மயூவும் ஆதியும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நிற்பதை கண்ட ரஞ்சனி சத்தமில்லாமல் போக எண்ணினாள். ஆனால் அவளது கை பட்டு உடைந்த பொருளால் ஏற்பட்ட சத்தத்தில் இருவரும் களைய...
மயூரா தேவி ஆதி தேவனை போக சொல்ல... அவனோ அழுத்தமாய் இருந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே நிற்க... அதில் ரஞ்சனி சற்றே களைந்து
“நான் போறேன் மயூ. மாலை வந்து உன்னை பார்க்கிறேன்..” என்று சொல்லி செல்ல... அதன் பிறகு ஆதியின் காதல் லீலைகள் மிக அழகாக மயூராவிடம் அரங்கேறியது...
அதில் காதல் தேவனே தன் கண்களை மூடிக்கொள்ள மயூவின் நிலையை பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன...?
அந்த அளவு பெண்ணவளை சிவக்க வைத்திருந்தான். தனது மோகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அலுவலகத்துக்கு கிளம்பினான் அவளுடன்.
போகும் போது களைந்த தன் முடிகளை கோதிவிட்டுக்கொண்டே காரை ஓட்ட... ஓரக்கண்ணால் அவனை பார்த்தவளுக்கு முகம் மீண்டும் சிவந்து போனது.
ஏனெனில் அவளால் தானே தலை கலைந்தது.. அதை அவன் ஜாடையாக உணர்த்த... மயூவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
“ஆமா ரஞ்சனியோட அப்பா இன்னும் அவளை தேடி வரவே இல்லையே... ஏன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா...?” என்று தூண்டிவிட்டான் ஆதி. அப்பொழுது தான் அவளுக்கே அந்த விஷயம் உரைத்தது.
“ஆதி...” என்றாள் யோசனையாக...
“எனக்கு தெரிஞ்சு இந்த இஷ்யு மிக பெரிய பிரச்சனையா வெடிக்கும்னு நினைக்கிறேன்...” என்றான்.
“ப்ரெஸ்க்கு இந்த விஷயம் போனா...”
“போய் சேர்ந்து இருக்கும்... பட் ஆக்சன் இப்போ இருக்காது என் கெஸ் படி...”
“எப்படி சொல்றீங்க ஆதி...” குழப்பமானாள்.
அவளிடம் ஒரு வீடியோ ஒன்றை காட்ட... அதை பார்த்தவளுக்கு முகமும் அகமும் வெந்து போனது.
“மாமா... இதெப்படி இதை பார்த்தும் உங்களால சும்மா இருக்க முடியுது... ப்ளீஸ் டு சம்திங் ஆதி...”
“ஆட விட்டு அடிக்கணும் மயூ... அப்போ தான் அடி பலமா விழும்... மொத்த பிளானும் ஊத்திக்கணும். அதுல தான்டி கிக் இருக்கு.” என்று அசால்ட்டாய் சொல்ல...
“ஆதி அப்போ நான் என் வேலையை ஆரம்பிக்கவா...” கேட்டாள்.
“இன்னைக்கு இரவு போகலாம்...” என்றான்.
“நோ ஆதி. நான் மட்டும் தான் போவேன். நீங்க ஆபிசையும் வீட்டையும் பார்த்துக்கோங்க...” உறுதியாய் சொன்னவளை கடுப்புடன் பார்த்தவன்,
“அப்படியெல்லாம் தனியா விட முடியாது.” என்று கொம்பனுக்கு கொம்பனை நின்றான் ஆதி.
“ஆதி இது என்னோட ஜாப்... சோ ப்ளீஸ் ஸ்டே அவே...” என்றாள் கோவத்துடன்.
“அது தான் முடியாதுன்னு சொல்றனே. எதுக்கு வீண் பிடிவாதம் பிடிக்கிற. உன்கூட நானும் வருவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடி...” என்றவன் அதுவரை இருந்த நிதானத்தை கைவிட்டவன் வேகமாய் காரை செலுத்த பற்றிக்கொண்டு வந்தது மயூரா தேவிக்கு.
சீதாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. இருவரது கல்யாணமும் நின்று போய்விட்டது.. அதனால் அவர் திட்டம் தவிடு பொடியாகி இன்னும் பழைய சிக்கலிலே வந்து நின்றது.
“சீதா ஏதாவது யோசி... இதுங்களை இப்படியே விட்டா சரி வராது... ஏதாவது செய்யணும்...” என்று யோசித்தபடி ரஞ்சனி கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருப்பது கண்ணில் பட... வேகமாய் அவளிடம் சென்றார்.
சீதா தன்னை நோக்கி வருவதை கண்ட ரஞ்சனி வேகமாய் எழுந்து நின்றாள்.
அவளது பணிவை கண்ட சீதா போலியாய் புன்னகைத்து வைத்தார்.
“சொல்லுங்க அத்தை...” என்று அவளும் புன்னகைத்து அவரிடம் கேட்க...
“ஆமா... நீ ஆதியை கல்யாணம் பண்ணிக்க தானே இந்த வீட்டுக்கு வந்த...” என்று கேட்டார்.
அதில் முழித்தவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றாள்.
“சொல்லு... நீ ஆதியை கல்யாணம் பணிக்க தானே இங்க வந்த...” என்று மீனும் கேட்டார்.
“ஆ... ஆமா அத்தை..” மிக பவ்யமாக சொன்னாள்.
“ஆஹா... ரைட்... ஓகே அப்போ நீ என்ன பண்ற... ஆதியோட எல்லா தேவைகளையும் இனி நீ தான் செய்யிற.. அதோட இல்லாம இந்த வீட்டு மூத்த மருமகளா என்னென்ன கடமை இருக்கோ இனி எல்லாத்தையும் நீ தான் பார்க்கணும்... சரியா..?”
“அது... அத்தை.. நான் எப்படி... அதெல்லாம் செய்யிறது. இன்னும் முறையா எதுவும்...”
“அதை பிறகு பார்த்துக்கலாம்... நீ முதல்ல ஆதியை கவனி... பிறகு கொஞ்ச கொஞ்சமா இந்த வீட்டை உன் கைக்குள்ள கொண்டு வந்துடு... உனக்கு பக்க பலமா நான் இருக்கேன் ஓகேவா...” ரஞ்சனியுன் டீல் போட அவளும் சரி என்றாள்.
அதன் பிறகே சீதாவிற்கு நிம்மதியானது. சீதா வந்து பேசிவிட்டு போனதிற்கு பின் மயூவிற்கு போன் செய்து சீதா அத்தை இப்படியெல்லாம் செய்ய சொன்னாங்க என்று அவளிடம் சொல்ல... மயூவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அப்பொழுது தான் ஆதியுடன் மீட்டிங் முடிந்து அவனுக்கு அலுவலகத்தில் உதவி செய்துவிட்டு, கொஞ்சம் பரபரப்பு குறைய தன் கல்லூரியை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தாள் காரில்...
ஆனால் அவளது படபடப்பையும், பரபரப்பையும் கூட்டுவது போல ரஞ்சனி போன் செய்திருந்தாள். படபடக்கும் மனதை அடக்கியபடி
“நீ என்ன சொன்ன ரஞ்சனி..” என்று கேட்டாள்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மயூ... வேற வழியே இல்லாம தான் சரின்னு சொன்னேன்...” என்றாள் பாவமாக.
“சரி விடு பார்த்துக்கலாம்...” என்றவளுக்கு ஆதியின் காதல் கண் முன் வந்து நின்றது.
கிரீன் மலையில் அன்று அவன் சொன்ன சொற்கள் எல்லாம் காட்சியாய் விரிய கண்களில் இருந்து கண்ணீர் முத்து சரம் தொடுத்தது.
ரஞ்சனி சொல்லுவதை வைத்து பார்த்தால் இனி ஆதியை ரஞ்சனியிடம் விட்டுவிட்டு இவள் ஒதுங்கி போவது போல் அல்லவா சூழ்நிலை அமைந்து இருக்கிறது.
இந்த சூழலை எப்படி உடைப்பது. எப்படி ஆதியை கைப்பற்றுவது. இது வரை இவளது ஆட்டத்தில் சீதா உள்நுழைந்தது இல்லை.
ஆனால் இப்பொழுது அவர் நேரடியாக களம் இறங்கி இருக்கிறார். எனில் இப்பொழுது அவருக்கு அடங்கி தான் போகனுமா...? இல்லை எதிர்த்து நிற்க வேண்டுமா...? என்று குழம்பி போனாள்.
அதோடு ஆதியை எண்ணுகையில் உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது. அவன் இப்படியும் இருப்பான். அப்படியும் இருப்பான். அவனை முழுதாக நம்பவும் முடியாது.
என்னை வெறுப்பேத்த வேண்டும் என்றே ரஞ்சனியின் பணிவிடைகளை ஏற்றுக்கொண்டால் என்ன ஆவது.
கூடவே அவன் அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் கோவத்தில் கொதித்து
“எல்லாம் உன்னால தாண்டி...” என்று சினந்து மொத்தமாய் தன்னைவிட்டு விலகி சென்றால் என்று எண்ணும்போதே பெரிதும் கலங்கி போனாள்.
அதுவும் அவன் சொன்ன சொல்... கண் முன் வந்து பயம் காட்டியது...




