Notifications
Clear all

அத்தியாயம் 44

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்ன அசிங்கமா இருக்கு.. இப்படி நீ திறந்து போட்டு ஷோ காட்டுவ. அது அசிங்கமா இல்ல.. நான் இழுத்து மூடி சுடிதார் போட சொல்றேன். நீ போட மாட்டேன்னு சொல்ற. அது அசிங்கமா இல்லையாடி? நான் தொட்டா தான் உனக்கு அசிங்கமா இருக்கோ.. நாளைக்கு வேற எவனாவது இப்படி வந்து தொடுவான்..” என்று அவன் சொல்ல,

“ஐயோ ப்ளீஸ் சார் போதும் நிறுத்துங்க..” என்று காதை மூடிக்கொண்டவள்,

“உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்? ஏன் இப்படி தேவையில்லாம என் மேல அவதூறு சொல்லா சொல்றீங்க” ஆவேசமாக கேட்டவள்,

“வயசுக்கு வந்த தங்கையை வச்சுக்கிட்டு, கழுத்தில் தாலி இல்லாம வயித்துல பிள்ளையை வச்சுக்கிட்டு நான் பட்ட பாடு உங்களுக்கு என்ன தெரியும்.. அவன் பிறந்த பிறகு அவனவன் வர்றவன் போறவன் எல்லாம் என் கழுத்தையும் என் காலையும் தான் பார்ப்பான். கல்யாணம் ஆகிடுச்சான்னு.. ரெண்டும் இல்லன்ன உடனே பக்கத்துல வந்து வர்றியான்னு கேட்பான்..”

“ஒவ்வொரு நாளும் எனக்கு நெருப்புல நிக்கிற மாதிரி தான் இருந்தது. ஒரு நாள் சுடிதார் போட்டுட்டு போறேன். ஒருத்தன் சொல்றான் சின்னதா சிக்குன்னு இருக்க.. உன்னை படுக்கையில போட்டு புரட்டி எடுத்தா ...” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க கத்தியவள்,

“என்னை மட்டும் இல்ல என் தங்கச்சியையும்” என்று சொல்லும் பொழுதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிரம்பி விட்டது..

“எங்களுக்குன்னு யாரும் பாதுகாப்பு இல்ல.. எங்களை நாங்களே காப்பாத்திக்கணும்.. அதனால என்னை பெரிய பெண்ணா காட்டிக்க வேற வழியில்லாம தான் இந்த சேலையை சுத்திக்கிட்டு இருக்கேன். ரொம்ப ஆசையா ஒன்னும் கட்டிக்கல. அதே போல ஷோ காட்டவும் கட்டல. இது வீடுன்றதுனால தான் இடுப்புல பின் போடல. அதுவும் ஆபிஸ் போகும் போது ஒரு இடம் கூட விடாம எத்தனை பின் போட முடியுமோ அவ்வளவு பின் போட்டு தான் கட்டிட்டு போவேன். எதுவும் தெரியாம பேசாதீங்க சார்..” என்று சொன்னவளின் ஆதங்கமான பேச்சை கேட்ட தீரன்,

--

“ப்ச் இப்ப என்ன புடவையை கழட்ட முடியுமா முடியாதா?” என்று நின்றவனை கண்டு ஆயாசமாக வந்தது அவளுக்கு.

“இவ்வளவு தூரம் சொல்றேன் மறுபடியும் இவரு இதே பேச்சுலையே நிக்கிறாரே” என்று அயர்ந்துப் போனவள்,

“முடியாது சார்.. நீங்க முதல்ல என் இடுப்புல இருந்து கையை எடுங்க” என்றவளின் இடுப்பை இன்னும் வலிக்க பற்றி அவளை தன்னோடு இழுத்தவன்,

இன்னொரு கையை அவளின் முதுகோடு வைத்து அழுத்தியவன்,

“சேலையை கழட்டு” என்றான் பிடிவாதமாய்.

“முடியாது” என்றவள் அவனின் கைப்பிடியில் இருந்து வெளியவரப் பார்க்க, அவளின் பிடிவாதம் அவனுக்குள் கோவத்தை கிளப்பி இருக்க, வேகமாய் அவளின் தோளில் இருந்த புடவையை பிடித்து இழுத்தான்.

“ஐயோ என்ன பண்றீங்க?” அதிர்ந்தவளை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் அவளின் மாராப்பை பிடித்து இழுக்க, தோளோடு குத்தி இருந்த ஊக்கு தெரித்து எங்கோ விழ, அவனின் கையோடு அவளின் முந்தானையும் மாராப்பும் வந்து விட, அவனின் முன்பு புடவை நழுவி அவள் நின்ற கோலம் அவனை என்னவோ செய்தது.

அதிரல் பதறிப்போய் தன் கையை வைத்து தன்னை மறைத்துக் கொண்டவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றவளுக்கு கண்களில் கண்ணீர் திரை இட்டு விட்டது.

“ஏ...ன் சா..ர் இ...ப்படி எல்...லாம் ப...ண்...றீங்க...?” வார்த்தை வராமல் வேதனை நெஞ்சை அடைக்க திக்கி திக்கி அழுகையுடன் அவள் கேட்க அவளின் முதுகோடு நெருங்கி நின்றவன் எதையும் யோசிக்காமல் அவளின் வெற்று தோளில் தன் இதழ்களை புதைத்தான் அழுத்தமாக.

தீரனிடம் இப்படியாப்பட்ட செயல்களை எல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத பெண்ணவளுக்குள் அத்தனை வேதனை. கண்களை மூடி அப்படியே நின்றாள். அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது அருவி போல்..

அவளின் தோளில் இதழ் புதைத்தவன் இன்னும் ஆழமாக அவ்வளுக்குள் தன் முகத்தை வைத்து புதைத்தவனுக்குள் என்னவோ ஆக, அவளின் இடையை இருக்கையாலும் இறுக்கிப் பிடித்து தன் முன் புற மேனியோடு அவளின் பின் புற மேனியை உரசும் அளவுக்கு இறுக்கி பிடித்தவனின் உதடுகள் அவளின் தோளில் இருந்து நழுவி அவளின் முதுகில் ஊர,

“எல்லோரும் வர்றியான்னு கேட்டாங்க.. ஆனா நீங்க அதை செயல் படுத்துறீங்க இல்ல?” குரல் தளுதளுக்க கேட்டவளின் பேச்சில் சுயம் அடைந்தவன் வேகமாய் அவளை தன் புறம் திருப்பினான். அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்தவன் கொஞ்சமும் பதறாமல் அதை துடைத்து விட்டான்.

தன் கண்ணீரை முதன்முறையாக துடைக்கும் ஒரு கையை அப்பொழுது தான் பார்க்கிறாள். அதை உணரும் முன்பே அவளின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்துக் கொண்டான் தீத்திரள் தீரன்.

“ஹக்..” என்று அவளின் தேகம் தூக்கிப் போட, அதை எளிதாக தன் கைகளை கொண்டு அடக்கியவன் தன் நெஞ்சோடு அவளை இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்டவன் அவளின் இதழ்களில் முத்த வித்தையை பழகினான். அவளுக்கும் பழக்கினான்.

அவனின் செயலை எதிர் பார்க்காதவள் அவனின் முதுகில் அடித்து காயம் செய்ய, அதை சட்டை செய்யாமல் அவளின் வெற்று இடுப்பை ஒரு கையால் கசக்கி எடுத்தவன் அடுத்த கையை அவளின் முதுகோடு இறுக்கமாக பற்றி அவளை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டான்.

அவனிடம் இருந்து இந்த முத்தத்தை எதிர் பார்க்காதவள் மேலும் அவனை போட்டு அடித்து தன்னை விட்டு விலக்கப் பார்க்க எங்க அவனை விலக்குவது. ஹல்க் மாதிரி அல்லவா இருக்கிறான்.

இதழ்களை பிய்த்து தின்னும் கலையை தீரன் அவளுக்கு காட்ட இவளின் மென்மையான இதழ்கள் ரணமாகிப் போனது. அவளின் கண்களில் இருந்து கண்ணீரும் வழிந்தது.

இனிப்பு சுவையோடு உப்பு சுவையும் சேர,

“ஒரு முத்தத்தை பழக விடுறியா?” கடுப்புடன் கேட்டு அவளை விட்டு விலகியவன் அவள் நின்ற கோலத்தை பார்த்து தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன்,

“கிளம்பி அலுவலகம் வா” என்று விட்டு எதுவும் நடக்காதது போல அவன் போய் விட இவள் அப்படியே தொய்ந்து போய் கீழே அமர்ந்து விட்டாள்.

முதல் முறையாக அவளிடம் அத்துமீறும் ஒரு ஆண். அவனை எதுவும் செய்ய முடியாமல் கூனி குறுகிப் போய் அமர்ந்து இருப்பதை அவளாலே கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“நான் என்ன அந்த மாதிரி பொண்ணா.. என் கிட்ட எதுக்கு தவறா நடக்கணும்” என்று விழிகளில் கண்ணீர் வழிய அவளது கண்களே மொத்தமும் சிவந்துப் போய் விட்டது. கீழே இறக்கி விட்ட மகனோ எப்போதோ வெளியே ஓடிப் போய் இருந்தான்.

அதனால் இதெல்லாம் மகனின் முன்பு நடக்கவில்லை என்று சிறு ஆயாசம் இருந்தது. வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு விலகி கீழே கிடந்த முந்தானையை எடுத்து போட்ட நேரம் சரியாக உள்ளே நுழைந்த குட்டி தீரா,

“ம்மா ஏ பே” என்று அவளின் மடியில் அவளை பார்த்தபடி அமர்ந்து கேட்க,

“அதெல்லாம் வேணாம்டா” என்று அவள் முந்தானையை சரியாக போட்டுக் கொண்டாள்.

“ஏக்கு ஏனும்.. நா பாத்து பாத்து” என்று பிடிவாதம் பிடிக்க,

“அடம் பண்ணாதடா” அதட்டிப் பார்த்தாள். அவனோ அவளை சட்டை செய்யாமல் அவளின் மாராப்பை கீழே எடுத்து விட்டு அவளின் நெஞ்சை பார்க்க அதுவோ அவளின் ரவிக்கைக்குள் மறைந்துப் போய் இருந்தது.. அது தெரியாமல் உதடு பிதுக்கி,

“காணா” பிள்ளை ஏமாந்து போய் கேட்க,

“இவனோட இது ஒரு தொல்லை” என்று முணகியவள் “ஈவினிங் வந்து காட்டுறேன்டா. செல்லம் தானே நீ” என்று அவனை தாஜா செய்ய பார்க்க அவனோ,

“ஏனும் ஏனும்.. பையே பாக்கணும்” அவன் பிடிவாதம் கண்டு தலையில் அடித்துக் கொண்டவள்,

“முதல்ல இதை ரிமூவ் பண்ணனும்.. அப்ப தான்டா உன் தொல்லை இருக்காது எனக்கு” அவனை திட்டிக் கொண்டே முதல் கொக்கியை அவிழ்த்து லேசாக அவனுக்கு காட்ட,

“ஐ ஏ பேரு.. ஏ பேரு” என்று அவன் தொட்டு மகிழ்ந்து தாயின் கன்னத்தில் முத்தம் வைத்து சிரிக்க, அவனி சிரிப்பில் இவளுக்கு அதுவரை இருந்த கண்ணீர் எல்லாம் தடம் தெரியாமல் அழிந்துப் போனது.

“இப்ப ஓகே வா.. இனி இப்படி அம்மா கிட்ட கேட்க கூடாது சரியா?” அவனிடம் கேட்டுக் கொண்டே மீண்டும் கொக்கியை போட வாசலில் நிழல் ஆடியது. தீத்திரள் தீரன் தான் நின்று இருந்தான்.

இவளுக்கு பக்கென்று இருந்தது. அவன் போய் விட்டான் என்று எண்ணி தான் மகனிடம் அவனி பெயரை காட்டினாள். ஆனால் அவன் இப்படி திடுதிப்பென்று வந்து நிற்பான் என்று அறியாதவள் திகைத்துப் போய் கொக்கியை போடா மறந்து புடவையை அள்ளி எடுத்து மேலே போட்டுக் கொண்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 10:33 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top