Notifications
Clear all

அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

இங்கே இவ்வளவு தூரம் தன்னை தேடி வருவான் என்று அவள் கொஞ்சமும் யோசித்து இருக்கவே இல்லை. திடுத்திப்பென்று அவன் இப்படி வந்து நிற்கவும் மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது.

“சார்” என்று அவள் எழப்பார்க்க, விழிகளால் அவளை அதட்டினான். சுதாரித்தவள் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

“இங்க நான் ஒன்னும் உன்னோட பாஸ் கிடையாது” அடிக்குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கர்ஜித்தவனின் கையை பிடித்த தேவகி,

“இங்க என்னப்பா பண்ற? நாங்க எல்லோரும் அங்க நின்னோமே. லொக்கேஷன் வேற அனுப்புனனே..” என்றவர் கீழே அமர்ந்து இருந்த அதிரலை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளின் கையில் இருந்த குட்டி வாண்டையும் ஒரு பார்வை பார்த்தார்.

அவரின் பார்வையை சங்கடமாக எதிர்க் கொண்ட அதிரல் அவரின் வயதுக்காக எழுந்து நின்றாள்.

அதை கண்டு கொள்ளாமல் மகனிடம் பார்வையை திருப்பினார் தேவகி.

“ஜஸ்ட் மிஸ்ஸிங்” என்று மட்டும் சொன்னவனின் பார்வை என்னவோ அதிரலின் மகன் வாயில் இருந்த இனிப்பிடமே இருந்தது.

“பிக் மேன்” அப்பொழுது தான் அவனை கவனித்த குட்டி வாண்டு கத்தியது.

“ஹாய்” என்றான் அழுத்தமான குரலில்.

“பிக் மேன்” என்று மீண்டும் குதூகலிக்க, பட்டென்று அவனை கையில் தூக்கிக் கொண்டான் தீத்திரள் தீரன்.

தேவகிக்கு தான் கெதுக்கென்று இருந்தது. இதென்ன முன்ன பின்ன தெரியாத ஒரு பையனை தூக்கி தூக்கி வச்கிக்கிறான் இவன்... ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறான்.. விசித்திரமா இருக்கே உள்ளுக்குள் புழுங்கிப் போனார்.

“ஹாய் பிக் மேன்..” என்றவன் சற்றும் யோசிக்காமல் தன் நாக்கில் இருந்த இனிப்பை அவனிடம் நீட்ட, பக்கென்று ஆனது அதிரலுக்கு.

“தீரா வாட் டூயிங்..? நோ” அதட்ட வரும் முன்பே,

“ஜஸ்ட் பிக்கப்” என்று சொன்னவன் அலட்டிக் கொள்ளாமல் மகனின் நாக்கில் இருந்த இனிப்பை இவன் எடுத்துக் கொள்ள, தேவகிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது. அதிரலுக்கோ மூச்சே எடுக்க முடியவில்லை.

“சாரி சார்... நீங்க ஓமிட் பண்ணி இருக்கலாமே” அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. முகமெல்லாம் இயலாமையில் சிவந்துப் போனது பெண்ணவளுக்கு.

“தட்ஸ் ஓகே..” சொன்னவனை,

“தீரன்” என்று திகைத்துப் போய் அழைத்தார் தேவகி.

“சிம்பிளி பன்..” என்று மட்டும் சொன்ன தீரன்,

“உன் பேர் என்ன?” என்று கேட்டான் குட்டி வாண்டிடம்.

“ம்மா” என்று அதிரலை பார்த்தான்.

ம்ஹும் என்று அவள் தலையை மறுப்பாக ஆட்ட, மகனோ சிணுங்கினான்.

“ம்மா.. பீச்... பீச்..” என்று அன்னையை குழந்தை கெஞ்சி கொஞ்சும் அழகை விழி எடுக்காது பார்த்தான் பெரியவன்.

“நோ தீரா..”

“ம்மா பீச்.. னா உன் தங்கா தேனே...” மழலை குரலில் அவன் பேசும் பேச்சில் மனம் கரைந்துப் போனது தேவகிக்கு கூட.

“தீரா ப்ளீஸ்.. நோன்னா நோ தான்” அதிரல் அடமாய் சொல்ல,

“குட்டி என்ன ஆச்சு..?” அவனிடமே நேரடியாக கேட்டான்.

“எ பேல் ம்மா எட்டி வச்சு இக்கா” என்றான்.

“புரியலடா.. என்ன சொல்ற? மெதுவா சொல்லு” புருவம் சுருக்கி கேட்டான் தீத்திரள் தீரன்.

“ஏ... பேல்.... ம்மா... எட்டி... வச்சு... இக்கா...” என்று நிறுத்தி நிதானமாக சொன்னான். ங்கே என்று விழித்தார் தேவகி.

அவனின் பேச்சை கேட்ட தீரனுக்கு உண்மையாகவே சிரிப்பாக வந்தது. இவன் மெதுவாக சொல்லுன்னு சொன்ன உடன் அவன் நிறுத்தி நிதானமாக சொல்கிறானாம். அதனால் முன்பு சொன்னதையே நீட்டி இழுத்து அவன் சொல்ல தீரனின் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை தேன் பட்டது.

“படுத்துறான்” என்று தனக்குள் முணகிக் கொண்ட தீரன்,

“புரியல” என்றான் மீண்டும். அவனின் கேலி புரியாமல் “ஏ.. பேல்...” என்று குட்டி வாண்டு மீண்டும் சளைக்காமல் நீட்டி முழங்க, கடினப்பட்டு தன் புன்னகையை அடக்கிக் கொண்டான் நெடியவன்.

“உன் பேரை உன் அம்மா எழுதி வச்சு இருக்கா. கரெக்ட்டா.. இதை தானே சொன்ன” என்று சரியாக சொன்னவனை கண்டு அதிகமாக மகிழ்ச்சி கொண்டவன்,

“ஏஏஏஏ...” குதூகலித்தான்.

அவனது மகிழ்ச்சியை கண்ணெடுக்காது பார்த்த தீரனுக்குள் அந்த மழலை அடி வேர் வரை இறங்கி விட்டான் அந்த நொடியில்.

“எங்க எழுதி இருக்காங்க” என்று அவன் கேட்டான்.

தேவகிக்கு என்னவோ நடக்க கூடாதது எல்லாம் நடப்பது போல தோன்றியது. என்னவோ நெஞ்சை பிசைந்தது..

அதிரலுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“கண்ணா என்ன பண்ணிட்டு இருக்க? இங்க வா.. நமக்கு நேரம் ஆச்சு போகலாம்” அதட்டல் போட்டு தீரனிடம் இருந்து மகனை வாங்கிக் கொண்டவள்,

“சாரி சார்.. அவன் இப்படி தான்.. உங்க டைமை வேஸ்ட் பண்ணதுக்கு நான் மறுபடியும் சாரி சொல்லிக்கிறேன்..” சொன்னவள் விறுவிறுவென்று கிளம்பி போய் விட்டாள்.

போகும் அவளை முறைப்புடன் பார்த்தான் தீரன். தேவகிக்கோ அப்படி என்று இருந்தது.

“வா தீரா” என்று அவர் அழைக்க,

“ம்ம்” என்றானே தவிர தாய் மகன் இருவரிடம் இருந்தும் பார்வையை விலக்கிக் கொள்ளவே இல்லை.

“தீரன் என்னப்பா? வா போகலாம்” என்று அவனை இழுக்கத குறையாக இழுத்துக் கொண்டு போனார் அதிரல் போகும் எதிர் திசைக்கு நேராக...

--- 

தீத்திரள் தீரனை கடந்து வந்த பிறகு தான் அதிரலுக்கு அப்பாடி என்று இருந்தது. நல்லவேளைக்கு காலையில் அவனிடம் பேசிய பேச்சுக்கு கன்னத்தில் விடாமல் போனான். அதுவே பெரிய விசயம். அங்கு அந்த இடத்தில் அத்தனை பேர் மத்தியிலும் ஏதாவது சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவளால் தாங்கி இருந்து இருக்கவே முடியாது.

இது ஏதோ நல்ல குணத்தில் இருந்து இருக்கிறான். இல்லை என்றால் லேபிட் ரைட் என்று வாங்கி இருப்பான். ஹப்பாடா.. என்று ஓட்டமும் நடையுமாக அவனின் கண் மறைவாக வந்த பிறகு அடைத்து இருந்த மூச்சு இலகுவாக வெளியே வந்தது.

கொஞ்ச நேரத்தில் பயம் காட்டி விட்டுட்டாரே.. ஆனா இதுக்கெல்லாம் சேர்த்து நாளைக்கு தனக்கு இருக்கிறது என்று எண்ணிக் கொண்டவளுக்கு நாளை எப்படி இவரை எதிர்கொள்வது என்று யோசனையாக இருந்தது.

அதை விட வேறு ஒரு முக்கியமான வேலை அவளுக்கு ஒன்று இருந்தது.

இடுப்பில் இருந்த மகனை இறக்கி விட்டு அவனின் உயரத்துக்கு கீழே அமர்ந்தவள், தனக்கு எதிராக அவனை திருப்பி நிற்கவைத்தாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 26, 2026 10:08 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top