Notifications
Clear all

அத்தியாயம் 29

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஆதி... அத்தையோட எதுக்கு இவ்வளவு போட்டி... நாளைக்கு ஒரு நாள் தானே...” இவள் தன்மையாய் ஆரம்பிக்க,

சுடும் சூரியன் போல அவளை முறைத்து பார்த்தான்.

“இப்படி ஒண்ணு ஒண்ணுக்காய் உன்னை விட்டு குடுக்க ஆரம்பித்தேன்னா பிறகு ஒரேடியா உன்னை தொலைத்துட்டு தான் நான் நிற்ப்பேன். உன்னை தொலைச்சிட்டு அப்புறம் எப்படி நான் வாழ முடியும்.”

“நான் வாழனும்... அதும் உன்னோட உயிர் கலந்து, ஒன்றாய் உறவாடி, உயிரோடு உயிராக உறைந்து நான் வாழணும்... நாம வாழணும் மயூ... அதுக்கு குறுக்க யாரு வந்தாலும் தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டே இருப்பேன்...”

“இன்னைக்கு சொல்றது தான்... நீயே விரும்பினாலும் இனி என்னை விட்டு உன்னால போக முடியாது. என் எல்லைகள் என்பது உன்னது வரை நீண்டு இருக்கு. அதை என்னை தவிர வேறு யாராலும் டச் பண்ணவே முடியாது.”

“டாப் டூ பாட்டம் வரை மொத்தமும் நீ எனக்கு மட்டும் தான்... காட் இட்...” என்றவன் அவனது தளத்தில் இருந்த சமையல் அறைக்கு அவளை அழைத்து சென்று மலையில் வாழ்ந்த நாட்களை நினைவு படுத்துவது போல அவளை அமரவைத்து அவளுக்கு தேவையான உணவினை செய்ய தொடங்கினான்.

அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அவனது காதலின் எல்லையை கண்டு நெஞ்சமெல்லாம் கர்வத்தில் நிறைந்து போனது.

‘உங்களை மாதிரி யாராலும் காதலிக்கவே முடியாது ஆதி... உங்களை காதலிக்கிறே..... சொல்லி முடிக்க மாட்டேன். ‘ன்’ இந்த எழுத்தை என் வாழ் நாளோட கடைசி நாள் வந்தாலும் நான் சொல்ல மாட்டேன். ஏன்னா அந்த அளவு உங்களை காதலிக்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் ஏன் அடுத்த ஜென்மம் வரையிலும் காதலிச்சுக்கிட்டே தான் இருப்பேன். அதனால அந்த அளவை என்னால அளவிட முடியாது. உங்க அன்பு கிடைக்க நிஜமாவே எதோ ஒரு வகையில வரம் வாங்கிட்டு வந்து இருப்பேன் போல ஆதி...’ மனதுக்குள் அவனுடன் உரையாடிக்கொண்டு இருந்தாள்.

அவனில் எதையோ சுட்டு எடுத்துக்கொண்டு இருந்தான்... அவன் அங்கும் இங்கும் போகும் இடமெல்லாம் அவளது கண்களும் சென்று புது வகையான நர்த்தனம் ஆடிக்கொண்டு இருந்தது கருவிழிகள்.

அவளது பார்வையை உணர்ந்தவனுக்கு மென்மையாய் இதழ் விரிந்தது... அதும் கூந்தலின் ஓரம் சொருகி இருந்த வைர பூக்கள் நிறைந்த பின்னை சரி செய்வது போல அவனை அடிக்கடி பார்க்க அவளை இன்னும் இன்னும் பிடித்து போனது ஆதிக்கு.

அலுவலகத்திலிருந்து வந்த படியே இருந்தவளை கண்டு அவள் இன்னும் பிரெஷ் ஆகவில்லை என்பதை உணர்ந்தவன், அவளிடம் அவளுக்கு என்று வாங்கி வைத்திருந்த இரவு நேர உடையை கொடுத்து குளிக்க அனுப்பினான்.

அவளும் குளித்து விட்டு வர, வெட்ட வெளியில் அவளுக்கு இரவு உணவை பரிமாறினான். அவளும் அவனது உபசரிப்பில் மலர்ந்தவள் அவனது சேவையை மனம் கர்வம் கொள்ள ஏற்றாள்.

அவள் உண்ட பின் அவளது கையை பற்றி எழுப்ப “என்ன” என்பது போல அவனை பார்த்தாள்.

“வா” என்றவன் அவளுக்கு பிடித்தாமான ஒரு செடியை காட்டினான். ஏற்க்கனவே அந்த உப்பரிகை அவளுக்கு பிடித்தமான செடிகளால் நிரம்பி இருந்தது.

அதில் இன்னும் ஒரு வகை செடியை காட்ட மலர்ந்து போனவள் சட்டென்று அதன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மண்ணோடு கலந்து இருந்த நீர் வாசனையும் பச்சையத்தின் வாசனையும் உள்ளுக்குள் ஆழ இழுத்து சுவாசித்தவள்

“ம்ம்ம்... அரோமா ஆதி. திஸ் இஸ் சந்தன மரம் ரைட்...” என்று கண்கள் மலர உள்ளம் துள்ள கேட்டாள்.

“ம்ம்... நீ தானே கேட்ட சந்தன மரம் என் கைக்குள்ள வேணும்னு.. அதான்..” என்று புன்னகை சிந்தினான்.

“இட்ஸ் வெரி லவ்லி ஆதி...” என்று அந்த கையளவு மட்டும் இருந்த மரத்திற்கு முத்தம் இட்டாள்.

“வாங்கி தந்தது நான்...” என்றான் செருமலாய்.

அதில் முகம் சிவந்தவள், பதில் எதுவும் சொல்லாமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டாள்.

“சே அன்செர்...” என்றான் விடா காண்டாய்.

“அ...து... அது தான் பரிசுக்கு குடுத்துட்டனே...” தயக்கத்துடன் சொன்னவளின் வெட்கம் அவனை சிலிர்க்க செய்ய..

“உன்னோட ஒவ்வொரு வகையான தோற்றமும் என்னை ஏதோ செய்யுதுடி...” என்றவன் அவள் எதிர் பாரா சமயம் அவளை இழுத்து அனைத்து அவளது உதட்டை கடித்து முத்தம் வைக்க, அவனது அந்த ஆளுமையில் விக்கித்து போனவள் அவனுக்கு புற முதுகிட அதற்க்கு விடாமல் அவளது இதழ்களை இன்னும் இன்னும் சுவைத்து கடித்து இழுத்து முத்தமிட்டான்.

எப்பொழுதும் அவன் தொடுகைக்கு மயங்குபவள் இன்றும் அவனது தொடுகையில் மயங்கினாள்.

“ஆதி... வலிக்குது” என்றபடி அவனிடமிருந்து தன் இதழ்களை விலக்கிக்கொண்டாள்.

“முத்தம் குடுத்தா வலிக்க தான் செய்யும்..” உல்லாசமாய் சொன்னவனை கண்டு முறைத்தவள் அவனது அறைக்கு சென்று,

“ஆமா இந்த உடை எப்போ வாங்குனீங்க... இந்த வாரம் வாங்குன உடையை நான் பார்க்கவே இல்ல...” என்று சொல்லி அவனது கபோர்டில் இருந்த புது வருகையான உடைகளை பார்வை இட்டாள்.

அவளின் பின் புறம் அணைத்துக்கொண்டு அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து இளைந்துக்கொண்டே

“நீ கொஞ்சம் பிசி... அதோட சில தேவையில்லாத வேலையெல்லாம் இடையில செஞ்சியா...? அதான் காட்டல... சரி இப்போ பாரு..” என்றவன் அவளுக்கு ஒவ்வொன்றாய் காட்டினான்.

அந்த வாட்ரோபில் அவளுக்கும் சரி சமமாய் உடைகள் இருந்தது.

அவளது ஆபிஸ் வேரை நோட்டம் விட்டவள் எல்லாமே பக்காவாய் இருக்க, அடுத்து இரவு உடையை பார்த்தாள். எல்லாமே புது விதமாய் இருந்தது. வண்ணமும் மனதுக்கு இதமாய் இருந்தது.

“எல்லாமே அழகா இருக்கு ஆதி...” என்றவள் கொஞ்சம் எட்டி இருந்த ஒரு கவரை எடுத்தாள். அதில் அவனது கரங்கள் அவளது இடையை தழுவ,

“ஆதி...” என்று ஜெர்க்கானாள்.

“ம்ம்..” என்றானே தவிர தன் கரங்களை அங்கிருந்து எடுத்துக்கொள்ளவில்லை அவன்.

அவனை இனி கலைக்க முடியாது என்று அறிந்து அவனை அப்படியே விட்டவள், அந்த கவரை பிரித்து பார்த்தாள்.

பார்த்தவளின் கண்கள் நிலை குத்தி அப்படியே நின்றது...

 

Loading spinner

Quote
Topic starter Posted : October 15, 2026 9:41 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top