வேரல் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் நிரம்பியது. அதை ஓரக்கண்ணால் பார்த்த இளந்திரையனுக்கு நெஞ்சில் முள் தைத்தது.
“உன் நல்லதுக்கு தான் பாப்பா” சொல்லிக் கொண்டவன்,
“நானும் அந்த பையனை பார்த்து பேசி இருக்கேன்.. ரொம்ப நல்ல பையன் தான்” என்றான் இளந்திரையன்.
“உங்க எல்லோருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே தான். ஆனா பாப்பா என்ன சொல்றான்னு கேட்கணும்ல” என்று முரளி சொல்ல,
அவள் யாருடைய முகத்தையும் ஏறெடுத்துப் பாராமல்,
“உங்களுக்கு எது சரின்னு படுதோ அதையே செய்ங்க ப்பா. எனக்கு நீங்க என்ன செஞ்சாலும் ஓகே தான்” என்றவள் முயன்று தட்டில் இருந்த உணவை முழுங்கி விட்டு ஸ்கூலுக்கு கிளம்பி விட்டாள்.
போகும் முன்பு பாட்டி அவளை நிறுத்தி,
“சீக்கிரம் வந்திடுடா” என்றார்.
லேசாக புன்னகைத்து, “கண்டிப்பா வந்திடுவேன் ஆச்சி.. நீங்க நான் என்னென்ன ஜுவெல்ஸ், சேரி போடணுமோ அது எல்லாவற்றையும் எடுத்து வைங்க.. நான் வந்திடுவேன்” என்றவள் தாயிடமும் விடை பெற்றுக் கொண்டு தன் ஸ்கூலுக்கு வந்தாள்.
வந்தவளுக்கு அது வரை அடக்கி வைத்து இருந்த கண்ணீர் சரம் தொடுக்க, டோன்ட்டிஸ்ட்ரப் கார்ட் வெளியே போட்டு விட்டு சத்தமில்லாமல் கதறி தீர்த்தாள்.
தன்னை ஒரு பணியாளாக கூட சேர்த்துக் கொள்ள பிடிக்காமல் இருக்கும் கங்குவனை எண்ணி எண்ணி கலங்கிப் போனாள்.
நேற்றைக்கு நடந்துப் போன நிகழ்வுகளை எண்ணியவளுக்கு நெஞ்சில் அத்தனை பாரமாகியது. என்னெவோ அவன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது போல நாயை விரட்டுவது போல விரட்டியவனின் செய்கையில் காதல் கொண்ட மனம் வாடி வெதும்பி போனது.
அவனாக தானே தன்னை தேடி வந்து பிள்ளையை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்னு நின்னான். அதோடு வீட்டுக்கு வேற அவனது பிள்ளை வரா சொல்லிய பொழுது கூட ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு கிளம்பும் நேரம் அவன் பேசிய பேச்சு, என்னவோ அவள் தீண்ட தகாதவள் போலவும் அவனிடம் நெருங்கிப் பழகுவது போலவும் கீழ்த்தரமாக நினைத்து இனி வராதன்னு சொன்ன சொல் அவளின் நெஞ்சை இரண்டாக வெட்டிப் போட்டது.
இனி அவன் இருக்கும் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது என்று உள்ளுக்குள் உறுதி எடுத்துக் கொண்டவள், வேகமாய் தன் அண்ணனனுக்கு போன் பண்ணினாள்.
“பாப்பா” என்று அவன் விளிக்க,
“உன் பிரெண்ட் கிட்ட என்னை பொண்ணு பார்க்க வராங்கன்னு சொல்லக் கூடாது. எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிச்சு இருக்குன்னும் சொல்லக் கூடாது. அந்த மாப்பிள்ளையை தான் நான் கல்யாணம் செய்துக்க போறேன்னும் நீ சொல்லக் கூடாது. முக்கியமா என் சம்மந்தப்பட்ட எந்த விசயமும் உன் பிரெண்ட் கிட்ட பகிர்ந்துக் கொள்ளக் கூடாதுண்ணா” என்று எடுத்த உடனே அவள் சொல்ல, இளந்திரையனுக்கு பெருமூச்சு வந்தது.
“சரிடா” என்றவன்,
“பாப்பா உனக்கு இந்த கல்யாணத்துக்கு ஓகேயா?” என்று கேட்டான். அவனுக்கே இது அபத்தமான கேள்வி என்று தெரிந்தது தான். ஆனால் அவளின் மன உணர்வுகளை அவள் வாயால் தெரிந்துக் கொள்ளவே கேட்டான்.
“எனக்கு ஓகே தான் அண்ணா” என்று பிசிறு தட்டிய குரலில் சொல்லியவள் அடுத்த நிமிடம் போனை வைத்து இருந்தாள்.
ஏகத்துக்கும் பெருமூச்சு வந்தது அவனுக்கு.
“ப்ச் இது எங்க போய் முடியுமோ தெரியல” தனக்குள் சொல்லிக் கொண்டவன், டியூட்டி பார்க்க கிளம்பி விட்டான்.
அன்று மாலை விரைவாக வீட்டுக்கு வந்தவள் இனி எக்காரணத்தை கொண்டும் கங்குவனை மீட் பண்ணவேக் கூடாது என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவள் பாட்டியும் அம்மாவும் எடுத்து வைத்த்ஹா புடவையை கட்டி, லைட்டாக மேக்கப் போட்டு, அளவாக ஜுவல்ஸ் போட்டு என தேவதையாக தயாராகி வந்தாள்.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் வர, வந்தவர்களை அமரவைத்து, உபசரித்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியாக மனம் விட்டு பேச சொல்லி சொல்ல, இருவரும் கார்டேன் பக்கம் தனித்து பேச தொடங்கினார்கள்.
“ஹாய் வேரல் என்னை பத்தி ஏற்கனவே வீட்டுல சொல்லி இருப்பாங்க. இருந்தாலும் என்னை பத்தி நானே சொல்லிடுறேன். நான் கார்த்திக். ஐடில இருக்கேன்.. மேக்சிமம் ஆண் சைட் அதிகம் வரும். அப்படி வரும் பொழுது உன்னையும் கூட்டிட்டு தான் போவேன். நாம ஹனிமூன் போன மாதிரியும் ஆச்சு.. என் வேலையை பார்த்த மாதிரியும் ஆச்சு. உன் ஸ்கூலை பத்தி கேள்வி பட்டேன். குட் ஒர்க். மேரேஜ்க்கு பிறகும் நீ உன் ஸ்கூலை ரன் பண்ணலாம். பிகாஸ் அது உன்னோட உழைப்பு. அதை மூட சொல்லி எனக்கு சோறாக்கி போட்டுட்டு வீட்டோட இருன்னு சொல்ல மாட்டேன்” என்று அவன் சொல்ல,
நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“என்ன வேரல் எதுவும் சொல்லு” என்று அவன் சொல்ல,
“நீங்களே நல்லா தான் பேசுறீங்க.. இதுல நான் சொல்ல என்ன இருக்கு.. நீங்க ஸ்கூலை மூட சொன்னா கூட எனக்கு ஓகே தான். எனக்கு முழு நேர ஹவுஸ் வைபா இருக்க தான் ஆசை” என்ற நேரம்,
“அம்மா”ன்னு கூவிக் கொண்டே வந்து அவளின் காலைக் கட்டிக் கொண்டான் கங்குவனின் பிள்ளை சமரன்.
“சாம் இங்க எப்படி வந்த? அதுவும் தனியா வந்து இருக்க?” என்று அவனின் உயரத்துக்கு கீழே அமர்ந்து அவனிடம் விசாரிக்க,
“அப்பா” என்று அவன் கையை காட்ட, புரியாது அவன் கைக்காட்டீய திசையை பார்த்தாள். அவர்களை வெகுவாக சமீபத்து நின்று இருந்தான் கங்குவன்.
அவனின் கண்கள் ஏகத்துக்கும் சிவந்துப் போய் இருந்தது.
“அப்பாவோட வந்தியாடா கண்ணா?” கேட்டவள் அவனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, தன் எதிரில் நின்று இருந்த கார்த்தியை பார்த்தவள்,
“சாரி கார்த்திக் இவனை பத்தி உங்களுக்கு தெரியாது இல்லையா? இவன் தான் என்னோட பிரெண்ட். ஆனா நான் இவனுக்கு அம்மாவாம்.. அம்மான்னு தன் கூப்பிடுவான். அவனுக்கு அம்மா இல்ல கார்த்திக்” உள்ளே போன குரலில் சொன்னவளை கூர்ந்துப் பார்த்த கார்த்திக்,
“நோ ப்ராப்ளம் வேரல்.. உன் அண்ணன் சொன்னாப்ள..” என்றவன்,
“ஹாய் சாம்” என்று குட்டியிடம் கையை நீட்டினான் கார்த்திக். அவன் தாயின் முகம் பார்த்து கைக் குடுக்கவா என்று பார்க்க, வேரல் தலை அசைத்தாள். அதன் பிறகே அவனிடம் கையை நீட்டினான் வாண்டு.
“பார்ரா..” என்று சிலாகித்த கார்த்திக்,
“உங்க அம்மா சொன்னா தான் எனக்கு கையை குடுப்பீங்களா சார்” என்று பெரிய மனிதனிடம் பேசுவது போல கேலி செய்து அவன் கேட்க,
அதில் வெட்கப்பட்டு தாயின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு சின்ன விழிகளுடன் அவனை பார்த்து கள்ளமாக சிரித்தான் பிள்ளை.
“அச்சோ அழகுடா கண்ணா” என்று சொன்னவன், “நமக்கும் பிள்ளை பிறந்தா இப்படி தான் இருப்பான்ல” என்று அவன் கேட்க, திடுக்கிட்டுப் போனாள் வேரல்.
“அது அது..” என்று மென்று முழுங்கியவள், பின் கங்குவன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து,
“கண்டிப்பா” என்று உறுதியாக மொழிந்தாள்.
அதில் கங்குவனுக்கு கடுப்பு உச்சிக்கும் ஏறியதோ என்னவோ..
“சமரன்” என்று குரல் கொடுத்தான். ஆனால் அவனோ தாயை விட்டு அங்கும் இங்கும் அசையவில்லை.




