Notifications
Clear all

அத்தியாயம் 26

 
Admin
(@ramya-devi)
Member Admin

காற்று அடித்து ஓய்ந்த நொடி நேரம் போல இருவரது தனிமை பயணமும் முற்று பெற்று மும்பைக்கு வந்து சேர்ந்தார்கள்.

இவர்கள் இருவரும் வரும் நேரம் சரியாய் கேசவனும் சீதாவும் வீட்டில் இருந்தார்கள். மற்றவர்கள் நால்வரும் வேலையாக சென்று இருந்தார்கள்.

ஆதி தன் வேக நடையுடன் எப்பொழுதும் போல கம்பீரமாக வர, அவனுடன் உடன் சேர்ந்து மயூவும் எப்பொழுதும் போல நிமிர்வாக தன் நிதானமான நடையில் உள்ளே வந்தாள்.

இருவரையும் சேர்த்து பார்த்த கேசவனுக்கு கட்டுகடங்காமல் கோவம் பெருகியது.

“ஆதி... நீ என்ன நினைச்சுக்கிட்டு இப்படி எல்லாம் பண்ற...” அவனை தேக்கியபடி கேட்டார்.

அவரை உருத்து விழித்தவன், “யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்ல...” என்றவன் நில்லாமல் போய்விட, ஆத்திரம் பெருகியது கேசவனுக்கு.

மிக முக்கியமான மீட்டிங்கை சரி வர கொண்டு செல்லாமல், பாதியிலே நிறுத்திவிட்டு இவன் பாட்டுக்கு வந்தது ஒரு எரிச்சல் என்றால், அடுத்தது அவ்வளவு கஷ்டப்பட்டு அடுத்த மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்தால், அதை பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் எனக்கென்று மெத்தனமாக சுற்றுபவனை காணுகையில் இன்னும் இன்னும் கோவம் வந்தது.

ஏதோ மயூராவா இருக்க போய் இந்த மீட் நல்ல படியாக முடிந்தது. இல்லை என்றால் அதுவும் கேசவனும் வர முடியாத சூலில் அந்த ஆர்டர் கை நழுவி போவதோடு அவருடைய வாழ் நாள் கனவு வெறும் கனவாகவே போய் இருந்து இருக்கும்.

பிசினெஸ் வேல்டில் நுழைந்த பின் கவனம் முழுவதும் பிசினெஸில் மட்டுமே இருக்க வேண்டும். அதை தவிர வேறு எதிலும் அதிக பற்றோ பாசமோ வைக்க கூடாது என்பது அவரது எண்ணம்.

குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் தான். ஆனால் பிசினெஸில் ஒரு மீட்டை மிஸ் பண்ணினால் கூட பலகோடி வருமான இழப்பு நேரிடும், அதோடு முன்னணியில் இருக்கும் நிறுவனம் என்கிற பேர் காணமல் போய்விடும். இது போதை மயக்கம்.

இந்த இடத்தை தக்க வைக்க ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல்... அந்த சுழலில் சிக்கிய கேசவனுக்கு ஆதியின் இந்த போக்கு பெரும் சினத்தை கிளறி விட்டு இருந்தது.

அவர் வாழ்ந்து முடித்தவர், அதனால் பிசினெஸில் பிடித்தம் வைத்துக்கொண்டார். ஆனால் ஆதி அப்படி இல்லையே... அவனுக்கு சொத்து, சுகம், பேர், மமதை, போதை எல்லாவற்றையும் விட அவனுடைய வாழ்க்கை பெரிதாய் தெரிந்தது.

அவனுடைய பிடித்தமே அவனது வாழ்க்கையாக மாற்றிக்கொண்டான். அதில் அப்பா மகன் இருவரும் எதிரெதிர் துருவம் தான்.

உணர்வுகளுக்கு முக்கியம் குடுக்காத கேசவன், தன் குடும்பத்தை எதுக்காகவும் ஏங்க விட்டதோ இல்லை பாசத்திற்கு பஞ்சம் வைத்ததோ கிடையாது... ஆனாலும் ஆதியிடம் காணும் அந்த உணர்வு பூர்வமான நிலை கேசவனிடம் இருக்காது.

அந்த இடத்தில் ஆதி மிகவும் சரிந்து தான் போனான். அதை தான் கேசவனும் சுட்டி காட்டினார்.

கேசவனுக்கு உண்மை தெரிந்து இருந்தால் “உனக்கு மயூ தான் வேணும் என்றால் எடுத்துக்கோ.. இப்பவே ரஞ்சனியுடனான திருமணத்தை நிறுத்துகிறேன்” என்று தான் சொல்லுவார். ஆனால் அவருக்கு உண்மை தெரியாமல் மயூ தான் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

இதெல்லாம் தெரிந்தால் கேசவன் என்ன முடிவு எடுப்பாரோ...?

அதற்க்கு முன் இன்னும் ஒருவர் தன் கண்களை அகல விரித்து எதிரே இருந்த அவருடைய மருமகளை முறைத்துக்கொண்டு இருந்தார். யாருன்னு தானே கேக்குறீங்க... நம்ம சீதா அத்தையே தான்.

கேசவன் இருக்கவும் அவரால் எதையும் உடைத்து பேசமுடியவில்லை. வெறுமென வாயை அசைத்து

“என் அறைக்கு வா...” என்றவர் கேசவனின் கவனத்தை கலைக்காமல் எழுந்து சென்றார். அவரை தொடர்ந்து மயூவும் அவரின் பின்னாடியே சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவளின் கைகளில் ஒரு கவரை திணித்தார் சீதா.

என்ன அது என்று பிரித்து பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை...

“எதுக்கு அத்த இந்த போட்டோ... இதெல்லாம் யாரு...?” என்று கேட்க

“இதெல்லாம் நான் உனக்கு பார்த்த மாப்பிள்ளைகள்... இதுல இருக்க யாராவது ஒருத்தரை நீ தேர்ந்து எடுத்து தான் ஆகணும் மயூ. இனிமேலும் உன்னை தனியா இருக்க வைக்க முடியாது.”

“ஆதி எப்போ எதை செய்வான்னு என்னால கணிக்கவே முடியல. அதனால தான் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்...” என்றவரை வேதனையுடன் பார்த்தவள்,

“எனக்கு எத்தனை முறைதான் அத்தை கல்யாணம் செய்து வைப்பீங்க...” என்றாள் ரணத்துடன்...

“அது வேணான்னு தானே தனியா இருக்க.. இப்போ உன்னை அப்படி தனியா விட முடியாது மயூ. சொன்னா புருஞ்சுக்க... ஆதி நல்லா வாழணும்னு நினைக்கிறியா...? இல்லையா...?” கடுமையாகவே கேட்டார் சீதா...

“என்ன அத்த இப்படி பேசுறீங்க... அவரு நல்லா இருக்கணும்னு என்னை விட வேறு யாரு நினைப்பா... அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அத்தை. அதுக்காக நான் என்னவேணாலும் செய்வேன்..”

“ஆனா அதுக்காக என்னை வேறு ஒருவரை கல்யாணம் மட்டும் செய்ய சொல்லாதீங்க அத்தை. அதை என்னால செய்ய முடியவே முடியாது..” அழுகையுடன் சொன்னவளை முறைத்து பார்த்தவர்,

“அப்போ நீ ஆதி கண்ணுல படாம எங்காவது போய் இரு...” என்றார்..

அதை கேட்டவளுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை... சிறு வயதிலிருந்து விடுமுறைக்கு கூட யாருடைய சொந்த காரா வீட்டுகளுக்கும் இவளை அனுப்பியதே கிடையாது சீதா...

வெளிநாடு சுற்றுலா என்று எங்கு சென்றாலும் அவளை தன் கைக்குள்ளே வைத்துக்கொண்டு தான் சுத்துவார். அப்படி பட்டவர், இன்றைக்கு கண் காணாமல் எங்காவது செல் என்று சொல்ல மயூவால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

“நீங்களா அத்தை பேசுறீங்க...” திகைத்து போனாள். அதுவரை கண்களில் இருந்து வந்துக்கொண்டு இருந்த கண்ணீர் முற்றிலும் வற்றி விட்டது போல சட்டென்று அதிர்ச்சியில் நின்று போனது.

“ஆமா நானே தான் பேசுறேன்... என்னை இப்படி பேச வச்சது யாரு... நீ தானே... எத்தனை முறை சொல்லி இருப்பேன். இந்த கல்யாணம் வேணான்னு. ஒரு முறையாவது நான் சொன்னதை கேட்டியா...? நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்குறதுன்னு உன் இஷ்டத்துக்கு தானே செஞ்ச... அதனால நீ இப்போ நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும்.” என்றார் உறுதியாக.

“அத்தை அதுக்குன்னு இப்படி ஒட்டு இல்லாம உறவில்லாம எங்கேயோ போக சொல்றது நியாயமா...?” குழந்தை போல கேட்டவளை பார்க்க பார்க்க சீதாவின் நெஞ்சில் ரத்தம் கொட்டியது. ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை. இதை இவர் செய்து தான் ஆகவேண்டும்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 6, 2026 10:16 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top