திடுதிப்பென்னு அறையின் கதவை யார் இப்படி உடைப்பது போல திறப்பது என்று மேலிட்ட எரிச்சலுடன் நிமிர்ந்துப் பார்த்தாள்.
அங்கே கங்குவன் நின்று கொண்டு இருக்க, பட்டென்று இருக்கையை விட்டு எழுந்துக் கொண்டாள்.
“உன் மனசுல நீ என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க.. ஒரு மனுசன் அத்தனை முறை கால் பண்ணி இருக்கானே ஏன்னா ஏதுன்னு போனை எடுக்க மாட்டியா? அப்படி என்ன உனக்கு வீம்பு வேண்டி கிடக்கு” என்றவனை ஆயாசத்துடன் பார்த்தவள்,
“இப்ப என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று நிதானமாக கேட்டவள்,
“உட்காருங்க” என்றாள். அவள் காட்டிய சேரை எட்டி உதைத்தவன்,
“நீ தான் வேணும்.. எதுக்காக என் போன் கால்சை அவாயிட் பண்ண..?” அத்தனை சீற்றமாக கேட்டான்.
அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. என்னவென்று அவள் சொல்ல, அவன் கொடுத்த முத்தத்தின் வீரியத்தில் இருந்தே இன்னும் வெளிவரவில்லை. இதில் அவனிடம் பேசுவது எல்லாம் இயலும் காரீயமா என்ன?
தலையை குனிந்து நின்றவளின் தோற்றத்தில் புருவம் சுறுக்கியவன்,
“இப்ப எதுக்கு தலையை இப்படி நட்டுக்கிட்டு நிக்கிற?” கேட்டவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவனின் முகத்தில் அவளை முத்தமிட்ட சுவடு என்று எதுவுமே இல்லை. எப்பொழுதும் போல முகத்தில் முள்ளை கட்டிக் கொண்டு நின்றான்.
இன்றைக்கு மட்டுமா என்றைக்கும் அவன் அப்படி தானே இருப்பான். வயிறு முட்ட குடித்து விட்டு இரவெல்லாம் அவளை தூங்க விடாமல் போன் பேசுவான். ஆனால் நேரிலோ அதை எல்லாம் மறந்து விட்டு எப்பொழுதும் போல அவளை காய்ச்சி எடுப்பான்.
இதோ இன்றைக்கும் அப்படி தான் நடந்துக் கொள்கிறான். நெஞ்சின் ஓரம் ஒரு சின்ன வலி எழுந்தது. அதை தன் முகத்தில் கூட காட்டாமல் தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டவள்,
“கொஞ்சம் பிசியா இருந்துட்டேன். இப்ப சொல்லுங்க எதுக்காக என்னை கூப்பிட்டீங்க?” என்றவளை முறைத்துப் பார்த்தவன்,
“அப்படி என்னடி வெங்காய பிசி.. உன்னை விட இருபது ஸ்கூல் வச்சு மேய்க்கிற நான் கூட இந்த அளவுக்கு பிசியா இருக்கல.. இடையில வர்ற ஆயிரத்தெட்டு காலையும் எடுத்து பதில் பேசிட்டு தான் வைக்கிறேன். ஒரு காலை கூட எடுத்து பதில் பேச முடியாத உனக்கு எதுக்கு போன்..” என்று அவள் மேசை மீதிருந்து எடுத்து தூக்கி வீசப் போய் விட்டான்.
வேரல் அசையவே இல்லை. அமைதியாக நின்று இருந்தாள்.
“என்னடி உடைக்க மாட்டேன்னு நினைக்கிறியா?” பல்லைக் கடித்தான்.
“நான் எதுவும் சொல்லல.. போட்டு உடைக்கிறது உங்க விருப்பம்” என்று சொல்ல, அவளை முறைத்துப் பார்த்தான்.
“அப்படியே ஒன்னும் தெரியாதவ மாதிரி இப்படி பிகேவ் பண்ணாதடி.. நீ எவ்வளவு பெரிய கேப்மாரின்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவளை மேலும் காய்ச்சி எடுத்தான்.
வேரல் வாயையே திறக்கவில்லை.
“அமுக்குணி மாதிரி இருந்த கொன்னுடுவேன் உன்னை” என்று மேலும் அவளை திட்டியவன்,
“உன்னை திட்டுனதுல எனக்கு தான் உயிர் போகுது. எதுக்கு போன் பண்ணேன்னே மறந்து போற அளவுக்கு உனக்கு போன் பண்ணி இருக்கேன். ஆனா நீ ஒரு ரெஸ்பான்ஸ் கூட பண்ணல.. உன்னை எல்லாம் என்ன பண்ணலாம்.. அரைவேக்காடு..” என்று பல்லைக் கடித்தவனை அயர்ந்துப் போய் பார்த்தவள்,
“இன்னைக்குள்ள முடிக்க மாட்டார் போலையே..” என்ற நேரமே அவளின் அண்ணாவும் சமரனும் வந்து விட்டார்கள்.
அவர்களை அங்கு எதிர் பார்க்காதவள்,
“அண்ணா.. சாம் ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? வரேன்னு சொல்லவே இல்லண்ணா இதென்ன சர்ப்ரைஸ் விசிட்” வியப்புடன் கேட்டவள், சாமை தூக்கிக் கொண்டாள்.
“கண்ணா” என்று கொஞ்சியவள் அண்ணனை பார்த்தாள் பதிலுக்கு. ஒருவன் காதில் புகையே வந்து விட்டது.
“இவ்வளவு நேரம் காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்.. ஒரு வார்த்தை பேசல.. இப்ப அவங்க அண்ணனை பார்த்த உடனே அருவி மாதிரி பேச்சு வருது.. வாண்டை பார்த்த உடனே தூக்கி இடுப்பில் வச்சுக்கிட்டா.. ஒரே கொஞ்சல்.. ஆனா என்னை பார்த்தா மட்டும் இவளுக்கு எப்படி இருக்குமோ தெரியல.. இப்படியாப் பட்டவளை என்ன செய்ய?” என்று கருவினான் கங்குவன்.
“அது ஒன்னும் இல்லடா.. சாம் தான் ஒரே அடமாம்.. கங்குவன் சொன்னான். அது தான் அவனை கூட்டிட்டு அப்படியே உன்னை பார்க்கலாம்னு வந்தேன்” என்றவன்,
“ரெண்டு நாள் குட்டி ட்ரிப் ஒன்னு போகலாம்னு அரேஞ் பண்ணி இருக்கேன் பாப்பா.. உனக்கு ஓகேயா?” என்று கேட்டான் இளந்திரையன்.
“எந்த ஊர் ண்ணா.. லோக்கலா.. இண்டர்நேஷனலா?”
“உனக்கு ஓகே யா அதை மட்டும் முதல்ல சொல்லு..” என்றான்.
“எனக்கு ஓகே தான் அண்ணா.. நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன்” என்றாள்.
“அது.. என் பாப்பான்னா பாப்பா தான்” என்றவன்,
“இங்க பக்கத்துல இருக்க பண்ணை வீட்டுக்கு தான்” என்று சொன்னவுடன் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“இது தான் உன் ட்ரிப்பா”
“ஹேய் ப்ளீஸ்.. அம்மா அப்பா எல்லோர்க்கிட்டையும் பெர்மிஷன் வாங்கி வச்சு இருக்கேன்.. நீ ஓகேன்னா தான் எல்லாமே.. காலை வாரி விட்டுடாதா கண்ணா” தங்கையிடம் அவன் கெஞ்ச,
“போய் தொலை. அங்க வந்து குடிச்சு கும்மாளம் போட்ட மகனே தொலைச்சுடுவேன்” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாப்பா.. நீ ஓகே சொல்லுவன்ற நம்பிக்கையில உன்னோட ட்ரெஸ் எல்லாத்தையும் பாட்டியை விட்டு பேக் பண்ண சொல்லி எடுத்துட்டு வந்துட்டேன்” என்றவனை
“அடப்பாவி” என்று பார்த்தாள்.
“டைமை வேஸ்ட் பண்ண கூடாது இல்ல.. அது தான்” என்றவனை முடிந்த அளவு முறைத்துப் பார்த்தவள்,
“தாத்தா பாட்டி எல்லாம் எப்ப வராங்க” என்று கேட்டாள்.
“இந்த முறை குடும்பத்தோட போகல”
“பிறகு”
“பார் த சேன்ஜ்..” என்றவன்,
“உன் சாமோட, என் நண்பனோட” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் குடிச்சு கூத்தடிக்க என்னையும் சாமையும் கூட கூட்டிட்டு போறீங்க அது தானே” என்றாள் பல்லைக் கடித்து.
“சரியா கண்டு பிடிச்சுட்ட பாப்பா.. ஆனா இந்த விசயம் பேமிலிக்கு தெரியாக் கூடாது” என்றவனின் மீது கோவம் பிறக்க, பிள்ளையை ஒரு கையில் வைத்துக்கொண்டு அண்ணனை அடித்து வெளுத்தாள்.
“நேத்திக்கு ஒரு நாள் நீங்க செஞ்ச அலும்பையே தாங்க முடியல.. இதுல முழுசா ரெண்டு நாள் உங்க கூடயா.. வாய்ப்பே இல்ல.. நான் இப்பவே வீட்டுக்கு போறேன்” என்று அவள் கிளம்ப போக,
“எங்களை விட சாம் தான் ரொம்ப ஆர்வமா இருக்கான். அவனுக்கு வாத்து கோழி, மயில் இதெல்லாம் பார்க்கணுமாம்” என்ற அண்ணனை கடுப்புடன் பார்த்தவள்,
“அவனோட பேரை வச்சு மடக்கலாம்னு பார்க்காதடா” சீறினாள்.
“ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்று தங்கையை சமாதனம் செய்து இதோ ஒரே காரில் நால்வரும் வேரல் குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
சிட்டியில் இருந்து இரண்டு மணி நேர தொலைவில் அமைந்து இருந்தது அந்த பண்ணை வீடு...
Super




