த பதிலும் இல்லை. பார்த்த விழிகள் பார்த்த படியே இருந்தது அவளை.

.......

அவனிடமிருந்து எந்த செய்கையும் இல்லாமல் போக, தன்னையே தேற்றிக்கொண்டு “சரி இந்தாங்க...” என்று பொங்கலை நீட்டினாள். அவளையும் பொங்கலையும் ஒரு பார்வை பார்த்தவன், வெடுக்கென்று வாங்கி அதை விசிறியடித்தான்.

“அது சாமி பிரசாதம் அத ஏன் தூக்கி போட்டீங்க, என்ன கோவமாயிருந்தாலும் இப்படி தான் பண்றதா...?” மயூ பதறி போனாள். அதற்கும் அவன் மௌனமாகவே இருக்க,

அவளின் தவறை உணர்ந்து “மன்னிச்சிடுங்க…” என்றாள்.

தீர்க்கமாய் அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் நகர்ந்து சென்றுவிட, மயூ இன்னொரு கிண்ணம் பொங்கலோடு அவனிடம் சென்றாள்.

இப்போது எதுவும் பேசாமல் அதை வாங்கி சுவைத்தான். அவன் தன் மேல் கொண்டுள்ள அன்பை நினைத்து பெருமை கொண்டவள், சாப்பிட்டவன் இடையில் அவளுக்கும் ஊட்டி விட, மறுக்க மனமில்லாமல் வாங்கிக்கொண்டாள்.

எப்போது அவள் பரிமாற சீதாவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தாளோ அப்போதிருந்து ஆதிக்கு அவள் தான் பரிமாறவேண்டும். வேறு யாராவது இடையில் வந்தால் அவன் உண்ணாமல் எழுந்து சென்று விடுவான்.

முன்பெல்லாம் தன்மையாகத் தான் நடந்துக்கொண்டான். ஆனால் எப்போது மயூ ரஞ்சனியின் பேச்சை ஆரம்பித்தாளோ அன்றிலிருந்து இன்றுவரை கோவம் கோவம் மட்டுமே அவனிடம் எஞ்சி இருந்தது.

நாசுக்காய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவனை விழிகளில் காதலுடன் மேய்ந்தாள். அவனிடம் இருக்கும் முரட்டு தனத்தையும் சேர்த்தே காதல் செய்தாள் மயூ. அவளது தடைகளற்ற காதலில் ஆதி எப்பொழுதும் அவளிடம் வாகை சூடியே இருந்தான்.

இருவரிடையே சொல்லிக்கொள்ளாத பல வேதனைகள் இருந்தாலும் இந்த நிமிடம் போதுமானதாய் இருந்தது தான். ஆனால் முழுமையாக அவள் தனக்கு மட்டுமே வேண்டும் என்று ஆண் மனம் ஆத்திரம் கொண்டது. அது இனிமேல் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்ற நிஜத்தில் மனம் எரிந்து போனது சாம்பலாய்.

அடக்கப்பட்ட ஆத்திரத்தில், “என்னடி பார்க்கிற...” எரிந்து விழுந்தான். அவனது கோவத்தில் உள்ளம் வேதனை கொண்டாலும்,

“ஏன் பார்க்க கூடாதா...?” பதில் கேள்வி எழுப்பினாள்.

அவளது அந்த பதிலில் கட்டுக்கடங்காமல் சினம் எழ, “பார்க்கலாமே...” என்றவன் அவளை சுண்டி இலுக்க, அவன் மடி மீது வந்து விழுந்தாள்.

“அச்சோ என்ன பண்றீங்க...” பதறிக்கொண்டு சுற்று புறம் பார்த்தாள்.

“இன்னும் எதுவுமே பண்ணல... அதுக்குள்ள மேடம் பதறி போறீங்க. நான் எதுவும் செய்ய கூடாதுன்னு தானே மேடம் இந்த அளவு போய் இருக்கீங்க...” என்றவனது விரல்கள் அவளது இடையில் பதிந்து இறுக்கி பிடித்தது.

அவனது தொடுகையில் “வே... வேணாம்...” முனங்கியவள் அவனுடைய சொல்லில் ஊமை காயங்கள் பட்டு போனாள்...

“நான்...” என்று ஏதோ சொல்ல வந்தவள், அவன் பார்த்த பார்வையில் அமைதியானாள்.

“மூச்ச்... உன்கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லை. நீ வேற, நான் வேற... இது தான் நான் உன்னோட பேசுற கடைசி பேச்சு...” என்றவன், வன்மையுடன் அவளது இதழ்களை சிறை செய்து அவளை பார்த்தான்.

அவன் ஏற்படுத்திடிய பாதிப்பில் உதடு துடிக்க, உயிர் கரைய... அமைதியாக இருந்தாள். அவளது மௌனத்தை பார்த்து எதுவும் பேசாமல் தன் கோவத்தை அடக்க முடியாமல் விழிகளில் மூலம் கனலை கக்கியவன், “இங்க இருந்து முதல்ல போடி...” என்று பல்லைக்கடித்து வார்த்தைகளை துப்பினான்.

“ப்ளீஸ்... ங்க... எதுக்கு இவ்வளவு கோவம்...” என்று சமாதனம் செய்ய வந்தவளை

“நீ பேசி பேசி நான் நிறைவே கேட்டுட்டேன் மயூ... சோ இதுக்கு மேல என்கிட்ட எதுவும் பேசாத. இந்த ஒரு மாசம் தான் என் மொத்த வாழ்க்கையையும் வாழ போறேன்.” என்றவன் எழுந்து செல்ல...

“வேணாம் ஆதி. ஏற்கனவே மனசால செத்துகிட்டு இருக்கேன். நீங்க வேற மேற்கொண்டு வதைக்காதீங்க...” என்றால் கண்ணீருடன்.

அவனோ கொஞ்சம் கூட தயவில்லாமல், “உன்னையே மனசுல உயிரா நினைச்சிருக்கிறவன யாரோ ஒருத்தருக்கு ரொம்ப அசால்ட்டா தூக்கி தர்றியே, அதை விட பெரிய வலிய ஒண்ணும் நீ அனுபவிக்கல. இன்னும் நீ அனுபவிக்க வேண்டியது அதிகம் இருக்கு. இதுக்கே நீ இப்படி சோர்ந்து போனா எப்படிடி,”

“உன்னை வச்சு செய்யணும்னு இருக்கேன். ஒழுங்கா கண்ணு தண்ணிய சேர்த்து வச்சுக்கோ பின்னாடி ரொம்பவே தேவைப்படும்.” என்று கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி சொன்னவன், அவளை இழுத்து தன் மீது சரித்துக்கொண்டு வன்மையாக முத்தமிட ஆரம்பித்தான்.

அவனது ஆளுமையில் விலகவும் முடியாமல் அவனோடு ஒன்றவும் முடியாமல் தவித்துப்போனாள்.

கண்களில் வலிந்த கண்ணீரை உணர்ந்தாலும் அவன் அவளை விடவில்லை. ‘நீ பண்ணி வச்ச வேலைக்கு’ என்று பல்லைக் கடித்தவன் தன்னால் எவ்வளவு தண்டிக்க முடியுமோ அவ்வளவு தண்டித்தான் அவளை.

ஒரு வழியாய் பொங்கல் வைக்கும் வைபோகம் முடிய அனைவரும் வீடு திரும்பினார்கள்.. ஆதி நின்று நிதானமாய் காரை விட்டு இறங்கினான்... எல்லோரும் சென்று இருக்க, மயூவை மட்டும் இருக்க சொன்னவன் காரை செட்டுக்குள் நிறுத்த கார் ட்ரைவர் சாவி கேட்க, அவனோ யாரையும் கண்டுக்கொள்ளாமல் செட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி, அங்கிருந்து இறங்கி அவளை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு அவனுக்கு மிகவும் பிடித்த தோட்ட வீட்டில் நுழைந்தான்..

அவன் அவ்வாறு தனிமை நாடும் போதெல்லாம் மயூ தான் அவனது மூச்சு காற்று.. இப்போதும் அவன் அவளை நாட, அவள் மறுக்காமல் அவனோடு சென்றாள்.

சீதா இருவரும் அந்த வீட்டிற்க்குள் செல்வதை கண்டு கையை பிசைந்துக்கொண்டு இருந்தார்.

ஆதியை கட்டுப்படுத்த முடியாது. ஆனா இப்படி அவர்களுக்கு தனிமையை கொடுத்து மேலும் அவர்களது பிரிவை கஷ்டமாக்க விரும்பாமல், பூஜை அறைக்கு சென்று மனமுருக வேண்டியவர், தோட்ட வீட்டுக்கு சென்றார்.

“எங்க போற சீதா. தலை வலிக்குது. ஒரு காபி கொண்டு வர சொல்.” கேசவன் சொல்ல, அவரை தாண்டி போக முடியாமல் தயங்கியவர்,

“கொஞ்ச நேரம் கழிச்சு தரவா...?” கேட்டார்.

“காபி தானே கேட்டேன். அதுக்கெதுக்கு நீ இவ்வளவு நேவேர்சா இருக்க. உடம்பு நல்லா தானே இருக்கு...” என்று எழுந்து வந்தவர் அவரது நெற்றியில் தொட்டு பார்க்க, கணவனது அக்கரையில் மனம் நெகிழ்ந்தவர்,

“எனக்கு ஒன்னும் இல்லைங்க. நான் நல்லா தான் இருக்கேன்” என்றவர் காபி எடுக்க உள்ளே சென்றார்.

ஆனால் மனமெங்கும் தோட்ட வீட்டிலே இருந்தது.

தோட்ட வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்த பெண்ணவளை அங்கிருந்த சோபாவில் அமரவைத்தவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது பார்வையில் முகம் சிவந்தவள் அவனது பார்வையிலிருந்து நழுவி,

“காபி எடுத்துட்டு வரேன்.” என்று உள்ளே சென்றாள். இல்லம் எங்கும் சீருடை அணிந்த வேலையாட்கள் இருந்தாலும் ஆதியின் மிக முக்கிய வேலைகள் எல்லாம் மயூ தான் செய்வாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 14, 2026 9:34 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top