அத்தியாயம் 3

 
Admin
(@ramya-devi)
Member Admin

“காபி எடுத்துட்டு வரேன்.” என்று உள்ளே சென்றாள். இல்லம் எங்கும் சீருடை அணிந்த வேலையாட்கள் இருந்தாலும் ஆதியின் மிக முக்கிய வேலைகள் எல்லாம் மயூ தான் செய்வாள்.

அவள் செய்ய வேண்டும் என்று இல்லை. அவளுடைய இருப்பு அவனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவளை தன்னோடு கட்டி வைப்பதற்காகவே அவளிடம் வேலைகளை ஏவுவான்.

அப்படி செய்து செய்தே அவனுடைய தேவைகள் எல்லாமே அவன் கேட்காமலே புரிந்து செய்து தருவாள்.

அவளது இந்த புரிதல் அவனை மகிழ்வுற வைக்கும். எப்பொழுதுமே அவள் அவனுடன் கூட இருக்க வேண்டும் என்பது தான் அவனது விருப்பம். அவளது விருப்பமும் அது தான்.

ஆனால் விதி வேறு ஒன்றை வைத்து இருவரிடமும் விளையாட நினைக்கிறது... இது எந்த அளவுக்கு செல்லும் என்பதை மேற்கொண்டு காண்போம்.

காபி எடுக்க உள்ளே சென்றவளை தொடர்ந்து இவனும் உள்ளே நுழைந்தான். அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்தவன் அவளையே பார்த்தான்.

அவனது பார்வையில் உள்ளம் கிலி சூழ... அவளது கைகள் லேசாய் நடுங்க ஆரம்பித்தது.

அவளது உணர்வுகளை படித்தவன், அந்த உணர்வுகளை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளின் பின் புறம் வந்து நின்றான்.

அவனது மூச்சு காற்று அவளின் பின் கழுத்தில் அழுந்தி பதிய விழிகளை மூடு என்று உள் உணர்வு கட்டளை இட, அடுப்பில் காய்ந்த பாலோ வேண்டாம் என்று பொங்குவதற்கு தயாராய் இருந்தது.

முன்புறம் நெருப்பு தணல் என்றால், பின்புறம் காதலனின் மூச்சு காற்று வெப்பத்தை கூட்டிக்கொண்டு அவளை இருபுறம் எரித்துக்கொண்டு இருந்தது.

அவனது அருகாமையில், அவன் மீதிருந்து வந்த மெல்லிய மனம் மயக்கும் வாசம் நாசியில் நுழைந்து அவளை இழுக்க, ஆழ்ந்து சுவாசித்தாள்.. அதில் அவனுக்கே உரிய ஆண் வாசனையும் சேர்த்தே வர... கிறங்கி போனது பெண் உள்ளம்.

ஆனால் ரஞ்சனி இடையில் இடை சொருகளாய் இருக்க அடுப்பை குறைத்து வைத்து விட்டு அவன் புறம் திரும்பினாள் மயூ.

திரும்பியவளின் முகத்தில் தெரிந்த தவிப்பில் உள்ளம் மருகியவன்,

“இது தேவை தானா மயூ...?” கடைசி முறையாய் அவளிடம் கேட்டான். அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.

“சொல்லுடி...” என்றவனின் இதழ் மீது தன் விரலை வைத்து அவனது வாயை மூடியவள், அஞ்சனம் பூசிய விழிகளால் அவனை இன்னும் ஆழ்ந்து பார்த்தாள்.

மன பெட்டகம் முழுவதும் அவனை நிரப்பி வைத்து இருந்தாலும், இன்னும் இன்னும் அவனை சேகரித்து வைத்துக்கொள்ள அவளது மனம் துடியாய் துடித்தது.

அவளது பார்வையில் அவன் கட்டுண்டு அப்படியே நின்றவன் அவளையே பார்த்தான். அவளது கண்ணில் தெரிந்த காதலில் ஆழ்ந்து போய் மூழ்கினான்.

உயிரை கொள்ளும் பார்வையால் அவனை சிதறடித்தவள், இன்னும் நெருங்கி வந்து அவனின் நெஞ்சின் மீது சாய்ந்து அண்ணாந்து அவனைப் பார்த்தாள்.

“ம்ம்ம்...” என்ற சத்தம் கூட அவன் எழுப்பவில்லை. வெறும் புருவத்தை மட்டும் மேலே ஏற்றி என்ன என்று கேட்டான். அந்த மோகன ஏகாந்த நேரத்தில் வார்த்தைகள் கூட பயனற்றதாய் தோன்றியதோ என்னவோ இருவருக்கும்?

ஏற்றி இறக்கிய புருவத்தை தன் கரம் கொண்டு நீவி விட்டவள், அவனது கரத்தை எடுத்து தன் பட்டு இடையில் வைத்து அவனை பார்த்தாள்.

அவனும் இது தான் சாக்கு என்பது போல சேலை மறைத்த இடையின் உள்ளே கைவிட்டு தன்னோடு அவளை இறுக்கி கட்டியவன், அழுத்தம் நிறைந்த கைகளால் அவளது இடையின் மென்மையை உணர்ந்தான். அவனது தொடுகையில் அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.

“இப்படி பார்த்து...” சொல்ல வந்தவனை சொல்ல விடாமல் அவனது முகத்தை கைகளில் ஏந்தியவள் கூர்ந்து பார்த்து அவனை முழுவதும் தன்னுள் சுருட்டிக்கொள்ளுபவள் போல பார்த்தவள், இன்னும் அதிகமாக தன்னுள் அவனை இழுத்து அணைத்தாள்.

அவனது கோவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவளது போக்குக்கு விட்டவன் தன்னை அவளிடம் ஒப்படைத்து நின்றான்.

அவனது புருவத்தை நீவி விட்டவள், கீழிறங்கி அவனது நாசியை தொட்டு வருடியவள், அவனது மீசையை இரு கையாளும் பிடித்து நீளம், அகலம் அளந்து பார்த்தவள் அந்த மீசையில் அழுத்தமாய் தன் இதழை புதைத்து, கண்கள் கலங்க அந்த மீசையிலிருந்து ஒரு முடியை மட்டும் தன் பற்களை கொண்டு கடித்து இழுத்தாள்.

இவள் இவ்வாறு செய்வது அவனுக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும். இன்றும் அது போல செய்தவளை தண்டிக்க முடியாமல் அவளது உணர்வுகளை அவதானிக்க முயன்றான்.

மெல்ல மெல்ல அவனது முடி அடர்ந்த முகத்தை தன் கரங்களால் பற்றி இழுத்தவள் அவனது மீசையை இன்னும் இழுத்து கடித்தாள்.

ஆனால் அதற்கு மேல் முடியாமல் கதறி அழ ஆரம்பித்துவிட்டாள் மயூ. அவளது கதறல் அவனது இதயத்தில் இடியாய் விழுந்தது. அவனாலும் அவளை விட முடியாமல் தானே அவளிடம் தன் கோவத்தை காட்டிக்கொண்டு இருக்கிறான். அவளே இப்படி கதறி அழுதாள் அவனது இதயம் எவ்வளவு கதறி துடிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா...?

மனம் நிறைய காதலிருந்தும் காலத்தின் கோலத்தில் இருவரும் பிரியும் நிலையில் இருக்கும் கடைசி தருணம். இதை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் இருவருமே தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

காதலை முழுவதும் வெளிப்படுத்தவும் முடியாமல், மறைத்து வைக்கவும் முடியாமல் கதறி தீர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்...

கதறி அழுதவளை உதறி செல்ல மனமில்லாமல் தன் கை பிடியில் அவளை வைத்திருந்தவனது நெஞ்சம் தணலாய் கொதித்துக்கொண்டு இருந்தது.

“இப்பவும் இதெல்லாம் தேவையா...?” நறுக்கென்று கேட்டான்... ஆனால் அவனை அதற்கு மேல பேசவிடாமல் அவனது இதழ்களை சிறை செய்தவள் தன்னோடு அவனை அழுத்திக்கொண்டாள்.

அவளது போராட்டம் புரிய தன்னையே நொந்துக்கொண்டவன், தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அவளிடம் ஒன்றினான்.

அவனது ஒன்றுதல் அலைகளித்துக்கொண்டு இருந்த மனதுக்கு நிம்மதியை கொடுக்க, உணர்வு பூர்வமாய் அவனிடம் இன்னும் அதிகமாய் ஒன்றினாள். அவளது உணர்வுகளை படித்தவனுக்கோ அவள் அடுத்த கட்டத்துக்கு தயாராவது போல் தோன்ற... வந்தது கோவம் அதிகமாக.

ஆனால் இந்த சமயம் தன் கோவத்தை காட்டினால் அது அவளை இன்னும் பாதிக்கும் என்று எண்ணியவன், அவளை தொடவும் முடியாமல், விலகவும் முடியாமல் பெரும் அவஸ்தையின் பிடியில் நின்றான்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 14, 2026 9:35 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top