“ம்ம் இந்த தருணம் எல்லாவற்றையும் விட ஸ்பெஷல் இல்லையா?”
“ரொம்ப ரொம்படி” இருவரும் மிக ஆழமாக அந்த தருணத்தை உணர்ந்து சேமித்துக் கொண்டவர்கள் மெல்ல விழிகளை மூடி உறக்கத்துக்கு சென்றார்கள்.
விடிந்து வெகு நேரம் ஆகியும் இருவரும் எழுந்துக் கொள்ளவே இல்லை.
“எப்பவும் சீக்கிரமா வந்திடுவா கண்ணு.. இன்னைக்கு என்ன ஆச்சு இன்னும் வராம இருக்கா?” அடுப்படிக்குள் வேலையை பார்ப்பதும் பிறகு வெளியே வந்து மாடியை பார்ப்பதுமாகவே இருந்தார் காமாட்சி.
“வருவா வருவா.. நீ பதட்டப் படாத காமு” விசாலம் தான் அவரை நிதானப்படுத்து பார்த்தார்.
“அது இல்ல அத்தை.. நேத்திக்கே கதிரவன் மூஞ்சி சரியில்ல.. இந்த பிள்ளையை ஏதாவது சொல்லிட்டான்னா தாங்க முடியாது.. அது தான்” என்றார் வருத்தமாக.
“அதெல்லாம் ஒன்னும் இருக்காது.. நீ மனசை போட்டு உழப்பிக்காத.. பாரு பெரியவனும் சின்னவனும் சாப்பிட வந்துட்டாங்க.. சாப்பாடு போடு” என்று விசாலம் சொல்ல,
அவர்களுக்கு உணவை எடுத்து வைத்தார் காமு மன சஞ்சலத்துடன்.
“அண்ணா தம்பி இன்னைக்கு டெப்போ வர மாட்டேன்னு சொல்லிட்டாப்புல.. அதனால நான் டெப்போக்கு போறேன். நீங்க கொரியர் ஆபிஸ் போங்க..” என்றார் தேவன் தன் அண்ணனிடம்.
“ம்ம் தம்பி நேத்திக்கே சொன்னான் தேவா.. கொரியர் ஆபிஸ் போயிட்டு எம்எல்ஏ வ போய் பார்த்துட்டு வர சொல்லி சொல்லி இருக்கான். மத்தியத்துக்கு மேல ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடுறேன்” என்றார் பொன்னன்.
“அப்போ சரி அண்ணா” என்று இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேச,
காமாட்சிக்கு ஆ என்று வந்தது.
“என்னது கதிரவன் இன்னைக்கு ஆபிஸ் போகலையா? என்ன இது எல்லாமே புதுசா நடக்குது.. ஆனா ஒன்னும் புரிய மாட்டிக்கிதே.. காய்ச்சல் தலை வலி மழையோ வெயிலோ எது என்றாலும் டெப்போ குடோன் என கிளம்பி விடுவான். ஒரு நாள் கூட வீட்டில் இருந்தது இல்லை. ஆனால் இன்னைக்கு என்ன ஆச்சு கதிரவனுக்கு” என மேலும் குழம்பி தவித்தார்.
எல்லோரும் சாப்பிட வந்து விட்டார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் எழுந்துக் கொள்ளவே இல்லை.
“நேத்திக்கு நைட்டே ரெண்டு பேரும் ஒழுங்கா சாப்பிடல.. இப்போ இன்னும் எழுந்தே வரல.. உடம்பு என்னத்துக்கு ஆகும்” காமு கவலை பட்டுக் கொண்டே இருந்த நேரம், பத்து மணிக்கு மேல் மெல்ல கண்களை விழித்தாள் பனிநிலவு. வயிற்றை சுண்டி இழுத்தது பசி..
“என்ன இப்படி பசிக்கிது” முணகிக் கொண்டே கணவனின் நெஞ்சில் இருந்து எழுந்துக் கொள்ளப் பார்க்க, அவளின் இடையில் கதிரவன் காலை போட்டு, முதுகில் போட்டு அவனின் நெஞ்சோடு கொஞ்சமும் அசையாத அளவுக்கு சிறை பிடித்து இருந்தான்.
அவன் எழுந்தால் மட்டுமே அவள் எழ முடியும்.. அவனை தட்டி உசுப்பி விட்டவளை மீண்டும் நெஞ்சோடு இழுத்து அணைத்துக் கொண்டு விட்ட தூக்கத்தை பிடிக்க,
“அச்சோ மணி பத்தாகுது.. விடுங்க மாமா முதல்ல..” அவனிடம் இருந்து விடுதலை பெற பார்த்து முடியாமல், “யோவ் மாமா பசிக்கிது விடுங்க.. நான் போய் சாப்பிடனும்.. கண்ணை இருட்டிக்கிட்டு வருது” என்று அவள் புலம்பிய,
மெல்ல கண்களை விரித்தவன், “லிப் கிஸ் பண்ணிட்டு போடி” என்று எழுந்தவளை தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டவன், அவளின் இதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டு சுவிங்கமாய் மென்று தின்ற பிறகே விட்டான்.
“அப்பா சாமி ஆளை விடுங்க” அலறி அடித்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தவள், எதிரில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து வெட்கம் கொண்டவள், இரசனையாக கணவன் நடத்திய கூடலில் இன்னும் சிவந்துப் போனாள்.
பின் அவசரமாய் தலைக்கு குளித்து விட்டு வெளியே வர, கதிரவன் இன்னும் தூக்கத்தில் தான் இருந்தான்.
அவன் அருகில் வந்து அமர்ந்தது முன் முடிகளை ஒதுக்கி நெற்றியில் முத்தம் குடுத்தவள்,
“டீ எடுத்துட்டு வரேன்.. குளிக்கிறீங்களா மாமா”
“ம்ம்” என்றவன் கண்களை திறக்காமலே தலையை அவளின் மடியில் வைத்து முகம் புதைத்துக் கொண்டு, அவளை இடையை இரண்டு பக்கமும் சிறை செய்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். அவனது முடியை கோதி விட ஆரம்பித்தாள்.
அந்த நேரம் கதவு தட்டப் பட, அவனின் தலையை தலையணியில் வைத்து விட்டு கதவை போய் திறக்க எதிரே காமாட்சியும் ரேவதியும் நின்று இருந்தார்கள் பதட்டத்துடன்.
“உனக்கு ஒன்னும் இல்ல தானே.. தம்பி உன்னை திட்டல தானே..” படபடப்பாய் கேட்ட இருவரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தடுமாற, அவளின் வெட்கமும் புன்னகை முகமும், இதழ்களின் காயமும் எதையோ உணர்த்த,
வாழ்ந்துப் பார்த்தவர்களுக்கு தெரியாதா என்ன..
“சரி சரி.. இந்தா கண்ணு டீ.. ரெண்டு பேரும் குடிச்சுட்டு பொறுமையா கீழ வாங்க.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்ற காமாட்சி மகளை அழைத்துக் கொண்டு கீழே போய் விட்டார்.





