Notifications
Clear all

அத்தியாயம் 34

 
Admin
(@ramya-devi)
Member Admin

பழத்தோட்டம், காய்கறி தோட்டம், மர வகைகள், தென்னை, பனை மரம் என பெரிய பண்ணையமே இருந்தது உள்ளுக்குள். கிட்டத்தட்ட நூறு ஏக்கருக்கு மேலாக இருந்தது அந்த இடம். அதோடு உள்ளேயே ரெண்டு ஏக்கர் பரப்பில் இரண்டு ஏரியும் இருந்தது. அது போக ஐந்து ஆறு வற்றாத கிணறுகள் இருந்தது. ஆழ்துழாய் கிணறும் நான்கு இருந்தது.

மாட்டு கொட்டகை, ஆட்டு பட்டி, நாட்டு கோழி பண்ணை, வாத்து பண்ணை, இயற்கையாகவே மயில் வரும் பறவை கூட்டங்கள், அதில் மயில் குயில் எல்லாமே அடக்கம், முயல் பண்ணையும் வைத்து இருந்தார்கள். அதை எல்லாம் சுற்றி பார்க்க நான்கு நாட்கள் முழுதாக வேண்டும். குதிரை லாயமும் இருக்கிறது. அதில் மூன்று மட்டுமே தற்சமயம் உள்ளது.

சொன்னது பாதி தான். இன்னும் நிறைய உள்ளுக்குள் இருந்தது. எல்லாத்துக்கும் தனி தனி ஆட்களை போட்டு சரிவர கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கு நிரந்தரமாக பணி புரிய மூன்று நாக்கு கால்நடை மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியாட்கள் என அங்கு பணி புரிபவர்கள் மட்டும் நூறுக்கு மேல் உள்ளார்கள்.

அந்த பண்ணையின் நடுவில் பழமையும் சேராது நவீனமும் சேராது நடுதர அளவில் வீடு இருந்தது. இரண்டடுக்கு மாடி வீடு.

சமையல் செய்ய அங்கு ஆட்கள் எப்பொழுதும் இருப்பார்கள். மேனேஜ்மென்ட் ஆட்கள் அந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் சின்ன சின்ன வீடுகளில் தங்கி இருக்கிறார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு உடம்பு ரொம்ப அசதியாக வர,

“கண்ணா கொஞ்ச நேரம் தூங்கலாம்டா.. ரொம்ப டையர்டா இருக்கு” பிள்ளையிடம் சொன்னவள்,

“ண்ணா நான் தூங்க போறேன்.. நோ டிச்டபென்ஸ் ஓகே.. நேத்திக்கு நைட்டும் என்னை தூங்க விடல.. சோ நான் தூங்க போறேன்” என்றாள்.

“நீ மட்டும் போய் தூங்கு.. சாம் எங்களோட இருக்கட்டும்” என்று இளந்திரையன் சொல்ல,

“சாம்.. நீ மாமாவோட போறியா?” என்று பிள்ளையிடம் கேட்டாள்.

“நேனாம்..” என்று அவளின் கழுத்தை கட்டிக் கொண்டான்.

“நான் பார்த்துக்குறேன்.. நீங்க போய் என்ஜாய் பண்ணுங்க.. பட் லிமிட்டோட இருங்க..” இருவருக்கும் பொதுவாக சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்து பிள்ளைக்கு லேசாக உடம்பு கழுவி விட்டுட்டு, தானும் குளித்து இரவு உடையான டீ சேர்ட்டும், பேண்ட்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

வந்தவளிடம் பிள்ளை தாவ, அவனை தூக்கிக் கொண்டு படுக்கையில் போய் விழுந்தாள் வேரல்.

“கதை யேனும்” என்றவனை தன் கையை நீட்டி அதில் படுக்க வைத்து தன்னோடு நெருக்கிக் கொண்டு அவனுக்கு கதை சொல்ல ஆரம்பித்தாள்.

“கண்ணா கண்ணு ரொம்ப சொக்குது.. தூக்கம் வந்தா அப்படியே தூங்கிடுறேன். எழுப்பாதடா” சொல்லி விட்டு பாதி கதை கூட சொல்லி இருக்க மாட்டாள் தூங்கி விட்டாள்.

அதுவரை ம்ம்ம் கொட்டி கதை கேட்டுக் கொண்டு இருந்தவன் அவள் தூங்கவும் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்து அவளின் நெற்றியில் முத்தம் வைத்து அவளுடன் சுருண்டுக் கொண்டான். சிறிது நேரத்திலே அவனும் தூங்கி விட்டான்.

இங்கே கங்குவனும் இளந்திரையனும் உடைகளை கழற்றி விட்டு வெறும் பாக்சரோடு கிணற்றில் தொப்பென்று குதித்தார்கள். உடல் அலுக்கும் வரை இருவரும் நீச்சல் அடித்து விளையாடி கிணற்றில் இருக்கும் மீனை பிடித்து இரவு உணவுக்கும் நைட் சரக்குக்கும் சைட்டிஷாக மாற்றிக் கொண்டார்கள்.

நன்றாக குளித்து முடித்து வெளியே வர,

“மாப்பிள்ளை எப்படி இருந்துச்சு..” என்று தலையை துவட்டியபடி கங்குவனிடம் கேட்டான் திரையன்.

“செம்மடா.. ஒரு மாதிரி பிரெஷ் பீல் கிடைச்ச மாதிரி இருக்கு..” என்றான்.

“ம்ம்.. எனக்கும் இப்படி தான் இருக்கும் நான் இங்க வர்ற ஒவ்வொரு முறையும்” சொன்னவன்,

“சமைக்கலாமா?” கேட்டான்.

“தெரியாதுடா..”

“வாடா.. பார்த்துக்கலாம்” என்று சொன்னவன் வீட்டுக்கு வெளியே ஓப்பேன் கிட்சேன் மாதிரி இருந்த இடத்தில் அடுப்பு எல்லாமே இருக்க,

“மீன் மட்டும் சுடலாம்.. மத்தது எல்லாம் குக் பாத்துக்குவாங்க” என்றவன், அரைத்து வைத்த மசாலாவை கிளீன் செய்த மீனில் தடவி க்ரில் அடுப்பில் கம்பியில் குத்தி வேக விட்டான் திரையன்.

கங்குவன் ஆளுக்கு ஒரு பியர் பாட்டிலை எடுத்து வந்தான். செர்வ் பண்ண ஆட்கள் வர, தடுத்து விட்டு தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

மீன் ரெடியாக அந்த இரவு நேரத்தில் குளுமையான சுற்று சூழலில் பியர் அடித்துக் கொண்டே கிரில் செய்த மீனை வாசம் பிடித்துக் கொண்டே சாப்பிட்டார்கள்.

“லைபை நல்லா என்ஜாய் பண்றடா” கங்குவன் சொல்ல,

“என் தாத்தா அப்பாக்கிட்ட இருந்து கத்துக்கிட்ட விசயம்டா இது. என்ன தான் சம்பாரிச்சாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நம்ம மனதுக்குன்னு சில மணி நேரங்களை ஒதுக்கணும்.. சில நாட்களை ஒதுக்கணும்னு சொல்லுவாங்க..”

“எனக்கு தான்டா அப்படி யாரும் இல்ல..” என்றான் கங்குவன்.

“டேய் பீல் பண்ணாதடா..” அவனின் தோளை தட்டினான்.

“ப்ச் பீல் எல்லாம் இல்லடா.. ஆனா ஒரு குடும்ப அமைப்பே இல்லாம வாழ்ந்துட்டு இருக்கோம் நானும் என் பையனும். இதுக்கு முன்னாடி நான் அதை பத்தி எல்லாம் யோசிச்சதே இல்லடா... ஓட்டம் ஓட்டம்னு காலுல சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓடிட்டு இருந்தேன். இப்பவும் அப்படி தான். என்னைக்கு உண்ண பார்த்தானோ அப்பவே என் லைப் ஸ்டைல் மாறுன மாதிரி இருக்கு. எல்லாத்துலையும் ஒரு நிதானம் வந்த மாதிரி இருக்கு.. ஆனா எங்களுக்குன்னு எங்களை அரவணைச்சுக்க யாருமே இல்லடா..” பெருமூச்சு விட்டான் கங்குவன்.

“சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணிடு மாப்பிள்ளை.. இந்த ஏக்கம் எல்லாம் பறந்து போயிடும். உங்ளுக்காக உங்க ரெண்டு பேருக்காக ஒரு பொண்ணு வீட்டுல காத்துட்டு இருந்தா இந்த தனிமை எல்லாம் காணாம போயிடும்” என்றான் இளந்திரையன்.

“ப்ச் இன்ட்ரஸ்ட்டே இல்லடா.. ஏற்கனவே சூடு பட்டாச்சு” நீண்ட மூச்சை எடுத்து விட்டவன்,

“நண்பன்னு கூட இதுவரை யாரும் இருந்தது இல்ல.. மனசு விட்டு பேசக் கூட ஆளில்ல..” என்றவனை சற்றே வேதனையுடன் பார்த்தான் திரையன்.

“நீ ஏன்டா இவ்வளவு ஹார்டா இருக்க.. கொஞ்சம் இளகி இருந்தா தான் என்னவாம்..” என்றவன்,

“உன்னோட இறுக்கம் தான் பலரை உன்னை விட்டு விலக்கி வச்சு இருக்கு.. நீ கொஞ்சம் தாழ்ந்து போடா” என்றான்.

“ப்ச் அது தான் வர மாட்டிக்கிதேடா.. நான் என்னவோ வேணாம்னு சொல்ற மாதிரி தான்..” என்றான் அவன் கடுப்புடன்.

“ரொம்ப கஷ்ட்டம்டா உன்னோட.. சரியான காட்டு பயலா வாழ்ந்துட்டு இருக்க.. உன்னோட சேர்த்து என் மருமகனையும் அப்படியே வளர்க்க பார்க்கிற” முறைத்தவன்,

“ரொம்ப ரப் அண்ட் டப்பா இருக்காதடா.. வளைஞ்சு போய் பாரு.. வாழ்க்கை ரொம்ப இனிமையா இருக்கும்” சொன்னவன்,

“சியரப் மேன்.. உன்னை மாத்த சீக்கிரமா ஒரு பொண்ணு கண்டிப்பா உன் வாழ்க்கையில வருவா.. இந்தா அதுக்கான ட்ரீட்” என்று வருத்த மீனை அவனிடம் நீட்டினான் திரையன்.

ஒரு முறை முறைத்தாலும் அதை வாங்கி வாயில் போட்டவன்,

“செம்ம டேஸ்ட் மச்சி.. நல்லா சமைக்கிறடா” பாராட்டினான்.

“இது மட்டும் தான்டா தெரியும்.. மத்தபடி வேற எதுவும் தெரியாது.. ஆனா எங்க வீட்டுல ஜென்ஸ் குக்கிங்னு ஒரு வாரம் செய்வோம்.. அப்பா தாத்தா எல்லாரும் கலக்குவாங்க.. அம்மா பாட்டி வேரல் மூணு பேருக்கும் அன்னைக்கு நாங்க என்ன சமைகிறமோ அது தான் சாப்பாடு.. செம்ம பன்னா இருக்கும்” சொன்னவனின் பேச்சில் கங்குவனுக்கும் உள்ளுக்குள் ஆசை பிறந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ம்ம் கொட்டிக் கொண்டு இருந்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருக்க போறீங்க.. சாப்பிடலாம்.. எங்க ரெண்டு பேருக்கும் பசி வந்திடுச்சு..” என்று பிள்ளையோடு வந்தவள்,

“அண்ணா நீ செய்ததா..” என்று சொல்லிக் கொண்டே அங்கு க்ரில் செய்து இருந்த மீனை பிட்டு வாயில் போட்டவள் பிள்ளைக்கும் முள் இல்லாது எடுத்து ஊட்டி விட்டு,

“செம்ம டேஸ்ட் ண்ணா..” பாராட்டவும் செய்தாள்.

“ஆமா மாமா.. மீனு ஜெம்மா டேஸ்ட்” என்று பிள்ளையும் சப்புக்கொட்டி பாராட்ட, அவனை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்ட திரையன்.

“மாமா செஞ்சது தம்பிக்கு அவ்வளவு பிடிச்சு இருக்காடா கண்ணா.. இனி உனக்கு நான் தான் மீன் செஞ்சு தருவேனாம்.. என்னோட சாம் சமத்து பிள்ளையா சாபிடுமாம்.. டீல் ஓகே..”

“ஓகே மாமா” என்று சொல்லி அவனின் கன்னத்தில் முத்தம் வைத்து சிரித்தான்.

தன் பிள்ளை இவர்கள் இருவரோடும் மிக இயல்பாக ஒன்றிக் கொண்டதை பெருமூச்சு விட்டுப் பார்த்தவனுக்கு அதை கெடுக்க மனம் வரவில்லை.

அவனாவது சந்தோசமா இருக்கட்டுமே என்று எண்ணிக் கொண்டான் கங்குவன்.

சாப்பிட்டு முடித்து விட்டு தூங்க செல்ல, நாடு இரவில் கங்குவனிடம் இருந்து இவளுக்கு போன் வந்தது.

ஒரே வீட்டுல இருந்துக்கிட்டு எதுக்கு போனு யோசித்தவள் வெளியே வர, மொட்டை மாடியில் அரவம் கேட்டது.

அவனாகத்தான் இருக்கும் என்று மொட்டைமாடிக்கு போக, இருளில் கையை கட்டிக் கொண்டு நின்று இருந்தான் கங்குவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 14, 2026 10:45 am
Anitha ashok reacted
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top