Notifications
Clear all

அத்தியாயம் 81

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவனது சிவந்துப் போன கோவப் பார்வையில் விக்கித்துப் போனாள் பனிநிலவு. அவளின் விழியோரம் வழிந்த கண்ணீரை பார்த்த கதிரவன் அவளை அழுத்தமாக முறைத்தான்.

அவனது பார்வையில் முகத்தை குனிந்துக் கொண்டவள்,

“விடுங்க என்னை” என்றாள். குரல் நமநமத்துப் போய் வந்தது. கதிரவன் எதுவும் பேசவில்லை. அவளை விடவும் இல்லை.

“உங்ககிட்ட தான் சொல்றேன்.. என்னை விடுங்கன்னு.. காது கேட்குமா கேட்காதா?” கொஞ்சம் குரல் உயர்த்தி சொன்னவள் அவனின் பிடியில் இருந்து வெளியே முயன்றாள்.

ம்ஹும்.. கதிரவன் அவளை விடவே இல்லை.

“ப்ச் விட முடியுமா முடியாதா?” இருக்க இருக்க அவளுக்கு கோவமும் ஆதங்கமும் முகிழ்த்தது.

அப்பொழுதும் அவன் விடாமல் அவளை பிடித்து இருக்க,

“உங்களை விடுங்கன்னு சொன்னேன்.. உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. நீங்க வச்ச ஆளா நானு... எனக்கும் ஒரு மனசு இருக்கு.. எனக்கும் கோவப்பட தெரியும். எனக்கும் உங்களை ஒதுக்கி வைக்க தெரியு...” முடிக்கும் முன்பே அவளின் இதழ்களை அத்தனை அலுத்தமாக கவ்வி இருந்தான் கதிரவன்.

“ஹாங்” என்று அவள் பிதுங்கிப் போய் பார்க்க, மிக மிக வன்னமையாக அதே சமயம் இரசனையுடன் அவளின் இதழ்களை கொய்தவன் அதன் பிறகு அவளை அத்தனை வேகத்துடன் புயலாய் ஆக்கிரமித்தான். அவளை நிதானிக்க கூட விடவில்லை.

“ஹைய்யோ என்ன பண்றீங்க? நோ..”

“ம்ஹும்..”

“ஐயோ ப்ளீஸ்” பெண்ணவளின் முணங்கல் சத்தமும், மோகனமான சத்தம் மட்டுமே அந்த அறையில் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

அதற்கு இசை சேர்ப்பது போல அவளின் கொலுசொலியும் வளையலோளியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தன..

“ம்மா..” என்று தவித்து திணறிப் போனவளை கொஞ்சமும் இறக்கம் காட்டாமல் வதைத்து எடுத்தான் கதிரவன்.

இதுநாள் வரை அழுத்திப் பார்த்தாலே எங்கே உடைந்து போய் விடுவாளோ என்று மிதமான பார்வையோடு நிறுத்திக் கொண்டவன், இன்று முற்றிலும் அவளை வேரோடு சாய்த்து இருந்தான்.

கதிரவனிடம் இருந்து இப்படி ஒரு அதிரடியையும் வேகத்தையும் எதிர் பார்த்து இராதவளுக்கு அவனின் வேகமும் அதிரடியும் மிரட்சியை கொடுத்தது. வேகமாய் அவனுக்கு முதுகு காட்டி விலகியவளை புரட்டி போட்டு அவளின் மீது முற்றும் முழுதுமாக கவிழ்ந்துக் கொண்டவன், இரவு முழுவதும் அவளை விடவே இல்லை.

அவனின் அத்துமீறலில் அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் ஒருங்கே பறந்தது. அதுவும் அவனது மீசையும் இதழ்களும் பார்வையும் பெண்ணவளுக்குள் ஆயிரம் பூகம்பங்களை ஏற்படுத்த பெரிதும் தகித்துப் போனாள். அதோடு அவன் ஆராய்ச்சி செய்கிறேன் என்று அவள் மேனி மீது தன் கைகளை கொண்டு ஆராய ஆரம்பிக்க, இதுவரை திறக்காத பல கதவுகள் அவளுள் திறந்துக் கொண்டன..

கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டு தன் தேகத்தை அவனுக்கு கொடுத்து விட்டு அவள் படுத்து இருக்க, பட்டென்று அவள் மீது இருந்து விலகிப் படுத்துக் கொண்டான்.

தன் மீது இருந்த பாரம் நொடியில் விலக, வேகமாய் கண்களை திறந்து பாக்கவாட்டில் படுத்து இருந்தவனை பார்த்தவளுக்கு அத்தனை கோவம் வர,

விலகி இருந்த மாராப்பை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள் அவன் மீது ஏறி படுத்து அவனின் நெஞ்சில் அடி அடி என்று அடித்தாள்.

அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.

“ஹலோ இங்க கோவமா இருக்க வேண்டீயது நான்.. ஆனா நீங்க என்னவோ கோவமா இருக்க மாதிரி சீன போடுறீங்க.. உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..” கோவத்துடன் கேட்டவள்,

“நானும் இன்னைக்கு வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன்.. என்னவோ என்னை ஒதுக்குற மாதிரி நடந்துக்குறீங்க.. நானும் சரி என்னவோ டென்ஷன் போலன்னு விட்டா நீங்க என்னை ரொம்ப டென்ஷன் பண்ணி பார்க்குறீங்க.. அப்படி எப்படி நீங்க என்னை ஒதுக்கி வைக்கலாம்.. அப்போ நீங்க வேற நான் வேறன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா. உங்களை நம்பி கல்யாணம் பண்ணேன் இல்லையா எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். என்னை இப்படி ஒதுக்கி வைக்கிறதுக்கு எதுக்காக கல்யாணம் பண்ணீங்க. இனி இன்னொரு முறை என்னை இப்படி ஒதுக்கி வச்சு பாருங்க மண்டையில ஒரு முடி கூட இருக்காது.. நானே என் கையாள வலிக்க வலிக்க புடுங்கிடுறேன்” படபடவென்று பட்டாசாய் பொரிந்தவளை ஒரு கணம் அமைதியாக பார்த்தவன் அடுத்த நிமிடம்,

“இதை இதை தான்டி உன் கிட்ட நான் வந்ததுல இருந்து எதிர் பார்த்துட்டு இருந்தேன். நான் உன்னை கண்டுக்காம போனா நீயும் என்னை விட்டு தள்ளி போவியா? சொல்லுடி... ஓ... ன்னு ஒப்பாரி வைக்கிற..” என்று கோவமாக கேட்டவன் அவளின் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தான்.

“என்கிட்டே வந்து என்ன எதுன்னு கேட்க மாட்டியா? பெரிய இவளாட்டம் தள்ளி போற, தள்ளி படுத்துக்குற” கேட்டவன் அவளை புரட்டி கீழே தள்ளி அவள் மீது அழுத்தமாக பரவி படர்ந்தவன்.

அவனின் ஆதங்கத்தில் இவளுக்கும் கோவம் வர,

“ஆசையா புடவை கட்டி நல்லா இருக்கேன்னு போட்டோ அனுப்புனா கண்டுக்கவே இல்லை.. ஒரு ரிப்ளை கூட குடுக்கல.. எனக்கு எப்படி இருந்து இருக்கும்”

“உன்னை யாருடி இந்த புடவையை கட்ட சொன்னா?”

“ஏன் கட்டுனதுனால என்ன குறைஞ்சு போச்சாம்.. எனக்கு நல்லா தானே இருக்கு” முறைத்தாள்.

“நான் இதை எதுக்காக வச்சு இருந்தேன் தெரியுமாடி” பல்லைக் கடித்துக் கேட்டான்.

“எதுக்காக?” என்று அசட்டையாக அவள் கேட்க, தன் கனவுகளை பாழ் பண்ணியவளை கொலை வெறியுடன் பார்த்தவன் அதுவும் அவளின் அசட்டையில் அத்தனை கோவம் வந்தது.

“இதை நம்ம முதல் கூடலுக்காக வச்சு இருந்தேன்”

“அதனால இப்ப என்ன கெட்டு போச்சாம்?” என்று கேட்டவளை அடக்கப்பட்ட கோவத்துடன் பார்த்தவன்,

“என்ன கெட்டு போச்சா? இந்த புடவையை கட்டி போட்டோ எடுத்து அனுப்பி வச்சியே.. அதை பார்த்தா மனுசன் என்ன நிலைக்கு போவான் என்று யோசிச்சியாடி” ஆவேசமாக கேட்டவனை பார்த்து திகைத்துப் போனாள்.

“ஹாங்..” என்று அவள் அதிர,

“நம்ம முதல் கூடலுக்காக பார்த்து பார்த்து எடுத்து வச்சேன்டி.. அதுல இருக்க சுவல்ஸ் போட்டு உன்னை முழுசா எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. ஆனா நீ அதுக்குள்ள அந்த புடவை கட்டிட்ட..”

“அதனால என்னவாம் என்கிட்ட பேச வேண்டியது தானே.. ஒரு பார்வை கூட பார்க்கல” தன் ஆதங்கத்தை சொன்னாள்.

“உன்னை பார்த்தனா நடு கூடம்னு கூட பார்க்காம கட்டி பிடிச்சு வாயோட வாய் வச்சு முத்தம் குடுத்து இருப்பேன்.. இதோ இப்ப குடுத்த மாதிரி..” என்று சொன்னவன்,

“கொல்றடி என்னை..” சொன்னவன் அவளின் கழுத்தில் முத்தம் புதைத்து இறுக்கமாக அவளை இடையோடு கட்டிப் பிடித்துக் கொண்டு, முகத்தை அங்கும் இங்குமாய் திருப்பி, இறுதியாக அவளின் மார்பில் முகம் புதைத்தவன்,

“இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்டி” சொன்னவன் விளக்கை அனைத்து விட்டு அவளை தன் உயிரோடு ஆவி தழுவ கட்டிப் பிடித்துக் கொண்டான். அவனது அணைப்பில் அவளின் எலும்புகள் எல்லாம் உடைந்து விடும் நிலைக்குப் போனது.

Loading spinner

Quote
Topic starter Posted : August 5, 2026 6:03 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top