எப்லாக்

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஆசை தோசை.. விசாலம் பாட்டி விட மாட்டாங்க.. உங்க மக நடை பழகுற வரைக்கும் நான் வீட்டுல தான்” என்று சிரித்தாள்.

“ரொம்ப படுத்துறடி.. என் கூட கல்யாணம் ஆன புதுசுல ஆபிஸ்க்கு வந்த.. அதுக்கு பிறகு வாந்தி, மயக்கம், பிள்ளை பேருன்னு ரிப்பீட் மோட்லையே போயிட்டு இருக்க” 

“அதுக்கு நீங்க சும்மா இருந்து இருக்கணும். அதை விட்டுட்டு நிலா நிலா கண்ணம்மா கண்ணம்மான்னு என் முந்தானையை பிடிச்சுக்கிட்டே அலைஞ்சா நான் என்ன பண்றதாம்” சிரித்த பனிநிலாவுக்கு வாழ்க்கை அத்தனை ஆனந்தமாக அமைந்துப் போனது.

அமைத்துக் கொடுத்தான் கதிரவன் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. ஊரே மெச்சும் அளவு, கண்ணு போடும் அளவுக்கு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.

ரேவதி தன் வேலையை விட்டுட்டு விட்டு பேரன்களோடும் பேத்தியோடும் செட்டில் ஆகி விட்டார். சேகரன் அதற்கு உதவியாக இருந்தார்.

விசாலம் காமாட்சி இருவரையும் கையில் பிடிக்க முடியவில்லை. நண்டும் சிண்டுமாக அவர்கள் மூவரின் முந்தனையையும் பிடித்துக் கொண்டு பிள்ளைகள் அலைய, அவர்களை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கதை சொல்லி, சோறு ஊட்டி, சமையல் செய்து என ஒரே அலப்பறை தான்.

எள்ளு தாத்தாவிடம் போய் சமத்தாக அமர்ந்து திருவாசகம் கேட்டு விட்டு, கொள்ளு தாத்தாவிடம் போய் கதை பேசி விட்டு, சேகரன் தாத்தாவிடம் போய் லூட்டி அடித்துக் கொண்டு வரவே அவர்களுக்கு பொழுது சரியாக இருக்கும்.

பிள்ளைகள் நால்வரும் கால்களுக்குள் புகுந்து சந்து பொந்துகளில் ஒளிந்துக் கொண்டு மடியில் தொப்பென்று விழுவதும், நெஞ்சில் பட்டென்று சாய்ந்துவிட்டு ஓடுவதும் விளையாடுவதுமாகவே தான் இருந்தார்கள்.

துளசியும் பிள்ளைகளை காண ஓடி வந்து விடுவாள் தன் பிள்ளைக்களை இருவரையும் கூட்டிக்கொண்டு. கலாவும் தன் மகனை குடும்பத்தோடு இங்கே வர சொல்லி சொல்ல அவனோ வரவே இல்லை. மகளுக்கு நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார். அவள் அதற்கு மேல் நல்ல நாள் பெரிய நாள் திருவிழா எதற்கும் வருவதே இல்லை. அப்படியே வந்தாலும் உடனடியாக கிளம்பி விடுவாள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு.

பெரும் கவலை ஆட்கொண்டது. அதற்கு நிவாரணம் குடுக்க இந்த பிள்ளைகள் இருக்க, அவரும் காலப்போக்கில் மாறி விட்டார். கலாவும் மங்கையுமே இப்பொழுது எல்லாம் எந்த விகழ்ப்பமும் பார்ப்பது இல்லை. கதிரவன் அன்று போலவே இன்றும் யாரையும் எங்கயும் கை விடவே இல்லை.

அதை தன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்தே வளர்த்தான். எனவே பிள்ளைகளும் யாரிடமும் எந்த பாராபட்ச்சமும் பார்க்க மாட்டார்கள். தேவன் பிள்ளைகளை வயலுக்கு கூட்டி சென்று நீச்சல் எல்லாம் கற்றுக் கொடுத்து அவரின் பொழுதுகள் இதமாகவே சென்றது.

கதிரவனின் மகளுக்கு குலதெய்வ கோயிலில் சித்து மடியில் வைத்து மொட்டை அடித்து காது குத்தி பெரிய விழாவாக எடுத்து கொண்டாடி முடித்து அனைவரும் வீடு திரும்ப, விசாலம் தன் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் பூசணிக்காய் சுற்றி கண்ணேறு கழித்துப் போட்டார்.

காது குத்தவும் பிள்ளை அழுதுக் கொண்டே இருக்க, பெரியவர்களில் இருந்து அவளது அண்ணன் வரை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கி வைத்து விளையாட்டு கட்டி பிள்ளையின் வலியை போக்கிக் கொண்டு இருந்தார்கள். கதிரவனுக்கு முகம் வாடிப் போனது பிள்ளையின் முகத்தை பார்த்து..

“முதல்ல போய் உன் புருசனை சமாதனப் படுத்து.. பாரு கதிரவன் முகம் எப்படி இருக்குன்னு” என்று கலாவே சொல்ல திரும்பி கணவனை பார்த்தாள்.

“அவளை கூட சமாளிச்சுடுவேன் போல இவரை தான் என்னால சமம்தனம் செய்ய முடியல சாமி” என்றவள்,

“கொஞ்ச நேரம் இருங்க.. இதோ அவரை சமாதனம் செய்துட்டு பிள்ளையை தூக்கிட்டு வரேன்” என்று சொல்லி பிள்ளையை வனகிக் கொண்டு கணவனை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

“பாப்பா பாவம் இல்ல” என்றவனை முறைத்தவள்,

“காது குத்துனா அப்படி தான் இருக்கும்.. இப்ப அவ பசிக்கு அழறா..” என்றவள் உடையை கலைந்து மகளுக்கு பசியாற்ற, அவளின் பின்னுக்கு அமர்ந்து பிள்ளையின் காலை பிடித்து வருடிக் கொடுத்தான்.

“ரொம்ப வலிச்சு இருக்கும் ல..” என்றவனை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவள்,

“அவளுக்கு வலிக்கிறதோ இல்லையோ உங்களுக்கு தான் அதிகம் வலிச்சு இருக்கும்..” என்றவள், பின் சமாதானமாய், “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பாப்பாவுக்கு மறுத்து போற மறந்து தடவி விட்டு இருக்கேன்.. இப்ப பசிக்குது தான் அழறா.. நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க.. காலையில இருந்து வேலை வேலைன்னு அலைஞ்சிட்டு இருந்தீங்க” அவனுக்கு தட்டிக் கொடுக்க,

“நீயும் படுடி” என்றான்.

“பாப்பா மடியில இருக்காளே..”

“பக்கத்துல போட்டுட்டு படுடி” என்றான். தான் படுக்காமல் அவன் தூங்க மாட்டான் என்று புரிந்து, பிள்ளையை கீழே போட்டு அவளுடன் படுத்துக் கொண்ட பனியை பின்னிருந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவளின் இடையில் காலை போட்டு படுத்துக் கொண்டான்.

பின்னால் கை விட்டு அவனின் முடியை அழுத்தமாக கோதி விட்டுக் கொண்டே இருந்தாள் பனி. அவளின் அருகமையில் இருவரும் நன்றாகவே தூங்கிப் போனார்கள்.

“ப்பா அதுக்குள்ள என்ன ஆர்பாட்டம் ரெண்டு பேரும்” சலித்துக் கொண்ட பொழுதும் பனிநிலவின் மனம் மகிழ்ச்சியாகவே இருந்தது. தூங்கிக் கொண்டு இருக்கும் பிள்ளையை அம்மாச்சியிடம் கொண்டு போய் குடுத்து விட்டு, மற்ற பிள்ளைகளை பார்க்க, மூன்று தாத்தாவின் தோளிலும் தூக்கத்தில் சொக்கிக் கொண்டு இருந்தார்கள்.

பெரிய தாத்தா மட்டும் அசதியில் ஊஞ்சலில் படுத்துக் கொண்டார். மீண்டும் மேல வந்தாள். இல்லை என்றால் கதிரவன் எழுந்து விடுவானே.. அவனோடு வந்து படுத்துக் கொண்டவளை இடையோடு கைப்போட்டு அணைத்துக் கொண்டவன், “எங்கடி போன?” கேட்டு அவள் மீது காலைப்போட்டு தன்னோடு இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டான் தூக்கத்திலே.

தூக்கத்திலும் அவனுக்கு அவள் வேண்டும். அவளின் வாசம் வேண்டும்.. அவளின் அருகாமை வேண்டும்.. பனி நிலவு இல்லை என்றால் கதிரவன் இல்லை. கதிரவன் இல்லை என்றால் பனிநிலவு இல்லை..

அவர்களின் அன்பும் நேசமும் கொஞ்சமும் குறையவில்லை. முன்பை விட நிலாவின் மீது இன்னும் அதிக அன்போடு இருந்தான். நான்கு பிள்ளைகள் வந்த பிறகும் இரவு நேரம் உணவுக்கு முன்பு அவளுடன் சிறிது நேரம் மொட்டை மாடியில் அமர்வது குறையவில்லை.

அவளுக்கான அத்தனையும் வாங்கி தருவதில் சளைக்கவில்லை. அவளின் மரியாதையை எங்கும் குறைக்கவே இல்லை. இப்பொழுதும் எப்பொழுதும் அவனின் முழு தேடலுக்கு உரியவள் அவள்.

அவன் கை படும் பொருளெல்லாம் அவளாக வேண்டும் அவனுக்கு. இல்லை என்றால் டென்ஷன் ஆகி விடுவான். அபப்டி தான் ஒரு முறை தனியாக கடைக்கு சென்று வீடு திரும்ப சற்றே தாமதமாகி விட்டது.

அன்று அவன் ஆடிய ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? வீட்டுல இருந்த அத்தனை பேருக்கும் வசவு தான்.

“இத்தனை பேர் இருக்கீங்க தானே.. ஒருத்தராவது அவ கூட போயிருந்து இருக்கலாம் தானே.. அதை விட வேற என்ன வேலை உங்களுக்கு எல்லாம்..” என்று காய்ச்சி எடுத்து விட்டான்.

அன்றிலிருந்து அவளை தனியாகவே விட மாட்டான். அவள் வர தாமதமாகி இருந்த கொஞ்ச நேரத்தில் அவன் பட்டபாடு அவனுக்கு மட்டும் தான் தெரியும். நிலைக் கொள்ளாமல் அவன் நடந்துக் கொண்ட தினுசை பார்த்து மற்றவர்களுக்கு தான் முழி பிதுங்கிப் போனது.

அன்றிரவு அவளை மிக அதிகமாக என்றைக்கும் இல்லாத அளவுக்கு தேடினான். பனிக்கு தான் ஒரு கட்டத்திற்கு மேல் பயமாகிப்போனது.

“மாமா நான் இங்க தான் இருக்கேன்.. ஏன் இப்படி பிகேவ் பண்றீங்க.. ப்ளீஸ் நார்மலுக்கு வாங்க.. எனக்கு பயமா இருக்கு” என்று கெஞ்சி கொஞ்சி அவனை சமாதனம் செய்ய பார்த்தும் முடியாமல் தவித்துப் போய் அவனின் இதழ்களை வலிக்க வலிக்க கடித்து, கன்னத்தில் அறைந்து அவனை இயல்புக்கு கொண்டு வருவதற்குள் ஒரு வழியாகிப் போனாள்.

“ஏன் மாமா இப்படி இருக்கீங்க..” கண்ணீருடன் அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டவளுக்கு அவனின் அன்பில் மூச்சு திணறிப்போனாள். அன்பே கிடைக்காமல் வறண்டு போய் ஏன் வாழ்கிறோம் என்று வாழ்ந்துக் கொண்டு இருந்தவளுக்கு அவளின் வாழ்க்கை மொத்தத்துக்கும் ஒட்டுமொத்தமாய் வசந்தத்தை கொடுத்துவிட்டான் கதிரவன்.

அவனுக்கு தலைக்கோதி தூங்க வைத்தவள் கடந்துப் போன நிகழ்வை எண்ணி பெருமூச்சு விட்டாள்.

“சமத்து பிள்ளை..” கொஞ்சினாள் கணவனை.

“ம்ம்” என்றவன் தூக்கத்திலே அவளை இழுத்து தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டவன்,

“புடவை உருத்துடி” என்று சொல்லி அதை கலைத்துப் போட்டவன், அவளை படுக்கையில் சரித்து அவள் மீது பரவி படர்ந்து, தன் தேடலை தொடங்கி விட்டான்.

“மாமா மணி எட்டு” பதறிப் போனாள்.

“தட்ஸ் ஓகே.. இப்ப தான் எல்லோரும் பெரியவங்களா ஆகிட்டாங்களே.. நோ ப்ராப்ளம்.. நீ முதல்ல மாமனை கவனிடி.. இந்த நேரத்துல போய் வளவளன்னுக்கிட்டு” என்று முறைத்தவன் பெண்ணவளை வளைத்துக் கொண்டான் தன் விருப்பம் போல. அவன் இழுத்த இழுப்புக்கு வளைந்துக் கொடுத்தவள் தன்னை கொண்டாடும் ஆணவனை தானும் கொண்டாடி மகிழ்வித்தாள்.

அதில் கண்கள் சிவந்துப் போனவன், அவளை முற்றும் முழுதுமாக தன் வசம் எடுத்துக் கொண்டு அராஜகம் செய்ய ஆரம்பிக்க,

“ம்ம்மாமா” என்று அவளின் அலறல்களுக்கு கொலுசொலியும் வளையல் ஒலியும் இதமாக இன்னிசை சேர்த்தது..

இது போல மேலும் நூறாண்டு காலம் காதலும் தேடலும் காமமும் குறையாமல் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

நன்றி..!

வளமுடன் வாழ்க...!

கதை நிறைவடைந்து விட்டது தோழமைகளே..

இந்த கதைக்கும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் கருத்துக்களையும் கொடுத்த அத்தனை தோழமைகளுக்கு எனது நன்றி..

நீங்க இல்லன்னா இந்த கதை இவ்வளவு சிறப்பாக வந்து இருக்குமான்னு தெரியல..

ரொம்ப ரொம்ப நன்றி நட்பூக்களே..

Loading spinner

Quote
Topic starter Posted : August 5, 2026 6:10 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top