“இப்போதைக்கு அதுக்கு வாய்ப்பு இல்லை. என் மகனை பெத்து எடு முதல்ல. பிறகு பெரும் காமத்தை பார்க்கலாம்” என்று உறுதியாக மறுத்து விட்டான்.
ஏந்திழையாளுக்கு மறுபடியும் ப்ளீடிங் வந்தால் குழந்தைக்கு ஆபத்தாக முடியும் என்பதால் மிகவும் கவனமாகவே இருந்தார்கள் இருவரும். அதுவும் சிங்கன் மிக மிக கவனமாக இருந்தான்.
ஏந்திழையாளின் மீது கொள்ளை கொள்ளையாக ஆசை இருந்தாலும் அதை காட்ட இது நேரமில்லையே. அதனால் எவ்வளவு தன் ஆசையை அடக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆசையை அடக்கிக்கொண்டு அவளிடம் கட்டுப்பாடாக இருந்தான்.
அவனது கட்டுப்பாட்டை கண்டு வியந்து போனவள், “ரொம்ப தான்” என்று கேலியும் செய்தாள்.
“இதுக்கெல்லாம் பின்னாடி இருக்குடி உனக்கு” என்று கருவிக் கொண்டவன் அதே போலவே நடந்தும் கொண்டான்.
புதிய விடியலின் தொடக்கத்திலே ராசசிங்கனின் மகன் மண்ணில் வந்து பிறந்தான். தாய்க்கு பெரிதாக எந்த சிக்கலையும் கொடுக்காமல் இலகுவாகவே வந்துவிட்டான். ஆனால் அழமட்டும் செய்யவில்லை சின்ன வாண்டு.
எவ்வளவோ போராடிப் பார்த்தும் அவன் அழாமல் போக ஷோபனா வேறு வழியில்லாது ராசசிங்கனை அழைத்து அவனது கையில் கொடுத்தார்.
இதுநாள் வரையில் நெஞ்சில் சுமந்த தந்தையின் கைகளில் தவழ்ந்தவனுக்கு அவனின் தந்தையை போலவே பிடிவாதம் அதிகம் இருந்ததோ என்னவோ அப்பொழுதும் அழவில்லை...
“டேய் உன் அம்மா வயித்துல இருக்கும் பொழுது உனக்கு என்னடா சொல்லிக் குடுத்தா அப்படியே என்னை மாதிரியே பிடிவாதமா இருக்குற” என்று அவனின் காதோரம் குனிந்து பேசினான் சிங்கன். அதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த ஏந்திழையாளோ,
“நீ அப்படியே உங்க அப்பனை போலவே வரணும்னு சொல்லி உங்க குணத்தை எல்லாம் பாடமா சொன்னேன். ஆனா அவன் டிட்டோ உங்களை மாதிரியே வருவான்னு நான் என்ன கண்டேன்” என்றவள் சிங்கனின் கையில் இருந்த மகனை பார்த்தாள்.
இவர்கள் இருவரும் மட்டும் தான் எந்த பதட்டமும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் டாக்டர்கள் முதற்கொண்டு அங்கு பணி புரிந்த நர்ஸ்ல இருந்து அத்தனை உறவுகளும் சூழ்ந்து இருந்த எல்லோருமே பதட்டத்தில் தான் இருந்தார்கள்.
“எனக்கு தெரியிற மாதிரி அவனை காண்பிங்க” என்று சொன்னவள்,
“டேய் ஏற்கனவே எங்களை பாடா படுத்திட்ட... அப்பவே எங்களை விட்டு போவது போல பயம் காட்டின. ஆனா அதுக்கே நாங்க ரெண்டு பேரும் பயப்படல. இப்பவா பயப்பட போறோம். ஒழுங்கா எழுந்து வா... இந்த ஒரு முறை மட்டும் அழு. பிறகு உன் அப்பன் உன்னை அழவே விட மாட்டாரு” என்றாள் நிதானமாக.
அதற்கும் அவன் அசையவே இல்லை. அவளின் மார்பிலும் வைத்து பார்த்து விட்டார்கள். ம்ஹும் அவன் அழவே இல்லை.
ராசசிங்கனும் என்னென்னவோ பேசி பார்த்தான் ம்ஹும் அவன் அசையவே இல்லையே. ஏந்திழையாளுக்கு ஒன்று தோன்ற அதை ராசசிங்கனிடம் சொன்னாள்.
“என்னடி சொல்ற?” என்றான்.
“நீங்க முதல்ல குடுங்க” என்றவளை பார்த்தவன் பின் முழு புன்னகையுடன் தன் மகனின் நெற்றியில் அழுத்தமாக முதல் முத்தத்தை பதித்தான். அவன் பதித்த அடுத்த நொடி சிங்கனின் மகன் வீரிட்டு அழத் தொடங்கினான்.
“என்ன மாதிரி என்ன மாதிரின்னு நீ உன்னை மாதிரி தான்டி பிள்ளையை பெத்து வச்சு இருக்க.. இதுல வயித்துல இருக்கும் போதே என்னை பத்தி பாடம் வேற எடுத்து இருக்க... அப்படி என்ன தான் இருக்கோ இந்த என் நெத்தி முத்தத்துல...” அலுத்துக் கொண்டவனின் இதழ்களில் பெருமையே மிஞ்சி இருந்தது.
தாய்க்கும் மகனுக்கும் வஞ்சனை இல்லாமல் நெத்தி முத்தத்தை கொடுத்தவன் அதன் பிறகு அவர்களை விட்டு நகரவே இல்லை. கிளீன் பண்ணிட்டு வருவாங்க என்று சொல்ல அவன் கேட்கவே இல்லை.
இருவரையும் தன் கைகளிலே வைத்துக் கொண்டான்.
மூன்று மாதம் கழித்து...
குழந்தை பெற்று மூன்று மாதம் கழித்த பிறகே ஏந்திழையாளை ராசசிங்கனின் அறைக்குள்ளே அனுமதித்தார்கள் பாட்டிமார்கள்.
அதுவரை மேலேப் போக விடவே இல்லை அவளை. சிங்கனுக்கும் கொஞ்சம் வேலை இருந்ததால் அவள் கீழே இருப்பதே நல்லது என்று சொல்லி விட்டான்.
ஏந்திழையாளுக்கு தான் மனம் தாங்கலாய் போனது. ஆனாலும் ராசசிங்கன் தாய் சேய் இருவரையும் அனுதினமும் பார்த்து விடுவான் எவ்வளவு வேலை பளு என்றாலும்.
வேல்முருகன் தன் மூத்த மகளின் பங்கையும், தன் பேரனான ராசசிங்கனின் பங்கையும் சரியாக பிரித்து அவனிடம் ஒப்படைத்து விட்டார்.
“எனக்கு இதெல்லம் வேணாம்” என்று அவன் மறுக்கவே இல்லை. வாங்கிக் கொண்டான். எல்லோரையும் விட அவனுக்கு தான் சேர்ஷ் மிக அதிகமாக இருந்தது. ஏந்திழையாளின் பங்கும் அவனுக்கு வந்து சேர எல்லாவற்றிலும் முடிவெடுக்கும் அதிகாரம் அவனிடம் வந்து விட்டது.
அதோடு கார்த்தியும் சரி யுகேஷும் சரி குடும்பத்துக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அவர்கள் என்று இல்லை. அந்த வீட்டில் எல்லோருமே அப்படி தான். ஆனால் ராசசிங்கன் வேறாயிற்றே. அவன் பொறுப்பு எடுத்த பிறகு வேல் க்ரூப்ஸ் ஏறுமுகம் கண்டது.
“டேய் நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதுக்கு ப்ரிப்பேர் பண்றதை விட்டுட்டு இங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?” என்று பல்லைக் கடித்தான் ராசசிங்கன்.
“மாப்பிள்ளை எங்களுக்கு ஆபிசை விட எங்க தங்கச்சி நிகழ்ச்சி தான் முக்கியம். நாளைக்கு பிள்ளைக்கு பேர் வைக்கும் வைபோகம் அதை சிறப்பா செய்யணும்னு ப்ளான் போட்டுட்டு இருக்கோம் எங்களை டிஸ்டப் பண்ணாம நீயும் கதிரும் அந்த மீட்டிங்கை பார்த்துக்கோங்க” என்று புடவை செலக்ஷனில் இருந்தவன்களை முறைத்துப் பார்த்தவன்,
“இருங்க டா சேர்ஷ் மொத்தத்தையும் என் பேருக்கு மாத்திக்கிறேன். அப்பவாவது ஒழுங்கா வேலையை பார்க்குறீங்கலான்னு பார்க்கிறேன்” என்று பல்லைக் கடித்தான்.
“வெரி சாரி. நீ ரொம்ப லெட் அண்ணா... நீ மொத்த சொத்தையும் ஆட்டைய தான் போடு... இல்லன்னா அடமானம் தான் வை. எங்களுக்கு மூணு நேர சோத்தை மட்டும் போடு. அது போதும்.. எங்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ் வாழ்க்கை எல்லாம் வேணாம்” என்ற வருணை ஆக மட்டும் முறைத்துப் பார்த்தான் ராசசிங்கன்.
“அப்போ எங்க பாஸ் மட்டும் என்ன இழிச்ச வாயா?” என்று முறைத்தான் கதிர்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் உன் பாஸ் இழிச்ச வாயன் தான்” என்று யுகேஷ் தன் தங்கை கணவனான மாப்பிள்ளையை பார்த்து கண்ணடித்தான்.
“டேய் வேணாம்... எனக்கும் ஒரு நேரம் வரும். என்னை ஏன்டா சீண்டினோம்னு நினைக்க வச்சிடுவேன். பிறகு ரொம்ப க(ஷ்)ட்டல் பட்டு போயிடுவீங்கடா” என்று எச்சரித்தான்.
ஆனால் அதை யாரும் காதிலே போட்டுக் கொள்ளவில்லை. கம்பெனியின் முக்கிய தலைமை பொறுப்பில் ராசசிங்கனை அமரவைத்தார் வேல்முருகன். அவன் வேண்டாம் என்று மறுக்க,
“இது உன்னோட இடம்டா கண்ணா... நீ இங்க தான் இருக்கணும்” என்று இரண்டு தாத்தாவும் உறுதியாக சொல்லிவிட, அவனால் அதிகமாக மறுக்க முடியவில்லை.
அவனது கம்பெனியோடு சேர்த்து இவர்களது நிர்வாகமும் அவனிடம் வந்து சேர இரண்டுமே இந்தியாவின் முதன்மை நிறுவனங்கள். அதனால் அவனுக்கு வேலை பளுவும் மிக அதிகமாக இருந்தது.
ஓரளவு இல்லை நன்றாகவே அவனுக்கு கைக்குடுத்தார்கள் தான். ஆனாலும் முழு பளுவும் ராசசிங்கன் தான் தாங்கினான். மூன்று மாதம் முடிந்து வந்த முதல் நாளில் ராசசிங்கனின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா வைத்தார்கள்.
அதற்கு அடுத்த நாளே கம்பெனியின் தலைமை பொறுப்பை ஏற்றதற்காக தொழில்முறை நட்புகளுக்கும் முகவர்களுக்கும் அறிவிப்பு கொடுத்து இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள் தாத்தாக்கள்.
அதனால் வீட்டில் இருந்த அனைவரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.
கதிர், வருண், நடாஷ், பிரகாஷ் மற்றும் சுரேஷ் எல்லோரும் விழா ஏற்பாட்டை கவனித்தபடியே வந்தவர்களின் பாதுக்காப்பு எப்படி இருக்கிறது என்று எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
கார்த்தியும் யுகேஷும் வீட்டு ஆட்களின் மீது முழு கவனத்தை வைத்து அவர்களை மறைமுகமாக காவல் காத்துக் கொண்டு இருந்தார்கள். ஏனெனில் ட்ரிங்க்ஸ் பார்ட்டியும் இருந்தது.
அனைவருமே மிக அழகாக கிளம்பி வந்து இருந்தார்கள். அதுவும் வேல்முருகனின் குடும்பத்தை பற்றி சொல்லவே வேண்டாம்..
எல்லோரும் வைரத்தில் மின்னினார்கள். ராசசிங்கன் தன் மனைவிக்கு யாரும் போடாத மிக விலை உயர்ந்த ப்ளூ மூன் வைரத்தை பரிசளித்தான் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்கு. தற்பொழுது இந்த இரவு பார்ட்டிக்கு பிங்க் ஸ்டார் டைமெண்டை அவளுக்கு மீண்டும் பரிசளிக்க எல்லோருமே வியந்துப் போனார்கள்.
வந்த அனைவருமே அவளின் பிங்க்ஸ்டார் வைரத்தையே பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். தன்னை காட்சி பொருளாய் மாற்றிய தன் கணவனை முறைத்துப் பார்த்தாள்.
“இதுக்கு தான் எனக்கு இந்த பரிசை குடுத்தீங்களா?” கடுப்புடன் யாருக்கும் தெரியாத வண்ணம் முகத்தை சிரித்தபடி கேட்டாள் தன் கணவனிடம்.
“ஹேய் நீ ராசசிங்கனோட பொண்டாட்டிடி.. எல்லோரும் தான் வைரம் போடுறாங்க. அதுக்காக நீயும் அதே வைரம் போட்டா இந்த சிங்கனுக்கு என்ன வேல்யூ” என்று புருவம் ஏற்றிக் கேட்டவன்,
“நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல்டி” என்று நெற்றி முட்டியவன்,
“இன்னைக்கு ரெடியா இரு” என்றான்.
“நான் மாட்டேன்... ரொம்ப டையர்டா இருக்கு” என்றாள்.
அவளை மேலும் கீழும் பார்த்தான்.
“கொஞ்சம் கேப் விட்டது தப்பா போச்சுடி” என்று முறைத்தவன்,
“சிங்கனுக்கு வேணும்னா வேணும். மொத்தமா வேணும்... எதையாவது ஒளிச்சு வை. பிறகு தெரியும் இந்த சிங்கன் யாருன்னு” என்று சொன்னவன் யாருக்கும் தெரியாமல் அவளின் சேலை மறைவில் இடையை கசக்கி பிடித்தவன்,
“ரெடியா இருடி... நைட் முழுக்க நீ வேணும். ஏதாவது காரணம் சொன்ன உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவேன்” என்று தன் உணர்வுகளை அவளுக்கு காட்டிக் கொடுத்தவன் அவளை விட்டு விலகி விட்டான்.
அவன் செய்த செயலில் முகம் சிவந்துப் போனவள்,
“ச்ச நேரம் காலமே தெரியாது இவருக்கு மட்டும்” என்று சுகமாக அலுத்துக் கொண்டவளும் அவனை நெஞ்சில் போட்டுக் கொள்ளும் நேரத்துக்காக காத்திருந்தாள்.





