Notifications
Clear all

அத்தியாயம் 7

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அதிரல்” என்ற ஆளுமையான குரல் ஒலித்தது அந்த பெரிய கூடத்தில்.

அதில் அவளின் தேகம் லேசாக தூக்கிவாரிப் போட்டது. அவளின் அதிரலை இடுங்கிப் போன பார்வையில் பார்த்தவனோ,

“இன்னும் எத்தனை நாளுக்கு நீ இப்படி பயந்துக்கிட்டே இருக்க போற. உன் பேரை சொல்லி தானே கூப்பிட்டேன்” அடங்காத கோவம் வந்தது அழைத்தவனுக்கு.

“இல்ல சார் திடீர்னு கூப்பிடவும்..” தொண்டையில் சொற்கள் சிக்கிக் கொண்டது.

அதென்னவோ இவன் அழைத்தால் மட்டும் அதிரலுக்கு உள்ளுக்குள் அத்தனை பதட்டம் வந்து விடுகிறது.

“இந்த பயம் எப்ப தான் போகுமோ.. அசிஸ்ட்டன்ட்டுன்னு வந்து ரெண்டு வருடம் ஆச்சு.. இன்னும் என் மேல இருக்குற பயம் போகல” கடுப்படித்தவன்,

“இண்டெர்வியூவ மேனேஜர்ஸ் பார்த்துக்க சொல்லிட்டு நீ வா. கொட்டேஷன் ரெடி பண்ணனும்” என்றான்.

“சார்.. அது இங்க நான் இருக்கணுமே” என்றாள் தயங்கி.

“அதெல்லாம் அவங்க பார்த்துக்கட்டும். இல்லன்னா பிஏவை அனுப்பி விடு. நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டான் அவன்.

--

அவன்... அவன் தான் நம்ம தீத்திரள் தீரன். பூரண ஆரோக்கியத்துடன் இதோ நம் கண் முன் நடமாடிக் கொண்டு இருக்கிறான்.

அவளை இழுத்துச் செல்லாத குறையாக அழைத்துக் கொண்டு வந்தவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

அவனது முறைப்பில் இவளுக்கு அடி நெஞ்சில் பயம் பிடித்துக் கொள்ள, “என்ன ஆச்சு சார்.. ஏன் முறைக்கிறீங்க?” கேட்க முடியாமல்,

“சார்..” என்றாள் தயக்கமாக.

“இடியட்” என்று கத்தினான் கோவமாக.

“சார்..” விக்கித்துப் போனாள் அதிரல்.

“உன் போனுக்கு எத்தனை முறை கூப்பிடுறது.. அப்படி யார் கிட்ட கடலை வறுத்துக் கிட்டு இருந்த. ஆபிஸ் நேரம் போன் யூஸ் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா.. உன்னை அழைக்க நானே வரணுமா? என் உயரம் என்னன்னு தெரியுமா? என்னவோ உன் பியே மாதிரி என் கிட்ட பிகேவ் பண்ண சீட்டி கிழிச்சு கையில குடுத்துடுவேன்” ஆடி தீர்த்தான்.

சரியாக அவளின் தங்கை அழைக்கும் பொழுது இவன் அழைத்து இருந்தான். பொறுமையே இல்லாமல் விடாமல் மூன்று முறை அழைத்து பார்த்து விட்டு இவனே தேடி போய் விட்டான்.

பியேவை விட்டு அழைத்து இருக்கணும், இல்லை என்றால் ஆபிஸ் பாயை விட்டு அழைத்து இருக்கணும். அப்படியும் இல்லையா அந்த கூடத்தில் இருக்கும் போனுக்கு அழைத்து இவளை வரச் செய்து இருக்கணும். அதை எல்லாம் விட்டுட்டு இவனே நேரில் போய் அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டு இப்போ காச்சு மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கான்.

இதை அதிரலால் அவனிடம் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவன் பாஸ் ஆகிற்றே.. எங்கிருந்து வாயை திறப்பது. கம் போட்டு வாயை மூடிக் கொண்டாள் அதிரல்.

“இன்னொரு முறை நான் கூப்பிடுற அளவுக்கு வச்சுக்கிட்ட என்னோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியது வரும். காட்இட்” கர்ஜித்தவன்,

“நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி விசயமா டெண்டர் போயிட்டு இருக்கு. சோ கொட்டேஷன் ரெடி பண்ணு” என்றான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நம்ம டெண்டருக்கு நாமலே கொட்டேஷன் ரெடி பண்ணனுமா? புரியலையே” திகைத்து நின்றாள்.

அவள் அப்படி விழித்து நின்றதை பார்த்த தீரனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ..

“ஏய்.. இந்த ரெண்டு வருடமா இந்த கம்பெனியல என்னத்தை குப்பை கொட்டுன.. அடிப்படியே தெரியாம உன்னை எல்லாம் எவன் வேலைக்கு எடுத்தது.. எங்க இந்த பிரான்ச் சிஈஓ.. அவனை கூப்பிடு” கண்கள் சிவக்க கத்டியவனை கண்டு இன்னும் பயந்துப் போனவள் வேகமாய் வெளியே ஓடி சிஈஓவை அழைக்கப் போக,

“இந்த எஸ்கேப் ஆகுற வேலையெல்லாம் இங்க வேணாம். ஒழுங்கா கால் பண்ணி கூப்பிடு” மேசையை தட்டினான் தீரன்.

அடித்துப் பிடித்துக் கொண்டு கால் பண்ணினாள்.

அடுத்த சில நிமிடங்களிலே இந்த ஊட்டி பிரான்சுக்கான சிஈஓ விஜயன் தீரனின் முன்பு வந்து நின்றான்.

“குட்மார்னிங் சார்” என்று அவன் வணக்கம் வைக்க,

அவனது வணக்கத்தை கண்டு கொள்ளாமல், “மிஸ்டர் விஜயன் இந்த லேடியை அப்பாயின்ட்மென்ட் பண்ணது யாரு?” அதிரடியாக கேட்டான்.

“சார்.. அ...து நான் தான் சார்” அவனது காரணமறியா கோவத்தில் தடுமாறி பதில் சொன்னான்.

“திறமை இருக்கா இல்லையான்னு கொஞ்சமும் செக் பண்ண மாட்டீங்களா? இப்படி தான் தத்தி மாதிரி ஸ்டாபை செலெக்ட் பண்ணுவீங்களா? கொஞ்சம் கூட நாலேட்ஜே இல்லாம எப்படி உங்களால ஒரு ப்ரோபோஷனுக்கு ஸ்டாபை செலக்ட் பண்ண முடியுது” தீரன் கேட்க, அதிரலுக்கு விழிகளில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

அவள் திறமையான ஆள் தான். ஆனால் அவனின் வேகத்துக்கும் அவனின் சாதூரியத்துக்கும் அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை.

வருடத்தில் நான்கு முறை மட்டுமே இந்த ஊட்டி பிரான்ச்க்கு வருகை தருவான் தீத்திரள் தீரன். அப்படி வரும் பொழுது எல்லாம் அவனின் உதவியாளராக இவளை தான் அவன் செலக்ட் பண்ணுவான்.

ஆனால் இவளின் உண்மையான வேலையோ சிஈஓ வான விஜயனுக்கு தான் இவள் பிஏ. ஒரு சின்ன பிரான்ஞ்சின் சிஈஓவின் பிஏவாக இருப்பவளை, மல்டி இன்டர்நேஷனல் கம்பெனியின் ஒரே ஓனருக்கு ஒரு வாரம் மட்டும் பிஏவாக இருக்க சொன்னாள் அவளால் எப்படி இயலும்.

அவனின் செயல்பாடுகளை பற்றி இவளுக்கு ஒன்றுமே தெரியாது. அவனை பற்றியும் எதுவும் தெரியாது. அவனின் எண்ணப்போக்கு பற்றியும் எதுவும் தெரியாது. அப்படி இருக்கையில் அவளிடம் மொட்டையாக கொட்டேஷனை ரெடி பண்ணு அதுவும் அவன் டெண்டர் விடும் கம்பெனிக்கே கொட்டேஷன் ரெடி பண்ணு என்றால் அவள் முழிக்காமல் என்ன செய்வாள்.

ஏதாவது விவரம் சொல்லி செய்ய சொன்னால் செய்து இருப்பாள். இவன் எதையும் சொல்லாமல் ரெடி பண்ணுன்னா திகைத்து போய் கேள்வி கேட்கத் தான் செய்வாள்.

அதை பெரிய குற்றமாக கருதி அவளை திறமை அற்றவள் என்று குற்றம் சுமத்திக் கொண்டு இருப்பவனின் பேச்சில் காயம் பட்டுப் போனாள் அதிரல்.

“என்ன சிபாரிசுல சேர்த்துக்கிட்டீங்களா?” நக்கலாக கேட்டவனின் பேச்சில் அதிரலுக்கு பெரும் அவமானமாக போனது. லேசாக கண்களும் கலங்கியது.

“அப்படி எல்லாம் இல்ல சார்.. அவங்க டேலன்ட்டை வச்சு தான் இந்த ஜாப் ஆபர் பண்ணேன்” என்றான் விஜயன்.

“பார்த்தா அப்படி தெரியல விஜி..” சொன்னவன்,

“ஆமா பர்மனேன்ட் போட்டாச்சா?” புருவம் சுருக்கி அவளின் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்தான் தீரன்.

அவன் தன்னை பார்க்கிறான் என்ற உடனே முகத்தை இன்னும் தாழ்த்திக் கொண்டாள் அதிரல்.

“ஆமாங்க சார்” அதை கேட்டு பல்லைக் கடித்த தீரன்,

“முதல்ல ட்ரைனிங்க்கு மாத்து.. அங்க ஒழுங்கா பெர்பாம் பண்ண பிறகு பெர்மநென்ட்க்கு மாத்து” சொன்னவனின் பேச்சில் அதிர்ந்துப் போனாள் அதிரல்.

“சார்” என்று விஜயனும் அதிர்ந்துப் போனான்.

“டூ வாட் ஐ சே” சொன்னவன்,

“கொட்டேஷன் ரெடி பண்ண தெரியுமா இல்ல.. அதுக்கும் ட்ரைனிங் எடுத்துட்டு வந்து தான் செய்வியா?” நக்கலாக கேட்ட தீரனுக்கு தலையை மட்டும் ஆட்டினாள் அதிரல்.

“ஏய்.. உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” மிரட்டலான குரலில் அவன் அதட்ட,

அவனின் குரலில் தூக்கிவாரிப் போட, “தெரியும் சார்” என்றாள் பட்டென்று.

Loading spinner

Quote
Topic starter Posted : September 14, 2026 9:30 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top