Notifications
Clear all

அத்தியாயம் 67

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நீ பார்த்த வேலை தானா இது” என்று அவளிடம் கடிந்தான்.

“பின்ன நீங்க இவ்வளவு ஹார்சா பேசுனா அவங்க பாவம் தானே.. என்ன இருந்தாலும் அவங்க உங்க அப்பா கூட பிறந்த தங்கச்சி. அது நினைவு இருக்கட்டும்” என்றவள்,

“இப்பேற்பட்ட மாப்பிள்ளையை இழக்க யாருக்கு தான் மனசு வரும்.. அதனால கூடுதலா அவங்க மன ஆற்றாமையை கொட்டுறாங்க. அதை அப்படியே விட்டுட்டு அவங்களுக்கு சமமா நீங்களும் பேசுனா ஆச்சா? பாவம் தானே அவங்களும். கண்ணுக்கு நிறைஞ்ச பையன் அவங்க மருமகனா வரணும்னு ஆசை படுறாங்க. முடியாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு. பட் அதை அவங்க மனசு நோகுற மாதிரி சொல்ல வேண்டாமே” என்றவளை விடாமல் முறைத்தவன்,

“நல்லா பேசுறடி” கடுப்படித்தான்.

“ஹைய்யோ கோவமா?” என்று தன் இடத்தில் இருந்து எழுந்து அவன் மடியில் வந்து அமர்ந்தவள், அவனது முக வடிவை விரல்களால் அளந்து அவனின் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவள்,

“உண்மையா உங்களை மாதிரி ஒருத்தனை தான் எல்லோரும் விரும்புவாங்க மாமா.. உங்க குணத்துக்கு க்யூ கட்டி நீ நான்னு போட்டி போட்டுட்டு இருக்காங்க.. அதுல உங்க அத்தை இன்னும் கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டு உங்கக்கிட்ட பேசிட்டாங்க.. இதுல எனக்கு தப்பா எதுவும் படல.. அவங்க உரிமை இல்லையா நீங்க.. அவங்களுக்கும் ஆசை இருக்கும் தானே.. மகளுக்கு இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சா நல்ல இருக்கும்னு..  இது இயல்பான எதிர் பார்ப்பு தானே மாமா. இதை தவறுன்னு சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கு சொல்லுங்க..” என்றவளை இடுப்போடு கட்டிக் கொண்டவன்,

“அப்போ உனக்கும் ஆசை இருக்குன்னு சொல்லு” என்றான்.

“எனக்கு ஆசை இல்லன்னு நான் எப்போ சொன்னேனாம்..” என்றவள் அவனின் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த மாதவன்,

“ஐயோ” என்று கண்ணை பொத்திக் கொண்டு அலறினான். அவனது அலறலில் பயந்துப் போனவள் பட்டென்று கதிரவனின் மடியை விட்டு எழுந்துக் கொண்டாள்.

“டேய் கதவை தட்டிட்டு உள்ள வர மாட்டியாடா.. கொஞ்சம் கூட மேனேர்ஸ் இல்லாம நீ பாட்டுக்க வர்ற..” காய்ந்தான் கதிரவன்.

“மச்சான் நான் என்னைக்கு டா கதவை தட்டிட்டு வந்து இருக்கேன்” பாவாமாய் கேட்டவன் இன்னும் கண்களில் இருந்து கையை எடுக்கவே இல்லை.

“எருமை கையை எடுடா.. மானத்தை வாங்குறான்” கடிந்துக் கொண்டவன்,

“வேணாம் மச்சான்.. நான் ஒரு பச்ச பிள்ளை. பார்க்காத எதுவும் புதுசா பார்த்து எனக்கு எதாவாது ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா பிறகு பேய் ஓட்டனும்.. அதனால எதுவா இருந்தாலும் கண்ணை மூடியே இருக்கேன்” என்றவனை எழுந்து வந்து முதுகிலே டின்னு கட்டினான்.

“அய்யய்யோ முன்ன கண்ணை அவிச்சான்.. இப்போ முதுகு எலும்பை உடைக்கிறான்.. இதை கேட்க யாருமே இல்லையா” மாதவன் அலற, கதிரவன் இன்னும் இரண்டு அடி சேர்த்து போட, அவ்விடமே கலவரமாய் போனது. அதில் பனி கலகலத்து சிரித்தாள்.

அவளின் சிரிப்பை கண்ணெடுக்காமல் பார்த்தான் கதிரவன். “சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க பனி” என்று மாதவன் சொல்ல,

“டேய் அதை நான் சொல்லணும்” காய்ந்தான் கதிரவன்.

“நீ கொஞ்சம் லேட் அது தான் நான் முந்திக்கிட்டேன்” என்று மாதவன் சொல்ல, கதிரவன் மீண்டும் அவனை மொத்த, பனி வாய் விட்டு, முகம் மலர சிரிக்க கலகலப்பு முன்பை விட இன்னும் அதிகமாக கூடியது அவ்விடத்தில்.

--

வீட்டு ஆட்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். ஹனிமூனுக்கு போன ரேவதி சேகரன் இருவரும் தங்களின் காயங்கள் மறந்து ஒருவரில் ஒருவர் உருகி கரைந்து காணமல் போனார்கள். அவர்களுக்கு முதல் மூன்று நாட்கள் மட்டும் போதுமானதாக இருக்க கிளம்பி வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்த பிறகே கதிரவன் அனைவரையும் கூடத்தில் ஒன்று திரள சொன்னான். வந்த அனைவரிடமும் பத்திரிக்கையை நீட்டினான்.

என்ன ஏது என்று வாசித்துப் பார்த்த அத்தனை பேருக்கும் ஒவ்வொரு மாதிரியான உணர்வுகள் எழுந்தது. ஏனெனில் கதிரவன் குடுத்த பத்திரிக்கை பனியின் அறிமுகப் படுத்தும் விழாவின் அழைப்பிதல். பொன்னன் கலங்கி போய் பனியை பார்த்தார்.

தன் அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அல்லவா தன் பேத்தியை தேடித் போகவில்லை. ரேவதியையும் போக விடவில்லை. அந்த குற்ற குறுகுறுப்பு இன்று வரையிலும் அவருக்கு உள்ளதே..

மங்கை கலா இருவருக்குமே வியப்பு.. எப்படி காணாம போன பிள்ளையை இத்தனை வருடம் கழித்து அடையாளம் கண்டு கூட்டிட்டு வர முடிஞ்சுது என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தது.

சிங்காரத்துக்கு எந்த உணர்வும் எழவில்லை. அவ்வளவு தான் விசயமா என்ற எண்ணம் தான். மகாவுக்கும் மனுவுகக்கும் ரேவதியின் குழந்தை காணாமல் போய் விட்டது என்று மட்டும் தான் தெரியும் அதன் பின்னணி விசயம் எல்லாம் எதுவும் தெரியாது.

“பலே ஆளு தான் மாமா.. இருபது இருபத்தி ஐந்து  வருசத்துக்கு முன்னாடி காணாம போன பிள்ளையை தேடி கண்டு பிடிச்கிட்டாரே.. பரவாயில்லை மாமா திறைமையான ஆளு தான்” என்று இருவரும் பேசிக் கொண்டார்கள்.

“ஆத்தா.. என் குல சாமி.. எங்களை தேடி வந்துட்டியாடி தங்கம்..” என்று விசாலம் அழுதுக் கொண்டே பனியை போய் கட்டிக் கொண்டு கதறினார்.

“உன்னை தொலைச்சுட்டு நாங்க பட்ட பாடு இருக்கே.. ஐயோ அதை வார்த்தையால சொல்ல கூட முடியாது தாயி.. உன்னை தேடி அன்னம் தண்ணி இல்லாம அலைஞ்ச என் அய்யாவுக்கு முழுசா நீ கிடைச்சுட்ட ஆத்தா.. இப்ப தான் நெஞ்சுல எரிஞ்சுக்கிட்டு இருந்த நெருப்பு அனைஞ்சு இருக்கு..” என்று அவளின் முகத்தை உருவி முத்தம் வைக்க, பனிக்கும் கண்கள் கலங்கியது.

தாத்தா எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்து இருந்தார். அவர் தவற விட்ட காலங்கள் எல்லாம் கண் முன் வர தான் செய்த செயல் எல்லாம் அவரை திருப்பி கேள்வி கேட்க ரொம்பவே மௌனமாகி விட்டார்.

பேரன் தலை எடுக்க ஆரம்பித்த உடனே எல்லாவற்றிலிருந்தும் தன்னை தானே விலகிக்கொண்டார். ஆனால் அது முழுமையாக இருக்காமல் கதிரவன் பார்த்துக் கொண்டான் என்றால் மிகையில்லை.

தேவனுக்கு அப்படி ஒரு நிம்மதி.. நெஞ்சில் ஏறி இருந்த பாரம் இறங்கியது போல இருக்க, பனியின் தலையை தடவிக் கொடுத்தார். ஆனால் பொன்னனால் அப்படி செய்ய முடியவில்லை.

இந்ந்த குழந்தையை தேடி அலையும் பொழுது எல்லாம் கதிரவனை அடித்து காயப்படுத்தியது தான் நினைவுக்கு வந்தது. அதனாலே அவரால் பனியிடம் நெருங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அவரை கொன்னது. அதுவும் அவர் சேகரனின் பேச்சை கேட்டு மகனை போட்டு அடித்த அடி எல்லாம் கொஞ்சமா நஞ்சமா.. அத்தனை அடியை வாங்கிக்கொண்டு அவன் பின் வாங்கவே இல்லையே.. கதிரவனின் வைராக்கியம் அதில் நன்றாக தெரிந்த பொழுதும் சேகரனின் அப்பா வார்த்தை அம்புகளால் தைத்து காயம் செய்ய, அந்த கோவத்தை எங்கு காட்டுவது என்று தெரியாமல் மகனை அடித்து அவனை குற்றுயிரும் குலை ஊயிருமாக ரணமாக்கியது எல்லாம் கண் முன் வர தலையை குனிந்துக் கொண்டார்.

எந்த முகத்தை வைத்து கதிரவனையும் பனியையும் அவர் பார்ப்பார். ஒதுங்கியே இருந்துக் கொண்டார். அவரின் விலகளை பார்த்த கதிரவன் பெருமூச்சு விட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : July 19, 2026 10:59 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top