Notifications
Clear all

அத்தியாயம் 46

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவனுக்குமே தெரியவில்லை ஏன் அவளை நாடிப்போகிறோம் என்று.. எத்தனையோ பெண்களை கடந்து வந்த போதும் இவள் ஒருத்தியிடம் இப்படி கெஞ்சிக் கொண்டு கோவப்பட்டு என அவன் முற்றிலும் வேறு ஒருவனாய் அவளிடம் இருக்கிறான்.

அவனின் உணர்வுகள் இவள் ஒருத்தியிடம் மட்டுமே வெடித்து கிளம்புகிறது என்பதை புரிந்துக் கொண்டவன் அதை இன்னும் பெரிதாக்க அவளை நாடினான். அவன் காணாத உணர்வுகள் வெளியே வர, அதை அவளிடம் கொட்டி கவிழ்க்க முடிவு செய்து இதோ அவளிடம் வந்து விட்டான். இனி என்ன ஆகுமோ..

இது நாள் வரை அவனுள் உறைந்து இருந்த உணர்வுகள் மொத்தமும் இவளிடம் வெளிப்பட்டால் இவளால் தாங்க முடியுமோ என்னவோ.. அது தெரியாமல் அவளை நாடி வந்து விட்டான் தன் உயரத்தை மறந்து.

உணர்வுகளின் பிடியில் சிக்கி இருந்தவன் பிள்ளையின் கண்ணை மறைத்து அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பியவன் சதை பற்றான அவளின் இதழ்களை வன்மையாக சிறை செய்துக் கொண்டான்.

அவனின் இதழ் முத்தத்தில் இருந்து வெளியே வர அவள் போராட, அவளின் போராட்டத்தை முற்றிலுமாக அடக்கியவன் தன் இதழ்களை அவளுக்கு உணவாக்கி அவளின் இதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டான் உணவை போல..

அலுவலகம் போவதை பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் அவளுள் மூழ்கினான் தீத்திரள் தீரன்

--

அதிரலின் நெருக்கத்தை அவனின் மனம் மிக அதிகமாக கேட்க, எதையும் யோசிக்காமல் அவளை நெருங்கி முத்தமிட ஆரம்பித்து விட்டான் தீத்திரள் தீரன்..

அவனின் அதிரடி முத்தத்தில் திகைத்துப் போனவள் அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள். ஆனால் அவனோ அவளை கொஞ்சமும் விடாமல் இன்னும் அவளின் இதழ்களில் அழுத்தி அழுத்தி முத்தம் வைத்தான்.

“ப்ளீஸ்..” என்றவளின் மன்றாடல்கள் எதுவும் அவனின் காதிலே விழவில்லை போல.. அவனின் ஒரே நோக்கம் அவள் என்பது போல அவனின் வெளிபாடு இருக்க அதிரலுக்கு தான் பயமாய் போனது.

அவனது தீரத்தின் முன்பு அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பிள்ளை வேறு மடியில் இருக்க, இவனோ அவளை போட்டு வதைக்க, இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டவளாய் அல்லாடிப் போனாள்.

அவனது கைகள் மிக சுதந்திரமாக அவளின் இடுப்பை பிடித்துக் கொள்ள இவளுக்கு தான் பக்கென்று இருந்தது. அதோடு அவளின் ஒட்டு மொத்த உயிரையும் இதழ் வழியாக உறிஞ்சி விடுபவன் போல அவன் முத்தமிட பெரிதும் தளர்ந்துப் போனாள்.

அதோடு மூச்சு வேறு முட்ட அவனின் முதுகை அடித்து இவள் சைகை காட்ட, லேசாக அவளிடம் இருந்து முகத்தை மட்டும் நகர்த்திக் கொண்டான் தீரன்.

அவன் விலகிய பிறகே நன்றாக மூச்சை வாங்கி சுவாசித்தாள். அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதை பார்த்த தீனுக்கு மீண்டும் அவளின் இதழ்களில் குடித்தனம் நடத்த ஆசை வர, வேகமாய் அவளின் பின்னந்தலையை பற்றி ஆவேசமாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

“ம்மா...” என்று முணகிய அவளின் முணகல்கள் எல்லாம் அவனின் இதழ்களுக்குளே முடிந்துப் போனது. கண்களை மூடி அவன் விடாமல் சுவைத்து கடித்து வைத்ததில் பெண்ணவளின் இதழ்கள் எல்லாம் காயம் கண்டுப் போனது.

இடைவிடா முத்த வேட்கையில் திணறிப் போனவள் “ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

அடித்தும் பார்த்து விட்டாள், திட்டியும் பார்த்து விட்டாள் ஆனால் அவளை கொஞ்சமும் விடாமல் இப்படி செய்பவனை என்ன செய்வது என்று தெரியாமல் அலமலந்து போனாள் அதிரல்.

ஒருவழியாக அவனின் முத்த தாகம் தீர பெண்ணவளை விட்டான். அவன் விட்ட அடுத்த நொடி பலார் என்று அவனின் கன்னத்திலே ஓங்கி அறைய வந்தாள். ஆனால் அவள் இதை தான் செய்வாள் என்று அறிந்தானோ என்னவோ அவளின் கையை பாதியிலே இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

அவனது பிடி இரும்பு பிடியாக இருக்க திணறிப் போனவள்,

“கையை விடுங்க” என்று அவனின் கைப்பிடியில் இருந்து தன் கையை உருவிக் கொள்ள பார்க்க அவன் விட்டால் தானே..

“ப்ளீஸ் விடுங்க.. வலிக்கிறது நீங்க பிடிச்சு இருக்குறது”

“அதை நீ அறைய வந்தியே அப்போ யோசிச்சு இருக்கணும்” முறைத்தவன்,

“என்ன தைரியம் இருந்தா என்னை அறைய வந்து இருப்ப” ஆவேசத்துடன் கேட்டான்.

“நீங்க மட்டும் என் அனுமதி இல்லாம என்னை தொடலாமா? கேட்க ஆளு இல்லன்னு தான் இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க?” கண்கள் கலங்கிப் போய் கேட்டவளை கூர்ந்துப் பார்த்தவன்,

“ஆமான்டி அது தான் உண்மை.. உன்னை என்ன செஞ்சாலும் இங்க யாரும் வந்து கேட்க முடியாது. அதுக்கு தான் உன்னை பயன்படுத்திக்கிட்டேன் போதுமா” என்று எகத்தாள பேச்சில் உள்ளம் நொறுங்கியவள்,

“ச்சீ நீங்க எல்லாம் மனுசனே இல்ல.. மிருகம்” என்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வெளியே போகப் பார்க்க அமர்ந்த நிலையிலே அவளின் முந்தையை பிடித்து இழுத்தான்.

“விடுங்க..” என்று அவனின் கையில் இருந்த சேலையை பிடுங்கப் பார்க்க,

“முடியாதுடி” என்றான்.

“விளையாதாதீங்க... உங்க லிமிட்டை நீங்க ரொம்ப க்ராஸ் பண்றீங்க.. இதுக்கு மேல உங்க கூட என்னால ஒரே வீட்டுல இருக்க முடியாது. எனக்கு தனி வீடு பாருங்க” என்று சொல்ல,

“ஓ.. பார்த்துட்டா போச்சு.. ஆனா சிங்கிள் பேட் ரூம் தான்” என்றான்.

“பரவாயில்லை எனக்கும் என் மகனுக்கும் மட்டும் தானே. அதனால அதுவே போதும்” என்றவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்,

”ரொம்ப தான்டி உனக்கு ஆசை” என்றான் நக்கலாக.

“ஏன் சின்னதா ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டேன் அதுல என்ன ஆசை வேண்டி கிடைக்கு?” அவனின் நக்கல் பேச்சு புரியாதவளாய் அவனிடமே கேட்டாள்.

“அந்த சின்ன வீட்டுலையும் ஒரே ஒரு குட்டி பெட்ரூம்லையும் உங்களோட சேர்த்து இனி நானும் தங்க போறேன்” என்று  சொன்னவனின் பேச்சை கேட்ட அதிரலுக்கு பக்கென்று இருந்தது.

“என்ன?”

“ம்ம் இனி மகன் கூட நானும் உன்னை மாதிரி ஓட்டிட்டு இருக்கிறதா முடிவு பண்ணிட்டேன். அவன் கூட பழகனும்னா எனக்கு நேரம் வேண்டும். அது நைட் நேரமா இருந்தா ஓகே தானே. சோ நானும் அவனோட தூங்கலாம்னு இருக்கேன்” என்று அதிராமல் அவளின் தலையில் குண்டை போட்டான் தீரன்.

“ஹலோ...” என்று அவள் அதிர்ந்து பேச வரும் முன்பே,

“இந்த டிஷிஷனை முன்னாடியே எடுத்துட்டேன். எங்க அதை செயல் படுத்தினா நீ ர்ரொம்ப பயந்திடுவியோன்னு யோசிச்சேன். இப்ப தான் என்னையும் என் நெருக்கத்தையும் பழக ஆரம்பிச்சு இருக்கியே. அதோ சேர்த்து நைட் நாம மூணு பேரும் ஒண்ணா தூங்குறதையும் அக்செப்ட் பண்ணிக்கோ.. இல்லன்ன உனக்கு தான் கஷ்ட்டம்..” என்றவனின் பேச்சில் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 10:36 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top