Notifications
Clear all

அத்தியாயம் 33

 
Admin
(@ramya-devi)
Member Admin

“கண்டிஷன் நம்பர் ஒன் நீ ட்ரினியா தான் உள்ள வரணும்” அவளை பார்த்துக் கொண்டே கண்டிஷன் ஒவ்வொன்றாக அவன் போட, ஏன் எதற்கு என்று கேட்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.  

“ரெண்டாவது உனக்கு பாதி செலரி தான்” என்றான்.

அதற்கும் தலையை ஆட்டினாள்.

“மூணு நீ என்னோட பியேவா சார்ஜ் எடுக்கணும்..” அவனை அதிர்ந்துப் போய் பார்த்தாள்.

“என்ன பார்க்கிற இதை விட இன்னொரு முக்கியமான கண்டிஷன். உன்னோட உன் குழந்தை அதாவது என்னோட ஸ்மால் மேனையும் கூட்டிட்டு வரணும். இதுக்கெல்லாம் சம்மதம்னா உன் தங்கை இங்கயே வேலை பார்க்கட்டும்.. அப்படி இல்லன்னா உன் தங்கச்சிக்கு சென்னைல தான் வேலை” என்றான்.

அவன் போட்ட கண்டிஷன் எல்லாம் ஓகே தான். ஆனால்   மீண்டும் குழந்தையை நெருங்க அவன் எண்ணுவது பட்டவர்த்தனமாக தெரிய அயர்ந்துப் போனாள்.

“இது மட்டும் இந்த அக்ரிமெண்ட்ல கடைசி லைன் ஒன்னு இருக்கு. சப்போஸ் நீ இந்த அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிட்டு வேலையில ஜாயின் பண்ணாம போயிட்டா உன்னை பிடிச்சு ஜெயில்ல போடலாம். அதற்கு நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்னு இருக்கு. இப்ப யோசிச்சுட்டு கையெழுத்து போடு” என்று ஒப்பந்த காகிதங்களை அவள் முன்பு வீசினான் தீரன்.

எப்படி எல்லாம் தன்னை சிக்க வைக்கிறான் இவன் என்று மனம் கலங்கியவளை கையெழுத்துப் போடாத என்று அவளின் அறிவு எச்சரித்தது.

ஆனால் கையெழுத்து போட்டே ஆகவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருப்பதை உணர்ந்தவளுக்கு கொஞ்சமாச்சும் அவகாசம் தேவைப்பட்டது. தங்கையிடம் ஒரு முறை பேசிப் பார்க்கலாமா? என்று தோன்றியது.

“ஒன்னவர் டைம் வேணும்” என்றவள் தங்கையிடம் நேராக சென்றாள்.

அவளிடம் ரிசைன் பண்ண சொல்லி சொல்ல மனம் வராமல்

“அவரு என்னை சென்னைக்கு போக சொல்றாரு நேத்ரா” என்றாள் அக்ரிமென்ட் விசயத்தை பற்றி எல்லாம் எதுவும் சொல்லாமல்.நின்றிருந்தாள்

“நீ எப்படிக்கா போவ. உன்னை விட்டுட்டு நான் மட்டும் எப்படி தனியா இருக்குறது. ப்ளீஸ் எங்க போனாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே இருக்கலாம். உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுக்கா” என்று பரிதவித்துப் போய் அக்காவை காட்டிக் கொண்டவளை தேற்ற முடியாமல் கையில் பிள்ளையுடன் நின்றிருந்தாள் அதிரல்.

“சரி முதல்ல சாப்பிடு.. பிறகு யோசிக்கலாம். எனக்கு பசிக்கிது நைட்ல இருந்து எதுவும் சாப்பிடல” என்று சொன்னவள் இருவருக்கும் உணவு வாங்கி வந்தவள், பிள்ளைக்கு நேத்ரா எடுத்து வந்த உணவை ஊட்டி விட்டாள்.

அவன் கொஞ்சமே கொஞ்சம் உண்டு விட்டு மடியில் சுருண்டுக் கொண்டாள்.

ஆபிஸ் பாய் வந்து எம்டி நேத்ராவை அழைப்பதாக சொல்ல,

“நீ சாப்பிட்டுட்டு இங்கயே இருக்கா.. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்” என்று சொன்னவள் கையை வாஷ் பண்ணி விட்டு விரைந்து ஓடினாள்.

“இவக்கிட்ட என்ன சொல்ல போறாரோ..” என்று அதிரலுக்கு பக்கு பக்கு என்று இருந்தது. மருத்துவர் அவளை கண்ணாடி பாத்திரம் போல பார்த்துக்க சொல்லியதிலிருந்து அவளை அப்படி தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். யாருமில்லாமல் தங்கை தனியாக என்ன செய்வாள். திடுதிப்பென்று ஏதாவது ஒன்றானால் கூப்பிட்ட தொலைவிலாவது இவள் இருக்க வேண்டுமே.. என்னை தவிர அவளுக்கு வேற யாருமே இல்லையே.. அவளை சென்னைக்கு அனுப்பவும் முடியாது. அங்கு இருக்கும் பொல்யூஷன் அவளுக்கு இன்னும் கெடுதலை கொடுக்கும். கடவுளே நான் என்ன செய்வேன்.. என்று தூங்கும் பிள்ளையை தோளில் போட்டுக் கொண்டு தவியாய் தவித்துப் போனாள் அதிரல்.

--

அந்த மானிட்டரில் தெரிந்த அதிரலின் தவிப்பை விழி எடுக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் தீரன். அவனிடம் கொஞ்சமும் இரக்கமே இல்லை. நேற்றைக்கு அவன் அந்த தவிப்புடன் தானே அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான். அப்போ என் தவிப்புக்கு இப்ப நீ பதில் சொல்லு. நீ தானே தவிக்க விட்ட என்னை... என்று விழிகள் எடுக்காமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் அறையில் இருந்த வண்ணம்.

அந்த நேரம் லேசாக மூச்சு வாங்க வந்த நேத்ராவை பார்த்தவன், தலை அசைத்து உள்ளே வர சொன்னான்.

“சிட்” என்று தனக்கு எதிரில் இருந்த இருக்கையை கை காட்டினான்.

“இல்ல சார் பரவாயில்ல நிக்கிறேன்” என்று அவள் நிற்க அலட்டிக் கொள்ளாமல் அவளை பார்த்தவன்,

“நீ என்ன கேஜி ஸ்டூடன்ட்டா? சென்னைக்கு போக சொன்னதுக்கு உன் அக்காவை கூட்டிட்டு வந்து இருக்க?” கடுப்படித்தான் தீரன்.

“அது அப்படி இல்ல சார்..” என்று தயங்கியவள்,

“அக்காக்கிட்ட கேட்காம நான் எதையும் செய்தது இல்ல சார்.. அதுதான் அக்காக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்னு” என்றாள்.

“அதுக்காக அவங்க இப்படி கம்பெனி வரை வருவாங்களா?” ஏகத்துக்கும் எகிறினான்.

“இல்ல சார் அது வந்து” என்றவள்,

“என் மேல அக்காவுக்கு ரொம்ப பாசம் சார்” என்றாள்.

“ஏன் உன் அப்பா அம்மால்லாம் உன் மேல பாசமா இல்லையா?” கடுப்படித்தான்.

“அவங்க நான் சின்ன பிள்ளையா இருக்கும் போதே இறந்துட்டாங்க சார். அக்கா தான் என்னை தூக்கி வளர்த்தாங்க. எனக்கு அக்கா தான் எல்லாமே” என்று கண்கள் கலங்கினாள்.

அதை கேட்டு ஒரு கணம் அமைதியானவன்,

“உன் மாமா எங்க இருக்காரு.. நேத்திக்கு ஹாஸ்பிட்டல்ல கூட அந்த ஆளு வரலையே” என்றான் யோசனையுடன்.

“அது வந்து..” என்று இழுத்தவள், “அவருக்கு ஏதாவது வேலையா இருந்து இருக்கும் சார். அதனால தான் அவங்க வந்து இருக்க மாட்டாங்க” என்றாள். அவளிடம் ஏதோ ஒரு தடுமாற்றம் இருப்பதை கண்டுக் கொண்டான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,

“சரி சொல்லு நீ சென்னை போறியா?” என்று கேட்டான்.

“அங்க போனா எனக்கு உடம்பு சரியில்லாம போயிடும் சார்..” தயக்கத்துடன் சொன்னவளை கண்கள் இடுங்க பார்த்தவன்,

“ஏன்?” என்றான்.

“அது.. அது அப்படி தான் சார்” என்றாள். அதிரல் யாரிடமும் அவளுக்கு ஹார்ட் ஆப்ரேஷன் செய்து இருப்பதை பற்றி சொல்லாக்கூடாது என்று சொல்லி இருந்தாள். அதனால் அவள் தீரனிடம் எதுவும் சொல்லாமல் மழுப்பினாள்.

“ஏதாவது ரீசன் இருக்குமே?” என்று இவனும் விடாமல் துருவினான்.

“அ...து அங்க பொல்யூஷன் அதிகம் இருக்கும் சார். எனக்கு சேராது” என்று மேலோட்டமாக சொல்ல, தீரனின் பார்வை இன்னும் கூர்ந்தது.

“ஏன் பொல்யூஷன் சேராது? பிறந்ததில் இருந்தேவா.. இல்ல இடையில் இருந்தா?” கேட்டான்.

“அது இடையில இந்த நாலு வருடமா தான் சார்” என்று சொல்ல தீரனின் நெஞ்சில் மெலிதான ஒரு அதிர்வு.

“எதனால ன்னு தெரியுமா?” என்று மேலும் வளை விரித்தான்.

“அது ஏன்னு தெரியல சார்” என்று மழுப்பினாள்.

“ஓகே.. உங்க மாமா போட்டோவை பார்க்கணும். காண்பி” என்று அவளது செல்போனை பார்த்தபடி அழுத்தமாக கேட்டான்.

அவன் அப்படி கேட்கவும் பதறிப் போனவள், வேண்டும் என்றே போனை கீழே போட்டுவிட்டு,

“சாரி சார் டிஸ்ப்ளே போயிடுச்சு..” என்று சமாளித்தாள்.

“ஓகே நீ போகலாம்” என்றவனுக்குள் ஏதோ லேசாக தீப்பற்றியது போல தோன்றியது. ஆனால் அது எந்த அளவுக்கு சரி என்று புரியவில்லை.

Loading spinner

Quote
Topic starter Posted : October 15, 2026 9:53 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top