என்னை வெறுப்பேத்த வேண்டும் என்றே ரஞ்சனியின் பணிவிடைகளை ஏற்றுக்கொண்டால் என்ன ஆவது.
கூடவே அவன் அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் கோவத்தில் கொதித்து
“எல்லாம் உன்னால தாண்டி...” என்று சினந்து மொத்தமாய் தன்னைவிட்டு விலகி சென்றால் என்று எண்ணும்போதே பெரிதும் கலங்கி போனாள்.
அதுவும் அவன் சொன்ன சொல்... கண் முன் வந்து பயம் காட்டியது...
ஆதிக்கு உள்ளது உள்ளபடி அவனுக்கு அனைத்தும் வேணும். அதுவும் மயூவின் சின்ன கிறுக்கல், சின்ன முனகல் கூட அவன் வசம் ஆகவேண்டும் என்று எண்ணுபவன்.
அப்படி பட்டவனின் காதல் மொழிகளை தன்னவளுக்கு முழுதாய் உணரும்படி அவளிடம் அதித காதலுடன் ஒரு மாலை நேரத்தில் அவளது கரத்தை பற்றியபடி மொழிந்திருந்தான். அந்த மொழிகள் இப்பொழுதும் அவளது செவியோரம் ஒலித்துக்கொண்டே இருப்பது தோன்றியது.
கண் முன்னே தன்னவன், தன் இதயம் நிரம்பியவனை கைநழுவி செல்லும் நிலை. ஆதியை தன்னிடம் இருத்திக்கொள்ள மனம் துடியாய் துடித்து போனது.
இருவிழிகளும் நீரில் கரைந்து போக... பார்வை வட்டங்கள் மங்கி போய் அதன் வேலையை செய்ய முடியாமல் தடுமாறி போனது.
காரில் இருந்து கல்லூரிக்கு இறங்கி நடந்தவளின் செவியோரம் மன்னவனின் காதல் மொழிகளே ஒலித்துக்கொண்டு இருந்தது.
தன்னை கைவிட மாட்டான் என்ற எண்ணம் இருந்தாலும், தன்னவனுக்கு இன்னொரு துணையை அருகில் நிறுத்தி பார்க்கவே மனம் வேதனை கொண்டது.
ரஞ்சனி மத்திய அமைச்சரின் மகள். அவள் வேறு வகுப்பினரை சேர்ந்த ஒருவனை காதலித்துக்கொண்டு இருந்தாள். அதீத பழக்கத்தில் அவள் கருவுற்று விட்டாள்.
அதை எதுவும் அறியாமல், வர்மன் ரஞ்சனியை ஆதிக்கு மனம் முடிக்க ஆசை கொண்டு அதற்கு முயற்சியும் செய்தார்.
அது ஒரு பக்கம் நடந்துக்கொண்டு இருக்க... வர்மனுக்கு தன் மகள் வேறு ஒருவனை காதலிக்கும் விஷயம் கேள்வி பட்டு அவனை கதை தீர்த்து முடித்துவிட்டு, ரஞ்சனியை ஆதிக்கு முடிக்க கேசவனிடம் பேச தொடங்கினார்.
இடையில் ரஞ்சனி வேறு கருவுற்று இருக்க... இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்று எண்ணி கவலையுடன் இருந்தவளின் கண்களில் மயூ ஆதியோடு ஒரு மீட்டிங்கில் கலந்துக்கொண்டு இருக்கும் போது கண்டவள் மயூவிடம் பேசி பார்க்க வேண்டும் என்று எண்ணி, அவளையும் தனியாக மீட் பண்ணி அவள் சிக்கி இருக்கும் சூழலை சொல்லி, தன் கருவில் இருக்கும் ‘காதலனின் குழந்தயை காப்பாற்றுமாறு’ என்று உதவி கேட்டாள்.
அவளுக்கு மனம் இறங்கிய மயூ... ஆதியிடம் சண்டை இட்டு ரஞ்சனியை ஏற்றுக்கொண்டு, பின் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்று ஆதி ரஞ்சனி கல்யாணத்தை நடத்த முயன்றுக்கொண்டு இருக்கிறாள்.
இதுவே ரஞ்சனி ஆதி மற்றும் மயூவின் இடையில் வந்த காரணம். மயூவை பொறுத்த வரை ரஞ்சியின் கரு முக்கியம்.
ஆதியை பொறுத்தவரை மயூ முக்கியம்... விளையாட்டுக்கு கூட அவளை விட்டு விலகமுடியாது என்று உறுதியுடன் இருக்கிறான்... அதுவும் மயூ செய்த ஒரு செயல்.... அதுவும் சீதாவின் முன்னிலையில் நடந்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை ஆதியால் மறக்கவே முடியாமல் அவனது நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கிறது.
அவனது வேதனை தெரிந்தாலும் அவனை விட அதிகமாக தனது செயலால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். ஏன் அந்த காரியத்தை செய்தோம் என்று எண்ணி எண்ணி மாய்ந்து வேதனை பட்டுக்கொண்டு இருக்கிறாள்.
அவள் வேதனை படுகிறாள் என்று அறிந்தாலும் ஆதி அவளை வருத்துவதை தவிர்க்க முடியாமல் கோவம் வரும் சமயம் அவளை அதிகமாக காயம் செய்துக்கொண்டு இருக்கிறான்.
இதெல்லாம் முடிந்து எப்பொழுது தான் இருவரும் காதலுடன் சேர்வார்களோ... தெரியவில்லை...
ஆதிக்கு கோவம் வந்தால் அது எல்லை கடந்து தான் வருகிறது... என்ன செய்வது அவனுடைய மேக் அப்படி... அதை தாங்க முடியாமல் மயூ சில சமயம் துவண்டும் போகிறாள்.
தனது அறைக்கு வந்தவள் எந்த வகுப்புக்கும் செல்லாமல் கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றாள். கண் முன் சில விஷயங்கள் வந்து செல்ல... தளர்ந்த மனதை இறுக்கி உருதியாக்கிக் கொண்டவள், இதழ்களில் சின்ன புன்னகை ஒன்றை தவழவிட்டுக்கொண்டாள்.
அதன் பின் மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாட வேளை வர... அட்டிட்டியுட் வகுப்பை சிறப்பாக செய்து முடித்தவள் மற்ற கல்லூரிகளுக்கு விசிட் செய்து மாலை நேரம் ஆதியின் அலுவலகத்துக்கு சென்றாள்.
அங்கு ஆதி கடும் கோவத்துடன் பசி கொண்ட சிங்கமாய் சிலிர்த்துக்கொண்டு நடை போட்டுக்கொண்டு இருந்தான். அவனது கோவத்தை கிளாங் சொல்ல...
“நான் பார்த்துக்குறேன்...” என்றவள் உள்ளே நுழைந்தாள்.
வந்தவளின் முன் உயர் ரக டபை தூக்கி போட்டான். அதில் ஓடிக்கொண்டு இருந்த காணொளியை உன்னிப்பாக கண்டாள்.
“ஆதி... இது...”
“எலி பொறியில மாட்டிகிச்சு... மேடம் இப்போ என்ன ஸ்டேப் எடுக்க போறீங்கன்னு தெருஞ்சுக்கலாமா...?” ஆவேசத்துடன் கேட்டவனை ஆழ்ந்து பார்த்தவள்,
“ஆதி...” என்றாள்.
“கடுப்ப கிளப்பாமா போய்டுடி... வந்துட்டா பெருசா... எல்லாம் உன்னால தாண்டி. ஒழுங்கா நான் தா...” ஏதோ சொல் வந்தவன் அதை முடிக்க முடியாமல் தனது தொடையிலே கைகளை மடக்கி குத்திக்கொண்டவன் அவளை முறைத்து பார்த்தன்.
அவனது கோவத்திற்க்கான காரணத்தை உணர்ந்தவள், எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றாள்.
அவன் குற்றம் சாட்ட சாட்ட, மயூ குற்ற உணர்வினால் எதையும் பேசமுடியாமல் நின்றாள். அவளது அந்த மௌனம் கூட அவனை சிதைக்க அவளது தலைமுடியை பற்றி தன் அருகில் இழுத்தவன் கனலை கக்கும் விழிகளுடன் அவளது விழிகளை உற்று நோக்கியவன்,
“வர்மன் ஏதாவது செய்யறதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும். இல்லன்னா கடைசி வரை நான் உனக்கு சொந்தமாக மாட்டேன்... எனக்கு ரஞ்சனியோட கல்யாணம்னு செய்தி வெளிய பரவ ஆரம்பிச்சுடுச்சுன்னா அதை மாத்த உன் மாமா கேசவன் சம்மதிக்க மாட்டாரு.”
“தொழில் பிரச்சனை அதிகம் வரும். வர்மன் இது தான் சாக்குன்னு ரஞ்சனியை ஏமாத்திட்டோம்னு எல்லாரையும் நம்ப வச்சு, நாடகமாடி, நிரந்தரமா நம்ம வீட்டுல வாழ வச்சிடுவாரு... சோ நேரம் குறைவா இருக்கு மயூ... ஏதாவது செய்யணும்... சொல்லு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா...?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்கள் கலங்கி நின்றாள்.
அவளது அந்த மௌனம் அவனை வெறியடைய செய்ய அப்படியே பிடித்து கீழே தள்ளிவிட்டான். அதில் நிலை தடுமாறி விழுந்தவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.




