ஆனால் இங்கு வந்த பின்பு அவளது கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தாள் மயூ. அதும் அவனது காதலை முழுமையாக உணர்ந்த பின்பு வேறொரு மயூவை அவனுக்கு காட்டினாள் மயூ...
காதலில் ஆட்டி வைப்பதை விட, ஆட வைப்பது தான் இன்னும் அதிக நெருக்கத்தை கொடுக்கும். அதில் தான் பல சொல்லாத உணர்வுகள் வெளிப்படும். அவளது ஆளுமையை விரும்பினான் ஆதி. அவன் சொல்வதை கேட்கும் பொம்மையை விரும்ப வில்லையே...
காதல் ராஜ்யத்தை ஆள அரசியை அல்லவா அவன் எதிர் பார்க்கிறான். அவனது எதிர் பார்ப்பை பொய்யாக்காமல் அவனை ஆட்டுவிக்க தொடங்கினாள் மயூ.
அவளின் உரிமையை அவள் அவனிடம் மிக வன்மையாக நிலை நாட்ட தொடங்க ஆதியினுள் பல மின்சார வண்டிகள் அதிவேகமாக ஓட தொடங்கியது. ஆட்டுவிக்கும் போது அவர்களிடமிருந்து வெளிப்படும் உரிமை உணர்வில் ஆடுபவர்களின் உள்ளம் உணர்ந்து மையல் கொள்ளும். இன்னும் கொஞ்சம் ஆட்டி வைக்க கூடாதா என்று ஏங்கி போகும்.
அந்த நிலையில் இருந்தான் ஆதி... மயூவின் அதிரடியில் ஆதி கிறங்கி போனான். அவளிடமிருந்து வெளிப்படும் உரிமை உணர்வில் திளைத்து போனான்.
அன்றைய இரவில் மயூ அவனை சிறிது நேரம் கூட விடாமல் தன் பிடியில் வைத்து இருந்தாள். அணைப்புகளிளிருந்து தன்னுடைய ஆட்டத்தை தொடங்கினாள்.
அவளது அணைப்பில் கட்டுண்டு இருந்தவன் எம்பி அவளது முகத்தை பார்த்தான். ஆதியின் காதலினால் வந்த கர்வத்தில் அவளது முகம் பொலிவாய் மின்னியது.
வந்த பொழுது இருந்த முகத்துக்கும் இப்பொழுது இருக்கும் முகத்துக்கும் ஆயிரம் வித்யாசம் இருந்தது.
“இன்னும் உனக்கு நிறைய காதல் பாடங்கள் சொல்லி தரணும் மயூ...” முணகியவன் அவள் மீது கவிழ்ந்துக்கொண்டு நன்றாக தூங்கினான்.
ஆதியின் காதல் மொழிகளை கேட்டு கண்ணயர்ந்தவளுக்கு கனவுகளில் கூட தன்னவனின் வருகையே நிறைந்து இருந்தது.
அவனது காதல் வசனங்கள் எல்லாம் பெரிய பெரிய எழுத்தில் வந்து அவளை மகிழ்விக்க அவளது இதழ்களில் மையளாக ஒரு புன்னகை தவழ்ந்தது.
அடித்து போட்டது போல தூங்கி கொண்டு இருந்தவனை உலுக்கி எழுப்பினாள் மயூ...
“என்னடி... தூக்கம் வருது... தூங்க விடு..” என்றவன் அவளையும் இழுத்து படுக்கையில் தள்ளிவிட்டு அவளின் மீது ஏறி படுத்துக்கொண்டான்.
ஜில்லென்ற ஸ்பரிசத்தை உணர்ந்தவன் கண்களை விரித்து பார்த்தான். சற்றே அவளிடமிருந்து எழுந்து. குளித்து தலையில் துண்டுடன், மையிட்ட விழிகளுடன் மஸ்க்காரவும் போட்டு மீன் பிடிக்க வலை போட்டு விரித்து இருந்த மயூவின் கண்களை கண்டவனுக்கு உலகமே ஒரு நொடி ஸ்தம்பித்து போனது.
“மயூ... மை லவ்...” என்று முணகியவன், அவளது கண்களில் முத்தமிட்டான்.
“எழுந்திரிங்க முதல்ல... காலையிலேயே சேட்டை...” என்று அவனை புரட்டி கீழே தள்ள... அவனோ புரள்வது போல புரண்டு, தனக்கு மேல் அவளை கொண்டு வர,
“சுத்தம் இதுக்கு நான் கீழவே இருப்பேன்.” என்று முணகியவள், அவனது பிடியிலிருந்து நழுவி அவனுக்கு அருகில் படுத்தாள் வெட்க சிரிப்போடு...
அவளது புன்னகையை கண்டவன் தாவி அவள் மீது ஏறி அமர்ந்தவன்,
“மயூ... மை சோல்... காலையில இப்படி ப்ரெஸ்ஸா வந்து என்னை கொல்லாதடி.” அடிக்குரலில் சொன்னவன் அவளது கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான்.
அவனது சொல்லிலும், செயலிலும் இன்னும் வெட்கம் கொண்டவள், முகத்தை திருப்பி தலையணையில் புதைத்துக்கொண்டாள்.
அவளது வெட்கம் அவனுக்கு இன்னும் அதிக மோகத்தை கொடுக்க, சற்றே நழுவி கீழே செல்ல, மயூவின் வயிற்றில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் ஒருங்கே பறந்தது.
“ஆதி...” முனகியவள் அவனது தலையை பற்றிக்கொள்ள முயன்றாள்.
அவளின் கழுத்திலிருந்து நழுவியவன் அவளது மார்பில் முகம் புதைத்து அவளுடைய வாசத்தை நுகர்ந்தவன், இன்னும் சற்று நழுவி அவளது வயிற்றில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.
அவள் அணிந்து இருந்ததோ அவனுடைய சட்டை... அதனால் இன்னும் அவனுக்கு அவனுடைய சட்டை வசதி செய்து கொடுக்க, அனலில் இட்ட புழுவாய் துடி துடித்து போனாள் பெண்ணவள்.
எல்லைகள் தாண்டாமல் மோகிக்க ஆதியால் தான் முடியும். அதை எண்ணியவளுக்கு பெரும் எதிர் பார்ப்பும், மோகமும் வெட்கமும் ஒருங்கே எழுந்தது.
அவனது மீசை முடி உரசலுக்கும், இதழ்கள் செய்யும் மாயத்திர்க்கும் “ஆதி...” என்று முணக மட்டுமே அவளால் முடிந்தது.
“மயூ... இந்த குளுமை எனக்கு முழுதும் வேண்டும்... ஐ காண்ட் மை செல்ப்... நீ எனக்கு வேணும்... உன்னோட ஒவ்வொரு...” மேற்கொண்டு என்ன சொல்ல வந்தானோ அதை அத்தனையும் தன் இதழ்களுக்குள் அடக்கிக்கொண்டாள் மயூரா தேவி...
அதில் அவளை ஆர்வமாய் பார்த்தான் ஆதி... அவனது பார்வையை கண்டவளுக்கு இன்னும் ஜிவ்வென்று இருக்க, கூடவே வெட்கமும் வந்து தொலைய, தன் கைகளால் அவனது கண்களை பொத்தியவள், நீண்ட நெடிய முத்தத்திற்கு பின்
“இப்படி உளறுனா நான் என்ன பண்ணுவேன்... நானும் பாவம் தானே ஆதி... என்னாலயும் முடியல...” வெட்க சிவப்போடு சொன்னவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“லவ் யூ, லவ் யூ, லவ் யூ சோ மச் டா பேபி... இந்த வெடிப்பை தான் உன்கிட்ட எதிர் பார்த்தேன்... நீ இன்னும் என் மேல பித்தாகனும்... ஐ வான்ட் மோர் லவ்....” மேலும் உளறினான். அவனது உளறல்களில் இருந்த காதலை உள்வாங்கியவள், அவனுக்கு ஈடாய் அவளும் அவனிடம் காதலும் மோகமும் சரிவிகிதமாய் கொண்டாள்.
அவளது உணர்வு வெடிப்புகளில் கர்வம் கொண்டவன், ‘எனக்கு இதை விட, இனி நீ எடுக்க போற முடிவுகள்ல வெடிப்புள தான் என் காதல் எந்த நிலையில இருக்குன்னு தெரியும். அதில் தான் என்னோட கர்வமும் அடங்கி இருக்கு கண்ணம்மா...’ என்று மனதில் நினைத்துக்கொண்டவன், அவளுடனான இந்த நாட்களை அழகான மறக்கவே முடியாத நாட்களாக மாற்றினான்.
மயூவும் இந்த நாட்களில் தான் அதிகமாக வாழ்ந்தாள் என்றே சொல்லலாம்... இதுவரை வாழ்ந்த வாழ்க்கை ஏதோ வாழ்ந்தோம் என்று என்னும்படி மாற்றி அமைத்தான் ஆதி...
மிக மெலிதான ஒரு சோகம் இருவருள்ளும் இருந்தாலும் அதை காண்பித்துக் கொள்ளாமல் அந்த நொடிகளில் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.
பல அழகிய தருணங்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவளின்றி அவன் ஒரு அணு கூட அசையாது என்பதனை தெளிவாக அவளுக்கு உணர்த்தி இருந்தான். அந்த உணர்வுகளே பிரிவு உறும் நாட்களில் அவளை இன்னும் அழ வைக்கும் என்பதை தெரிந்தும் அவன் அதை செய்தான்.




