“தூங்காம இங்க என்ன பண்றீங்க...?” கேட்டபடியே வந்தாள் வேரல்.
“நான் தூங்கியே பல நாள் ஆகிடுச்சுடி.. நீ இன்னைக்கு தூங்காம இருக்குறதை பத்தி கேட்கிற” என்றவனை எப்படி எதிர் கொள்ளவது என்றே அவளுக்கு தெரியவில்லை.
“இப்படி விதாண்டாவாதமா பேசுனா நான் என்ன பதில் சொல்றது..”
“நீ எதுவும் பேச வேண்டாம்..” என்றான்.
“அப்புறம் எதுக்கு போன் பண்ணீங்க...”
“ம்ம் தெரியாம கை பட்டுடுச்சு.. போதுமா?” என்றான் எரிச்சலாக.
“அதெப்படி ஒவ்வொரு நாள் இரவும் சரியா தெரியாம கை பட்டுடுமா?”
“என் கை என் போனு.. தெரிஞ்சு படுது தெரியாம படுது.. உனக்கு என்னடி?” முறைத்தான்.
“ஆனா கால் வர்றது எனக்கு...” பல்லைக் கடித்தாள்.
“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்றவன் அங்கு போட்டு இருந்த கல் பெஞ்சில் போய் அமர்ந்தான். நடுவில் அமர்ந்தவன் பின் நகர்ந்து ஓரத்தில் அமர்ந்தான்.
அதன் அர்த்தம் நீயும் வந்து உட்காரு என்று.
“இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல” முணுமுணுத்துக் கொண்டவள் அவனின் அருகில் நாகரீக இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
அவனிடம் நீண்ட மௌனம்.. எதுவும் பேசவில்லை. அதை அவளும் கலைக்க முன் வரவில்லை.
அப்படியே சில கணங்கள் நகர்ந்தது. பின் தன் அருகில் அமர்ந்து இருந்தவளை திரும்பி பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்து இவளும் திரும்பி பார்த்தாள்.
“என்ன ஆச்சு?” என்று மட்டும் கேட்டாள்.
“ட்ரிங்க்ஸ் பண்ணி இருக்கேன்” என்றான்.
“இதென்ன புதுசா.. தினமும் நடக்குறது தானே” என்றாள் அவள்.
“ஆனா இன்னைக்கு என்னால குடிக்க முடியல.. உன் அண்ணன் கம்பெல் பண்ணதுனால தான் குடிச்சேன்” என்றான்.
“இதுக்கும் அதுக்கும் என்ன பெரிய வித்யாசம்.. காரணம் வேறன்னாலும் குடிச்சது நீங்க தானே..” என்றவளின் பேச்சில் இருந்த உண்மை அவனை சுட்டது.
மௌனமாகி விட்டான் மீண்டும்.
பின் அவனே கொஞ்சம் தெளிந்து, “என் மகனுக்கு என்னால ஏன் ஒரு நல்ல அட்மாஸ்பியர தர முடியாம போச்சு..?” அவளிடம் கேட்டான்.
இதற்கு அவள் என்ன பதில் சொல்வது. ஏற்கனவே கோவத்தில் இருக்கும் பொழுதே அவனிடம் எடுத்து சொல்லி இருந்தாள். அப்பொழுது எல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளாமல் இப்பொழுது காரணத்தை கேட்கிறான்.
“அதுக்கு காரணமே நீங்க தான்” என்றாள்.
“குடியை பத்தி பேசாத..” என்றான்.
“ப்ச் நீங்கன்னா நீங்க குடிக்கிறதை மட்டும் பத்தி பேசல. குடிச்சுட்டு அவன் கிட்ட பண்ற அலப்பறையை சொல்றேன்.. யார் கிட்டையும் நெருங்க பயப்படுற உங்க குணத்தை சொல்றேன். எல்லாத்திலும் தனிமையை நாடுற உங்க கேரக்டரை சொல்றேன்.. அது மட்டுமா சின்ன பிள்ளை கிட்ட நீங்க உங்க முரட்டு தனத்தை காட்டுறீங்க.. அவனோட மிங்கிள் ஆகாம என்னவோ எதிரியா நினைச்சு அவனை உங்களை விட்டு தள்ளி வச்சு இருக்கீங்க..”
“எது எதிரியா?” என்று அவன் முறைக்க,
“சரி எதிரி இல்ல.. ஆனா அவனோட என்னைக்காவது ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கீங்களா? சொல்லுங்க.. இல்ல அவனோட சேர்ந்து விளையாடி இருக்கீங்களா? அட்லீஸ் ஒரு பத்து நிமிடம் அவன் இருக்குற இடத்துல நீங்க இருந்து இருக்கீங்களா? இப்படி எதுவுமே பண்ணாம இருக்குற உங்களை என்னன்னு சொல்றது..” என்றவள்,
“அவனோட முழு தனிமையும் போக்குற சக்தி உங்கள் நெருக்கத்துல தான் இருக்கு.. எவ்வளவு தூரம் அவனோட டைம் ஸ்பென்ட் பண்றீங்களோ உங்களோட இந்த தனிமை உணர்வும் கூட போகலாம்.. ஒரு முயற்சி பண்ணி பாருங்க.. அவனுக்கு யாரும் இல்லன்னு பீல் பண்ணாம அவனுக்கு எல்லாமா நீங்க இருக்க முயற்சி பண்ணுங்க. நல்ல அட்மாஸ்பியற வெளில இருந்து தேடாம நீங்களே அவனுக்கு குடுக்க பாருங்க..” என்றவளை எதுவும் பேசாமல் சில நொடிகள் ஏறிட்டான்.
“நான் தூங்கனும்” என்றான்.
அவள் சில நொடிகள் விக்கித்துப் போனாள். ஏன் இதை தன்னிடம் சொல்கிறான் என்று எண்ணாமல்,
“இங்க படுக்குறீங்களா இல்ல கீழ படுக்குறீங்களா?” என்று மட்டும் கேட்டாள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் கீழே கட்டாந்தரையில் நீட்டி நிமிர்ந்து படுத்து விட்டான். அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள்,
சுவரில் சாய்ந்துக் கொண்டு,
“கதை சொல்லவா?” என்று கேட்டாள்.
“ம்ம்” என்று மட்டும் சொன்னவன் கண்களை மூடிக் கொண்டான் அழுத்தமாக.
இவள் கதை பாதி சொல்லி இருப்பாள். ஆனால் அவனுக்கு தூக்கமே வரவில்லை.
“ப்ச் தூக்கமே வரலடி” என்றான்.
“ம்கும் இதே கதையை உங்க பையன் கிட்ட சொல்லி இருந்தா இந்நேரம் பாதி தூக்கத்துக்கு போய் இருப்பான்..” நொடித்துக் கொண்டவள்,
“சரி பாட்டு பாடுறேன்” என்றாள்.
“எதையவது பண்ணி என்னை தூங்க வை” என்றவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.
“லாலி லாலி லாலி லாலோ” என்று அவள் பாட ஆரம்பிக்க அந்த பனி விழும் நடு இரவு பொழுதில் வண்டுகளின் ரீங்காரம் கூட அடங்கி ஒடுங்கி இருக்க, நடு வானில் நிலா தன் கதிர்களின் ஒளி குன்றிப் போய் மேகத்துக்கு நடுவில் ஒளிந்து இருக்க, வெளிச்சமற்ற பொழுதில் அவளின் மயக்கும் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டு இருந்தது.
பாதி பாடல் கூட நிறைவு பெற்று இருக்காது.. அதற்குள் அவனிடம் இருந்து மெல்லிய குறட்டை ஒலி பிறந்தது.
“தூங்கியாச்சா” தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு மனம் எந்த நிலையில் இருக்கிறது என்றே வரையறுக்க முடியவில்லை. பாடலை நிறுத்தி விட்டு, காலை மடித்து முட்டியில் முகம் வைத்து தூங்கும் அவனை விழி எடுக்காது சிறிது நேரம் பார்த்து இருந்தாள்.
என்னவோ போல மனம் பிசைந்தது. வார்த்தையில் அவளால் வரையறுக்க முடியவில்லை. முதல் நாள் கங்குவனை பார்த்ததற்கும் இப்பொழுது அவனை பார்பதற்கும் தான் எவ்வளவு வித்யாசம்.
அவன் அப்படியே தான் இருக்கிறான். அதே ரகட் குணம். தான். யாருக்கும் அடங்காத திமிர் குணம் தான். நான் என்கிற அகங்காரம் கொண்டவன் தான். ஆனா பொழுதும் அவனை நெருங்கி பார்க்கும் பொழுது அவனின் மீதான கருணை அல்லவா அவளின் நெஞ்சில் சுரக்கிறது.
அவனின் அகங்காரம் கூட அவளுக்கு பிடித்தமானதாக போய் விடுமோ என்று உள்ளுக்குள் ஒரு பயம் உருள்கிறதே.. அதை யாரிடம் சொல்லி விளக்கம் பெறுவது..
Love starts




