Notifications
Clear all

அத்தியாயம் 40

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அங்க இருந்த மாதிரி அசமந்தமா இருந்தன்னா சீட்டை கிழிச்சு கையில குடுத்துடுவேன் ஜாக்கிரதை..” மிரட்டியே அவளை அழைத்துக் கொண்டு போனான்.

அவனோடு காரில் போக தயக்கமாக இருந்தது. இருந்தாலும் இனி இதை பழகிக்கொள்ள தானே வேண்டும் எண்ணியவள் பின் பக்கமாக பிள்ளையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அவன் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் விரைந்தான். அடுத்த கொஞ்ச நேரத்திலே அலுவலகம் வந்து விட்டது. நடந்து வந்தாலே வந்து இருக்கலாம் போல அவ்வளவு அருகிலே இருந்தது.

காரை நிறுத்தி விட்டு அவன் இறங்க, இவளும் பிள்ளையை கையில் வைத்துக்கொண்டு ஹென்ட் பேக், லஞ்ச் பேக், பிள்ளைக்கு எடுத்து வைத்த பை என மூன்றையும் தூக்கிக் கொண்டு வந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் முன்னேறி போய் விட்டான். அவனின் வேகத்துக்கு குழந்தையையும் பைகளையும் வைத்துக் கொண்டு நடக்க சிரமமாக இருந்தது. அதுவும் புடவை வேறு தடுக்க வேகமாக நடந்தால் எங்கே கீழே விழுந்து விடுவமோ என்று அஞ்சி மெல்லவே நடந்தாள்.

தன் பின்னாடி அவள் வருகிறாள் என்று அவன் வேக எட்டு வைத்து போய் லிப்ட்டில் ஏற, அவளை ஆடி அசைந்து வந்தாள். பின்னால் திரும்பி பார்த்தவன் அவள் தன் பின்னடி வராமல் போக ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது. அவன் மட்டுமே செல்லக் கூடிய லிப்ட் இருக்கும் பக்கம் இவள் போக,

“மேடம் அங்க எல்லாம் நீங்க போகக் கூடாது..” என்று ஊழியர் ஒருவர் சொல்ல,

“இல்ல அது” என்று தடுமாறினாள்.

“உங்களை பார்த்தா புதுசு மாதிரி இருக்கு. ஏதாவது சந்தேகம்னா முன்னாடி ரிஷப்ஷன்ல கேளுங்க. அவங்க டீட்டெயில் சொல்லுவாங்க” என்று அவர் சொல்ல,

இவளுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை. இந்த பக்கம் தான் தீரன் சார் போனார். சரி அந்த பக்கம் போகலாம்னு பார்த்தா இவரு விட மாட்டேங்குறாரு.. இப்ப எந்த பக்கம் போறதுன்னு தெரியலையே.. எண்ணிக் கொண்டவள், மீண்டும் வந்த வழியே போய் ரிஷப்ஷன்ல கேட்க வேண்டியது தான்.

எண்ணியவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க,

“எங்க போற?” கர்ஜனையான குரல் கேட்க, அதிர்ந்துப் போய் திரும்பி பார்த்தாள்.

“அது..” என்று அவள் விளக்கம் சொல்ல வர,

“ஜஸ்ட் ஷட்டப்” என்றவன்,

“பாலோ கூட ஒழுங்கா பண்ண தெரியாதா? உன்னை கைப்பிடித்து நானே அழைச்சுக்கிட்டு போகணுமா? நீ என்ன சின்ன பிள்ளையா?” எரிந்து விழுந்தான் தீத்திரள் தீரன்.

அவனது அதட்டலில் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. அவனிடம் என்னவென்று விளக்கம் சொல்வது. எதுவும் சொல்லாமல் மௌனமாக நின்றாள்.

“வந்து சேரு.. எனக்குன்னு எங்க இருந்து தான் வருதுங்கலோ” கடுப்படித்துக் கொண்டே அவன் செல்ல, அவனின் பின்னோடு சற்று வேகமாக நடந்தாள். புடவை தடுக்கி விழுந்து விடுவமோ என்று பயமாக வேறு இழுந்தது.

லோசுவத்தை தூக்கிக்கலாம் என்று பார்த்தால் இரு கையில் பைகள் நிரம்பி இருந்தது.

சுடிதார் போடலாம் என்று எண்ணினாலும் புடவை கட்டினால் பெரிய பெண்ணாக தெரிவாள். அந்த ஒரு காரணத்துக்காகவே அலுவலகத்துக்கு புடவை கட்டுவாள். தேவையில்லாமல் யாரும் தன்னிடம் நெருங்க மாட்டார்கள் என்று இவளை எண்ணிக் கொண்டு புடவையில் அலைகிறாள்.

தீரன் லிப்ட்டுக்கு போய் சில நொடிகள் ஆன பிறகே இவள் வந்தாள். அதில் அவளை முறைத்துப் பார்த்தான்.

“அது தான் தெரியுதுல்ல புடவை கட்டுனா நடக்க முடியாதுன்னு அப்புறம் எதுக்கு புடவையை சுத்திக்கிட்டு வர்ற” எரிச்சலாக கேட்டான்.

அவனுக்கு எந்த பதிலும் அவள் சொல்லவில்லை. தலையை மட்டும் குனிந்துக் கொண்டாள்.

“ம்கும் எதுக்கெடுத்தாலும் தலையை குனிஞ்சுக்கோ.. விளங்கிடும்..” எரிந்து விழுந்தவன் தன் தளம் வந்து விட இறங்கி விறுவிறுவென்று சென்றான். அவனை பின் தொடர்ந்து போவதற்குள் இவளுக்கு ஒருவழியாகிப் போனது.

--

தீரனை பின் தொடர்ந்து அவனின் அறைக்குள் நுழைந்தாள் அதிரல். அந்த ப்ளோரில் இருந்த அத்தனை பேரின் கண்களும் அதிரலையே நோட்டம் விட்டது. அந்த பார்வையின் வீரியம் அவளின் முதுகில் நன்றாக தெரிய “அடுத்த கஷ்ட்டமா?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் தீரனின் முன்பு நின்றாள்.

“என்னோட பியேவுக்கு எப்பவும் தனி அறை தான். பட் என் மகனுக்காக என் மகனோட நான் இருக்கணும்ன்றதுக்காக தான் இங்க என்னோட அறையிலையே உனக்கு ஒரு டேபிள் ரெடி பண்ணி இருக்கேன்.. அதுல இருந்து உன் ஒர்கை நீ பார்க்கலாம்” என்றான்.

தலையை ஆட்டிக் கொண்டாள்.

“என்னோட பியே ஒரு வாரத்துக்கு உனக்கு அசிஸ்ட் பண்ணுவாங்க. பிக்கப் பண்ணிக்கோ.. இல்லன்னா ரொம்ப கஸ்ட்டப்பட்டுடுவ” எச்சரித்தான்.

“சரிங்க சார்” என்றவளுக்கு உள்ளுக்குள் அத்தனை பயமாக இருந்தது இவனிடம் வேலை பார்க்க..

சும்மாவே ஆடுவான். இப்போ வசமா சிக்கி இருக்கிறாள் என்னென்ன பேச்சு வாங்கப் போகிறாளோ தெரியவில்லை.

தீரன் தன்னுடைய பியேவை வரச்சொல்லி இவளுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆடர் குடுக்க சொல்லி சொன்னவன், “அவங்களை ட்ரைன் பண்ணுங்க” என்றான்.

“சார்” என்று அவன் அதிர்ந்துப் போனான். அவனுடைய இடத்துக்கு இன்னொருத்தரா என்று.

“சொன்னதை செய் மேன்.. அவங்களுக்கு நம்ம டீலிங் புல்லா தெரியனும். ஈச் அண்ட் எவ்ரி எல்லாத்தையும் பீட் பண்ணிடு” என்றான்.

“சரிங்க சார்” என்றவனுக்கு கொஞ்சமும் மனதே இல்லை. எரிச்சலுடன் சில விசயங்களை மட்டுமே அவர் சொல்லிக் குடுத்தான். மற்றதை எதையும் சொல்லிக் குடுக்காமல் விட, இவளுக்கு கேட்டு கேட்டு அலுத்துப் போனது.

தீரனிடம் சொன்னால் தேவையில்லாமல் ராசாபாசம் ஆகிவிடும் என்று வாயை திறக்காமல் இவளே தேதி வாரியாக பைலை எடுத்து செக் பண்ண ஆரம்பித்தாள்.

“இந்த மாதிரி பைலை எடுத்து செக் பண்ண உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. நீங்க எல்லா விசயத்திலும் ரொம்ப மூக்கை நுழைக்கிறீங்க. தேவையில்லாத விசயத்தை செய்து நல்ல பேரு எடுக்க பார்க்காதீங்க” சொன்னவன் அவள் பார்த்துக் கொண்டு இருந்த பைல்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போய் விட, இவளுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

இவனும் எதுவும் சொல்லி தரமாட்டான், பைலை பார்த்து கத்துக்கலாம்னு பார்த்தா அதையும் பிடுங்கிக் கொண்டு போய் விட பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

தீரன் கம்பெனி விசிட்டிங்க்காக வெளியே சென்று இருந்தான்.

சரி பிள்ளைக்கு எழுத சொல்லி குடுக்கலாம் என்று ஆரம்பித்தாள்.

அவனுக்கு ஓரளவு ஏற்கனவே சொல்லி குடுத்து இருக்கவும் அவனை எழுத பழக்கினாள்.

அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த தீரன் இந்த காட்சியை கண்டு எரிமலையாக வெடித்தான்.

“ஹேய் இடியட்.. நான் உன் கிட்ட என்ன சொல்லிட்டு போனேன். கம்பெனி வேலையை பார்க்க சொன்னா இப்ப தான் நீ பிள்ளைக்கு பாடம் சொல்லிக் குடுத்துட்டு இருக்க. அதுக்கு தான் என் கிட்ட சம்பளம் வாங்குறியா?” சீரியவனின் கோவத்தில் வெலவெலத்துப் போனாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 29, 2026 10:50 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top