வாசற் படியிலே இருவரும் நின்று தங்களது உணர்வுகளை கொட்டிக்கொண்டு இருக்க... ரஞ்சனி எதார்த்தமாய் அங்கு வர.. அவளது கண்களில் அந்த காட்சி பட்டது. சட்டென்று அவளது முகம் சிவந்து போய்விட்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியவள் அங்கு பிடிமானதுக்கு இருந்த அலங்கார மேடையை பிடிக்க, அதிலிருந்த பிளவர் வாஷ் கீழே உடைந்து சத்தமிட வேகமாய் பிரிந்து நின்றார்கள் ஆதியும், மயூவும்.
அவர்கள் கலைந்ததை கண்டு, “சாரி, நான் தப்பான வேலையில வந்துட்டேன்.” என்று தடுமாறினாள்.
ஆதி கண்களில் சீற்றத்துடன் அவளை பார்க்க, மயூ “பரவால ரஞ்சனி... வாங்க... நாங்க சும்மா தான்...” என்றவள் ஆதியை போக சொல்லி கண்ணை காண்பிக்க, அவனோ அங்கிருந்து போகாமல் அழுத்தமாய் நின்றான்.
அதில் ரஞ்சனிக்கு சங்கடமாய் போய்விட்டது. அதனால் “இல்ல மயூ... நான் அப்புறம் வந்து உன்னை பார்க்கிறேன்... நீ ஆபிஸ் கிளம்பு.” என்று சொல்லிவிட்டு அவள் கீழே சென்றுவிட்டாள்.
அவள் சென்றவுடன் ஆதி வன்மையாய் மயூவின் இதழ்களை கொய்தவன், குருதி வரும் வரை அவளை விடவே இல்லை.
அதில் அவளுக்கு கண்கள் கலங்கி போக... “என்ன ஆதி இவ்வளவு முரட்டு தனம்...” என்று தன் குருதி பூவை துடைத்துக்கொண்டே கேட்க... அதில் இன்னும் கிளர்ந்து போனவன், மீண்டும் அவளை நாடி அவளது இதழ்களில் வன்மையாக கவி பாடினான்.
அவனுக்கு வசதி செய்து கொடுப்பது போல அவள் அணிந்து இருந்த புடவை அவனது தொடுகையில் அவளது உடல் நெகிழ்ந்ததில், இடையை மறைத்த புடவை விலகி போய் அவனது கரத்திற்கு வழி விட்டு நிற்க... ஆதி வன்மையுடன் அவளது இடையை பற்றி தன்னோடு நெருக்கொண்டான்.
அதில் “ஆதி...” என்று முணகினாள்.
“ம்ம்ம்” என்றவன் மேலும் அவளுடன் ஒன்ற...
“ஆதி ஆபிஸ் போகலையா...?”
“போகணும்...” என்றவன், அவளது கழுத்தில் முகம் புதைத்து மெலிதாக கடிக்கவும் செய்தான். அதில் அவளது உணர்வுகள் எல்லாம் ஒன்று கூட,
“ஆதி...” அவனது தலை முடியை பற்றிக்கொண்டு தன்னோடு இன்னும் நெருக்கிக்கொண்டாள். அவனது இம்சையை தாங்க முடியாமல்.
அவனது வலிமையான உதடுகளும், அடர்ந்த கேசம் கொண்ட மீசையும், குத்தூசி போல அவளது கழுத்தில் குத்தியதோடு இல்லாமல், மேலும் கீழும் இறங்கி ஏறி... அவளை வதைக்க, அவன் செய்த செயல்கள் எல்லாம் அவளை கிறங்கடிக்க செய்தது.
“தேவ்...” என்றவள் அவனது முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்.
அவன் அவளின் கண்களோடு தன் கண்களை கலக்க விட... அவனது கண்களை பார்த்துக்கொண்டே அவனது இதழ்களில் தன் இதழை புதைத்தாள்.
அவளது அந்த செயலில் புன்னகை புரிந்தவன் அவளுக்கு உடன் பட்டு நின்றான். அவனது நெகிழ்வு தன்மையிலும் ஒப்புக்கொடுத்து நின்ற செயலிலும் தன்னை தொலைத்தவள்,
“என் மேல கோவமா இருக்கீங்களா...? இல்ல காதலா இருக்கீங்களா..?” என்று அவன் முரண்பட்டு நின்ற குணங்களை சுட்டி காட்டி கேட்டவளை இன்னும் நெருக்கி தன் கைகளில் சுருட்டிக்கொண்டு நின்றான்.
“எனக்கு வேற ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்ததுல உன் மேல கடும் கோவத்துல இருக்கேன்... அதே போல அளவிட முடியாத அளவு உன் மேல காதலும் வத்து இருக்கேன். இது ரெண்டையும் உன் மேல தானே நான் கண்பிக்க முடியும்.”
“அதோட இல்லாம என் அதித வெறுப்புக்கு ஆளானதும் நீ தான். அதித அன்புக்கு ஆளானதும் நீ தான். அதனால நீ இதை என்கிட்டே அனுபவிச்சு தான் ஆகணும்.”
“உன்கிட்ட கோவத்தை எந்த அளவு காண்பிக்கிறனோ அதே அளவு அன்பையும் காண்பிப்பேன். உன்கிட்ட என் உணர்வுகளை காண்பிக்காம இருந்தா நான் பைத்தியமா போயிடுவேன். என்னோட ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீ வேணுன்டி... அந்த நிமிசத்துல நான் எப்படி இருக்கேனோ அதை அப்படியே ஏத்துக்கோ...”
“உன்கிட்ட கோவத்தை காண்பிக்கிறனா.. ஏத்துக்கோ... அதே போல இதோ இப்ப காதலை காண்பிக்கிறேன் இல்லையா... அதையும் உள்ளது படியே ஏத்துக்கோ... சரியா...? இது தான் நான். எனக்கு தனி தனியால்லாம் காண்பிக்க தெரியாது. அந்தந்த நிமிசத்துல அப்படி அப்படியே இருக்கேன். நீயும் அப்படியே இரு.” என்றான் ஆளுமையுடன்.
“அது சரி காதல் பண்ண இப்படி ஒரு டெக்னிக்...” என்றாள் மயூ. அப்படி சொன்னவளை அதித மோகத்துடன் பார்த்தவன், மையலாய் புன்னகைத்து, தன் உயரத்துக்கு அவளை தூக்கி
“அதுல உங்களுக்கு என்ன மேடம் கஷ்டம்... ஜஸ்ட் என்ஜாய் பண்ண வேண்டியது தானே...” என்று அவளின் உதடு உரச சொன்னான்.
அதில் கிளர்ந்தவள் அவனது தோளில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
அவளது வெட்கத்தை கண்டவன் இன்னும் அவளை உயர தூக்க அதில் பயந்தவள்
“இறக்கிவிடுங்க ரிஷி...” அலறினாள்.
“முடியாது..” என்று இன்னும் உயர தூக்கியவன், தன் முகத்துக்கு நேராக அவளது வயிறு வருமளவு தூக்கியவன், அவளது வயிற்றில் தன் முகத்தை பதித்து தன் ஊசி கம்பி போல இருக்கும் மீசை முடிகளை கொண்டு அங்கும் இங்கும் திருப்பி, உதடு படிய முத்தமும் இட்டான்.
அதில் மொத்த உணர்வுகளும் உச்சம் பெற்று அவளுடம்பில் ஓட... கிறக்கத்துடன் விழிகளை மூடியவள், உணர்வு மிகுதியில், அவனது தலையை பற்றி ஜெல் விட்டு சீவி இருந்த தலை முடியை கலைத்து பிய்த்து எறிந்தாள்.
அவளது அந்த செயலில் அவளை மிக அதிகமாக தூண்டி விட்டு இருப்பதை உணர்ந்தவன் அவளுடன் இன்னும் விளையாட ஆசை கொண்டான்.
ஆனால் கடமை அழைக்க அவனால் அவளுடன் இணைய முடியாமல் போனது... அந்த கோவத்தை அவளிடமே காட்ட... அவனை தடுக்க முடியாமல்
பெண்ணவள் முகமும் அகமும் மெய்யும் சிவந்து போய் நின்றாள்.
அதில் இன்னும் ஆதி தேவனின் மோகம் அதிகரிக்க... அவனது வேகத்தை தாள முடியாமல் தன்னிடம் தப்பு தப்பாய் நடந்துக்கொள்ளும் அவனது உதட்டுக்கு அவனின் ஆசை படி தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தும் படி அதிக வன்மையுடன் அவனது இதழ்களை கடித்து வைத்தாள்.
அதில் அவனின் மோகம் குறையாமல் இன்னுமே அதிகரிக்க ஏன் அவனை வதைத்தோம் என்று நொந்து போகுமளவு எண்ண வைத்தான் ஆதி.




