Notifications
Clear all

அத்தியாயம் 31

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்னை மட்டுமே நினைக்கும் படி செய்வேன்...” என்று சொல்லியவன் சிறிது இடைவெளி விட்டு “உன் வாழ் நாள் முடியும் வரை...” என்று தோரணையாக சொல்ல அதில் அவளுக்கு ஆதி முதல் அந்தம் வரை சப்த நாடியும் ஒடுங்கி போனது.

“ஆதி....” என்று திகைத்து போய் அவனை அழைத்தாள்.

“சாம்பிள் காட்டவா...” என்றவன், நிதானமாக அவளது கூந்தலை விடுத்து அவளை மொத்தமும் தன் கரங்களுக்குள் அள்ளிக்கொண்டவன் அவனது மெத்தையின் மீது கிடைத்தி அவள் மீது அதை விட நிதானமாக பரவி படர... மயூவினுள் திறக்காத பல உணர்வு நரம்புகள் விடைத்துக்கொண்டு உணர்வுகளை தூண்டி விட ஆதியின் கைகளில் களிமண்ணாய் மாறி போனாள்.

ஆதி அவளை கிடத்தி அவள் மீது படர்ந்து அவளது கழுத்தில் தன் இதழ்களை புதைத்து குறுகுறுப்பு ஊட்டி, காற்றை ஊதி, மீசையால் மேலும் கீழும் என்று அவளது கழுத்தை சுற்றி ஊர்கோலம் போக புழுவாய் துடித்து போனாள் மயூ...

படுக்கையின் விரிப்பை பற்றுக்கோலாய் பற்றி கசக்கி எடுத்துக்கொண்டு இருந்தவள், ஆதியின் அடுத்த செய்கையில் படுக்கையை விடுத்து தன்னவனை இறுக்கி பற்றி அவனை மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தன் நெஞ்சோடு இருக்க அணைத்துக்கொள்ள ஆதியின் இதழ்களில் வெற்றி புன்னகை ஒன்று தவழ்ந்தது.

அடுத்த நொடி அவளிடமிருந்து விலகி எழுந்து அமர்ந்தான். அவன் விலகளை கூட உணராமல் அவன் இன்னும் தன் மேல் தான் இருக்கிறான் என்ற உணர்விலே முகத்தை தலையணையில் பக்கவாட்டில் புதைத்துக்கொண்டு உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்க பார்த்தாள்.

அவளது அந்த உணர்வு குவியலை பார்க்க பார்க்க தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் அவள் மீது மறுபடியும் தொப்பென்று வந்து விழுந்தான் ஆதி.

அவனது அந்த திடீர் செயலில் தான் அவன் தன் மேல் இல்லை... என்பதே உணர்ந்தவள் மீண்டும் அவன் வந்து மோகிக்க உணர்வு விழிப்பிலிருந்து வெளி வந்தவள் தன்னவனின் முகத்தை பார்த்தாள்.

அங்கே மோகம் குடிக்கொண்டு இருக்க... அவனை விலக்க மனமில்லாமல் மீண்டும் அவனது தொடுகையில் இலயிக்க தொடங்கினாள். அவளின் இடையிலிருந்த உடையை சற்றே மேலேற்றி விட்டு அங்கு தன் முகத்தை பதித்து லேசாய் கடிக்கவும் செய்தான் ஆதி.

அதில் அவளது உடல் சிலிர்த்து அடங்க... அவளின் உணர்வுகள் உச்ச நிலைக்கு சென்றது... ஆதிக்கு சொல்லவே வேண்டாம்... தன்னவளின் மென்மையான உடலில் முகம் பதித்தவனுக்கு மொத்தமுமாய் அவள் வேண்டும் என்கிற பித்தம் தலைக்கு ஏற... அவளிடம் ஒட்டு மொத்தமாய் சரணடைந்து கிடந்தான்.

அந்த நேரத்தில் அவனது அறையில் இருந்த டெலிகாம் அடிக்க முதலில் இருவருமே அதை கவனிக்கவில்லை. தொடர்ந்து இரண்டு முறை அடிக்க சற்றே அந்த சத்தத்தில் கலைந்தார்கள் இருவரும்.

எடுத்து பேசியவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது..

“வாட் இந்த நேரத்துலையா...?” கடுப்படித்தான். அவனது வார்த்தையில் கலைந்தவள், படுக்கையிலிருந்து எழுந்து இரவு உடையிலிருந்த அவிழ்ந்த மூன்று பட்டன்ங்களை போட முனைந்தாள்.

கழுத்தில் ஒரு பட்டனும், இடையில் இருந்த இரு பட்டனும் ஆதியால் கழட்டப்பட்டு இருந்தது. மற்றைய பட்டன்ங்கள் ஆதி கழட்டாமல் இருந்ததில் அவனது உள்ளம் எவ்வளவு உயர்ந்ததாய் இருக்கும் என்பதற்கு அந்த இரண்டு பொத்தான்கள் சாட்சியாய் நின்றது. அதில் அவனின் மீது இன்னும் அதிக காதல் நிரம்பி வழிந்தது.

“கொஞ்சம் கூட சென்சே இல்லையா உங்களுக்கு. அதும் இந்த நேரத்துல.. இது என்னோட ப்ரைவேட் நேரம் தெரியுமா தெரியாதா...?” என்று மேலும் கடுப்படித்தான்.

அந்த பக்கம் இருந்த சீதாவோ “எனக்கு தெரியும் ஆனா அவங்களுக்கு தெரியுமா...?” என்று கடுப்படித்தார்.

 “ம்ம்ம் வரேன். பட் திஸ் இஸ் அ பஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்...” என்று காய்ந்தான்.

அவனால் இந்த சந்திப்பை மறுக்க முடியும் தான்... ஆனால் அவனுக்கு காரியம் ஆகணுமே... அதனால் வேண்டா விருப்பமாய் கிளம்பினான்.

இரவு உடையில் இருந்தவன் அதை மாற்றிவிட்டு பார்மல் உடைக்கு தாவினான்.

“எதுக்கு இப்போ இதை மாத்துநீங்க...” என்றபடி அவளது உடையை சரி பண்ண... அவளது கரங்களை தட்டிவிட்டு அவனே அவளுக்கு அந்த பட்டன்ங்களை  போட்டு விட்டவன்,

“நீ எனக்கு பார்த்து வச்சியே ஒரு பொண்ணு அவ வந்து இருக்கா... கூடவே அவ அப்பனும்... அவ முன்னாடி இப்படியே போய் நிக்க சொல்றீயா...?” என்றான் கடுப்பாக.

அதை கேட்டவுடன் மயூவின் முகம் சுருங்கி போனது. ஆனால் அவன் கடைசி சொன்ன வரியில் அவளது முகம் மலர்ந்த பூவாய் விரிந்தது புன்னகையில்.

“ம்கும்... என்னை பார்க்க வரதுக்கே இவ மூஞ்சி சுருங்கி போச்சி... இதுல இவ என்னை அவகிட்ட தாரை வார்த்து குடுக்க போறாளாக்கும்...” முணகியவன், அவளது முகம் எதற்கு மலர்ந்தது என்று அறிந்தவனின் நெஞ்சில் ஈரம் சுரந்தது தன் மனையாளின் மீது...

அவளை கை பிடித்து அழைத்து சென்றான் கீழே.. இருவரும் ஒன்றாய் வருவதை பார்த்து சீதா நொடித்துக்கொண்டார்.

“இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல...” இவர் முணகிக்கொண்டு, இருவரையும் தன் அருகில் அமர்த்திக்கொண்டார்.

நீண்டு விரிந்து இருந்த கூடத்தின் நடுவில் போடப்பட்டு இருந்த இருக்கையில் ரஞ்சனியும், அவளது தகப்பன் மத்திய தொழில் துறை அமைச்சருமான அசோக வர்மனும் ஒரு புறம் அமர்ந்து இருக்க... இன்னொரு புறம் மனு, முகில் இருவரும் அமர்ந்து இருந்தார்கள். ரோகிணி, ரேணு இருவரும் இன்னொரு புறம் அமர்ந்து இருந்தார்கள்.

அவர்களின் எதிர் புறம் சீதா, மயூ, ஆதி மூவரும் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள்.

வந்தவர்களை வாங்க என்று கூட கேட்காமல்

“என்ன விசயமா அதும் இந்த நேரத்துல...” சீதாவே பேசினார்.

அதில் அசோகன் அவமானம் கொண்டாலும், “இல்ல கேசவன் சார் அந்த ரயில் பெட்டி விசயமா...” என்று முடிக்கும் முன்பே

“அந்த டீல் பேசி முடிச்சு திறப்பு விழா வரை வந்திடுச்சே...” என்று பட்டென்று சீதா மேற்கொண்டு அவரை பேசவிடாமல் சொல்லிவிட,

அது தான் அசோகனுக்கும் தெரியுமே. தொழில் துறையில இருந்துட்டு இது கூட தெரிந்து வைத்திருக்க மாட்டாரா...? அவர் வந்தே அவருடைய பெண்ணின் கல்யாண விஷயம் பேச தானே... அதை நேரடியாக சொல்ல முடியாமல் சுற்றி வளைத்துக்கொண்டு இருந்தார்.

 

Loading spinner

Quote
Topic starter Posted : October 15, 2026 9:44 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top