“ஏம்மா ஒரு மாதிரியா இருக்க?” அவரின் கையை பிடித்துக் கொண்டு கேட்ட மூத்த மகளை பார்த்தவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
“இப்பவே இப்படி பேசுற மங்கை. நாளைக்கு அவ பொண்ணை நம்ம கதிரவனுக்கு கட்டி குடுத்தா என் வீட்டு ஆளுங்களை இந்த வீட்டுக்குள்ளவே விட மாட்டா ரேவதி.. உனக்கு புரியுதா? அண்ணி முகமே செத்து போயிடுச்சு..” கலங்கியவரை கண்டு தானும் கலங்கியவர்,
“என் பொண்ணு இந்நேரம் என் கூட இருந்து இருந்தா உங்க பொண்ணு ஒன்னும் என் தம்பிக்கு வேணாம். என் மக இருக்கா. அவ தான் என் தம்பி பொண்டாட்டின்னு சொல்லி இருந்து இருப்பேன் ம்மா.. ஆனா அதுக்கு கூட நான் குடுத்து வைக்கல.. என் பிள்ளை எங்க இருக்கோ என்ன பாடு பட்டுட்டு இருக்கோ தெரியல.. பாவிம்மா நானு.. பாவி.. என் பொண்ணு முகத்தை கூட காணாத பாவி நான்..” என்று ரேவதி இத்தனை நாள் துயரத்தையும் ஒட்டு மொத்தமாக கொட்டி அழ ஆரம்பிக்க,
“ஐயோ பாப்பா.. நீ விசனப் படாதடி.. இத்தனை நாள் எவ்வளவு நிமிர்வா இருந்த.. இப்ப உனக்கு என்ன ஆச்சு? ஏன்டி இப்படி அழற?” மகளை தேற்றி எடுப்பதற்குள் காமு ஒரு வழியாகிப் போனார்.
இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த பனிக்கு நெஞ்சுக்குள் அப்படி ஒரு பிரளையம் ஏற்பட்டது.
இங்கு வந்த நாளில் இருந்து இப்பொழுது தான் முதல் முறையாக தனக்காக தன் தாய் அழுவதை பார்க்க நேர்ந்தது அவளுக்கு.
“என்னை மறக்கலையா ம்மா நீங்க” கேட்டவளின் விழிகளில் மௌனமாக கண்ணீர் கசிந்தது.
--
கண்ணீர் வழிய அழுதுக் கொண்டு இருந்த பனியின் தோளைத் தொட்டான் கதிரவன்.
அவனது தொடுகையில் திடுக்கிட்டுப் போனவள் திரும்பி பார்க்க அங்கு கதிரவன் நிற்கவும் தன் உள்ள வேதனை தாங்காமல் அவனை வலி நிறைந்த ஏக்கத்துடன் பார்த்தாள்.
அவளின் பார்வையை கண்டு நெஞ்சு கணத்துப் போன கதிரவன்,
“என்ன கண்ணம்மா இது.. எதுக்கு இப்போ இவ்வளவு வேதனை படுற.. அழாதடி.. நீ அழுதா என்னாலா தாங்கவே முடியாது. ஈசிடி.. இதெல்லாம் நீ நினைச்சா ஒண்ணுமே இல்லாம செஞ்சுடலாம்.. உன் அம்மா கிட்ட போய் பேசுறியா?” அவளிடம் கேட்டுக் கொண்டே அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அவனது அணைப்பில் இருந்தாலும் அவன் சொல்வதை மட்டும் அவள் கேட்கவில்லை.
“ம்ஹும்.. நான் யாருன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் மாமா..” என்று சொன்னவளை எரிச்சலுடன் பார்த்த கதிரவன்,
“போய் தொல போடி” கடுப்படித்தவன் அவளை இழுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.
“ஏன் இப்படி இழுத்துக் கிட்டு வர்றீங்க? கொஞ்சம் கூட பொறுமையே இல்ல..” அவனை திட்டிக் கொண்டே அவனது அறைக்குள் நுழைந்தாள்.
முதல் முறையாக அவனின் அறைக்குள் நுழைந்தாள். அந்த அறையின் பிரம்மாண்டம் பார்த்து வியந்தவள்,
“உங்க அறையை மட்டும் என்ன ஸ்பெஷலா ரெடி பண்ணி இருக்கீங்க? மத்தவங்க என்ன தக்காளி தொக்கா” கேட்டவளுக்கு முன்பு இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்து இருந்தது.
“ஏன்டி இப்படி என்னை படுத்துற? நீயும் அழுது உன் அம்மாவும் அழுது இதெல்லாம் தேவையா? இன்னும் எத்தனை நாளுக்கு அவளை அழ விட போற?” அவளிடம் கடுப்படித்தான்.
“ஆமா ரொம்ப தான் அக்கறை. அந்த அக்கறை இருக்குறவங்க என்னை ஒரு நாளாவது தேடி வந்து இருக்காங்களா?” அவனிடம் காய்ந்தாள்.
“வர விடாம பண்ணது நான்” என்றான் அழுத்தமாக.
“ப்ச்” என்று கொட்டியவள்,
“இதெல்லாம் ஒரு ரீசனா மிஸ்டர் கதிரவன்..” என்றவளை ஊரு இருக்கையில் அமரவைத்தவன்,
“இது மட்டும் தான் ரீசன் கண்ணம்மா.. உனக்கு இங்க நடக்குற பாலிட்டிக்ஸ் பத்தி எதுவும் தெரியாது. குறிப்பா உங்க அம்மா வாழ்க்கையை பத்தி எதுவும் தெரியாது..” என்று பெருமூச்சு விட்டான்.
“ஆமா என்னக்கு எதை பத்தி தான் தெரியும்.. யாரை பத்தி தான் தெரியும்” என்று அவள் விராக்தியாக பேச,
“ப்ச் கண்ணம்மா” அதட்டியவன், அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்,
“இப்படி விரக்தியா பேசாதடி.. இங்க என்ன எல்லாம் நடக்குதுன்னு உனக்கு இந்த கல்யாணம் நடக்கும் பொது தெரிய வரும்.. கொன்ஞ்சம் பொறுமையா இரு..” என்று சொன்னவன்,
“ஆமா என்ன வாசமா இருக்க..” என்று அவளின் நெற்றியில் அணிந்து இருந்த சந்தனத்தின் வாசம் அவனை வெகுவாக ஈர்த்தது.
காலையில் முகூர்த்த கால் ஊன்றி இருந்ததால் அப்பொழுது வைத்த சந்தனத்தின் வாசமும் குங்குமத்தின் வாசமும் இப்பொழுது வரை அவளிடம் வீசியது.
அதை நுகர்ந்தவன் அவளிடமே கேட்க, அவனது மீசை தன் கழுத்தோரம் உரசிப் போனதில் கூச்சம் கொண்டு குருகியவள்,
“என்ன பண்றீங்க?” தடுமாறிப் போனாள்.
“ம்ம்.. ரொம்ப வாசமா இருக்கடி.. அதுவும் நான் எடுத்துக் குடுத்த இந்த புடவையில இன்னும் அழகா இருக்க.. உனக்கு சுடியை விட புடவை ரொம்ப அழகா இருக்கு..” என்றவன்,
“அன்னைக்கு டைலர சொன்னதுக்கே ஏதோ உன்னோட அளவை சொன்னது போல அவ்வளவு கோவப்பட்டியே.. இப்போ உன் அளவை மேஷர் பண்ணா மேடம் என்ன பண்ணுவீங்களாம்” என்று கேட்டவன் அவளின் இடையை இறுக்கிப் பிடித்தான்.
“வாட்?” என்று அதிர்ந்து அவன் பக்கமாக திரும்பி அமர்ந்தாள்.
“ம்ம்.. கொஞ்சமா உன்னை அளவு எடுத்துக்குறேன்” என்று அவன் இதழ்களை அவளின் கழுத்தில் புதைக்க,
“என் எண்ணத்தை மாத்த தான் இந்த அளவீடுன்னா எனக்கு வேணாம்” என்றாள் பட்டென்று.
கதிரவனுக்கே ஒரு கணம் ஜெர்க்காகிப் போனது. தன்னை கண்டு கொண்டாளே என்று. ஆனாலும் அவளிடம் மறைக்க முடியவில்லை அவனால்.
“ரொம்ப ஷார்ப்டி” என்றான்.
மீண்டும் முன் பக்கம் பார்த்தது போல திரும்பி, அவனின் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டவளுக்கு பெரும் மூச்சு வந்தது.
“எனக்கு தெரிஞ்ச கதிரவன் மாமா அப்படி எல்லாம் ரொம்பவும் கீழ்த்தரமா நடந்துக்க மாட்டாரு” என்றாள்.
“ம்ஹும் ரொம்ப நம்பிக்கை தான். ஆனா எப்பவும் இதே மாதிரி இருக்க மாட்டேன்டி.. நானும் எல்லா உணர்வுகளும் இருக்கும் மனுசன் தான்” என்றான்.
“உங்க உணர்வு எனக்கும் தெரியும். ஆனா இப்போ உங்க கண்ணுல கொஞ்சம் கூட என் மீதான காதலோ காமமோ எதுவுமே இல்ல. அதனால தான் என்னால உங்களை அடையாளம் காண முடிஞ்சுது” என்றவள்,
“ஏன் மாமா நம்ம எல்லோரடா வாழ்கையும் இவ்வளவு சிக்கலாகி இருக்கு..” விழியோரம் கண்ணீர் கசிந்தது.





