இதோடு அவளை இரண்டு மூன்று முறை முத்தம் இட்டு விட்டான். எதுவும் நினைவில் இருக்கவில்லை என்று பெருமூச்சு விட்டவள் அவனின் முத்தத்தில் மயங்க தான் செய்தாள் நறுவேரல்.
தெளிஞ்சா ஒன்னு கூட ஞாபகம் இருக்காது. எல்லாம் என் தலை எழுத்து.. தனக்குள் முணகிக் கொண்டவள் அவனின் கைப்பிடியில் நின்றாள்.
சூடான இதழ் முத்தங்கள் பரிமாறிய பிறகும் அவளை விடாமல் சுவரில் சாய்த்து சிறை செய்தவன், போதை ஏறிய விழிகளுடன் அவளின் முகத்தை ஆராய்ந்தவன்,
“உன் கண்ணுல என்னத்தடி வச்சு இருக்க? என்னை கட்டி இழுக்குற..” சொன்னவன் அவளின் மார்பில் கை வைத்து, “உன் மனசுல என் பிள்ளைக்கு இடம் குடுத்து வச்சு இருக்கியே எனக்கு மட்டும் ஏன்டி இடம் குடுக்க மாட்டிக்கிற? எனக்கும் உன் நெஞ்சுல இடம் வேணும்” சொன்னவன் கையை எடுத்து விட்டு முகத்தை அவ்விடத்தில் புதைத்துக் கொண்டான்.
அவனது செயலை தடுக்கும் நிலையில் பெண்ணவள் இல்லை. அவன் மீது உண்டான காதல் அவளை சூழ்ந்து வசியம் செய்ய, போதாதற்கு அவன் இதழ் முத்தமும் அவன் சிந்திய காதல் வார்த்தைகளும் அவளை அசைய முடியா நிலையில் கட்டி வைத்தது.
அவன் இன்னும் கொஞ்சம் உளற மாட்டானா என்று பேதை மனம் ஏங்கியது. “உங்களுக்கு இடம் குடுக்கலன்னு யாரு சொன்னா?” மெலிதாக முணகினாள்.
“கேட்கல” என்று அவளின் வாயோரம் காதை வைத்தான்.
“ஒரு முறை தான் சொல்ல முடியும்” என்றவளின் நாசியில் ஆணவனின் வாசம் ஏற பதறிப் போனாள்.
ஆனால் கங்குவனுக்கோ பெண்ணவளின் வாசம் போதையை கொடுக்க, இன்னும் அவளை நெருங்கி வந்து வாசம் பிடித்தான்.
அதில் கூச்சம் எழ, தவித்துப் போனவள்,
“நான் வீட்டுக்கு போகணும்” என்றாள்.
“பிள்ளை முழிச்சு உன்னை தேடுனா என்ன பண்றது?” என்றவனின் விழிகளிலோ அவனை விட நான் தான்டி உன்னை தேடுவேன் என்று சொல்லியது.
அதை உணர்ந்துக் கொண்டவளுக்கு லேசாக கடுப்பு தான் வந்தது.
நல்ல நிலையில இருக்கும் போது எரிஞ்சு விழுந்து முறைப்பாரு. தண்ணிய போட்டா மட்டும் முத்தம் குடுக்க வேண்டியது, காதல்னு உளற வேண்டீயது. கண்ணுலையே கற்பழிக்க வேண்டியது முணகியவள்,
“அதெல்லாம் தேட மாட்டான். நான் கிளம்புறேன்” என்றவள் வெளியேப் போக பார்க்க,
“என்னையும் தூங்க வை” என்று போனவளை பிடித்து இழுத்து நிற்க வைத்தவன் அவள் மீதே சரிந்தான்.
“ஐயோ வெயிட்டா இருக்கீங்க.. முதல்ல என் மேல இருந்து எழுந்திறீங்க” அவனை விலக்கி விடப் பார்க்க, ம்ஹும் அவளால் ஒன்றும் முடியவில்லை.
சரியாக அவளின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு நின்று விட்டான். மொத்த பாரமும் அவளின் மேனி மீது இருந்தது.
“மூச்சு முட்டுதுங்க” தவித்துப் போனாள்.
“ம்ம்ம்” என்றானே தவிர எழுந்த பாட்டை காணோம்.
“ஐயோ இப்படியே போனா என் நிலைமை என்னத்துக்கு ஆகும்.. முதுகு வேற பின்னாடி வளையுது”
“ப்ச் நொய்யி நொய்யினுட்டு இருக்காதடி” அவளின் கழுத்தில் பற்கள் பட கடித்து வைத்தான்.
“ம்மா” என்று அலறினாள்.
“இதுக்கு மேல நான் இங்க இருந்தா அவ்வளவு தான்.. நானே மயங்கி இந்த மனுசன் கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்கிடுவேன் போல” சொல்லிக் கொண்டவள் வேகமாய் அவனை பிடித்து விலக்கி விட்டு ஈர சேலையுடன் குளியல் அறையை விட்டு வெளியே வந்தாள்.
வந்தவளின் முந்தானையை பிடித்து இழுத்து நிறுத்தினான் கங்குவன். இவள் பயந்துப் போய் திரும்பிப் பார்க்க, போதை மொத்தமும் வடிஞ்சு போன நிலையில் நின்று இருந்தான் கங்குவன்.
பார்த்த உடனே அவனது மாற்றங்கள் புரிய, விக்கித்துப் போய் நின்றாள் அவனது பார்வையின் வீரியத்தில்.
“என் பாத்ரூம்ல என் கூட ஈர புடவையோட என்னடி பண்ணிட்டு இருக்க?” ஊசியாய் இறங்கியது அவனது கேள்வி.
அந்த கேள்விக்கு என்னவென்று பதில் சொல்ல, சில நொடி அமைதி காத்தவள்,
“வீட்டுல யாரும் இல்ல.. பிள்ளை தனியா தூங்கிட்டு இருந்தான். நானும் கிளம்புற நேரம், நீங்க வேற புல் மப்பு. பிள்ளையை யாரு பார்த்துக்குவா. அது தான் தெளிய வைக்க உங்களை பார்த்ரூமுக்கு கூட்டிட்டு வந்தேன்” என்றாள்.
“நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த போதையை ஏத்துனேன்னு உனக்கு தெரியுமாடி.. என்னவோ அசால்ட்டா தண்ணிக்கு அடியில நிக்க வச்சுட்டு கதை சொல்லிட்டு இருக்க” பல்லைக் கடித்தவன்,
“என் போதையை தெளிய வைக்க நீ யாருடி. உன்னை வான்னு நான் வெத்தலை பாக்கு வச்சு அலைச்சனா? இந்த தேவையில்லாம என் கிட்ட உரிமை எடுத்துக்குற வேலையெல்லாம் வச்சுக்காத. பிறகு நான் மனுசனா இருக்க மாட்டேன்” மேலும் அவன் சொல்ல, இவளுக்கு தான் கூனி குறுகிப் போன உணர்வு வந்தது. எதுவும் பேசாமல் அவன் கையில் இருந்த தன் முந்தானையை பிடுங்கிக் கொண்டு தன் போனை தேடி எடுத்தவள் அண்ணனுக்கு போன் போட்டபடியே அந்த வீட்டை விட்டு வெளியேறி போய் விட்டாள்.
போகும் அவளை தடுக்கவே இல்லை அவன். அவன் கண்களில் வைரம் மின்னியது. அதை யாருக்கும் காட்டாமல் தனக்குள் உள் இழுத்துக் கொண்டவன் மகன் படுத்து இருந்த அறைக்கு ஈர உடையுடனே சென்றவன் அவனின் காலடியில் எப்பொழுதும் போல தரையில் அமர்ந்து பிள்ளையின் காலில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
நெஞ்சுக்குள் அத்தனை அலுத்தம் அவனுக்கு. அதை யாரிடம் கொட்டி கவிழ்க்க என்று தெரியாமல் தனக்குள் போட்டு அழுத்திக் கொண்டு இருந்தான்.
கங்குவனின் வீடு வந்து சேர்ந்த இளந்திரையனோ தங்கையின் நனைந்த தோற்றம் கண்டு, பதறிப் போனான். அதுவும் அவளின் விழிகள் அழுது சிவந்துப் போய் இருப்பதை கண்டு,
“என்ன ஆச்சு பாப்பா..?” என்று வேதனையுடன் விசாரித்தான்.
“ஒன்னும் இல்லண்ணா.. வா போகலாம்” என்று அண்ணனை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு சென்றவளின் மனம் ஒரு நிலையில் இல்லை.
அதற்கு ஏற்றார் போல அடுத்த நாள் காலையில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது இளமாறன் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.
“இன்னைக்கு சாயங்காலம் நம்ம பாப்பாவை பொண்ணு பார்க்க வராங்க.. நம்ம சொந்தக் காரங்க தான். ஏற்கனவே நான் பையனை பார்த்துட்டேன். குறை சொல்ல முடியாத அளவுக்கு பையன் சூப்பரா இருக்கான். நம்ம வகையறாவுல பெரிய தலைக்கட்டு தான்” என்றவர்,
“இந்த சம்மந்தத்தை முடிக்கிற மாதிரி தான்” என்று மேலும் அவர் சொல்ல, வேரல் உண்டுக் கொண்டு இருந்த உணவு தொண்டையில் சிக்கியது.
விழிகளில் கண்ணீர் முத்துக்கள் நிரம்பியது. அதை ஓரக்கண்ணால் பார்த்த இளந்திரையனுக்கு நெஞ்சில் முள் தைத்தது.
Soooooo sad...... Pavam veral enpa ellarum avala pada paduthuranga?????? Kanguvan are u insane?????????
Sad about veral




