Notifications
Clear all

அத்தியாயம் 80

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இந்த தொல்லைக்கு முழுசா எடுத்துக்கலாம்” என்றாள்.

“போடி உனக்கு என் பீலிங்க்ஸ் புரியல” பெருமூச்சு விட்டு தன் கோவத்தை அவளின் வயிற்றில் கடித்து வைத்து வெளிப்படுத்தியவன் அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

அதற்குள் ரேவதி குடும்பமும் வந்து விட்டது.

அனைவருடனும் அமர்ந்து உண்டு விட்டு கதிரவனை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்தாள்.

காமாட்சி விசாலம் மங்கை கலா நால்வரையும் அமரவைத்து இவள் பரிமாறினாள். அதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த தாத்தாவுக்கு பெரும் குற்ற உணர்வாய் போனது.

யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு என் கொள்ளுப் பேத்தியை நானே கை விட்டுட்டானே.. என்று கலங்கிப் போனார். அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து அவளை கண்களால் நிரப்பிக் கொள்வார் மெய்யப்பன்.

அன்று மாலை கிளம்பி இருக்க சொன்னவன் மாலை முற்றிய பிறகே வந்து சேர்ந்தான் வீட்டுக்கு.

“அய்யா பாப்பாவை கிளம்பி இருக்க சொன்னீரு.. வரவே இல்லை” என்று கேட்ட பாட்டிக்கு ஒரு அவஸ்த்தையான சிரிப்பை கொடுத்தவன்,

“இல்ல ப்ரோக்ராம் கேன்சல் பாட்டி.. அடுத்த வாரம் வரோம்னு சொல்லிட்டேன்” என்றான்.

“அப்படியா எதுவும் வேலையா அய்யா”

“ம்ம்” என்று மட்டும் முணகியவன் கூடத்தில் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, சிங்காரம் சேகரனை பார்த்து வரவேற்பாய் தலை அசைத்து விட்டு மேலே போய் விட்டான். கீழே தான் பனியும் கிளம்பி அமர்ந்து இருந்தாள். ஆனால் அவளை அவன் நிமிர்ந்தே பார்க்கவில்லை.

“என்ன ஆச்சு இவருக்கு.. ஒரு நாளும் இப்படி இருக்க மாட்டாரே.. எப்பவும் என்னை தேடிட்டு பார்த்துட்டு தான் போவாரு. இன்னைக்கு நான் இங்க இருப்பதையே பார்க்காம போறாரு..” காமாட்சியிடம் புகார் சொன்னவள்,

“இருங்க அம்மாச்சி உங்க பையனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. நான் போய் தேநீர் குடுத்துட்டு என்னன்னு விசாரிச்சுட்டு வரேன்” என்றவள் தேநீரோடு மாடி ஏறினாள்.

“நீ பொறுமையாவே வா கண்ணு.. தம்பிக்கிட்ட சண்டை போடாதா” காமாட்சி சொல்ல,

“என்னை பார்த்தா சண்டை போடுறவ மாதிரி இருக்கா?” இடுப்பில் கை வைத்து அவரை முறைத்துப் பார்த்தாள்.

“இதுக்கு முன்னாடி தெரியல.. ஆனா இப்போ தெரியுது பனி” நக்கலாக சொன்ன மகாவை முறைத்துப் பார்த்தவள்,

“இருடி உன்னை வந்து வச்சுக்குறேன்” என்றுவிட்டு மேலே படி ஏற,

“அதுக்கு முன்னாடி நான் தூங்கிடுவேன்டி” என்று இவள் வம்பிழுக்க,

“ச்சீ போடி” என்று சிவந்துப் போனவள் மேலே ஏற, மகா சிரிப்புடன் தனக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் பேச ஆரம்பித்தாள்.

மங்கை இரு பெண்களும் சிநேகிதமாக இருப்பதை பார்த்துக் கொண்டார். தன் மகளுக்கு நா துணைக்கு ஆள் இருக்கு எண்ணிக் கொண்டார்.

காமாட்சியும் கலாவும் மட்டும் அடுப்பையில் இரவு உணவுக்கு தயார் செய்துக் கொண்டு இருந்தார்கள். ரேவதி கூடத்தில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டு இருக்க, மங்கை அவருடன் இணைந்துக் கொண்டார். இது எப்பவும் நடக்கும் வழக்கம் தானே.. விசாலம் மருமகள்களுக்கு உதவி செய்துக் கொண்டே மகள் பேத்தியிடம் பேசிக் கொண்டு இருந்தார்.

இங்கே மேலே வந்த பனி கதவை சாற்றி விட்டு கணவனை தேடினாள்.

“மாமா” என்று அவள் சத்தம் குடுக்க,

“குளிக்கிறேன்” என்றான் ஒற்றை சொல்லாக.

“ஓ...” என்றவள் டீயை மேசை மீது வைத்து விட்டு உப்பரிகை பக்கம் போய் நின்றாள்.

“என்ன ஆச்சு இவருக்கு.. ஏன் என்னை பார்க்காம போனாரு.. என்னவோ மாமா கிட்ட சரி இல்ல..” என்றவள் ஆசையாக கிளம்பி இருந்தாள் வெளியே போகலாம் என்று.

குனிந்து தான் கட்டி இருந்த புடவையை பார்த்தாள். அடர் சிவப்பு நிற தங்க சரி இட்ட சாப்ட் சில்க் சேரி, இல்லன்னா விலை அதிகம் உள்ள ஜார்ஜெட் சாரி என எது வேணுமானாலும் சொல்லலாம். ஏனெனில் அத்தனை மெலிதாக உடம்பில் இருப்பதே தெரியவில்லை அந்த புடவை. அவளின் நீண்ட தலை முடியை காமாட்சி தான் தளர்வாக பின்னி பிச்சி பூ சரமாக வைத்து விட்டார்.

வார்ட்ரோபில் இந்த புடவை மட்டும் தனியாக இருந்தது.. அதோடு அதில் மேட்ச்சிங் ப்ளவுஸ், மேட்சிங் நகைகள் என எல்லமே இருந்தது.

கதிரவன் பக்கம் தான் என்று சொன்னதால் இது போதும் என்று கட்டி இருந்தாள். ஆனால் கட்டின பிறகு தான் புடவையின் தரமே புரிந்தது..

“வாவ்வ்...” என்று சொல்லிக் கொண்டே மடிப்பெடுத்து அம்சமாக கட்டியவள், இரவிக்கை அதை விட அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது. குட்டி கை வைத்து, முதுகில் கயிறு வைத்து, கொஞ்சம் இறக்கமாகவே இருந்தது.

இவளுக்கு அத்தனை அம்சமாக இருந்தது இரவிக்கையும் புடவையும்.. காதில் வைர ஜிமிக்கி, அதுக்கு அழகான மாட்டால், கழுத்தில் அதே வகையில் இருந்த வைர நெக்லஸ் மட்டும் அணிந்து, கதிரவன் கட்டிய தாலி கயிறுடன் இருந்தாள். அதை தாண்டி வேறு எதையும் போட்டுக் கொள்ள தோன்றவில்லை. கையிலும் அதே போல வைர வளையலுடன் சிவப்பு கண்ணாடி வளையல்களை அணிந்துக் கொண்டு,

உதட்டுக்கு கொஞ்சம் லிப்ஸ்டிக்கும் கண்ணுக்கு மையும் இட்டுக் கொண்டு கிளம்பியவள் அவனுக்கு ஒரு ஸ்நாப் எடுத்து அனுப்பி விட்டு கீழே வந்து விட்டாள்.

அதை பார்த்தான். ஆனால் ஒரு கமென்ட் கூட அனுப்பவில்லை. இதோ வேலை முடிந்து திருப்பி வந்த பிறகும் அவளிடம் எதுவும் பேசவில்லை. முதல் முறை அவனது ஒதுக்கம் அடி நெஞ்சை என்னவோ செய்தது.

பெரியதாக எதுவும் பேசவில்லை என்றாலும் சின்னதாய் ஒரு புன்னகை மட்டும் அவளிடம் சிந்தி இருக்கலாம்.. ஏனோ முன் மாலையில் கட்டிய புடவை அத்தனை பாரமாய் போனது பனிக்கு.

“எதை போட்டு குழப்பிட்டு இருக்காரு இவரு..” என்று இவள் குழம்பிப் போனாள். சிறிது நேரம் அப்படியே நின்று இருந்தவளின் காதில் குளியல் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

சரி தன்னை தேடி வருவான் என்று அப்படியே நின்று இருந்தாள். ஆனால் அவன் வரவே இல்லை. நேரம் தான் சென்றதே தவிர அவன் தன்னை அழைக்கவே போவது இல்லை என்று உணர்ந்தவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. விழிகளில் கண்ணீர் முட்டி விட்டது.

கதிரவனின் முதல் முதல் ஒதுக்கம் பெண்ணவளை பெரிதும் துவண்டுப் போக வைத்தது. ஏனோ அறைக்குள்ளே அவளால் போக முடியவில்லை. கனமாய் கனத்துப் போன கால்களை எடுத்து வைப்பதற்குள் அத்தனை தடுமாற்றம் வந்தது.

ஆனால் அவனிடம் என்ன ஏது என்று கேட்டு விடலாம் என்று உள்ளே வந்தாள். அவள் வந்த அரவம் கேட்டும் கதிரவன் திரும்பவில்லை. கண்ணாடி பார்த்து தலையை வாரியவன், இடுப்பில் வேட்டியை இறுக்கிக் கட்டினான்.

பரந்து விரிந்த அவனது முதுகை பார்த்தவள் சற்று எட்டி கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தை பார்த்தாள். அவனின் முகத்தில் கொஞ்சமும் இளக்கம் இல்லை..

“என்னங்க” என்றாள்.

“ம்ம்”

“டீ ஊத்தி தரவா?” ஏனோ அவனிடம் ஏன் என்னை பார்க்காம வந்தீங்கன்னு கேட்க முடியல.. ஏதோ ஒன்று தடுத்தது.

“ம்ம்” என்றான்.

மனம் நொந்துப் போய் அவனுக்கு டீ போட்டு குடுத்து விட்டு கீழே போய் விட்டாள். போகும் அவளின் முதுகை ஒரு கணம் திரும்பி பார்த்தவன் தலையை உலுக்கிக் கொண்டு டீயை குடித்து விட்டு மொட்டை மாடிக்கு போய் விட்டான்.

அவன் கீழே வராததில் இன்னும் நொந்துப் போனவளுக்கு இரவு உணவு கொஞ்சமும் இறங்கவில்லை. கதிரவனும் ஒழுங்காக சாப்பிடாதது போல இருந்தது.

பெருமூச்சுடன் மேலே போய் விட்டாள். கதிரவன் வருவதற்குள் தூங்கிப் போய் விட வேண்டும் என்று படுத்து விட்டாள்.

இருவரின் முகமும் ஒரு மாதிரி இருப்பதை பார்த்த காமாட்சிக்கும் வருத்தமாய் போனது. எப்பொழுதும் கலகலவென்று பேசுபவள் இன்று மிகவும் அமைதியாக இருப்பதை பார்த்த எல்லோருக்குமே எதையோ மிஸ் பண்ணுவது போல இருந்தது.

சாப்பிட்ட உடன் சேகரன், தேவன், பொன்னன், மெய்யப்பன் மற்றும் சிங்காரம் எல்லோருடனும் அமர்ந்து இருந்தவன் பின் நேரம் ஆவதை உணர்ந்து மேலே வந்தான்.

அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவன் ஏசியை ஆன் செய்து விட்டு வந்து படுத்தான். பனி போர்வையை இழுத்துப் போர்த்திப் படுத்து இருந்தாள். ஆனால் தூக்கம் தான் வரவில்லை. விழியோரம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அதுவும் கதிரவன் வந்த பிறகும் தன்னை எழுப்பவில்லை, தன்னை தேடாதது எல்லாம் சேர்ந்து அவளை அழுகையில் தள்ளியது. சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள். கதிரவனின் ஒதுக்கம் தன்னை இந்த அளவு பாதிக்கும் என்று முதல் முறை தெரிந்துக் கொண்டாள் பனி நிலவு.

எல்லாம் ஒரு கணம் தான். போர்த்தி இருந்த போர்வையை உருவி தூர எறிந்தவன், புயலாய் அவளை சுழற்றி தன்னருகில் கொண்டு வந்தவன் விழிகள் சிவக்க அவளை பார்த்தான் கதிரவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 5, 2026 6:02 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top