“ப்ச்.. கண்ணம்மா.. அழாதா..” அவன் சொல்லிப் பார்க்க அவள் கொஞ்சமும் கேட்கவே இல்லை.
“இப்ப நீ அழுத.. உன்னை கொன்னுடுவேன்டி” வெடித்தான் கதிரவன்.
“இப்படி உங்க முழுமையான அன்பால கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு முன்னாடி மொத்தமா உங்க கையாள என்னை கொன்னு போட்டுடுங்க.. நிம்மதியா செத்துப்..” அவளை முழுமையாக முடிக்க விடாமல் பட்டென்று அவளை தன் முன்பு அத்தனை ஆக்ரோஷமாக கொண்டு வந்து நிறுத்தியவன் அவளின் இதழ்களை வன்மையாக சிறை செய்து விட்டான்.
பாதி சொற்கள் அவனின் வாய்க்குள்ளே போய் அடங்கிப் போனது. அவனிடம் அப்படி ஒரு ஆத்திரத்தை எதிர் பார்க்காதவள் பெரிதும் தடுமாறிப் போனாள். மூச்சு முழுமையாக அடைத்துப் போனது அவளுக்கு.
அவனின் தோளை தட்டி அடித்து தன்னை விடுவித்துக் கொள்ள பார்த்தாள். ம்ஹும்.. ஒரு நூல் அளவு கூட அவனை அவளால் நகர்த்த முடியவில்லை. இரும்பு மாதிரி இருந்தான்.
அந்த முத்தத்தில் அத்தனை கோவம் இருந்தது. நறுக்கென்று அவனது பற்கள் அவளின் இதழ்களை அத்தனை காயம் செய்தது. அதில் அவளின் கண்கள் லேசாக கலங்கிப் போனது. விடாமல் அவளின் இதழ்களை மேலும் மேலும் காயம் செய்தவனின் செயலில் பனிக்கு தான் அத்தனை பயம் பிடித்துக் கொண்டது.
இதுவரை இதழ் முத்தம் இட்டு இருக்கிறான் தான். மிக மென்மையாக குடுத்து இருக்கிறான். ஏன் வன்மையாக கூட குடுத்து இருக்கிறான் தான். ஆனால் அதில் அதித வன்மை இருந்தாலும் காதல் கொட்டி குவிந்து கிடக்கும். இது போல கோவம் இருக்காது.
அவனை அதிகமாக கோவப்படுத்தி விட்டோம் என்று புரிந்து தான் இருந்தது அவளுக்கு. ஆனால் தன்னை சுயநலம் இல்லாத அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக சிதறடித்துக் கொண்டு இருப்பவனின் அடங்காத முரட்டு பேரன்பை தாங்க முடியாமல் அவள் தவியாய் தவித்துப் போனது எல்லாம் எந்த கணக்காம். அதற்கு எல்லாம் யார் இவனுக்கு தண்டனை கொடுப்பதாம் என்று அவளும் முறுக்கிக் கொண்டாள்.
“கடிச்சு வச்சுக்கோ எனக்கு ஒன்னும் இல்ல..” என்று அவனின் கைப்பாவையாகி விட்டாள்.
வலிக்க வலிக்க அவளை முத்தம் இட்டவன் மூச்சுக்கு அவள் ஏங்குவதை பார்த்த பிறகே விட்டான். அதுவும் முகத்தை மட்டும் லேசாக நகர்த்தினானே தவிர, மற்ற படி அவளின் மொத்த எடையும் அவன் மீது தான் இருந்தது.
நெஞ்சில் கையை வைத்து ஆசுவாம் ஆகக் கூட அவன் அனுமதிக்கவில்லை.
“இன்னொரு முறை இப்படி பேசி பாரு..” பற்களை கடித்து தன் கோவத்தை காட்டினான். அவனின் கோவத்தில் கொட்டிக் கிடந்த பேரன்பில் கண்கள் கலங்கியவள், இந்த முறை அவனின் வன்மையை இவள் எடுத்துக் கொண்டாள். அவனை மேற்கொண்டு பேசவிடாமல் அவனை படுக்கையில் கீழே தள்ளி அவன் மீது இவள் விழுந்து விழுந்த வேகத்திலே அவனின் இதழ்களை இவள் கவ்விக் கொண்டாள்.
அதில் அத்தனை அன்பும் காதலும் கொட்டிக் கிடந்தது. அவன் காட்டிய முரட்டு பேரன்பை இப்பொழுது இவள் கையில் எடுத்துக் கொள்ள, கதிவனின் காதல் நிலை ஆட்டம் கண்டது.
“ஏய்..” என்று அவன் அலற,
“என்னை அலற வச்சு அழ வச்ச உங்களை சும்மா விட மாட்டேன்” என்றவள் தன் முந்தானையால் அவனின் இரு கையையும் கட்டிலோடு கட்டிப் போட்டவள், அவனின் இதழ்களை மேலும் காயம் செய்து வைக்க ஆணவனின் உணர்வுகள் பொங்கி பிரவாகம் எடுத்தது.
“என்னடி பண்ற” பல்லைக் கடித்து தன் உணர்வுகளை அவளிடம் காட்டாமல் மறைத்துக் கொள்ள முயன்றும் முடியாமல் தன் இதழ்களில் விளையாடிக் கொண்டு இருக்கும் பெண்ணவளின் இதழ்களை கடித்து தனக்குள் அத்தனை அழுத்தமாக எடுத்துக் கொண்டவன் ஒரே உருவில் தன் கையை அவளின் சேலை முடிச்சில் இருந்து உருவிக் கொண்டவன் அவளை கீழே தள்ளி அவள் மீது முற்றும் முழுவதுமாக பரவி படர்ந்து விட்டான்.
ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து தடுமாறிப் போனவள் அவன் முன்பு தான் இருக்கும் கோலத்தை எண்ணி சிவந்து போய் அவனை கீழே தள்ளி தன்னை மறைத்துக் கொள்ளப் பார்க்க அதற்கு எல்லாம் அவன் விட்டால் தானே..
விழிகளால் அவளை சிறை செய்து அவளின் எழில் மிகு வனப்பை பார்த்தவன், கொஞ்சமும் தாமதிக்காமல் தன் முகத்தை அவ்விடத்தில் பதித்துக் கொண்டான்.
அன்றைக்கு அவளிடம் கேட்ட பெர்மிஷனை இன்று செயலாக்கம் செய்துக் கொள்ள முனைந்தவன், சட்டென்று சுதாரித்து,
“முழுசா உன் கழுத்துல தாலி கட்டிட்டு வந்து மொத்தமா எடுத்துக்குறேன்டி.. அது வரை இந்த இதழ் முத்தம் போதும்” என்று சொல்லி அவளின் இதழ்களை எடுத்துக் கொண்டவன் இரவு வரை அவளை தன் அறையிலே வைத்துக் கொண்டான்.
இருவருக்கும் கண்கள் எல்லாம் எரிந்தது. விடிய விடிய ஒரு பொட்டு தூக்கம் இல்லை இருவருக்கும். ஒருவரில் ஒருவர் பின்னிக் கொண்டு படுத்து இருந்தார்களே தவிர ஒரு கூடல் இல்லா கூடலை கூட செய்துப் பார்க்கவில்லை.
அதில் கூட கதிரவன் அவ்வளவு கட்டுப்பாட்டோடு இருக்கக் கண்டு பனிநிலவுக்கு அத்தனை ஆச்சரியம்.
“ம்ம்.. கிரேட் மாமா நீங்க” என்றாள்.
“அது அப்படி இல்லடி.. எனக்கு உதராணமா உங்க அப்பா அம்மா இருக்காங்க முன்னாடி.. தெரியாம ஒரே ஒரு முறை தப்பு பண்ணிட்டு வாழ்நாள் முழுக்க அவங்க பட்ட வேதனை இருக்கே.. வார்த்தையால சொல்ல முடியாது.. அப்படி இருக்கும் பொழுது தவறா கூட உன்னை தொட முடியல..” என்றவனின் நெஞ்சில் படுத்துக் கொண்டவளுக்கு அவனின் நேர்மை ரொம்ப ரொம்ப பிடித்துப் போனது.
“முரட்டு தனமான அன்பு இருந்தாலும் அதை அவ்வளவு கண்ணியமா காட்டுறீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க மாமா நீங்க.. ஆனா எனக்கு தான் இருக்க இருக்க உங்க மேல பைத்தியம் கூடிட்டே போகுது. நாளுக்கு நாள் அதிக மாகிட்டே இருக்கு.. சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க என்னை இல்லன்னா உங்க பாடு தான் கஷ்ட்டம்..” என்றவள் அவனின் மீது ஏறி படுத்துக் கொண்டாள்.
அவளின் இடையோடு கைப்போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,
“எனக்கு மட்டும் ஆசை இல்லையாடி.. உன்னை விட அதிக ஆசையோட இருக்குறேன்.. ஆனா என்ன பண்றது இன்னும் முழுசா ஒரு மாசம் இருக்கு.. அதுக்குள்ள கல்யாணத்துக்கு நெய்ய வேண்டிய பட்டுப்புடவை எல்லாம் நெஞ்சு வரணும் இல்லையா?” என்றவன்,
“அதோட கல்யாணத்துக்கு ஸ்பெஷலா டிசைன் பண்ண சொல்லி நகைக்கு ஆடர் குடுத்து இருக்கேன்” என்றவன்,
“ஏன்டி இந்த லேகங்கா மாதிரி எதுவும் வேணுமா ரிஷப்ஷனுக்கு?” கேட்டான்.
“ம்கும்.. ஒரு நாள் கூத்துக்கு எதுக்கு அதெல்லாம்.. அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஆனா அதே மெட்டிரியல்ல வெயிட்லஸ் ப்ளஸ் ஒர்க் அதிகாமா இருக்குற புடவை வேணும். அதுவும் ப்ளூ கலர்ல” என்று தன்னுடைய எதிபார்ப்பை சொன்னாள்.
“அதுக்கு மேட்சா அதே கலர் வைரத்துல செட் வேணும்” என்றாள்.
“வேற என்ன வேணும்” என்று அவளின் மூக்கோடு மூக்கு உரசி ஆசையாக கேட்டான்.. ஏனெனில் முதல் முறையாக அவனிடம் அவளே வாய் விட்டு கேட்கிறளே பின்ன ஆசை வரதா என்ன..
“ஹேர் க்ளிப்பும் அதே கலர்ல வேணும்”
“வேற என்ன வேணும்” கேட்டான். அவள் யோசிக்க அவளின் பாவானைகளை தனக்குள் போக்கசமாய் அள்ளிக் கொண்டான் கதிரவன்.
“வேற என்ன வேணும்” என்று அவனை போலவே கேட்டு யோசித்தவள்,
“அதே கலர்ல தான் நீங்களும் ரிஷப்ஷன்ல ட்ரெஸ் போடணும்”
“ஓகே..”
“நம்ம மட்டும் இல்ல.. நம்ம பேமிலி மொத்தமும் அதே கலர்ல தான் போடணும்”
“டன்..”
“அப்புறம் என்னோட பர்ஸ்ட் நைட்டுக்கு” என்று அவள் ஆரம்பிக்க,
“நோ.. நோ.. அது மட்டும் என்னோட சாய்ஸ் தான்.. ரிஷப்ஷன் வரை தான் உன்னோட விருப்பம். அதுக்கு பிறகு வர்ற சாந்தி முகூர்த்தம் முழுக்க முழுக்க என்னோட விருப்பம்” என்றான் அழுத்தமாக.
“அப்படியா அப்போ ஓகே.. பட் மத்தது எல்லாம் என்னோட விருப்பம் தான். அதுவும் எனக்கு சங்கீத் பங்ஷன் எல்லாம் வைக்கன்னும்” என்றாள்.
“அதுக்கு முன்னாடி உனக்கு தட்டு சுத்தணும்டி” என்றான்.
“அப்படின்னா” புரியாமல் அவனிடம் கேட்டாள்.
“அது வயசுக்கு வந்தா மாமன் காரன் சீர் செய்வான் அது தான்” என்றான்.
“ஓ..” என்றவள், “ஆமா சார் எனக்கு என்ன சீர் குடுப்பீங்களாம்?” அவனின் மீசையை முறுக்கிக் கொண்டே அவள் கேட்க, அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இளைந்துக் கொண்டே,
“என்னடி வேணும்” அவளிடமே கேட்டான்.
“எனக்கு ஒரு தட்டு நிறைய உம்ம முத்தம் வேணும்” என்றாள். அவளின் கோரிக்கையில் முகம் இன்னும் பூவாய் மலர,
“தட்டுக்கு எல்லாம் முத்தம் குடுக்க முடியாது.. உன் கன்னங்களும் உன் இதழ்களும் தட்டா இருந்தா என் வாழ் நாள் முழுக்க முத்தத்தை அதில் நிரப்பிக் கிட்டே இருப்பேன்டி” என்றான்.
அதில் இன்னும் உருகிப் போனவள் அவனின் விழியோடு விழி வைத்துப் பார்த்தவள், “இந்த கதிரவன் மொத்தமா எனக்குள்ள வேணும்” என்றாள்.
“அப்படியே உனக்குள்ள வந்திடுவான்.. வேற..”
“இவனை மாதிரி ஒரு பிள்ளை வேணும்”
“ம்ஹும் மூணு பிள்ளை” என்றான்.
“சரி மூணு பிள்ளை.. ஆனா மூணும் உம்ம மாதிரியே வேணும்”
“ஒரே ஒரு பொம்பளை பிள்ளை பெத்துக்கலாம்டி.. அதுவும் உன்னை மாதிரி” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“அதுக்கு நான் ஒரு காலும் சம்மதிக்க மாட்டேன்.. என்னை மாதிரி அவ இருக்கான்னு உங்க அன்பு அவ மேல திரும்பிடும். அதுக்கு மட்டும் நான் சம்மதிக்க மாட்டேன். இந்த கதிரவனோட மொத்த அன்பும் இந்த பனிநிலவுக்கு மட்டும் தான்” என்றாள் முறைப்புடன்.
“ரொம்ப தான் பொசசிவ்” என்றவன்,
“நீ என்னோட உயிர்டி.. உன் மேல வச்ச அன்பு வேற யார் மேலையும் வைக்க முடியாதுடி.. வைக்கவும் மாட்டேன்” உறுதியாக சொன்னவன் அவளை காலம் முழுவதும் நெஞ்சில் வைத்து தாங்கினான் என்றால் கொஞ்சமும் மிகையில்லை.





