புதிதாய் இருந்த கவரை எட்டி எடுத்தவள், அதை திறந்து பார்த்தாள். அதில் ஏதோ துணி போல இருப்பதை கண்டு அதை விரித்து பார்த்தவளுக்கு மூச்சை அடைத்தது... ஏனெனில் அதில் இருந்தது லக்சுரி ப்ரைடல் சில்க் கப்பில் ரோப்ஸ் எனப்படும் நைட் டிரஸ்...
அவனுக்கும் இவளுக்கும் முட்டி வரை இருக்கும் அடர் நீள வண்ணம் கொண்ட ஓவர் கோட்டும், அவளுக்கு ஸ்லீவ் லெஸ், வித் செக்சி லேஸ் வேலை பாடு கொண்ட அதே நீள கலரில் முட்டி வரை உள்ள ஒரு உடையும், அவனுக்கு ட்ராயர் மட்டும்... அதுவும் அதே அடர் நீள வண்ணத்தில்.
அதை பார்த்தவளுக்கு முகம் சிவக்காமல் எப்படி போகும்... ஏண்டா பார்த்தோம் என்று எண்ண தோன்றியது. கூடவே அவனது ஆளை கொல்லும் பார்வையில் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியாமல் தடுமாறி போனாள்.
“இப்படியா ஆர்வ கோளாறா இருப்ப.. இப்போ எப்படி இவங்களை எதிர்க்கொள்ளுவது...” என்று உதடு கடித்து முகம் சிவந்து போனாள்.
அவளை இன்னும் வெட்கப்பட வைக்க வேண்டும் என்று எண்ணியவன் போல, தன் கரங்களால் அவளை சுற்றி வளைத்து, கழுத்தில் தன் அடர்ந்த மீசை முடிகள் உரச...
“இன்னும் ஒன்னு இருக்கு. அதையும் பாரு...” என்று உதடுகள் அங்கே கோலம் போட, எட்டி இன்னொரு கவரை எடுத்து கொடுத்தான்.
“ப்ளீஸ்... வேணாமே...” வார்த்தையே வராமல் வெறும் காற்றை மட்டும் வெளியே விட்டு மறுத்தவளை இன்னும் தன்னோடு இருக்கியவன்..
“நீ பார்த்து தான் ஆகணும்..” என்றவன் அவளது கைகளில் அதை திணித்துவிட்டு, மீண்டும் அவளை கட்டிக்கொண்டு, தன் முகத்தை அவளது கழுத்தில் புதைத்துக்கொண்டு, அலமாரி கதவில் பதிக்கப்பட்டு இருந்த கண்ணாடியில் அவளது முகத்தை பார்வை இட்டான்.
அவனது கட்டளையில் உள்ளம் இன்னும் அதிகமாக படபடப்பு கொள்ள, வழிகளற்ற சாலையாய் அவன் வழி நடத்தி சென்ற பாதியிலே இவளும் போக வேண்டியதாய் இருந்தது.
அவள் அந்த கவரை பிரித்து, அதிலிருந்த உடையை விரித்து பார்த்தவள், பட்டென்று அதை கீழே போட்டுவிட்டு இரு கைகளாலும் அவளது முகத்தை பொத்திக்கொண்டாள் அதித வெட்கத்தில்.
“என்னடி கீழ போட்டுட்ட...” என்றபடி அவளை திருப்ப முனைய... அவளோ பட்டென்று திரும்பி அவனை ஏறிட முடியாமல் அவனது நெஞ்சிலே முகம் புதைத்துக்கொண்டாள்.
“நிமிர்ந்து என்னை பாரு மயூ...” மீசை முடியால் காதில் கோலமிட்டு அங்கும் இங்கும் உரசி எடுத்தபடி பேசியவனின் செயல்களில் இன்னும் வெட்கம் கொண்டவள்,
“ம்ஹும்... மாட்டேன்...” என்று தலையை இடவலமாக ஆட்டினாள்.
“நீ பார்த்து தான் ஆகணும்...” என்றவன் வலுகட்டாயமாக அவளை நிமிர்த்தி, வெட்கம் படர்ந்த அவளது முகத்தை ஆசையாக தன்னுள் வாங்கிக்கொண்டவன்
“என்ன ஆச்சு....” என்று அவளிடமே கேட்டான். எல்லாம் அறிந்தும்.
“உங்களுக்கு தெரியலையா...?” என்றவள் அவனது குறும்பு புன்னகையை கண்டு இன்னும் தன் முகத்தை புதைத்துக்கொள்ள முயல... வலுக்கட்டாயமாக அவளை நிமிர்த்தி அவளது கண்களினோடு கண்களை சேர்த்தவன்,
“இந்த ட்ரெஸ் தான் எனக்கு ரொம்ப பிடுச்சு இருக்கு... இதுல தான் நம்மோட முதல் கூடல்ல...” என்றவனின் பேச்சில் இன்னும் வெட்கம் பிடுங்கி திங்க... தலையை நிமிர்த்தவே இல்லை மயூ...
“இந்த உடையில நீ வரும் போது...” என்று மேலும் தன் ஆசையை சொல்ல சொல்ல... மயூவுக்கு அப்படியே ‘எங்காவது காணமால் போய்விட மாட்டமா...?’ என்று இருந்தது. முதலில் பார்த்தது ஒரு வகை உடை என்றால் இது வேறு ஒரு வகையை சார்ந்ததாக இருந்தது.
‘செகென்ட் ஸ்கின் ப்ளோரா ப்ரைடல்’ எனப்படும் மிக மெலிதான வெறும் லேசை மட்டும் துணியாய் கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பரன்ட் உடை... அதை பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கி திண்றது...
கூடவே அவனது வார்த்தைகளும், அவனது ஆசைகளும் புரிய இன்னும் இன்னும் சிவந்து போனாள். கூடல் என்பது இயல்பு தான் என்றாலும், அதில் இவன் இவ்வளவு ஆசை கொண்டு இருப்பான் என்று தெரியாமல் போனது மயூவுக்கு.
இன்று அதையும் அவன் வெளிச்சம் போட்டு காட்ட தலையை நிமிர்த்தவே முடியவில்லை அவளால். கூடவே மனசு சுருங்கியும் போனது.
அவனது எதிர்பார்ப்பை அவளால் பூர்தி செய்ய முடியுமா என்று எண்ணும்போதே கண்களின் ஓரம் கண்ணீர் எட்டி பார்த்தது.
நடக்குமா...? அதும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்கும் சூழலில்... ஆதியை தன்னால் தாரை வார்த்து தர இயலுமா...? அவனது காதலுக்கு தன்னால் ஈடு செய்ய முடியுமா...? அவன் கொண்ட காதலின் ஆழத்தை அவன் அந்த மலை காட்டிலேயே காட்டிவிட்டான்.
நான்.... அவன் மீது நான் கொண்ட காதலை எப்படி காட்டுவேன். அப்படி காட்ட காலம் விடுமா...? என் காதலை நான் காட்ட வேண்டும் என்று எண்ணுகிற சமயம் எல்லாம் ஏதோ ஒரு தடை வந்து என்னை கட்டிப்போட்டுக்கொண்டே இருக்கிறதே... என்ற எண்ணமே அவளை துவள செய்தது.
அவளது முகத்தில் இருந்த வெட்கம் மறைந்து குழப்பமும் வேதனையும் சூழ்ந்து இருப்பதை கண்டவன்... தன் அணைப்பை இரும்பு பிடி போல மாற்ற... அதில் சுயத்துக்கு வந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
கண்கள் இரண்டும் கோவை பழம் போல சிவந்து இருக்க... ஆதியை அவ்வாறு காண பயமாய் இருந்தது.
“ஆதி...” என்று தயக்கத்துடன் அழைக்க...
“இங்க நீ நான் மட்டும் தான். உன் சிந்தனை என் மேல இல்லன்னா எனக்கு கோவம் வரும்னு உனக்கு தெரியும் தானே... தெரிஞ்சு ஏன் இப்படி பண்ற... உனக்கு நான் மட்டும் தான் முக்கியமா இருக்கணும். என்னோட பிரிவு கூட உன்னக்கு பெருசா தெரிய கூடாது.”
“அது எப்படி முடியும்... இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம். அப்புறம் எப்படி உங்க பிரிவை எண்ணாமல் என்னால் இருக்க முடியும்...” கொஞ்சம் ஆதங்கமாகவே கேட்டவளை உருத்து விழித்தவன்,
“இது அத்தனைக்கும் காரணம் நீ... சோ இதை நீ அனுபவிச்சு தான் ஆகணும்...” என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அரக்கனை போல சொன்னவனை முறைத்து பார்த்தவள்,
“அப்போ எனக்கு உங்களை விட உங்க பிரிவின் வலி தான் அதிகமா தெரியுது...” பட்டென்று சொல்ல... அவளின் கூந்தலை இறுக பற்றியவன், அவளது முகத்துக்கு நேரா குனிந்து அவளை நெருப்பாக பார்த்தவன்,
“உனக்கு நான் மட்டும் தான் பெருசா தெரியனும் மயூ... அப்படி இல்லன்னா...” முடிக்கும் முன்பே
“அப்படி இல்லன்னா என்ன பண்ணுவீங்க...” கொஞ்சம் குரலை ஏற்றியே கேட்டவளை இன்னும் இறுக பிடித்து வலிக்க செய்தவன்...
“என்னை மட்டுமே நினைக்கும் படி செய்வேன்...” என்று சொல்லியவன் சிறிது இடைவெளி விட்டு “உன் வாழ் நாள் முடியும் வரை...” என்று தோரணையாக சொல்ல அதில் அவளுக்கு ஆதி முதல் அந்தம் வரை சப்த நாடியும் ஒடுங்கி போனது.




