“சாமி கும்பிட்டேன்” என்றாள் குரலே வராமல்.
அதில் எரிச்சல் மூல,
“இங்க பாரு உனக்கு சாமி கடவுள் எல்லாமே நான் தான். கட்டிய புருசனை முதல்ல கும்பிடுடி.. நீ நினைச்சது எல்லாம் நடக்கும். அதை விட்டுட்டு இல்லாததை போய் கும்பிட்டா உனக்கு எல்லாமே கிடைச்சுடுமா?” என்று நக்கலாக சொன்னவன்,
“மேல வா” என்று அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டான்.
தங்களின் படுக்கை அறைக்குள் நுழைந்து அவளை அப்படியே சோபாவில் தள்ளி விட்டவன், “நீ என்ன பெரிய இவளாடி.. உன்னை தேடி நான் வரணுமா? என்ன தைரியம் இருந்தா காலையிலையே என்னை உன்னை தேடி வரவச்சு இருப்ப...? இந்த தைரியம் உனக்கு யார் கொடுத்தது…” என்று அவளிடம் முள்ளாய் குத்தி கிழிக்க பரிதவித்துப் போனாள்.
சாமி கும்பிட போனது ஒரு குத்தமா என்பது போல பயந்துப் போனாள்.
“இல்ல சாமி தான்” என்று அவள் தடுமாற,
“எதிர்த்து எதிர்த்து வாய் பேசாதடி... உன்னை பொறுத்தவரை இனி எல்லாமே நான் மட்டும் தான். அந்த சாமியை கூட இனி நீ நினைக்க கூடாது...” என்று அனலாய் அவன் காய பயந்துப் போனாள்.
அந்த நேரம் அவளது போனுக்கு அவளின் வீட்டில் இருந்து போன் வர ராசசிங்கனின் கோவம் உச்சிக்கு ஏறியது... ஏந்திழையாள் அரண்டுப் போனாள் அவனது கோவத்தில்.
அந்த நேரம் சரியாக இண்டர்காம் அடிக்க எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.
“சார் மேடமோட வீட்டுல இருந்து வேல்முருகன் சாரும் மேடமோட அண்ணனும் வந்து இருக்காங்க” என்று சொல்ல மூச்சடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
கண்கள் சிவக்க உருட்டி ஏந்திழையாளை ஒரு பார்வை பார்த்தான். அவளுக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது.
“நீ தான் வர சொன்னியா? இவன் அரக்கன் இவன் கூட வாழமுடியாதுன்னு அவங்களை எல்லாம் வரச்சொன்னியா?” என்று இடி முழக்க குரலில் அவன் கேட்க வெலவெலத்துப் போனாள்.
“இல்லங்க நான் யாரையும் வர சொல்லல” என்று அவள் மிடறு விழுங்கினாள்.
“நீ வர சொல்லாம அவங்க எப்படி என் நடு வீடு வரை வந்து இருப்பாங்க” என்று இவன் அவளை குறுக்கு விசாரணை செய்ய, இவளுக்கு அய்யோ என்று வந்தது...
“இல்லங்க நான் யாரையும் வர சொல்லல... ப்ளீஸ் நம்புங்க” என்று அவள் கலங்கிப் போய் சொன்னாள்.
“எனக்கு தெரியும்டி நீ தானே அவங்களை வரச்சொல்லி சொல்லி இருக்குற... உனக்கு என் கூட நடந்த இந்த கல்யாணம் வேணாமா? ஏன் நேத்திக்கு நான் உன்னை திருப்தி படுத்தலையா? என்னை நீ ஆம்பளையா உணரலையா? இன்னும் ஹெவி பெர்பாமன்ஸ் வேணுமா?” என்று அவன் முழு அரக்கனாய் மாறி இருக்க முற்றிலும் அரண்டுப் போனாள் ஏந்திழையாள்.
முன்பு இருந்த ராசசிங்கனை விட இந்த ராசசிங்கன் தான் அவளை முழுதும் கலவரப்படுத்தினான். விழிகளில் உயரளவு அச்சம் சூழ்ந்தது.
அவளின் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்து அவளை விழி உருட்டி பார்த்துக் கொண்டே, “சொல்லுடி நான் உன்னை திருப்தி படுத்தலையா? நான் ஆம்பளை இல்லன்னு நினைக்கிறியா? உனக்கு முழு சுகம் நான் குடுக்கலையா? என்னை விட்டு போறதுக்கு தான் நீ அவங்களை எல்லாம் வர சொல்லி சொல்லி இருக்கிறியா?” என்று அவன் காட்டு கத்தல் கத்த அவனது அரக்க தனத்தில் அப்படியே கண்களை சுழட்டிக் கொண்டு மயங்கி அவனது கையிலே வீழ்ந்தாள் ஏந்திழையாள்.
அதன் பிறகு அவளிடம் எந்த அசைவும் இல்லை. அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் அவனது அடங்காத காமத்திலே அவளுக்கு கழிந்தது நாட்கள் அனைத்தும்... வெறும் படுக்கை அறை அழகியாக அவளை அவன் வழி நடத்த உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நொறுங்கிப் போனாள் ஏந்திழையாள்.
பெருங்காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று ராசசிங்கன் உணருவானா அவனை உணர வைப்பாளா அவனின் ஏந்திழையாள்... இல்லை அவனோடு வாழ மாட்டேன் என்று பிரிவை கையில் எடுத்து அவனை முற்றும் முழுதும் உடைத்துப் போட்டுவாளா?
இல்லை ஏந்திழையாள் மீது இந்த பெருங்காமம் விலகி மெய்யுருக மனமுருக அவளை காதலுருவானா இந்த ராசசிங்கன்...
திருமணம் ஆன அடுத்த நாளே பெண்ணவளை போட்டு பாடாய் படுத்தி எடுக்க ஆரம்பித்தான் ராசசிங்கன். முன்பு இருந்த ராசசிங்கனை விட இந்த ராசசிங்கன் தான் அவளை முழுதும் கலவரப் படுத்தினான். விழிகளில் உயரளவு அச்சம் சூழ்ந்தது அவளுக்கு.
அவளின் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்து அவளை விழி உருட்டி பார்த்துக் கொண்டே, “சொல்லுடி நான் உன்னை திருப்தி படுத்தலையா? நான் ஆம்பளை இல்லன்னு நினைக்கிறியா? உனக்கு முழு சுகம் நான் குடுக்கலையா? என்னை விட்டு போறதுக்கு தான் நீ அவங்களை எல்லாம் வர சொல்லி சொல்லி இருக்கிறியா?” என்று அவன் காட்டு கத்தல் கத்த அவனது அரக்க தனத்தில் அப்படியே கண்களை சுழட்டிக் கொண்டு மயங்கி அவனது கையிலே வீழ்ந்தாள் ஏந்திழையாள்.
அதன் பிறகு அவளிடம் எந்த அசைவும் இல்லை.
“ஏய் எழுந்திருடி... ரொம்ப நடிக்காத” என்று அவளின் கன்னத்தை தாட்டினான். ம்ஹும் அவள் எழுந்துக் கொள்ளவே இல்லை.
சட்டென்று அவனில் ஒரு கலவரம் மூல அருகில் இருந்த நீர் பாட்டிலை எடுத்து அவளின் முகத்தில் தெளித்தான். அதில் அவளது கண்மணிகள் இரண்டும் உருள ஆரம்பிக்க அவளை படுக்கையில் கிடத்தி அவளின் அருகில் படுத்துக் கொண்டான்.
கீழே இருந்த இருவரை பற்றி அவன் கொஞ்சமும் கருத்தில் கொள்ளவே இல்லை. மயக்கத்தில் இருப்பவளை தூக்கி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டவன் அப்படியே படுத்துக் விட்டான்.
அவளுக்கு விழிப்பு வந்து விட்டது தான். ஆனால் அவளால் விழிகளை திறக்கவே முடியவில்லை. நேற்றிலிருந்து அவள் கண்ட மன உளைச்சல் அவளை அந்த நிலைக்கு தள்ளி இருக்க அப்படியே கிடந்தாள்.
தன் நெஞ்சில் அவளை போட்டுக் கொண்டவனோ தன்னோடு இறுக்கிக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். அதிகாலையில் அவளது வாசம் இல்லாமல் போக பித்து பிடித்தவன் போல ஆனான். அதனாலே அவளிடம் அந்த குதி குதித்தான். ஆனால் அதற்கு அவன் பேசிய பேச்சுக்கள் மிக அதிகமாயிற்றே...
விழிகளை திறக்க முடியவில்லை என்றாலும் அவளின் கண்களின் ஓரம் நீர் கசிந்தது...!
அது அவனது நெஞ்சில் வடிய தலையை தூக்கி பார்த்தவன் மீண்டும் தூங்கிப் போனான். அரக்கனாயிற்றே அவன். அவனுக்கு யாருடைய வலியும் தெரியவில்லை போலும்.
முயன்று தன் மயக்கத்தில் இருந்து கண் விழித்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். அவளின் இடையில் முரட்டு கைகள் படர்ந்து இருக்க பெருமூச்சு வந்தது.





