“ஹேய் இடியட்.. நான் உன் கிட்ட என்ன சொல்லிட்டு போனேன். கம்பெனி வேலையை பார்க்க சொன்னா இப்ப தான் நீ பிள்ளைக்கு பாடம் சொல்லிக் குடுத்துட்டு இருக்க. அதுக்கு தான் என் கிட்ட சம்பளம் வாங்குறியா?” சீரியவனின் கோவத்தில் வெலவெலத்துப் போனாள்.
“கேர் டேக்கர் அனுப்பி இருந்தேன் தானே. அவங்க கிட்ட பிள்ளையை குடுக்காம என்ன பண்ணிட்டு இருக்க.. கொஞ்சம் கூட வேலை பார்க்கணும்னு தோணவே தோணாதா? எப்படி இப்படி சும்மாவே இருந்து சீட்டை தேச்சுட்டு சம்பளம் வாங்கிட்டு போகலாம்னு பார்த்தியா?” ஏகத்துக்கும் பேசியவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அதிரல்.
“இந்தா முணுக்குன்னு கண்ணீர் விட்ட.. உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ச்சீ இப்படி அசிங்கமா அழுது சீன் க்ரியேட் பண்ணாத” கத்தினான்.
சட்டென்று வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள் பிள்ளையோடு எழுந்து நின்றாள். அவளை பார்க்கவே அத்தனை எரிச்சலாக வந்தது தீரனுக்கு.
அவனுக்கு வேலை நேரத்தில் வேலை செய்யவில்லை என்றால் அத்தனை கோவம் வரும். அது யாரு என்னன்னு எல்லாம் பார்க்க மாட்டான். மிச்சம் மீதி இல்லாமல் கடித்து குதறிய பிறகே விடுவான்.
இப்பொழுது அதிரல் அவனிடம் வசமாக சிக்கிக்கொள்ள வைத்து செய்து விட்டான்.
“உன்னை எல்லாம் எடுத்த உடனே என்னோட பிஎவாக போட்டேன் பத்தியா என்னை சொல்லணும்.. நீ எல்லாம் எதுக்குமே லாய்க்கு இல்ல. சரியான சோம்பேறி.. உன்னை ட்ரில் எடுக்காம விட்டா நான் என்ன முதலாளி” என்றவன் முதல் வேலையாக அவளிடம் இருந்து பிள்ளையை பிடுங்கியவன்,
தன் பியேவை வரச்சொல்லி,
“இவங்களை மார்கெட்டிங் டிப்பர்ட்மென்ட்ல போட்டு சேல்ஸ் கேர்லா போட சொல்லு” என்றான்.
அதை கேட்டு மிகவும் உற்சாகம் அடைந்த தீரனின் பியே நவீன்,
“சரிங்க சார்” என்று பம்மியபடி சொன்னவன் அறையை விட்டு வெளியே வந்த அதிரலிடம்,
“என் வேலைக்கே வெட்டு வைக்கலாம்னு பார்த்தல்ல.. இப்போ பார்த்தியா உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்னு” என்று எக்கலாமாக சொன்னவன்,
“நான் தான் கேர்டேக்கரை சார் அறைக்கு அனுப்பல..” எகத்தாலமாக சொல்லியவனின் குரூர புத்தியை அறிந்துக் கொண்டவளுக்கு வேதனையாக இருந்தது.
ஆனால் இதுவும் நன்மைக்கு தான். தீரனோடு ஒரே அறையில் இருப்பது அவளுக்கு நெருப்பில் இருப்பது போல இருந்தது. எந்த நேரம் காய்ச்சி எடுப்பான்னே தெரியாது. அவனின் வாயில் விழுவதை விட அவன் கண் பார்க்காமல் இருப்பது எவ்வளவோ மேல் என்று எண்ணிக் கொண்டவள்,
பியே கை காட்டிய மார்க்கெட்டிங் டிப்பார்ட்மென்டுக்குள் நுழைந்தாள்.
வந்த உடனே அவளை யாரும் அங்கு வரவேற்கவில்லை. மாறாக சிறிது நேரம் காக்க வைத்த பிறகே ஒருவர் வந்து அவளை அழைத்துக் கொண்டு போனார்.
“இன்னைக்கு ஒரு எக்ஸ்போ இருக்கு.. ஒரு வாரம் நடக்கும்.. நீங்க அந்த டீமோட ஜாயின் பண்ணிக்கோங்க.. மத்த டீட்டெயில் அவங்களே சொல்லுவாங்க. ஐடி கார்ட் எடுத்துக்கோங்க” என்று மேசை மீது ஒரு ஐடி கார்டை வைத்தார்.
என்ன எக்ஸ்போ எந்த ப்ராடெக்ட் என எதுவும் தெரியாமல் அவளை அந்த எக்ஸ்போக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
குழந்தையை எப்படியும் தீரன் நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் முழு மூச்சுடன் அந்த வேலையில் ஈடு பட ஆரம்பித்தாள்.
யாரிடமாவது கேட்கலாமா என்று பார்க்க எல்லோரும் அவரவர் போனில் மூழ்கி இருந்தார்கள். மொத்தமாக நான்கு பேர் கொண்ட டீம். அதில் ஒரு பெண். இரண்டு ஆண்கள். அந்த மூவரும் கோர்ட் சூட் என பக்காவாக ஹைப்பை லுக்கில் இருந்தார்கள். வாயை திறந்தாலே ஆங்கிலம் கொட்டியது.
இவள் பேச முயன்றாள். ஆனால் யாரும் அவளை கொஞ்சமும் கண்டுக் கொள்ளவே இல்லை. இவள் மட்டும் சேலையில். அவர்களோடு ஒன்றவே முடியாமல் தனித்து இருந்தாள். காரில் தான் சென்றார்கள் நால்வரும். ஏசியின் சத்தம் மட்டுமே வந்தது. பெருத்த அமைதி நிலவியது அங்கு.
எக்ஸ்போ நடக்கும் இடத்துக்கு வந்து விட அவளை சட்டை செய்யாமல் அனைவரும் இறங்கி சென்றார்கள். அவர்களின் பின்னோடு எதுவும் தெரியாமல் நடந்தாள்.
எக்ஸ்போவின் ஒரு ஸ்டாலில் இவர்கள் போய் நின்றார்கள். அந்த எக்ஸ்போ மிகவும் உயர்தரம் வாய்ந்ததாக இருந்தது. அனைத்து இடங்களிலும் ஏசியின் குளுமை வீசியது.
எந்த சத்தமும் பெரிதாக எழவில்லை. மெல்லிய பேச்சுக்குரல் மட்டுமே ஒலித்தது. அந்த எக்ஸ்போ கட்டுமான பொருட்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சோகேசில் இருந்த பொருள்களை பார்த்த பிறகே அவளுக்கு புரிந்தது.
அவர்களின் கம்பெனி ப்ராடெக்ட் பற்றிய டீட்டெயில் பெரிய திரையில் டிஸ்ப்ளே ஆகிக் கொண்டு இருந்தது. அதை முழுமையாக ஒன்று விடாமல் படித்துக் கொண்டாள். யாராவது கேட்டால் இவள் சொல்லியாக வேண்டுமே. எனவே கவனத்துடன் அதை படித்துக் கொண்டாள்.
--
முழு விளக்கமும் அந்த டிஸ்ப்ளேவில் வர இவளுக்கு ஈசியாக இருந்தது. பெரிய பெரிய நிறுவங்களில் இருந்து ஆட்கள் வர அவளோடு இருந்த மூவரும் அவளை பேச விடாமல் தாங்களே விளக்கம் சொல்லி ஆடர் பிடித்துக் கொண்டார்கள்.
இப்படி எக்ஸ்போவில் பிடிக்கும் ஆடர்களுக்கு தனி பேமன்டும் கிடைக்கும். அதும் செலரியை விட மிக அதிகமாக கிடைக்கும். சும்மாவே இவர்களின் செலரி எல்லாம் ஐந்து ஆறு லட்சம். இப்போ எக்ஸ்போவில் கிட்டும் பேமன்ட் மட்டும் பத்து இலட்சத்தை தாண்டும்.
அதனால் எவ்வளவு கவர்ச்சியாக பேசி ஆடர்களை எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுப்பார்கள். அதனால் அதிரலை பேச விடாமல் இவர்களே பேசினார்கள். இவளுக்கு அதை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அதனால் அமைதியாக அவர்களுக்கு வழி விட்டு நின்றாள்.
அதற்கும் அவர்கள் கடுப்படித்தார்கள். முதல்நாள் வேலையே இரவு பத்து மணி வரை நடந்தது. அவளுக்கு மத்தியம் மூன்று மணிக்கு மேல பிள்ளையை தேட ஆரம்பித்துவிட்டது.
வெறும் ஹேன்ட் பேகை மட்டுமே எடுத்து வந்து இருந்தாள். உணவு எதையும் எடுத்து வரவில்லை. மற்றவர்களுக்கு உதவி ஆட்கள் இருக்க அவர்கள் எடுத்து வந்து குடுக்க சாப்பாடு சாப்பிட்டார்கள்.
இவளை சாப்பிட வா என்று எதுவும் சொல்லவில்லை. பகிர்ந்துக் கொள்ளவும் இல்லை. திணறிப் போனாள். முதல் நாள் வேலையே இவளுக்கு பெரிதும் கஸ்ட்டமாகிப் போனது.
மூவரும் ஒன்றாய் சாப்பிட போக, இவள் மட்டும் தனித்து நின்றாள் ஸ்டாலில்.
“அவ ஏதாவது சொதப்பிட்டா என்ன பண்றது?” என்று ஒருவர் கேட்க,
“சொதப்பட்டும்னு தானே தனியா விட்டு இருக்கோம். பேக்கு மாதிரி அவ முழிக்கிறதை பார்த்து இரசிக்கலாம். நமக்கும் கொஞ்சம் என்டர்டேயிமென்டா இருக்கும்ல” சொல்லி தங்களுக்கு கிளுக்கி சிரித்துக் கொண்டார்கள்.




