தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு, பெற்றவர்களுக்கும் தகவல் சொல்லி விட்டு கிளம்பி இதோ ஒரு மணி நேரம் கடந்து இருந்தது பயணத்தில்.
“அங்க போய் குடிக்க கூடாது” என்று இவள் சீரியஸாக சொல்ல,
“நீ சொன்னா நாங்க கண்டிப்பா குடிக்க மாட்டோம்.. பிலீவ் மீ பேபி” என்ற அண்ணனை சந்தேகம் தீராமல் பார்த்தாள்.
“நம்புடா..” அழுத்தி சொன்னவன் நண்பனுக்கு கண்ணை காட்டினான்.
கங்குவன் புரிந்துக் கொண்டு சாலையில் கவனம் ஆனான். சரியாக ஒரு இடம் வந்த உடன் அவன் காரை நிறுத்த,
“இங்க ஏன் நிறுத்துறீங்க?” கேட்டுக் கொண்டே சுத்தி முத்தி பார்க்க, அங்கு போட்டு இருந்த கடை பெயரை பார்த்து
“இப்ப தானே ஜூஸ் குடிச்சோம்.. அதுக்குள்ள எதுக்கு ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க?” புருவம் சுருக்கி கேட்டாள்.
“இல்ல வீட்டுல இருந்து கிளம்பும் பொழுதே சமரன் ஐஸ்க்ரீம் கேட்டான். நான் போகும் பொழுது வாங்கி தரேன்னு சொன்னேன்.. அது தான்” என்றான் கங்குவன்.
“சாம் ஐஸ்க்ரீம் கேட்டியா?”
“நானா..” என்றவன் “ஐ ஐ ஐஸ்க்ரீம்” துள்ளி குதித்தான்.
“இதோ இப்படி தான் ஆசையா கேட்டான்” என்று மேலும் கங்குவன் சொல்ல,
“அவனோட ஆசை எல்லாம் ஒன்னு விடாம நிறைவேத்துற மாதிரி சீன போடாதீங்க.. உங்களை எல்லாம் நம்பவே மாட்டேன்” என்று முறைத்தாள்.
இளந்திரையன் கண்களை உருட்டி பாவமாய் கங்குவனை பார்த்தான்.
“இந்த வெண்ணைக்கு தான் இவக்கிட்ட வாயை குடுக்கல..” நண்பனிடம் முறைத்தவன்,
“இப்ப என்னடி அவன் ஐஸ்க்ரீம் கேட்டான். நீ வாங்கி குடுத்தா குடு.. குடுக்காட்டி போ. எங்களுக்கு ஒன்னும் இல்லை..” என்றவன் வண்டியை த்திருப்ப பார்க்க,
சாமின் வாடிய முகம் கண்டு இளகியவள்,
“ஒன்னும் தேவையில்ல.. அது தான் வந்தாச்சே.. அப்புறம் என்ன..?” என்றவள் சாமை கூட்டிக்கொண்டு ஹோட்டல் உள்ளே போய் விட்டாள்.
அவள் உள்ளே போனதை உறுதி செய்துக் கொண்டு அந்த ஹோட்டலின் அடி தளத்துக்கு சென்றார்கள் இரண்டு கேடிகளும்.
வரும் பொழுது கை நிறையா பாட்டில்களோடு வந்து காரின் டிக்கியை நிரப்பிவிட்டு,
“மாப்பிள்ளை சாதிச்சுட்டோம்டா” கையை தட்டி சொன்னபடி திரும்ப அவர்களின் எதிரில் கைக்கட்டியபடி நின்று இருந்தாள் வேரல்.
திருடனுக்கு தேள் கொட்டியபடி நின்று இருந்த இருவரையும் முறைத்துப் பார்த்தவள்,
“இது தான் சாம் ஐஸ்க்ரீம் கேட்ட அழகா..?” முறைத்தவளை கண்டு கொள்ளாமல், டிக்கியை அடித்து சாத்திய கங்குவன்,
“இப்ப என்னடி அதுக்கு.. என்னவோ ரொம்ப தான் க்ராஸ் கொஸ்ட்டீன் கேட்டுட்டு இருக்க.. ஆமா தண்ணி அடிக்க தான் பண்ணை வீட்டுக்கு போறோம்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு.. போடி” என்று விட்டு காரி ஏறி அதை இயக்க,
“மாப்பிள்ளை கட்ஸ் அதிகம்டா உனக்கு” என்று கங்குவனிடம் சொன்னவன்,
“ப்ளீஸ் தங்கம்...” என்று தங்கையை கெஞ்சி கொஞ்சி சமாதனம் செய்து பிள்ளையோடு அவளை காரில் ஏற்றிக் கொண்டு வருவதற்குள் ஒரு வழியாகிப் போய் விட்டான் இளந்திரையன்.
இதோ அதோ என்று அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பண்ணை வீட்டை வந்து அடைந்து இருந்தார்கள் நால்வரும்.
உள்ளே நுழையும் பொழுதே தோட்டம் அவர்களை வரவேற்றது. அந்த தோட்டத்தை இரண்டாக பிளப்பது போல நடை பாதை போனது. அதிலே காரும் செல்லக் கூடிய வகையில் பெரிதாக இருக்க, சாமோடு சேர்ந்து இறங்கினாள்.
அங்கு பலமுறை குடும்பத்தோடு வந்து இருந்தாலும் இது புது அனுபவமாக அவளுக்கு இருந்தது. காரணம் அவளின் இடுப்பில் இருந்த சாம் மட்டும் தான்.
சாரி குட்டி யூடி தான்..




