Notifications
Clear all

அத்தியாயம் 40

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அது தெரியல.. ஆனா உன்னை மட்டும் தான் பிடிக்கும். கல்யாணம் பண்ணி உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் பிள்ளை பிறக்கணும் ன்ற அளவுக்கு யோசிச்சு வச்சு இருக்கேன்” என்றவனை திகைத்துப் பார்த்தாள்.

“அதுக்குள்ள பிள்ளை குட்டி அளவுக்கு யோசிச்சுட்டீங்களா?” வாயை பிளந்தாள்.

“ஏன்டி நான் யோசிக்க கூடாதா? ஆக்சுவலி என் வயசுல இருக்கவனுங்க எல்லாம் பிள்ளை குட்டிய ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இருக்காங்க தெரியுமா?” கடுப்புடன் கேட்டான்.

“அதுக்கு நான் செய்யிறதாம்?” லேசாக சிரிப்பு வந்தது அவளுக்கு.

“நீ தான் செய்யணும். நீ மட்டும் தான் செய்யணும்” என்று கண்களில் லேசாக சிவப்பு ஏற சொன்னவனின் மாற்றத்தை கண்டு வாயடைத்துப் போனாள். இதுவரை அவனிடம் காணாத மாற்றம் அல்லவா இந்த மாற்றம். அவனின் பார்வையில் முன்பை விட அதிக உரிமை தென்பட்டது. அதுமாட்டுமா? இல்லையே.. உயிரை கரைத்து குடிக்கும் மோகமும் காமமும் அல்லவா தெரிகிறது.

அந்த கதிரவனா இந்த கதிரவன் என்று பேரதிர்வுடன் அவனை பார்த்தாள். திருமணம் என்றால் அடுத்த கட்டம் இது தானே.. பனிக்கு நினைக்க நினைக்க தேகம் அதிர்ந்தது.

கதிரவனை அப்படி பார்த்தது இல்லையா இதுவரை அதனால் அவளுக்குள் பெரும் தயக்கம் இருந்தது. அவளது தயக்கத்தை புரிந்தவனாய்,

“கொஞ்சம் கொஞ்சமா என்னை நெருங்கி வந்து பழகு.. ஈசியா இருக்கும்” என்றான் வெகு இலகுவாய்.

ஆனால் அதை அவளால் எப்படி அவ்வளவு எளிதாக செய்து விட முடியும்?

“என்கிட்டே பேசிட்டே இரு.. அடிக்கடி முத்தம் குடு.. கட்டி பிடி, உன் பக்கத்துலையே என்னை வாச்கிக்கோ” என்று அவன் வழி சொல்லி குடுக்க, இவளுக்கு தான் திணறியது.

“இவர் என்ன சின்ன பிள்ளையா? பக்கத்துலையே வச்சுக்க” மனதுக்குள் நொடித்துக் கொண்டாள். அவளின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை படித்துக் கொண்டே,

“இன்னும் கொஞ்சம் இன்டிமேட்டா போய் உன் முந்தானையிலயும் மாராப்புளையும் ஒளிச்சு வச்சுக்கோ.. அப்போ என்னை வேத்து ஆளா பார்க்க மாட்ட” என்றான்.

“ஹாங்” என்று இவள் தான் மலைத்து நின்றாள். “வாய் வாய்..” தனக்குள் புலம்பிக் கொண்டாள்.

அவளின் புலம்பலை இரசித்துப் பார்த்தவன் அவளை இழுத்து தன் நெஞ்சு மீது போட்டுக் கொண்டான்.

“ஐயோ என்ன பண்றீங்க?” என்று மூடி இருந்த கதவை பார்த்து நொந்துக் கொண்டாள். தாங்கள் இருவரும் பேசுவதை வேறு யாரும் கேட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் போய் கதவை சாற்றி விட்டு வந்தாள். ஆனால் சாற்றிய கதவுக்கு பின் இப்படி ஒரு பூகம்பம் கிளம்பும் என்று அவள் கொஞ்சமும் அறிந்து இருக்கவில்லை. அவள் செய்த செயல் அவளுக்கே வினையாக வந்தது.

“ப்ளீஸ் விடுங்க” முகம் சிவக்க சொன்னவளை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டவன்,

“இந்த பிறக்கு உன்னை விடுறதா இல்லடி..” என்றான் தீர்க்கமாக.

“நான் சும்மா பேச்சுக்கு தான் விடுங்கன்னு சொன்னேன்.. நிரந்தரமா ஒன்னும் விட சொல்லல”

“சொல்லி தான் பாரேன்” என்று முறைத்தான். அவனது கோவத்தில் பெண்ணவளின் மனம் குளிர்ந்துப் போனது.

“அவ்வளவு இலகுவா விடுறதுக்காகவா இவ்வளவு அரும்பாடு பட்டு உன்னை தேடி கண்டு பிடிச்சேன். உன் காலில் விழாத குறையா பின்னாடியே அலைஞ்சி உன்னை சமாதனம் செய்து, என்னை உனக்கு அறிமுகம் செய்துக் கொண்டு, இரும்பு மாதிரி இருந்த உன் மனதை மாற்றி, இதோ வீடு வரை உன்னை கொண்டு வந்து விட்டுட்டு, இப்போ திருமணத்துக்கும் சம்மதம் வாங்கி இருக்கேன்.. என் உயிர் போனாலும் உன் உயிர் இந்த வீட்டுல தான் போகணும்டி” என்றான் அழுத்தமாக. அவனது அழுத்தத்தில் அவள் மீதான உரிமையும் அன்பும் பாசமும் அவளுக்கு புரிந்தது.

அதோடு இந்த வீடு உன் வீடு என்று அவன் அடி குறிப்பிட்டு சொல்ல அவளால் எப்படி ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியும்.. பெருமூச்சு விட்டவள் ஒன்றும் சொல்லாமல் அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் தானாகவே..

“மகா மேல விருப்பம் இல்லையா?” அவனின் சட்டை பொத்தான் இரண்டு திறந்து இருக்க, அதில் தெரிந்த அவனின் நெஞ்சு முடியில் தன் விரல்களை விட்டு சுருட்டி இழுத்தாள்.

இத்தனை இலகு அவளுக்கு அவனிடம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அவளது செயலில் தன்னை அவள் முழுமையாக ஏற்றுக் கொண்டாள் என்று புரிய இன்னும் தன்னோடு அவளை நெருக்கினான்.

“மூச்சு முட்டுதுங்க” சிணுங்கினாள்.

அவளின் இடையோடு கைப்போட்டு நெருக்கிப் பிடித்தவன்,

“அவ அத்தை பொண்ணு அவ்வளவு தான். அதை தாண்டி நான் யோசிச்சதே இல்லடி.. என் சிந்தனை முழுதும் நீ தான் இருந்த” என்றான்.

“உன்னை தேடி கண்டு பிடிக்கிறது மட்டும் தான் வேலையா வச்சு இருந்தேன்.. தேடி கண்டு பிடிச்ச பிறகு உன்னை எப்படி சமாதனம் செய்வதுன்னு யோசிச்சேன். சமாதனம் ஆன பிறகு உன்னை எப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுன்னு யோசிச்சேன். வீட்டுக்கு வந்த பிறகு உன்னை எப்படி நிரந்தரமா இந்த வீட்டுக்குள்ளயே வச்சுக்குவதுன்னு யோசிச்சேன். இப்போ அந்த யோசனைக்கு தீர்வா நம்ம திருமணத்துக்கு சம்மதமும் கிடைச்சுடுச்சு.. இனி மேல நம்ம வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசனை போகும். எத்தனை பிள்ளை பெத்துக்குறதுன்னு யோசனை போகும். இதுக்கு இடையில உன்னை எப்படி கலங்காம பார்த்துக்குவேன்னு சிந்தனை வரும்.. அதனால எனக்கு யாரை பற்றியும் சிந்தனை போனதில்ல. இனியும் போகாது. என் சிந்தனை யோசனை, மனம் அறிவு எல்லாத்திலும் நீ மட்டும் தான் நிறைஞ்சி இருக்க.. நீ மட்டும் தான் நிறைஞ்சி இருப்ப” என்றான்.

அவனின் சொற்களில் இருந்த உண்மையை அறிந்தவள் கண்கள் கலங்க அவனின் நெஞ்சில் அழுத்தமாக சாய்ந்துக் கொண்டாள்.

“அழாதடி.. இதுக்கு மேல உன் கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரக்கூடாது.. அதும் என் முன்னால நீ அழவே கூடாது” என்றான் கடுமையாக.

 

“நான் ஒன்னும் ஏங்கி போய் அழல.. உங்க அன்புல நெகிழ்ந்து போய் அழறேன் போதுமா?” நொடித்துக் கொண்டவள் அவனின் நெஞ்சில் இருந்தபடியே அவனை அண்ணாந்துப் பார்த்தாள்.

“என்னடி?” புருவம் தூக்கி கேட்டான்.

“ர்ர்ர்...ரொம்ப புடிச்சுடும் போல” என்றாள்.

“ஆஹாங்..” நக்கலாக கேட்டவன் தன் நெஞ்சில் அவளின் முகத்தை போட்டு புரட்டி எடுத்து விட்டான் கதிரவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 2:40 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top