“இப்ப ஓகே வா.. இனி இப்படி அம்மா கிட்ட கேட்க கூடாது சரியா?” அவனிடம் கேட்டுக் கொண்டே மீண்டும் கொக்கியை போட வாசலில் நிழல் ஆடியது. தீத்திரள் தீரன் தான் நின்று இருந்தான்.
இவளுக்கு பக்கென்று இருந்தது. அவன் போய் விட்டான் என்று எண்ணி தான் மகனிடம் அவனி பெயரை காட்டினாள். ஆனால் அவன் இப்படி திடுதிப்பென்று வந்து நிற்பான் என்று அறியாதவள் திகைத்துப் போய் கொக்கியை போடா மறந்து புடவையை அள்ளி எடுத்து மேலே போட்டுக் கொண்டாள்.
நொடியில் தேகம் மொத்தமும் வியர்த்துப் போனது அதிரலுக்கு. அதுவும் அவன் கண் போன இடம் அவளின் நெஞ்சுக்குழி.
கடவுளே.. என்று தன்னை தானே நொந்துக் கொண்டவள் அடுப்படி தரையில் அமர்ந்து இருந்தவள், வேகமாய் அவ்விடத்தை விட்டு எழுந்து தன் அறைக்கு ஓடப்பார்த்தாள். ஆனால் அப்படி போக அடுப்படி வாயிலில் நின்று இருந்தவனை தாண்டி தான் போக வேண்டும்.
அவனை நெருங்கிப் போகவே பயமாக இருந்தது மகனை கையில் வைத்துக் கொண்டு அவனை கடந்து விட எண்ண. மகனோ அவளின் கையில் இருந்து நழுவி வெளியே ஓடி விட்டான்.
அதில் இவளுக்கு இன்னும் பயமாய் போய் விட, தலையை குனிந்துக் கொண்டு வேகமாக அவனை கடந்துப் போக பார்த்தாள். ஆனால் அவளை போக விடாமல் கையை வைத்து தடுத்தவன்,
“ஐ வான்ட் சீ” என்றான்.
அதில் அதிர்ந்துப் போனவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“வாட்?” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்தாள்.
“என் மகன் பார்த்ததை நானும் பார்க்கணும்?”
“என்ன விளையாடுறீங்களா?” கடுப்படித்தாள்.
“உன் லவர் பெயரை பச்சை குத்தி வச்சுகிட்டு, என் மகன் கிட்ட அவன் பெயர் தான்னு சொல்லி ஏமாத்துனா அவனுக்கு தெரியாது இல்லையா? அது தான் அவனோட அப்பனா நான் அதை செக் பண்ணனும்” என்றான் பிடிவாதமாய்.
“என்ன விளையாட்டு சார் இதெல்லாம்.. நீங்க ரொம்ப ஓவரா போறீங்க.. முதல்ல வழியை விடுங்க..” அவனின் கையை தட்டி விட்டு அவள் வெளியே போகப் பார்க்க, அவளை இழுத்து உள்ளே அடுப்படிக்குள் விட்டவன் அடுப்படி கதவை காலால் எட்டி உடைத்து சாற்றியவன் அவள் மேலே போட்டு இருந்த மாராப்பை பிடித்து இழுத்தான்.
ஊக்கு குத்தாததல் அவன் இழுத்த இழுப்புக்கு அவனின் கையோடு போனது.
“ஐயோ கடவுளே” என்று சேலையை இழுக்கப் பார்த்தாள். ஆனால் கொக்கி கழட்டப் பட்ட ரவிக்கையில் அவளின் எழில் கோலம் தெரிய வேகமாக இழுத்த சேலையை விட்டுட்டு தன் கைக்கொண்டு மார்பை மறைத்துக் கொண்டு முன்பு போலவே அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.
--
“கையை எடு.. ஜஸ்ட் வெரிபிக்கேஷன் தான்..” என்றவனின் பேச்சில் பத்திக் கொண்டு வர,
“நீங்க ரொம்ப எல்லை மீறி போறீங்க சார்.. அப்படியே நான் என் லவர் பெயரை குத்தி வச்சு இருந்தா தான் உங்களுக்கு என்ன வந்தது. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?” கோவத்தில் கேட்டாள்.
அவளது கோவத்தில் கண்கள் சிவந்தவன்,
“என் மகனை யார் ஏமாற்றினாலும் நான் தட்டி கேட்பேன். ஒரு தகப்பனா அது என்னோட கடமை.. அவனை யாரும் ஏமாற்ற நான் விட மாட்டேன்” என்றான் அவளின் பின்னோடு வந்து நின்றான்.
அவனின் அருகாமையை உணர்ந்தவள் முன்னால் அடி எடுத்து வைத்துப் போக, அவளின் வெற்று வயிற்றில் கையை வைத்து தடுத்தவன் தன் ஐந்து விரல்களையும் அவளின் வயிற்றோடு அழுத்தி பிடித்துக் கொண்டான். அதில் பெண்ணவளுக்குள் பூகம்பம் வர தடுமாறிப் போனாள்.
அது மட்டுமா? அவனின் மூச்சுக் காற்று சுதந்திரமாக அவளின் வெற்று தோளில் உரசி செல்ல தேகம் மொத்தமும் அதிர்ந்துப் போனது.
“ப்ளீஸ்..” என்று அவள் உள்ளே போன குரலில் சொல்ல,
“ஜஸ்ட் ஒரே ஒரு முறை தான்டி” என்றவனின் குரல் ஏகத்துக்கும் குறைந்துப் போய் ஒலித்தது. அவனது குரலில் இருந்த பிடிவாதம் கண்டு தகித்துப் போனவள்,
“ம்ஹும்” என்று தலையை ஆட்டினாள்.
“நீயா காட்டுனா வெறுமென பார்த்துட்டு மட்டும் போயிடுவேன்” என்றான். அதில் மறைமுகமான மிரட்டல் இருக்க கண்டு மூச்சே நின்றுப் போனது அவளுக்கு.
“நோ” என்று சன்னமாக அவள் அலற, அவளின் முதுகில் நச்சென்று முத்தம் வைத்தவன்,
“ஐ சீ யூவர் டாட்டூ” சொல்லி, அவளை திருப்பி அவளின் கைகளை எடுக்கப் பார்க்க அவள் விடமால் முரண்டு பிடிக்க அவளின் இடையை இறுக்கிப் பிடித்து கசக்கி விட்டான். அதில் பெண்ணவளின் உணர்வுகள் திரி தூண்டிவிட்டதுப் போல தீப்பிடிக்க தொடங்க, அதை அவனிடம் இருந்து மறைத்துக் கொண்டு மீண்டும் திரும்பப் பார்த்தாள்.
அவளை திரும்ப விடாமல் செய்தவன் அவளின் இரு கையையும் பட்டென்று எடுத்து அவளுக்கு பின் புறமாக வைத்து ஒரு கையால் பிடித்துக் கொண்டவன் ஒரு கையை அவளின் நெஞ்சு பக்கம் எடுத்து சென்று அங்கு இருந்த டாட்டூவை பார்க்கும் சமயம்,
“ம்மா” என்று பிள்ளை உள்ளே ஓடிவர, தீரன் அதில் அவளின் கைப்பிடியை லேசாக தளர்த்த, அதை பயன் படுத்திக் கொண்டவள் வேகமாய் அவனை தள்ளிவிட்டு தன் முந்தானையை எடுத்துப் போட்டுக் கொண்டவள் குழந்தையை அள்ளி வாரி தூக்கிக் கொண்டு படபடப்புடன் நெஞ்சு அதிர வெளியே ஓடிப்போய் விட்டாள்.
அவள் போன பிறகு வெளியே வந்த தீரனுக்கு ஏமாற்றத்தில் முகம் சிவந்துப் போனது. ஆனாலும் அவளின் அருகாமையும் நெருக்கமும் அவனுக்கு இன்னும் வேண்டும் போல இருக்க அவள் நுழைந்த அறைக்குள் தானும் நிலைய எண்ணிப் போக அவள் கதவை அழுந்த தாழிட்டு இருந்தாள். இவன் பின்னோடு வருவான் என்று எண்ணினாலோ என்னவோ கதவை தாழிட்டு விட்டு அதன் மீதே சாய்ந்து நின்றாள்.
அவளின் தேகத்துக்குள் அத்தனை மின்சாரம் பாய்ந்திருந்தது. ஒரு ஆணின் தொடுகை எப்படி இருக்கும் என்று அவன் காட்டி இருக்க அதை புதிதாக அறிந்தவளுக்கு தேகம் மொத்தமும் கொதியாய் கொதிப்பது போல இருந்தது.
அதை எல்லாம் தாங்க முடியாமல் தளர்ந்துப் போனவள் அப்படியே தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து விட்டாள். “ம்மா” என்று பிள்ளை அவளது மடியில் உட்கார்ந்துக் கொண்டான். அவனிடம் கூட அவளால் பேசமுடியவில்லை.
தேகம் மொத்தமும் அவனின் கரம் படுவது போலவும் ஊர்வது போலவு இருக்க அழுத்தமாக கண்களை மூடிக் கொண்டாள்.
“நோ” என்று இதழ்களை அழுத்தமாக கடித்துக் கொண்டு தன்னை மீட்டுக்கொள்ள அவள் போராடிக் கொண்டு இருந்த நேரம் கதவில் சாவி போடும் அரவம் கேட்டு திகைத்துப் போனவள் எழ முயற்சிக்க அதற்குள் தீரன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்து இருந்தான்.
நிலைகுலைந்து போய் அவள் அமர்ந்து இருக்கும் தோற்றம் கண்டு எதுவும் சொல்லாமல் அவளின் அருகில் அவளை ஒட்டி உரசியபடி கீழே தரையில் அமர்ந்தான்.
அதிர்ச்சியானவள் எழப்பார்க்க, மகனை மடியில் வைத்து இருந்ததால் பட்டென்று அவளால் எழமுடியவில்லை. அதோடு அவளை எழ விடாமல் அவளின் பின்புறம் கையை விட்டு இடுப்போடு சேர்த்து பிடித்தவன் தன்னோடு அமரவைத்துக் கொண்டான்.
“ஏன் இப்படி பண்றீங்க?” குரலே அவளுக்கு வெளியே வரவில்லை.
“எனக்கும் தெரியல” சொன்னவன், வலுவலுவென்று இருந்த அவளின் இடுப்பில் கையை வைத்து கசக்கி எடுக்க, இவளுக்கு வலி எடுத்தது.
அவனது முரட்டு பிடியில் தேகம் தகித்தவள்,
“இதெல்லாம் வேணாம் சார்.. என் கண்ணியத்தை குலைக்காதீங்க” என்றவளின் பேச்சை காதிலே வாங்கிக் கொள்ளாமல்,
“ஒரு முறை மட்டும் காட்டுடி” என்று அவளின் காதோரம் சரிந்து அவன் ஆண்மையாக கேட்க, இவளின் அடி வயிற்றில் தீப்பிடித்தது.
காதோரம் சரிந்து இருந்தவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு அவளின் வாசத்தை இழுத்து சுவாசிக்க மெல்லிய அவளின் தேகம் நடுங்கிப் போனது.
அவனுக்குமே தெரியவில்லை ஏன் அவளை நாடிப்போகிறோம் என்று.. எத்தனையோ பெண்களை கடந்து வந்த போதும் இவள் ஒருத்தியிடம் இப்படி கெஞ்சிக் கொண்டு கோவப்பட்டு என அவன் முற்றிலும் வேறு ஒருவனாய் அவளிடம் இருக்கிறான்.




