இது எழுதப்படாத விதி. அவன் கூடத்தில் இருந்தால் இவள் கீழே இருக்கலாம். அதே அவன் மேலே ஏறி விட்டால் இவளும் பின்னோடு கிளம்பி மேலே வந்து விட வேண்டும்.. இல்லை என்றால் கொஞ்சமும் பாரா பட்சம் பார்க்காமல் நிலா நிலா என்று ஏலம் விட்டு விடுவான்.
இதோ இப்பொழுதும் அப்படி தான்..
நிலா என்று கத்திக் கொண்டு இருந்தான்.. அவளோ அடுப்படியில் நின்றுக் கொண்டு இருந்தாள் காமட்சியோடு..
“அய்யா கூப்பிடுறாக பாரு” என்று விசாலம் சொல்ல,
“கூப்பிட்டா நீ போ கிழவி” என்றாள் வெடுக்கென்று.
“எனக்கு வயசு இருந்தா நான் இந்நேரம் ரெண்டு ரெண்டு படியா தாவி ஏறிப் போய் இருந்து இருப்பேன்டி.. எனக்கு தான் இடுப்பு செத்துப் போச்சே.. பொறவு எங்க இருந்து போறது” நொடித்துக் கொண்டார்.
“இன்னும் எத்தனை நேரம் தான் என் மருமவனை அலைய விடுவ.. ஒழுங்கா போ.. இல்லன்னா உன் அம்மாவும் அப்பாவும் வந்து கதிரவனை கத்த வச்சதுக்கு உனக்கு தான் திட்டு கிடைக்கும்” மங்கை சொல்ல,
“எல்லாரும் அவருக்கு தான் சப்போட்..” திட்டிக் கொண்டே அவள் போக, “ஆனாலும் உன் பேத்திக்கு கொழுப்பு தான்.. என் மருமவனையே ஆட்டி வைக்கிறா” என்றார் மங்கை. அவரின் நெஞ்சில் இப்பொழுது எந்த வஞ்சமும் இருக்கவில்லை. அடித்து பெய்த மழையில் கழுவி விட்ட தரை போல இருந்தது. கலாவுக்கு தான் எதுவும் ஒட்டவில்லை. இன்னும் திருந்தாமல் தான் இருக்கிறார்.
எதற்கு எடுத்தாலும் காமாட்சியோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்.
அதை யாரும் கண்டுக் கொள்ளவே இல்லை. குறிப்பாக காமாட்சி. அவரின் மூன்று பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கண்னுக்கு முன்னாடியே இருக்க, அவர்களை கவனிக்கவே இவருக்கு சரியாக இருந்தது.
ஆனால் கலாவுக்கு மகன் மகள் யாரும் கூட இருக்கவில்லை. கணவனும் வேலை வேலை என்று வெளியே போய் விட தனித்து இருந்தார். இவர்கள் கலகலப்பாக சிரித்து பேசுவது கூட அவரின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது.
சிலர் திருந்த வேண்டும். இல்லை என்றால் கடைசி வரை இந்த பொறாமையோடு தான் வாழவேண்டும். தானும் மகிழாது, மற்றவர்களையும் மகிழ விடாது செய்யும் குணம் என்ன குணமோ..
“நிலா” என்று கதிரவன் கத்த, கூடத்தில் அமர்ந்து இருந்த மெய்யப்பனும் பொன்னனும் ஒரு சேர “என்னன்னு தான் போய் பாரேன் ம்மா” என்று சொன்னார்கள்.
“இதோ போறேங்க” என்று பொதுவாக சொல்லி விட்டு அவள் போக,
“நாங்க ரெண்டு பேரும் தாத்தா தான்.. யாரோ எவரோ மாதிரி பேசுற” பொன்னன் சொல்ல,
“தாத்தான்னு கூப்பிடு” என்றார் மெய்யப்பன்.
அதில் ஒரு கணம் திகைத்தாலும்,
“சரிங்க தாத்தா’ஸ்” என்று விட்டு மாடி ஏறினாள் முகம் கொள்ள புன்னகையுடன். அவளின் சிரிப்பை பார்த்த இருவருக்கும் மனம் நிறைந்துப் போனது.
“இப்ப எதுக்கு நிலா நிலான்னு ஏலம் போட்டுட்டு இருக்கீங்க” முந்தனையை இடுப்பில் சொருகி, வியர்க்க விருவிருக்க வந்து நின்று அவனை முறைத்து பார்த்தாள்.
அவளை அப்படியே இடையோடு இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்தியவன் வெற்று இடுப்பில் கையை வைத்து அழுத்தி கசக்கி எடுத்தவன்,
“காரணம் சொல்ல முடியாதுடி” என்றவன் அவளின் கழுத்தில் தன் மீசையை உரசி இதழ்களால் கோலம் போட்டு அவளை மெல்ட் பண்ணினான். அவனின் தீண்டலில் திகைத்துப் போனவளுக்கு கால்கள் தள்ளாடியது.
அவனின் பிடரியை இருக்கப் பிடித்துக் கொண்டவளுக்கு முதுகு தண்டில் மின்னல் வெட்டிப் போனது..
“கூப்பிட்டா கூப்பிட்ட சொல்லுக்கு வர மாட்டியாடி” என்று கோவத்துடன் கேட்டவன் இதழ்களின் ஈரத்தை அவளின் நெஞ்சிலே துடைத்துக் கொண்டான்.
சற்று முன்பு தான் அவளின் தேனூறும் இதழ்களை மொத்தமாக கவ்விக் கொண்டு அவளுள் முத்துக் குளித்தான்.
அவன் வாய் துடைத்ததில் லேசாக கலைந்த மாராப்பை சரியாக நீவி விட்டுக் கொண்டவள்,
“வேலை இருந்தது மாமா.. உங்க வேலை எல்லாம் முடிச்சு வச்சுட்டு தானே கீழ போனேன்..” சொன்னாள்.
“அதுக்காக உன்னை கூப்பிடக் கூடாதுன்னு எதுவும் இருக்கா?”
“ஐயோ நான் அப்படி சொல்லல.. அம்மாச்சி பாவம் தனியா கிடந்து அல்லாடுவாங்க.. அம்மா வேற வரேன்னு சொன்னாங்க.. மத்தவங்கன்னா பரவாயில்ல.. அவங்க மூணு பேருக்கும் மத்தியம் உணவு சமைச்சி டிபன் கட்டணும்.. அதனால தான் வரல..” என்றவளை இடை வளைத்து தனக்கு நேராக நிறுத்தியவன்,
“இன்னைக்கு நாம ஒரு வீட்டுக்கு விருந்துக்கு போகணும்டி.. மாலை நேரம் கிளம்பி இரு” என்றவன் மீண்டும் அவளின் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடிக்க ஆரம்பிக்க,
“மறுபடியும் ஆரம்பிக்காதீங்க.. இப்போ தான் கசங்கிப் போன மாராப்பை நீவி விட்டேன்”
“அதனால என்ன இந்த முறை நானே நீவி விடுறேன்” என்றான்.
“எது நீங்க தானே.. நல்லா நீவி விடுவீங்க..” முறைத்தவள், அவனின் தலை முடி கலைந்து இருந்ததை தன் கையாலே கோதி விட்டவள்,
“பாருங்க நேர்த்தியா கிளம்புனீங்க.. நானே கை வச்சு கலைச்சுட்டேன்” என்று அவனின் கைப்பிடியில் இருந்தவாரே எட்டி சீப்பை எடுத்து அவனுக்கு தலை சீவி விட்டாள்.
அவளின் உயரத்துக்கு அவன் குனிய,
“இணங்க உட்காருங்க” என்று படுக்கையில் அமரவைத்து அவள் சீவி விட, அவளின் இடை சேலை விலகி அவளின் இடுப்பும், வயிறும் கதிரவனுக்கு காட்சியாக, அவளின் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
“ஹைய்யோ என்ன பண்றீங்க மாமா” அவள் தான் தடுமாறிப் போனாள். மீசை கொண்டு அவளை வதம் செய்ய மீனாய் துள்ளினாள். துடித்து விலகிப் போனவளை இரண்டு கையாளும் இறுக்கிப் பிடித்து தன் முகத்தை அங்கும் இங்குமாய் அலையவ விட்டு அவளின் இடையை கசக்கிப் பிடித்து துடியாய் துடிக்க விட்டான்.
“ம்மா...” என்று அலறியவளை மேலும் துடிக்க வைத்தவன், தன் மூச்சுக் காற்றை கொண்டு அவளின் வயிற்றில் ஊதி விட்டு இன்னும் சிவக்க வைத்தவனின் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
இன்னும் அவர்களுக்குள் முழுமையான கூடல் நடக்கவில்லை. இவளும் கேட்டு கேட்டு சலித்துப் போனாள்.
“சரி எக்கேடோ கெட்டு போங்க.. எனக்கா நட்டம்.. உங்களுக்கு தானே..” என்று இவளும் அதை விட்டு விட்டாள். அதை அவ்வபொழுது கோவமாக வெளிப்படுத்தவும் செய்தாள். அதை தான் விசாலாட்சி பார்த்து விட்டு செல்ல சண்டை போடுவார்.
“நேரமாகுது மாமா” என்று நிற்க முடியாமல் அவள் சொல்ல,
“ம்ம்” என்றானே தவிர அவளை விட்டு அவனால் நகர முடியவில்லை.
“இந்த தொல்லைக்கு முழுசா எடுத்துக்கலாம்” என்றாள்.
“போடி உனக்கு என் பீலிங்க்ஸ் புரியல” பெருமூச்சு விட்டு தன் கோவத்தை அவளின் வயிற்றில் கடித்து வைத்து வெளிப்படுத்தியவன் அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.





