Notifications
Clear all

அத்தியாயம் 39

 
Admin
(@ramya-devi)
Member Admin

“மயூ...” என்று அவளை அழைத்தான். அவளது கவனம் இங்கு இல்லாமல் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியையே சுற்றி வர... மயுவின் இந்த போக்கு ஆதிக்கு கடும் சினத்தை கிளப்பி விட்டு இருந்தது.

இவனது நியாபகம் கூட தன்னவள் தன் பிடியில் இருக்கும் பொழுது இருக்க கூடாது என்று சினம் கொள்ளுவான். இப்பொழுதோ வேறு யாரோ ஒருவரிடம் அவளது சிந்தனை வசம் சிக்கி இருந்தால் அவளின் நிலை...

ஆதி மறுபடியும் “மயூ...” என்று அழைக்க அப்பொழுதும் அவளது சிந்தனை கலையாமல் இருக்க கண்டு... தான் அருகில் இருக்கும் போதே அவளது மனதை குடைந்துக்கொண்டு இருப்பது என்னவாக இருக்கும் என்று யோசித்தவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லை...

நேரம் போனால் அவனே அறிந்துக்கொள்ள போகிறோம் என்று தெரியாமல் அவளை கலைத்து அலுவலகத்துக்கு கிளம்ப சொன்னவன் சினம் எதுவும் அவள் மீது காட்டாமல் தானும் கிளம்பி வர சென்றான்.

ஏனோ அவளிடம் கோவத்தை காட்ட மனமில்லை.

ஆதியும் மயூவும் இருவரும் கிளம்பி கீழே வந்த நேரம் கூடத்தில் மயுவுக்காய் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை அவனுடைய குடும்பம் என்று எல்லாருமே அமர்ந்து இருந்தார்கள்.

புதியவர்கள் அதுவும் குடும்பத்துடன் வந்து இருப்பதை கண்ட ஆதி யோசனையுடன் அவர்களை எடை போட ஆரம்பித்தான் தோரணையுடன் கால் மேல் கால் போட்டு.

அவனது இந்த ஆளுமையை கண்டு சீதாவினுள் பெரும் கிலி பரவியது.

ஆற்றில் இறங்கிய பின் முழம் போனால் என்ன ஜான் போனால் என்ன  என்று எண்ணிய சீதா ஆதி மற்றும் மயூவை வந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“வணக்கம் ஆதி சார்...” என்று மயூவிற்கு பார்த்த மாப்பிள்ளை வாழ்த்த.. ஆதி வெறும் தலையசைப்புடன் அதை ஏற்றவன் நேரடியாக விசயத்திற்கு வந்தான்.

“என்ன விஷயம் குடும்பமா வந்து இருக்கீங்க...” கேட்டான் ஆளுமையுடன்.

வந்தவர்கள் தங்களுக்குள் சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டு கேள்வியாய் சீதாவை பார்த்தார்கள். அதில் சீதாவிற்கு பெரும் படபடப்பு வந்தது. ஆனாலும் சமாளித்து தானே ஆகவேண்டும்... எண்ணியவர்,

“அது ஒண்ணுமில்ல ஆதி... நம்ம மயூவுக்கு பார்த்த மாப்பிள்ளை தான் இவர். இவங்க எல்லாம் அவரோட குடும்பம்... இன்னைக்கு மயூவை பொண்ணு பார்க்க வந்து இருக்காங்க... எல்லாமே பேசி முடிச்சாச்சு.. இது சும்மா சம்பிரதாயத்துக்கு” என்று உள்ளுக்குள் பயத்தை வைத்துக்கொண்டு வெளியே படபடப்பாய் பேசி முடித்தார்.

மயூ யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் ஆதியின் அருகில் தன் இரு கரத்தையும் கோர்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

ஆதி எப்பொழுது வெடிப்பானோ என்று பயத்துடன் ஒவ்வொரு நொடியையும் கடந்துக்கொண்டு இருந்தாள். ஆனால் அவள் எண்ணியதற்கு நேர் மாறாக ஆதி இன்னும் பின்னாள் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு “அப்படியா...?” என்று ரொம்பவும் இயல்பு போல கேட்டான்.

அதில் மயூ ஆதியை திகைத்து போய் நிமிர்ந்து பார்த்தாள். அவளிடமிருந்து அசைவை உணர்ந்தவன் கண்களை மட்டும் அவள் புறம் திருப்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் மாப்பிள்ளையின் புறம் திரும்பி,

“உங்களுக்கு பொண்ணை பிடுச்சு இருக்கா...? பொண்ணுக்கிட்ட எதுவும் தனியா பேசணுமா...?” என்று இவனே பிள்ளையார் சுழி போட மயூவின் உள்ளத்தில் பெருமளவு சூழ ஆரம்பித்தது. கண்கள் கலங்கி ஒரு துளி நீர் ஆதியின் கரத்தில் விழ... ஆதியின் கரம் இறுக்கி முறுக்கேறியது இயலாமையில்.

அவனது முறுக்கேறிய கரத்தை கண்ட சீதாவிற்கு அடிவயிற்றில் பயம் ஆக்கிரமிக்க தொடங்கியது. ‘அய்யய்யோ பயபுள்ள ஓவரா கையை முருக்குறானே. இன்னைக்கு சேதாரம் கண்டிப்பா அதிகமா இருக்கும் போலே...’ புலம்பியவர்... வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகமாய் வந்தவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார்.

கேசவனுக்கும் இந்த செய்தி புதிது என்றாலும் சீதா செய்தால் அதில் ஏதாவது காரண காரியம் இருக்கும் என்று அமைதி கொண்டார். அதோடு ஆதிக்கு நிச்சையமாகி இருக்கும் போது வயதுக்கு வந்த பெண் பிள்ளையை வீட்டில் வைத்துக்கொண்டு அவளுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது அவரது மனதை அறிக்க அவளுக்கும் இப்பொழுது கல்யாணம் கூடி வருவதை கண்டு சற்றே நிம்மதியானார்.

மனுவுக்கும் முகிலுக்கும் இந்த ஏற்பாடு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதை விட ரேணுவுக்கும் ரோகிணிக்கும் இந்த ஏற்பாடு கொஞ்சமும் பிடிக்காமல் இருந்தது.

அவர்களை பொறுத்த வரை ஆதிக்கு மயூ தான் சரியான பொருத்தம். வேறு யார் இடையில வந்தாலும் அவர்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவர்களது பிடியிலே இருந்தார்கள்.

யாருக்குமே பிடிக்காமல் இந்த திருமணம் வேண்டுமா என்கிற கேள்வி எழுந்தது தான். ஆனால் அதற்க்கு விட மயுரா தேவிக்கு மட்டும் தானே தெரியும். அவளிடமிருந்து வார்த்தையை வர வைக்க முடியாது.

அதனால் அவளுடைய போக்கிலே அனைவரும் விட்டுவிட்டனர். ஆனால் சீதாவின் இந்த ஏற்பாடு வீட்டில் என்ன நிலையை ஏற்ப்படுத்தும் என்பது பற்றியே அனைவரது சிந்தனையும் இருந்தது.

அதுவும் குறிப்பா ஆதி... ஆதி எவ்வாறு இதை கையாள போகிறானோ...? என்ற கேள்வி அனைவரின் மனதையும் குடைந்துக்கொண்டு இருந்து.

ஆதி மாப்பிள்ளையிடம் தனியாக பேச சொல்லி சொல்ல சீதாவுக்கு பயம் தொண்டையை கவ்வியது.

அதற்கு அவனோ, “இப்பொழுது தான் மயூவை பார்க்கிறேன் ஆதி சார். இனிமே தான் அவங்க கிட்ட பேசணும்” என்று சொல்ல...

“அப்போ ரெண்டு பேரும் போய் பேசி நல்ல முடிவ எடுங்களேன்...” என்று சொன்னான்.

சொன்னது அவன் தானா என்று மயூ ஆதியை உருத்து பார்த்தாள். அவளுக்கு தெரியும் எப்படியும் மயுவின் திருமண ஏற்பாட்டை தடுத்து நிறுத்துவான் என்று. அதனால் தான் சீதாவிற்கு அவள் ஒப்புதலே கொடுத்தாள்.

ஆனால் இப்பொழுது ஆதியின் நடவடிக்கை கண்டவளுக்கோ அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடும் போல இருந்தது. ஆதியே திருமணத்தை முன் நின்று நடத்துபவன் போல பேச... மயூவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மாப்பிள்ளையும் மயூவிடம் தனித்து பேச ஆசைப்பட்டு எழுந்து நிற்க... சீதாவிற்கு அதை விட அதிக பயமாய் போனது.

ஆதியின் இந்த போக்கை கண்டு. ஆதியிடம் ஒரு வெடிப்பை எதிர்பார்த்து இருந்த சீதாவிற்கு அவனது இந்த போக்கு பெரும் குழப்பத்தை கொடுத்தது. கூடவே எந்த நிமிடம் எது செய்வான் என்று அவனை கணிக்க முடியாமல் தடுமாறி போனார்.

“பாரு மாப்பிள்ளை சாரே எழுந்து நின்னுட்டாரு... நீ போய் அவரோட பேசி நல்ல முடிவை எடு” என்று ஆதி மயூவிற்கு அறிவுறுத்த தன் சிவந்த கண்களால் ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு விருட்டென்று சென்றாள் தோட்டத்தை நோக்கி.

அவளது வேகத்தில் ஆதி நமட்டு சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியவன் வெளியே ஒன்றும் அறியாதவன் போல சீன் போட்டுக்கொண்டான்.

மயூவின் மனம் புரியாதவனா அவன்... இந்த திருமணத்திற்கு பின் இருக்கும் காரணம் என்ன என்று அறிந்த ஆதி, அதற்க்கு காரணமான தன் தாயை முறைக்கவும் தவறவில்லை.

அவனது தீ பார்வையை ஏறிட முடியாமல் தடுமாறியவர் அவனை நிம்ர்ந்தே பார்க்கவில்லை. அவர் ஆதியை பார்க்காமல் புறக்கணிக்க ஆதி சன்னமாய் திட்டி தீர்த்தான்.

“உனக்கு வைக்கிறேன் முத்தல்ல” என்று கருவியவன் தன் போனை எடுத்து பார்த்தான். நீண்ட நேரம் அவன் போனையே பார்த்துக்கொண்டு இருக்க... சீதாவின் மனதில் அலாரம் அடிக்க சற்றே எட்டி பார்த்தார் அவனது போனை.

Loading spinner

Quote
Topic starter Posted : November 3, 2026 10:01 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top