Notifications
Clear all

அத்தியாயம் 43

 
Admin
(@ramya-devi)
Member Admin

விழிகள் மொத்தமும் கோவத்தின் சிவப்பில் மின்ன, “நீ யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமாடி?” அடிக்குரலில் தீத்திரள் தீரன் கர்ஜிக்க,

“தெரியும் சார்.. நீங்க பெரிய ஆள் தான். யாருக்கும் அஞ்சா மனுசன் தான். நான் ஒன்னும் இல்லாதவ தான்.. அதனால என் அடிப்படை உரிமையை கூட நான் பேசலன்னா எனக்கு முதுகெலும்பே இல்லாம போயிடும். எனக்கே முதுகெலும்பு இல்லன்னா என் பிள்ளையை நான் எப்படி சரியான வலையில் வளர்த்து எடுப்பேன். என் மகனுக்கு நான் அடிப்படை தார்மீக உரிமையையும், கோவத்தையும் கற்று குடுக்கணும். அதுக்கு முதல்ல எனக்கு அந்த அடிப்படை கோவம் இருக்கணும். அது இருந்தா மட்டும் போதாது அதை சரியான இடத்துல சரியான மனுஷன் கிட்ட காட்டனும். அதாவது குட்ட குட்ட குனிய கூடாதுன்னு என் மகனுக்கு நான் கத்துக்குடுறேன்” என்றவளை விழிகள் சிவக்க வெறித்துப் பார்த்தவன்,

“நான் இப்போ நினைச்சா கூட உன்கிட்ட இருந்து என் மகனை பிரிச்சு கூட்டிட்டு போக முடியும். அதை செய்யிறேன் பார்க்குறியா?” என்றான் அத்தனை அகங்காரத்துடன்.

“நீங்க அதை செய்யலன்னா தான் நான் ஆச்சரியப் படுவேன். இவன் வரும் வரை என் தங்கைக்காக வாழ்க்கையோட போராடினேன். இவன் வந்த பிறகு அக்கம் பக்கம் பழகியவர்களின் கேவலமான பேச்சோடு போராடுனேன். இப்போ இவனுக்காக உங்கக்கிட்ட போராட போறேன். எனக்கு போராட்டம் எல்லாம் புதுசு இல்ல சார். நான் பிறந்ததில் இருந்து ஒவ்வொன்னுக்கும் போராடிக்கிட்டே தான் இருக்கேன். அதனால நான் எதற்கும் கவலை பட மாட்டேன்.. ஏன் இப்ப கூட என் மகனோட நான் நேரம் செலவிடனும்னு உங்கக்கிட்ட இவ்வளவு தூரம் போராடுறேன்.. அப்படி பட்டவளோட மகனை அலுங்காம நீங்க தூக்கிட்டு போனா சும்மா விடுவேன்னு நினைக்கிறீங்க.. கண்டிப்பா உங்களை கோர்ட்டுல நிறுத்தி இவனுக்காக உங்களை எதிர்க்கவும் தயங்க மாட்டேன்..” என்றவளின் உறுதியான பேச்சில் கண்கள் சுருக்கிப் பார்த்தவன்,

“அப்போ கோர்ட்டுலையே பார்த்துக்க.. நான் இப்ப இவனை தூக்கிட்டு போறேன்” என்று அவளின் கையில் இருந்த பிள்ளையை பிடுங்க வர, நெஞ்சில் நடுக்கம் கொண்டவள்,

பதறிப்போய், “நோ” என்று அலறி தன் பிள்ளையை தன் நெஞ்சோடு இறுக்கமாக புதைத்துக் கொண்டாள்.

“இவ்வளவு நேரம் வீர வேசம் போட்ட.. இப்ப என்ன ஆச்சு?” நக்கலாக கேட்டவனின் கேள்வியில் அதிர்ந்துப் போய் அவனை பார்த்தாள்.

“என்னடி பார்க்கிற நான் நினைச்சா சட்டத்தையே வளைச்சு என் பாக்கெட்டுக்குள்ள போட்டு உன்னை வாழ் நாள் முழுக்க சிறையில தள்ள முடியும் பார்க்குறியா? அப்படி பண்ணா உன் முகமே என் மகனுக்கு தெரியாத அளவுக்கு அவனை மாத்திடுவேன்.. செய்யவா?” அவளை நெருங்கி வந்து அவளின் முகத்தை நோக்கி குனிந்து சொன்னவன் அவளின் கண்களில் தெரிந்த அதீத பயத்தை பார்த்துக் கொண்டே சொன்னான்.

“நீ வாய் பேசுறதுக்கு முன்னாடி எதிர்ல யாரு இருக்காங்கன்னு பார்த்து பேசு.. நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாதுடி.. போற போக்குல காரை விட்டு ஒரு ஏத்து ஏத்திட்டு போனேன்னு வை. சட்னி தான். அப்புறம் எங்க இருந்து மகன்னு உரிமை குரல் குடுப்ப” என்றவனின் பேச்சில் விளைந்த அதீத பயத்தில் நடுமுதுகில் மின்னல் வெட்டிப் போனது.

அவன் செய்யக் கூடிய ஆள் தான் என்று உணர்ந்து இருந்ததால் அவளின் வாய் கம் போட்டு ஒட்டிக் கொண்டது எதிர்த்து எதுவும் பேசாமல்.

“செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா?” நக்கலாக கேட்டான். அவள் இல்லை என்று தலை அசைக்க,

“அப்போ என்னை பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சு இருக்க?” கேட்டவன் அவளை விழி இடுங்க பார்த்து,

“இன்னொரு முறை என்கிட்டே இப்படி பேசுன.. இது மாதிரி நிதானமா பேசிட்டு இருக்க மாட்டேன்.. ஒரே ஏத்து தான். உன் சோழியை முடிச்சு விட்டுடுவேன் பார்த்துக்க” என்றான்.

அதில் விக்கித்துப் போனவளுக்கு நெஞ்சமெல்லாம் பயத்தில் உலர்ந்துப் போனது.

“என்ன வேலைக்கு வர்றியா? இல்ல?” என்று அவன் இழுத்து நிறுத்தினான்.

“நான் வரேன்.. ஆனா மூணு மணிக்கு எல்லாம் பிள்ளை என்கிட்ட இருக்கணும்” என்றாள்.

“முடியாதுன்னா என்னடி பண்ணுவ?”

“எனக்கு இந்த வேலை வேணாம்” என்றாள்.

“மேடம் அக்ரிமென்டை மறந்துட்டீங்க போல” நக்கலாக அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வையில் பயம் தொற்றிக் கொள்ள,

“எனக்கு என் பிள்ளைக்கூட இருக்கணும் ப்ளீஸ் சார்” என்று கெஞ்சினாள்.

“என்னவோ முன்ன அவ்வளவு வீரமா பேசிட்டு இப்போ இப்படி கெஞ்சுறியே.. வெட்கமா இல்லையாடி உனக்கு?” என்று பேச்சாலே அவளை குத்தினான்.

ஒரே ஒரு டி போட்டதுக்கு அவள் அந்த குதி குதித்ததை பார்த்து இப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை அவன் டி போட அவளால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.

“போய் தொலை. இல்லை என்றால் அதற்கும் ஏதாவது சொல்லி பயம் காட்டுவான்” என்று விட்டுவிட்டாள்.

“இன்னைக்கு ஆபிஸ் வரும்போது ஒழுங்கா சுடிதார்ல வர்ற” என்று அதட்டினான்.

“இல்ல அதெல்லாம் முடியாது நான் சேலைல தான் வருவேன்”

“ஏன்?” என்று அவனின் புருவம் சுருங்க கேட்க, அவனிடம் என்ன விளக்கத்தை அவள் குடுக்க, அதனால் மௌனமாக இருந்தாள்.

“உன்கிட்ட தான்டி கேட்கிறேன்.. வாயை திற?” என்றான்.

“அதெல்லாம் சொல்ல முடியாது” என்று தலையை குனிந்துக் கொண்டாள்.

“வாட்?” என்று முறைத்தவன் அவளை நெருங்கி வந்து பிள்ளையை அவளின் கையில் இருந்து இறக்கி விட்டவன், அவளின் இடுப்பை ஒரு பார்வை பார்த்தான்.

பிள்ளையை தூக்கி வைத்து இருந்ததால் இடுப்பில் இருந்த சேலை சற்றே நழுவி அவளின் இடையை அப்பட்டாமாக காட்டிக் கொண்டு இருக்க அதை உணராதவள் அவனின் அருகாமையில் முகத்தை திருப்பிக் கொண்டு கிட்சன் திட்டு இடிக்க நின்று இருந்தாள்.

அவளை கூர்ந்துப் பார்த்தவன் அவள் முகத்தை திருப்பி நின்ற நிலை அவனை சீண்டி விட, தன் முரட்டு கரத்தால் அவளின் இடுப்பை அழுத்தி பிடிக்க, அதிரலுக்கு பக்கென்று ஆனது. கீழே குனிந்துப் பார்த்தவள் அவனின் கை தன் இடுப்பில் அதுவும் வெற்று இடுப்பில் இருப்பதை பார்த்து அதிர்ந்து அவனை பார்த்து

“என்ன பண்றீங்க?” கேட்டவள் வேகமாக அவனின் கையை தட்டி விட பார்த்தாள். ஆனால் அவனது கையை கொஞ்சமும் அசைக்கவே முடியவில்லை.

“கையை எடுங்க சார்.. ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? இதெல்லாம் அசிங்கமா இல்லையா?” கலவரத்துடன் கேட்டவளுக்கு ஒரு ஆணின் தொடுகை மிகுந்த பயத்தை கொடுத்தது.

“என்ன அசிங்கமா இருக்கு.. இப்படி நீ திறந்து போட்டு ஷோ காட்டுவ. அது அசிங்கமா இல்ல.. நான் இழுத்து மூடி சுடிதார் போட சொல்றேன். நீ போட மாட்டேன்னு சொல்ற. அது அசிங்கமா இல்லையாடி? நான் தொட்டா தான் உனக்கு அசிங்கமா இருக்கோ.. நாளைக்கு வேற எவனாவது இப்படி வந்து தொடுவான்..” என்று அவன் சொல்ல,

“ஐயோ ப்ளீஸ் சார் போதும் நிறுத்துங்க..” என்று காதை மூடிக்கொண்டவள்,

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 5:01 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top