“இதென்ன காதலில் மலர்ந்த திருமணமா நான் நினைத்தது எல்லாம் நடக்க? எல்லோருக்கும் காரியம் ஆகணும்னு என்னை பகடை காயா மாத்திட்டாங்க... இதுல அன்பையும் பாசத்தையும் எதிர் பார்க்க முடியுமா? வெறும் லஸ்ட்டு தான் இருக்கும்” என்று எண்ணியவளுக்கு தூக்கம் எட்டா கனியாகிப் போனது.
பாதி இரவுக்கு மேல் மிகவும் அசவுகாரியமாக இருக்கவும் எழுந்துக் கொள்ள பார்த்தாள். ராசசிங்கன் அவள் மீது மலை மாதிரி கிடக்க அவனை புரட்டி தள்ள பார்த்து மூச்சு வாங்கியது தான் மிச்சம்.
அவனை தட்டி எழுப்பி விட்டாள். ம்ஹும் அசையவே இல்லை. வேறு வழியில்லாது அவனின் கையில் நறுக்கென கில்லி விட்டாள். அதில் லேசாக அவனது தூக்கம் கலைய, வேகமாய் அவனை புரட்டி தள்ளப் பார்க்க,
“ம்ம்ம்” என்று உறுமினான்.
“ரெஸ்ட்ரூம் போகணும்” என்றாள்.
“ப்ச்” என்று அவளை விட்டு விலகிப் படுத்தான். அதில் பெரும் ஆசுவாசம் கொண்டவள் எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவனது பற்தடங்களும் நகக்குறி தடங்களும் அவளின் உடலில் இருக்க கண்டு லேசாக எரிச்சல் சூழ்ந்தது. ஷவரை திறந்து விட்டு சிறிது நேரம் இருக்க நீர் பட்டு அந்த காயங்கள் எல்லாம் அவளின் மனதை போலவே காந்தியது.
சுகமான அணைப்பு அவளுக்கு தேவை பட அங்கிருந்த பாத் டப்பில் இறங்கி விட்டாள். ஆளை அமுக்கும் சுடுநீரில் இறங்கி படுத்து விட்டாள். கொஞ்சமே கொஞ்சம் சுகமாய் இருக்க கண்களை மூடிக் கொண்டாள்.
எல்லாம் சிறிது நேரம் தான்... கதவு அதிரடியாய் தட்டப் பட்டது. அதில் அவளது ஏகாந்த நிலை கலந்துப் போக துண்டை எடுத்து சுற்றிக் கொண்டவள் கதவை திறந்தாள்.
அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்,
“என்ன உனக்காக என்னை ஏங்க வைக்கணும்னு நினைக்கிறியா?” மனதில் கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் அவன் நறுக்கு தெரித்தார் போல கேட்டு வைக்க கண்கள் எல்லாம் கலங்கியது.
“இல்ல கொஞ்ச நேரம் பாத் டப்புல இருக்கலாம்னு தான்” என்றாள் தொண்டை அடைக்க. அதை காதில் வாங்காதவனாய்,
“இப்படி இன்னொருமுறை உன்னை தேடி என்னை வர வச்ச பிறகு என்னோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும். போ போய் பெட்ல படு. வரேன்” என்று பாத்ரூமுக்குள் நுழைந்துக் கொண்டான்.
அவனது இந்த வகை பேச்சில் உள்ளம் சுருண்டுப் போனவள் துணி மாற்ற எண்ணி இருந்த எண்ணத்தை கூட கை விட்டு அப்படியே துண்டுடன் படுக்கையில் படுத்துக் கொண்டாள். மனம் அப்படியே மூங்கிலாய் விண்டுப் போனது.
அந்நேரத்துக்கு உடை எடுத்து அணிந்து அதை அவன் கலைக்க ஏதாவது சொல்லி உயிர்வதை படுவதை விட இப்படியே இருந்து விடுவது மேல் என்று படுத்து விட்டாள்.
வெளியே வந்தவன் அவள் இருந்த கோலத்தை கண்டு அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன்,
“என்னை விட நீ ரொம்ப ஆர்வமா இருக்க போல.. ட்ரெஸ் போட கூட மனம் வரலையோ” என்று அவள் உடை மாட்ட்ராமல் இருப்பதற்கும் சேர்த்து வைத்து பேச கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது. அனால் ஒரு சொல் கூட அவள் பேசவில்லை.
“பரவாயில்லை உன் தாராளம் எனக்கு வசதி தான்” என்று சொல்லி அவள் மீது படர்ந்துக் கொண்டான். முன்பு இருந்த கூடலாவது கொஞ்சமே கொஞ்சம் அவள் இரசித்தாள். ஆனால் இந்த கூடலை அவள் மனம் அறவே வெறுத்துப் போனது. அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள் அவ்வளவு தான். அதை தாண்டி அவள் ஒன்றுமே செய்யவில்லை. அவன் சொல்லம்புகளால் தாக்காமல் இருந்து இருந்தால் ஒருவேளை இந்த கூடலை எல்லாம் ரசித்து இருப்பாளோ என்னவோ..
விடியும் வரை அவள் மீது இருந்தவன் அதன் பிறகே விலகிப் படுத்தான். சக்கையாகிப் போன தன் உடலை பார்த்தவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஆனால் அதை வெளியே விடாமல் உள் இழுத்துக் கொண்டவள் எழுந்து குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு வரும் பொழுதும் ராசசிங்கன் நன்றாக தூங்க எந்த அரவமும் இல்லாமல் உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தாள்.
கால் எல்லாம் கடுகடுத்தது. நடக்கவே பெரும் சிரமாமாய் இருந்தது. அவளின் உடல் ஓய்வுக்காக கெஞ்சியது. அதற்காக அவனுக்கு அருகில் படுக்க முடியுமா? இன்னும் அவளின் உடலும் மனமும் காயம் பட்டு போகும். அதோடு இன்னும் ஆசை தீரலையா? காலையிலையே வந்து படுத்துட்ட என்று கேட்பானே என்று எண்ணி சிரமமாக இருந்த போதிலும் அங்கு இல்லாமல் எழுந்து வந்து விட்டாள்.
வந்தவளுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. கண்களை சுற்றிலும் சுழல விட்டாள். அவள் வந்ததை பார்த்த அவளின் பியே,
“மேம்” என்று அவளின் அருகில் ஓடி வந்தாள்.
“சாமி அறை எது?” என்று கேட்டாள் ஏந்திழையாள். அந்த பெண் கை காட்ட அந்த பக்கம் போனாள்.
பளிங்கு கற்களால் ஆன சாமி அறைக்குள் நுழைந்தாள். அங்கு பூக்கள் போட்டு தீபம் ஏற்றி வைத்து நறுமணம் கமழும் சாம்பிராணி போடப்பட்டு இருக்க அதில் மனம் சற்றே அமைதியாகிப் போனது.
கைகளை கூப்பி தன் எதிரில் இருந்த அம்மனை விழியகலாது பார்த்தாள்.
“என் வாழ்க்கையில ஏன் இவ்வளவு நெருக்கடி.. இவ்வளவு ட்ராஜடி... இரசித்து வாழணும்னு நினைச்சேன்.. ஆனா என் எண்ணங்கள் எல்லாம் ஈடேறவே இல்லை. அன்பா ஒரு வாழ்க்கை அமையணும்னு நினைச்சேன். அதுவும் நடக்கல... நான் கேட்டதுக்கு எதிர்பதமா அமைச்சு குடுத்து இருக்க...” என்று மனம் உருகி இறைவனிடம் கேட்டவள், “ரொம்ப நன்றி” என்று சொல்லி விட்டு அப்படியே அம்மனை பார்த்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அப்படியே போனது என்று தெரியவில்லை. ராசசிங்கனின் உறுமல் சத்தம் கேட்கும் வரை அம்மனை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
திடுதிப்பென்று ராசசிங்கனின் முழக்கம் கேட்க பதறிப் போனாள். நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமத்தை எடுத்து வைத்துக் கொண்டு வேகமாய் வெளியே வந்தாள்.
கண்களை உருட்டிக் கொண்டு அவன் நின்று இருந்தான் கூடத்தில். அவனது பார்வையில் மூச்சடைத்துக் கொண்டு வர விக்கித்துப் போனாள்.
“எங்கடி போய் தொலைஞ்ச?” என்று காட்டு கத்து கத்த, சுற்றி முற்றி அவளின் பார்வை சென்றது. வீட்டு வேலையாட்கள் மொத்தமும் அங்கும் இங்குமாய் கூடி இருந்து இங்கு தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அதில் கூனி குறுகிப் போனவள்,
“சாமி கும்பிட்டேன்” என்றாள் குரலே வராமல்.
அதில் எரிச்சல் மூல,
“இங்க பாரு உனக்கு சாமி கடவுள் எல்லாமே நான் தான். கட்டிய புருசனை முதல்ல கும்பிடுடி.. நீ நினைச்சது எல்லாம் நடக்கும். அதை விட்டுட்டு இல்லாததை போய் கும்பிட்டா உனக்கு எல்லாமே கிடைச்சுடுமா?” என்று நக்கலாக சொன்னவன்,
“மேல வா” என்று அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டான்.





