அதிரலை ஒரு பார்வை கூட அவன் பார்க்கவில்லை. அவளும் அதை எல்லாம் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அவன் போன பிறகு கதவை தாழிட்டுக் கொண்டவள் பிள்ளையோடு படுத்து நன்றாக உறங்கிப் போனாள்.
அதன் பிறகு தீத்திரள் தீரன் வரவில்லை. அடுத்த நாள் காலையில் தான் வந்தான். வந்தவன் அவளின் அறையில் உறங்கும் பிள்ளையிடம் போய் படுத்துக் கொண்டான்.
இவள் கதவை திறந்து விட்டதோடு சரி. போய் அடுப்படியில் சமைக்க ஆரம்பித்து விட்டாள்.
இன்றிலிருந்து அவளும் அலுவலகம் போக வேண்டுமே. எனவே இரண்டு நேரத்துக்கும் சேர்த்து சமைத்தாள். பிள்ளைக்கு தனியாக செய்தாள்.
அவனுக்கு எடுத்துக்க வேண்டிய பையை தனியாக தயார் செய்துக் கொண்டாள். இரண்டு செட் உடை, துண்டு இரண்டு, பிளாஸ்க்கில் பால், கேரட் ஜூஸ், பருப்பு நெய் சோறு, கொஞ்சம் பழங்கள் என அவள் எடுத்து வைத்து விட்டு, இவளுக்கு தக்காளி சோறு பேக் பண்ணிக் கொண்டு அறைக்கு உள்ளே வர இருவரும் தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து, சத்தம் செய்யாமல் அலுவலகத்துக்கு கட்டும் புடவையை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அங்கேயே தயாராகி வெளியே வந்தவள் பிள்ளை “ம்மா” என்று அழைக்கும் குரலில் உள்ளே போனாள். சரியாக அந்த நேரம் இவளை அழைக்க தீத்திரள் தீரனும் வெளியே வர, இருவரும் ஒருவர் மீது ஒருவர் நச்சென்று மோதி, பேலன்ஸ் தப்பி கீழே விழுந்தார்கள் அதிரல் முதலில் விழுந்து அவள் மீது தீரன் விழுந்து இருந்தான். அவனின் முகம் எசகு பிசகாக அவளின் மார்பின் மீது அழுத்தமாக பதிந்து இருந்தது.
--
அதிரலின் மீது தீரன் எசகு பிசகாக விழுந்தில் அவனது முகம் அவளின் அழுத்தமாக பதிந்துப் போனது. அதை எதிர் பார்க்காத அதிரலுக்கு உடம்பில் அதிர்வு ஏற்பட்டது. இதுநாள் வரை எந்த ஆணிடமும் நெருங்கி பேசி பழகி இராதவளுக்கு முதல் முறை ஒரு ஆணின் நெருக்கம் ஏற்பட பயந்து போனாள்.
அவளின் உடல் மெலிதாக அதிர்ந்துப் போனது. சட்டென்னு அவனை தள்ளி விட்டு எழுந்துக் கொண்டவள்,
“சாரி சார்” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குள் போய் நுழைந்துக் கொண்டாள். பயங்கரமாக மூச்சு வாங்கியது அவளுக்கு.
அவளின் நெஞ்சில் ஆணவனின் சுவாச சூடு இன்னும் பட்டுக் கொண்டு இருப்பது போல தோன்ற, ஐயோ கடவுளே என்று நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டாள். ஏற்கனவே அவன் முகம் அங்கும் இங்குமாய் பதிந்துப் போனதில் அவளின் மாராப்பு லேசாக விலகியது. இதில் இவள் தேய்த்து விடவும் இன்னும் கொஞ்சம் விலகியது.
“ம்மா” என்று மகனின் சத்தம் வீரியமாய் கேட்க, வெளியே போகவே படபடவென்று வந்தது. எதாச்சும் சொல்லி விடுவானோ என்று பயந்துப் போனாள்.
குழந்தை மீண்டும் அழைக்க. இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று வெளியே வந்தாள்.
வந்தவள் கூடத்தில் பிள்ளையை தூக்கி வைத்து இருந்த தீரனை கண்டு தயங்கி நின்றாள். அவனிடம் இருந்து பிள்ளையை எப்படி வாங்குவது என்று.
அவள் வந்து நின்ற தோரனையை கண்டு கணகள் இடுங்கி அவளை பார்த்தான். மாராப்பை ஒழுங்காக எடுத்து விடாமல் அப்படியே வந்து இருக்க அவனின் பார்வை அவளின் நெஞ்சு குழியில் படிந்தது.
“ம்மா” என்று மீண்டும் அழைத்து சிணுங்க, கைகளை பிசைந்துக் கொண்டு “கீழே இறங்கி வா கண்ணா” என்றாள்.
“ம்ஹும்.. தூக்கு” என்று அப்பனின் கையில் வளைவில் இருந்தபடியே அவளிடம் கையை நீட்டினான்.
“இவன் வேற படுத்துறானே. அவர் கிட்ட போகவே எனக்கு பயமா இருக்குன்னு நான் எப்படி சொல்ல” முணகிக் கொண்டவள், வேறு வழியில்லாது அவனை நெருங்கி வந்தாள்.
அவள் நெருங்கி வர வர அவளின் எழில் மிகுந்த வனப்பு மிகுந்த காட்சி தீரனின் கண்களில் விழுந்தது.
சற்று நேரத்துக்கு முன்பு அவனின் முகம் அந்த இடத்தில் தானே படிந்து இருந்தது. அப்போது அவளிடம் இருந்து வெளிப்பட்ட நறுமணம் அவனை சிந்தை குலைய வைத்தது. அது மட்டுமா? அவளின் மென்மையை மொத்தமாக அவனின் முகம் உணர்ந்துக் கொண்டு இருந்ததே..? ஆணவனுக்கும் இது தான் முதல் தீண்டல்.
அலுவலக ரீதியாக எத்தனையோ பெண்களை கடந்து வந்தவன் தான் என்றாலும் இவளிடம் தான் முதல் நெருக்கம். அதுவும் இப்படி.. இதுநாள் வரை பெண் வாடையே படமால் இருந்தான் தீத்திரள் தீரன். அவனின் பிரம்மச்சாரியத்தை குலைக்கவே வந்தவள் போல இவள் இருக்க தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.
அவனின் பார்வை மொத்தமும் அவளின் நெஞ்சிலே தான் இருந்தது. அதை விட்டு அவனால் கண்களை அகற்றவே முடியவில்லை.
“தீரா... என்னடா பண்ற?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு விடை எதுவும் புலப்படவில்லை. ஆனால் விழிகள் என்னவவோ அவளின் அங்கங்களையே மேய்ந்துக் கொண்டு இருந்தது.
அவளின் அழகு எப்படி இருக்கும் என்று கற்பனை வேறு ஓட, பின்னந்தலையிலே ஒரு அடி போட்டுக் கொண்ட பொழுதும் பார்வை என்னவோ அவளிடம் தான்.
அவனின் பார்வையின் வீரியமோ என்னவோ நெஞ்சுக்குள் ஒரு வித உணர்வை உணர்ந்தவள் சட்டென்று கீழே குனிந்துப் பார்க்க அவளின் சேலை விலகி இருந்ததை கண்டு துடித்துப் போய் விட்டவள் பட்டென்று இழுத்து விட்டு சரி செய்துக் கொண்டாள். அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை அவள்.
“வாடா தங்கம்” என்று பிள்ளையை வாங்கிக் கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்துக் கொண்டவளுக்கு படபடவென்று வந்தது. நெற்றியிலே அடித்துக் கொண்டாள்.
“ஐயோ.. கடவுளே என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பார்.. இப்படியா இந்த கோலத்திலா அவர் முன்னாடி போய் நிற்கணும்” தன்னையே கடிந்துக் கொண்டவள் பிள்ளையை கொஞ்சி முத்தம் வைத்து அவனை குளிப்பாட்டி உணவு உண்ண மேசைக்கு அழைத்து வந்து அவனுக்கு ஊட்டி விட்டவள், தானும் உண்ண அமர்ந்தாள்.
தீரன் அவனது அறையில் இருந்தான். அவனை சாப்பிட சொல்லி ஒரு வார்த்தை கூட அவள் அழைக்கவில்லை. தேவையில்லாத உரிமை எல்லாம் எடுத்துக் கூடாது என்று எண்ணி இருந்ததால் அதை செய்யவில்லை. பிள்ளைக்கு ஊட்டி முடித்து அவள் உண்ணும் நேரம் வெளியே வந்தான் தீரன். அவள் சாப்பிடுவதை ஒரு பார்வை பார்த்தவன் பிள்ளையை தூக்கிக் கொண்டு மீண்டும் தன் அறைக்குள் நுளைந்துக் கொண்டான்.
அதன் பிறகு இவள் சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு லேசாக டச்சப் போட்டு அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்தாள். அதற்குள் தீரன் பிள்ளையை தயார் செய்து இருந்தான்.
“இன்னைக்கு ஒரு நாள் உன்னை கொண்டு வந்து விடுறேன். நாளையில இருந்து நீயே பார்த்துக்க” என்றான்.
அவளுக்கு அவனுடன் போக விருப்பம் இல்லை தான். ஆனால் அவனது அலுவலகம் எப்படி இருக்குமோ என்கிற பதட்டம் இருக்கவே சரி என்று தலையை ஆட்டினாள்.
“அங்க இருந்த மாதிரி அசமந்தமா இருந்தன்னா சீட்டை கிழிச்சு கையில குடுத்துடுவேன் ஜாக்கிரதை..” மிரட்டியே அவளை அழைத்துக் கொண்டு போனான்.




