Notifications
Clear all

அத்தியாயம் 47

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நல்ல முன்னேற்றம் தான்டி” என்றவனுக்கு மனதுக்குள் மழை சாரல் தான். பின்ன பனியிடம் இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறதே.. அது போதாதா கதிரவனுக்கு.

விட்டுட்டு போறேன் போறேன் என்றவள் இப்பொழுது அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய முன் வருகிறாளே. அதிலே தெரிந்துப் போக வில்லையா அவளின் நெஞ்சில் அவன் எந்த அளவுக்கு ஆழ பதிந்து போய் இருக்கிறான் என்று. இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டுமாம்..

அவளை கேலி செய்தவன்,

“போடுற டச்சப்பை லிப்ஸுக்கும் சேர்த்து போட்டுக்கடி.. என்னால முடியல.. என் உதடுகளுக்கு உன் உதடு தான் வேணுமாம்.. அடம் பிடிக்கிறது” என்று சொல்லிக் கொண்டே அவளின் இதழ்களை ஆவேசமாக கவ்விக் கொண்டான்.

“ஹாங்” என்று அதிர்ந்து நின்றாள். அவன் கன்னத்தில் முத்தம் வைப்பான் என்று அவள் நினைத்து இருக்க, அவனோ அவளின் கன்னங்களை விட்டுவிட்டு இதழ்களில் அல்லாவா முத்தம் குடுக்கிறான். பின் அவள் அதிராமல் என்ன செய்வாள்.

அவனின் ஆவேசமான இதழ் முத்தங்களில் தடுமாறிப்போனவள் அவனின் பின்னந்தலை முடியயை பிடித்து அவனை நிதானத்துக்கு கொண்டு வந்து அவள் அடக்க, அவனா அடங்குவான்.

மேலும் அவளிடம் வம்பு பண்ண,

“இது தான் இடத்தை குடுத்தா மடத்தை பிடுங்குற கதை” அவனை முறைத்துக் கொண்டே தன் இதழ்களை அவனிடம் இருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

“இது காதலனோட உரிமைடி..” என்றவன் மீசையை முறுக்கி விட்டுக் கொள்ள, அவளோ நாணத்துடன் தன் ஈர இதழ்களை துடைத்துக் கொண்டாள்.

“ம்கும்.. ரொம்ப தான்” என்று சிணுங்கியவள் அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

“எல்லாமே கனவு போல இருக்குங்க” என்றாள். தன் மீது சாய்ந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன்,

“கனவுன்னு மட்டும் சொல்லிடாதடி.. என்னால தாங்கவே முடியாது.. உன்னை என்னோட ஒவ்வொரு அணுவும் துடிச்சு போய் தேடி கண்டு பிடிச்சு இருக்கேன்டி. அவ்வளவு ஈசியா கனவுன்னு சொல்லிடாத.. என் நெஞ்சு பட்டுன்னு வெடிச்சுடும்” என்றான் அழுத்தமாய்.

“ஹைய்யோ நான் அதை சொல்லல.. இப்படி உங்க கூட இருப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல இல்லையா அதை சொன்னேன்” என்று அவள் பதறிப் போய் சொல்ல,

“நீ என்ன சொன்னாலும் கனவுன்னு மட்டும் சொல்லிடாதடி.. என் உயிரின் ஆழமான தேடல் டி கண்ணம்மா நீ..” சொன்னவனின் வார்த்தையில் இருந்த காதலிலும் கண்களிலும் இருந்த காதலிலும் தன்னை தொலைத்துப் போனவள், எம்பி அவனின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்.

அவளின் இதழ் முத்தத்தில் பித்தம் கொண்டவன் அவளை தன்னோடு இழுத்து இணைத்து, இறுக்கமாக தனக்குள் புதைத்துக் கொண்டான். அவனின் ஆளுமையான அணைப்பில் உருகி நின்றவள் அவனின் முரட்டு இதழ்களை இன்னும் தனக்குள் எடுத்துக் கொண்டாள்.

அது போதாது என்று தன் பற்களால் கவ்வி இழுத்துக் கொள்ள, கதிரவனுக்கு தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் அவளின் இதழ்களில் இருந்து தன் இதழ்களை பிடுங்கிக் கொண்டு, வன்மையாக அவளை முத்தமிட்டு அவளின் இதழ்களை கொஞ்சமும் இறக்கம் பாராமல் காயம் செய்து வைத்தான்.

அதில் இருவரின் காதல் பித்தமும் இன்னும் அதிகமானது. ஒருவரை விட்டு ஒருவரால் ஒரு நூல் அளவு கூட விலகி நிற்க முடியாத அளவுக்கு இருவரின் உயிர் நேசமும் அவர்களை ஆட்டி படைத்தது..

அவளின் இதழ்களை கவ்வி தண்டனை கொடுத்தவன் அவளின் முகம் எங்கும் தன் முத்த ஊர்வலத்தை தொடர்ந்து நடத்தினான். அவனை தடுக்க அவளுக்கு மனமே வரவில்லை.

உன் கையில் பிள்ளை நான்.. என்னவும் செய்துக் கொள் என்று அவள் அவனுடைய விருப்பத்துக்கு விட்டு விட, கதிரவன் கட்டுக்குள் அடங்கவே இல்லை. பெண்ணவளின் முகம் எங்கும் ஆவேசமாக முரட்டு முத்தம் வைத்தவன் மீண்டும் அவளின் இதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டான்.

அந்த இதழ் முத்தத்தில் சற்றே ஆசுவாசம் ஆனவன் அவளின் சரிவான கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான் தன் மீசை உரச மிக அழுத்தமாக. அவனின் தலை முடியை பிடித்து இன்னும் தனக்குள் அவனை அழுத்தாமாக புதைத்துக் கொண்டாள் பனியும்.

சிறு ஆசுவாசம் இருவருக்கும் தேவைப்பட, அப்படியே அசையாமல் சில கணங்கள் நின்று இருந்தார்கள் இருவரும்.

பின் நேரமாவதை உணர்ந்து மெல்ல சுதாரித்து இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகி நின்றார்கள். பனியின் முகம் அப்படி ஒரு சிவப்பை அள்ளி பூசி இருந்தது. அதே போல கதிரவனின் முகத்தில் காதலின் கர்வம் ஓங்கி இருந்தது.

“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலும் உன் மிச்ச மேக்கப்பும் கலைந்துப் போகும்டி” தலையை அழுந்த கோதிக் கொண்டவன், மிக மென்மையாக அவளை எங்கும் டச் பண்ணாமல் அவளின் இதழ்களை மட்டும் கவ்வி சுவைத்து விட்டவன்,

“கிளம்பு நான் வரேன்” என்று அவன் போக,

“சட்டை கசங்கி இருக்கு பாருங்க” என்றாள் திக்கி திணறி. அப்பொழுது தான் கண்ணாடியில் தன்னை பார்த்தான். அவளின் கை பட்டு அவனின் உடை மட்டும் அல்லது அவனின் தலை முடியும் கலைந்து இருந்தது.

இரசனையுடன் தன்னை பார்த்தவன் அதை விட அதிக இரசனையுடன் அவளை பார்த்தான். அவனின் இதழ்கள் பட்டு அவளின் மேக்கப் கலைந்து போய் இருக்க, அவனின் முரட்டு கரம் பட்டு அவளின் இடையில் இருந்த புடவை கசங்கி போய் இருந்தது.

இருவரின் உடையும் கசங்கி போய் இருந்ததை பார்க்கஅது  புது வித உணர்வை கொடுத்தது இருவருக்கும். அந்திவானமாய் முகம் சிவந்துப் போனது பெண்ணவளுக்கு.. ஆணவனுக்கு கர்வம் ஓங்கி போனது.

“நீவி விடுடி” என்று அவன் சலுகை கேட்க, அவனின் கைப்பிடிக்குள் மீண்டும் அடங்கியவள் அவனின் சட்டையை நீவி விட்டாள். போதாது என்று அவனுக்கு தலையும் வாரி விட்டு, நெற்றியில் கலைந்து போய் இருந்த சந்தனத்தை துடைத்து விட்டு புதிதாக வைத்து விட்டாள்.

இப்பொழுது அவளின் கையில் இவன் பிள்ளையாகி நின்றான். அவனுக்கு எல்லாம் செய்து விட்டு சற்று எட்டி நின்று அழகுப் பார்த்தவள், திருப்தி பட்டுக் கொண்டாள்.

“இப்ப கிளம்புங்க” என்றாள்.

“ஓகே மேடம்.. உங்க டேர்ன் முடிஞ்சு.. இப்போ என் டேர்ன்” என்று இரு கையையும் பரபரவென்று தேய்த்து அவளை நெருங்கி வர,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார்.. எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. இதுக்கு மேல இங்க நின்னா என்ன ஆகுமுன்னு எனக்கு நல்லா தெரியும்.. சோ உங்க சர்வீஸ் இப்ப எனக்கு வேண்டாம்.. வெளிய கிளம்புங்க” என்றாள் அடக்கப்பட்ட புன்னகையுடன்.

“நீ சீட் பண்றடி.. எனக்கு மட்டும் எல்லாம் செஞ்சு விட்ட தானே..” என்றவனுக்கும் அடக்கப்பட்ட புன்னகை தான்.

“சரி சரி கிளம்பு.. நான் வெளில வெயிட் பண்றேன்” என்று வெளியே போனவன், பார்லர் ஆட்களை அனுப்பி விடவும் மறக்கவில்லை.

அவர்கள் உள்ளே வந்து பெண்ணவளை பார்க்க, நமட்டு

Loading spinner

Quote
Topic starter Posted : June 12, 2026 3:54 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top