Notifications
Clear all

அத்தியாயம் 32

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அதனால தான் சோகமா இருக்கியா?” கேட்டவன், அவளின் கையை அழுத்தமாக பற்றி, ஆறுதலாக நீவி விட்டவன்,

“அண்ணன் இருக்கேன்ல” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே, அவனது நெஞ்சில் வந்து சாய்ந்துக் கொண்டவள்,

“அழலண்ணா.. ஆனா சின்ன கட்டலா(கஸ்ட்டமா) இருக்கு அவ்வளவு தான். நீங்க இருக்கும் பொழுது கவலை எல்லாம் வருமா என்ன” சிரித்தவள்,

“நீங்க பார்த்துப்பீங்க ண்ணா” என்றாள் அவளே.

அதில் மெலிதாக சிரித்தவன்,

“குட் அண்ணன் இருக்கேன்” என்று விட்டு அவன் சென்றான். அண்ணன் பார்த்துக்குறேன் என்று சொன்னதிலே மலையளவு திடம் வர எப்பொழுதும் போல தாயுடன் வளம் வர ஆரம்பித்து விட்டாள்.

கலாவுக்கு தான் புஸ்சென்று போய் விட்டது. கல்யாண பெண் கொஞ்ச நாள் அழுவாள் என்று எதிர் பார்த்து இருந்து இருப்பார் போல.. கதிரவன் இருக்கும் பொழுது  அது நடக்குமா? அவன் தான் தூணாக நின்று அவனது குடும்பத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறானே..

வெளியே வந்த கதிரவன் பனியோடு குடோன்னுக்கு சென்றான். சிறிது நேரம் அவ்விடத்தில் வேலை பார்த்தவன், கோபாலுக்கு போனை போட்டு அவனை லைனில் பிடித்தவன்,

பேச வருவதாக சொல்லி பனியை அழைத்துக் கொண்டு சென்றான்.

“நான் எதுக்குங்க? ப்ளீஸ் நான் எங்கும் வரல.. என்னை  விடுங்களேன்” என்றவளின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளையும் இழுத்துக் கொண்டு சென்றான் கதிரவன்.

-- 

துளசிக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை கோபால். அவன் கெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அங்கு உள்ளே போகும் பொழுது போன் அலவுட் கிடையாது. அவனை பிடிக்க வேண்டும் என்றால் ஒன்று நேராக செல்ல வேண்டும் இல்லை என்றால் அவனாக எப்பொழுது வெளியே வருகிறானோ அப்பொழுது தான் பார்க்க முடியும்.

இப்பொழுது அவனை பார்க்க தான் கதிரவனும் பனியும் வானது இருந்தார்கள்.

அந்த நிறுவனத்தின் ரிஷப்ஷனில் இன்பார்ம் பண்ணி விட்டு வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து இருந்தார்கள்.

மாஸ்க், கோட், கண்ணாடி, க்ளவுஸ் என்ற சகிதம் வந்தவன் கதிரவன் என்று தெரிந்த உடன், பர்மிஷன் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு சடுதியில் வந்தான்.

“என்ன மச்சான் இவ்வளவு தூரம் என்னை தேடி. ஏதும் இம்பார்டண்டா..” என்று வந்து நின்றான் கோபால்.

“சும்மா தான் மாப்பிள்ளை.. வெளில போய் பேசலாமா? லீவ் சொல்லியாச்சா” விசாரித்தான் கதிரவன்.

“ம்ம் இன்பார்ம் பண்ணிட்டேன். நாளைக்கு வந்தா போதும்.. வாங்க போகலாம்” என்றவன்,

“பனி தானே மா நீ” என்று கேட்டவன், அவளின் நலனை விசாரிக்க திகைத்துப் போனாள் அவள். திரும்பி கதிரவனை பார்த்தாள்.

“நீ பனி என்னோட பிரெண்ட்ன்னு மட்டும் தான் சொல்லி இருக்கேன். சோ அப்படியே மெயின்டேன் பண்ணு” அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல,

“நல்லா இருக்கேன் சித்.. அண்ணா..” என்று அவள் உளறி பிறக்கு தானே தெளிந்து அண்ணன் என்றாள்.

“நீங்க எப்படி இருக்கீங்க?” பதிலுக்கு நலம் விசாரித்துக் கொண்டாள். அவனும் புன்னகையோடு பதில் சொல்லி விட்டு,

“எங்க மச்சான் போறது?”

“உங்க வீட்டுக்கே போகலாம் மாப்பிள்ளை” என்றான் கதிரவன். அதில் யோசனையானவன்,

“ஏதும் பிரச்சனையா கதிரவன்?”

“லைட்டா” என்று பெருமூச்சு விட்டான்.

“துளசிக்கு பேசவா?” கேட்டான்.

“முதல்ல உங்க வீட்டுல பேசிட்டு பிறகு அவக்கிட்ட பேசுங்க”

“என்ன ஆச்சு?” தீவிரமாக கேட்டான்.

அவனது பெற்றவர்கள் நேற்று வீட்டுக்கு வந்து பேசியதை சொல்ல,

“ப்ச்.. நான் தான் ஏற்கனவே சொல்லிட்டனே.. பிறகு ஏன் இப்படி பண்றாங்க?” தடையை தேய்த்துக் கொண்டவன்,

“வீட்டுக்கே போகலாம் கதிரவன். நான் பேசிக்கிறேன்” என்றான்.

அதன் பிறகு மூவரும் கோபாலின் வீட்டுக்கு வந்து சேர, அவனது வீட்டில் உறவுகளின் கூட்டம் இருந்தது.

“என்ன இது?” முணகிக் கொண்டே அவர்களை கடந்து தாய் தந்தையை நோக்கி செல்ல,

“என்ன தம்பி சம்மந்தி வீட்டுல இருந்து ஆளை கூட்டிட்டு வந்து இருக்கீங்க?” ஒரு பெரியவர் ஆரம்பிக்கும் முன்பே,

“எல்லோரும் கொஞ்ச நேரம் இருங்க.. நான் பேசிக்கிறேன்” ஒரே போடாக போட்டு எல்லோரையும் அடக்கி விட்டவன்,

தலையை பிடிக்காத குறையாக இருந்த தாய் தந்தையை பார்த்தான்.

“என்னம்மா இதெல்லாம்.. கதிரவன் வீட்டுக்கு போனீங்களா? இந்த கல்யாணத்தை பத்தி எதுவும் பேசிட்டி வந்தீங்களா? நான் தான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருந்தனே.. பிறகு என்னம்மா...” ஆதாங்கத்துடன் கேட்டவனை பாவமாக பார்த்த அல்லி,

“எல்லாம் உங்க அப்பாவோட அக்காளுங்க பண்ணி வச்ச வேலை தான் தம்பி.. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..” நாசுக்காக சொன்னவர்,

“வாங்க தம்பி.. வாம்மா பனி” என்று இருவரையும் வரவேற்றவர்,

“மேல கூட்டிட்டு போ கோபால்.. நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்” என்றார்.

“இல்ல இருக்கட்டும் அத்தை” என்றான் கதிரவன். அவன் அப்படி வில் பூட்டாக நிற்கவும் அல்லிக்கு கட்டலாய் போனாது.

எப்பொழுது வந்தாலும் இலகுவாக அமர்ந்து பேசிவிட்டு போகும் கதிரவன் இன்று இப்படி இருக்கவும் ஒரு மாதிரி சங்கடமாகி விட்டது அவருக்கு.

தன் கணவரை விழிகளாலே பொசுக்கினார். ராஜன் தலையை குனிந்துக் கொண்டார் மனைவியின் கண்டன பார்வையில்.

“இப்ப தலை குனிஞ்சு என்னத்துக்கு ஆகப் போகுது. அப்பவே சொன்னேன் இல்லையா? உங்க அக்கா தங்கச்சி பேச்சை கேட்டு ஆடதீங்கன்னு. சொன்ன கேட்கணும். நமக்கு நல்ல சம்மந்தம் அமைஞ்சி போச்சுன்னு வயித்தெரிச்சல் பிடிச்சு போய் இருக்காங்கன்னு சொன்னா கேட்டா தானே.. இப்போ அனுபவிங்க.. நம்ம தகுதி தராதரத்துக்கு உசத்தியாவே மருமக கிடைச்சு இருக்கா.. அதுவும் நம்ம மகன் விரும்பினதுனால தான். அதையும் சேர்த்து நினைவு வச்சுக்கோங்க..” யாருக்கும் தெரியாமல் ராஜனை காய்ச்சி எடுத்து விட்டார் அல்லி.

“உடனே நம்ம பையனை அவங்க ஒத்துக்கிட்டதுனால அவங்க தரத்தையும் குணத்தையும் உரசி பார்க்க துணிஞ்சீங்கல்ல” அவர் இன்னும் பேச,

“இல்ல அல்லி” அவர் பாவமாய் பார்க்க,

“என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது. எப்படியும் கதிரவன் தம்பி நம்ம வீட்டுக்கு வந்து பேச வரும். அப்போ ஒழுங்கா பேசி வைக்கிறீங்க. அப்படி இல்லன்னு வைங்க, உங்களை டைவேர்ஸ் பண்ணிட்டு என் புள்ளைக்கு தகப்பன் இல்லன்னு நானே கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்திடுவேன்” நேற்று இரவு தன் கணவனை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார்.

தன் தவறை அப்பொழுது தான் உணர்ந்தார் ராஜன். ஏனெனில் கோபால் தான் துளசியை விரும்பியது. துளசிக்கு அவன் யார் என்று கூட தெரியாது. அவள் கல்லூரி போகும் பொழுது தூரத்தில் இருந்தே பார்த்து உள்ளுக்குள் இரசித்து மனதுக்குள் அவளை மனைவியாக விரித்து காதலித்து விட்டான். நேரம் வரும் பொழுது வீட்டில் பேசலாம் என்று தான் எண்ணி இருந்தான்.

ஆனால் அதற்குள் கதிரவனின் பார்வையில் கோபால் பட்டு விட்டான். அதுவும் இடைவிடாது தன் தங்கைச்சியை பாலோ பண்ணிக் கொண்டு இருக்கும் விசயம் தெரிந்து அவனை கொத்தாக தூக்கி ரெண்டு தட்டு தட்டி விசாரிக்க, அப்பொழுது தான் அவன் கெமிக்கல் பேக்டரியில் மிகப்பெரிய பதவியில் இருப்பது தெரிந்தது.

“உங்க தகுதிக்கு இதெல்லாம் தேவையா மிஸ்டர்?” கதிரவன் சற்று கடுமையாகவே கேட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 1:22 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top