Notifications
Clear all

அத்தியாயம் 11

 
Admin
(@ramya-devi)
Member Admin

காதலனின் சின்ன ஆசையை கூட அவளால் நிறைவேற்ற முடியாதா...? ஆனால் நான், அவள் கேட்டாள் என்று என் மனதை கூட கல்லாக்கிக்கொண்டு அவள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு இதோ, ரஞ்சனியை திருமணம் செய்ய போகிறேனே... இது தானே காதல்... இந்த செயலிலே காதலின் சூட்சமம் புலனாகிறதே... அப்போ அவளது காதல் வெறும் வார்த்தை மட்டும் தானா..? என் மீது உண்மையான காதல் இல்லையா...? ஏனோ மனம் கிடந்து தவித்து தள்ளாடிக்கொண்டு இருந்தது...

அவன் என்னவெல்லாம் நினைத்தது மறுகுவான் என்று அறிந்தவளுக்கு மனமெல்லாம் புண்ணாகி போனது..

எத்தனையை தான் நானும் சமாளிப்பேன் என்று தடுமாரியவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் சரம் தொடுக்க ஈஸ்கியூஸ் கேட்டுக்கொண்டு பாத்ரூமுக்கு சென்று கதறி தீர்த்தாள்.

“எனக்கு மன்னிப்பே கிடையாது ஆதி... உங்க உணர்வுகளை தெரிந்தே கொலை செய்துக்கொண்டு இருக்கிறேன்... உங்க அன்புக்கு முன்னாடி என் அன்பு ஈடாகவே முடியாது...” என்று கதறியவள் தன் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு நீரில் அடித்து கழுவியவள் வெளியே வந்தாள்..

அவளது ஓய்ந்து போன தோற்றத்தை கண்டு ப்ரின்சி என்ன என்று விசாரிக்க...

“நத்திங்.. ஜஸ்ட் ஹெடேக்...” என்றவள் வந்த கெஸ்ட்டை உபசரித்துவிட்டு உடனே கிளம்பிவிட்டாள்.

அவ்வளவு வேதனையிலும் அவளுடைய காரை கல்லூரிக்கு அனுப்பி வைத்திருந்தான் ஆதி..

அந்த செயலில் இன்னும் நொறுங்கியவள், வாய்விட்டே கதறி அழுதுவிட்டாள் அவனது அன்பை எண்ணி. போகும் போதே அவனது பியேவிடம் ஆதி எங்கே இருக்கிறான் என்று விசாரித்துக்கொண்டாள்.

அதன் படி அவன் இருக்கும் இடத்துக்கே வண்டியை விட்டவள், அவனை தேடி சென்றாள் அந்த அழகான பீச் ஹவுசின் நீச்சல் குளத்தை தேடி...

அங்கே தன் ஆத்திரம் முழுவதையும் நீரில் காட்டிக்கொண்டு நீந்திக்கொண்டு இருந்தவனை கண்டு இதயம் கனத்து போனது.

கொஞ்சமும் யோசியாமல் கைபையை அங்கிருந்த புள் தரையில் வீசியவள் அந்த நீச்சல் குளத்தில் அப்படியே குதித்தாள்.

தவம் போல நீந்திக்கொண்டு இருந்தவனுக்கு நீரில் தொப்பென்று யாரோ விழும் அரவம் கேட்க திரும்பி பார்த்தான்.

அங்கே அவனுடைய இதயம் திருடிய காதலி நீரில் பாதி அமிழ்ந்து மீதி வெளியேவும் நின்றுக்கொண்டு இருந்தாள்.

அவளை அங்கே எதிர் பார்க்காதவன் லேசாய் அதிர்ந்தாலும் அவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மீண்டும் தன் நீச்சல் பயிற்சியை தொடர்ந்தான். அதில் மனம் காயப்பட்டு போனாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு அவனை நோக்கி நீந்தினாள் மயூ..

அவள் தன்னிடம் தான் வருகிறாள் என்பதை உணர்ந்தவன் முன்பை விட வேகமாக நீந்த தொடங்கினான்.

அந்த ஸ்விம்மிங் பூலே வித்யாசமாக இருக்கும்... சுற்றிலும் பளிங்கு கற்களால் ஆனா ஒரு முழ தொட்டிகளில் ஆங்காங்கே குட்டி குட்டி செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது.

அதிலிருந்து கொஞ்சம் கீழே ஒரு ஜான் அளவில் ஆங்காங்கே நீர் வீழ்வது போல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். அதற்கு கீழ் சமதளத்துடன் நீச்சல் குளம் இருக்கும். அதிலும் ஒரு பக்கம் நீண்ட அகலமான படிக்கட்டுகள் அமைய பெற்று இருக்கும்... அதிலிருந்து நழுவி நீந்தி சென்றால், நீச்சல் குளத்தின் நடுவில் இதய வடிவில் இளைப்பாறும் இடம் இருக்கும்... ஒவ்வொரு பளிங்கிலும் அழகான வேலைபாடுகள் நிறைந்து இருந்தது.

சாய்வு இருக்கைகள் இரண்டோடு, கல் இருக்கைகள் இரண்டு போடப்பட்டு சின்ன சின்னதாய் டீப்பாய் போல ஆங்காங்கே பளிங்கு கல்லினால் ஆன குட்டி மேடை போடப்பட்டு அதில் தேவையான பானங்களோடு சிற்றுண்டிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.

மாலை நேர ஊத காற்றில், அங்கே அமர்ந்து ஒரு காபி குடித்தால் போதும்.. எவ்வளவு தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தாலும் அந்த கணம் மனம் அப்படியே கரைந்து காணமல் போய்விடும்... அந்த அளவு அமைதியையும், குளுமையையும், கலை உணர்வுகளையும்  தன்னுள் கொண்டு இருந்தது அந்த இடம்...

ஆதி மட்டும் அதற்கு தனி ஒரு விளக்கம் கொடுப்பான் மயூவிடம்... இந்த நீர் எல்லாம் உதிரம்... இந்த உதிரத்தின் உள்ளே இரு இதயம் எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும்... ஆமாம்... இதில் இரண்டு இதயம் கோர்த்து இருப்பது போல இருக்கும்... கீழிருந்து பார்த்தால் அதன் வடிவம் சரிவர புரியாது..

ஆனால் கட்டிடத்தின் மேல் நின்று அதை காணும் போது உள்ளே இன்னொரு இதயமும் இருப்பது புலனாகும்... இதை வடிவமைத்தது ஆதி தேவன் தான்.

தன் மயூரா தேவிக்காக... அவனே பார்த்து பார்த்து கட்டிய இடம் இது... அதனால் யாருக்குமே இங்கு அனுமதி கிடையாது.

மயூவுக்கு மட்டும் தான் இங்கே எந்நேரம் என்றாலும் அனுமதி உண்டு... இது என்று இல்லை. ஆதியுடைய அத்தனையும் மயூவுக்கு தான்.

அவளுக்கு தராமல் அவனிடம் ஒன்று கூட இருந்தது இல்லை. இனிமேல் இருக்கவும் முடியாது... அந்த அளவு திறந்த புத்தகமாய் இருப்பான் தன்னவளிடம்...

அதை அவளிடமும் எதிர் பார்ப்பான்.. மயூவும் அவனிடம் அப்படி தான். அவனை விட ஒரு படி மேலே என்று தான் சொல்ல வேண்டும்...

அந்த கலைநயம் மிக்க நீச்சல் குளத்தில் தலைவன் ஊடல் கொண்டு வேகமாய் நீந்த, பெண்ணவளோ அவனது ஊடலை தீர்க்கும் வகையில் அவனை நாடி நீந்திக்கொண்டு சென்றாள்.

மயூவால் அவனை பிடிக்க முடியவில்லை... அவ்வளவு வேகமாய் நீந்திக்கொண்டு இருந்தான். அரை மணி நேரம் நீந்தியும் அவனை பிடிக்க முடியாமல் சோர்ந்தவள், வட்டமாய் இருந்த இதய மேற்பரப்பில் அப்படியே படுத்துவிட்டாள் தளர்ந்து போய்...

தன் பின்னாடி எந்த அரவமும் கேட்காமல் போக திரும்பி பார்த்தவன் அவள் அவன் பின்னாடி வராமல் இருப்பதை கண்டு நீரிலிருந்து தலையை மட்டும் தூக்கி பார்த்தான்.

இதய பரப்பில் உடைகள் முழுவதும் நீரில் நனைந்து அவளுடைய வனப்பை முழுமையாக காட்டிக்கொண்டு இருந்தது... கூடவே அவனை எப்பவும் மயக்கும் அவளது இடை சேலை விலகி அப்பட்டமாய் தெரிந்துக்கொண்டு இருந்தது.

அதை பார்த்தவனுக்கு குளிர்ந்த நீர் சட்டென்று சூடாக்கி போனது போல ஒரு உணர்வு...

அவளிடம் போக துடித்த உடலை அடக்க முடியாமல் நீரில் அமிழ்ந்து அமிழ்ந்து வெளியே வந்தவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவளிடம் காற்றை விட வேகமாக வந்தான்...

அவனது அருகாமையை உணர்ந்தவள் பட்டென்று கண்விழித்து நீரில் தொப்பென்று குதித்து அவனை நோக்கி நீந்தினாள்.

அவளிடம் இந்த அசைவை பார்த்த ஆதி அசையாமல் நீரில் மிதந்தான் தன் அசைவுகளை நிறுத்திக்கொண்டு...

அவன் அப்படியே நிற்ப்பதை கண்டவள் முன்பை விட வேகமாக நீந்தி அவனின் முன்பு வந்து நின்றாள். அவள் நீந்தி வந்த வேளையில் அவளது மாராப்பு சற்றே ஒரு பக்கமாய் ஒதுங்கி இருப்பதை கண்டவனுக்கு மேலும் சூடாகி போனது.

முந்தானை இடுப்பில் சொருகி இருக்க, அதன் இடையில் தெரிந்த ஸண்ட் கிளாஸ் வளைவான இடுப்பில் கண்களை பத்தித்து அதன் தன்மையை உணரவேண்டும் என்று கரங்களும் உதடுகளும் துடியாய் துடித்து போனது...

ஏதோ இன்றைக்கு தான் அவளை புதுசா தொடப்போகிறவன் போல அவனது உள்ளம் தடதடத்து ஏகத்துக்கும் ஏக்க மூச்சு விட்டது...

“மாப்பு கேட்க....” என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே அவளது வார்த்தைகள் எல்லாம் அவனது இதழ்களுக்குள்ளே அடங்கி போனது. அதை எதிர் பாராதவள், அவனை கண்கள் விரித்து பார்க்க, அவளை இன்னும் தன்னோடு நெருக்கியவன், அவளது இடையில் இருந்த உடையின் உள்ளே தன் கரங்களை விட்டு அவள் இடுப்பின் மென்மையை உணர்ந்தான்.

மென்மையை உணர்ந்தவனுக்கோ அதை இன்னும் இறுக்கி பிடித்து தன்னுடனே வைத்துக்கொள்ள மனம் துடிக்க தன் முரட்டு பிடியில் அவளது இடுப்பை வளைத்து பிடித்தவன் அவளை அப்படியே தலைக்கு மேல் தூக்கி தன் இதழ்களை அவளது இடையில் புதைத்தான்.

நீரிலிருந்து சட்டென்று மேலே உயரே தூக்க பிடிமானத்துக்கு அவனது தோள்களை பிடித்துக்கொண்டவள், அவனது செயல்களில் கூச்சம் தாளாமல் அவனது பிடியிலிருந்து நழுவி அவனது வெற்று மார்போடு சரிந்தாள்.

சரிந்தவளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி பிடித்தவன், அவளை திருப்பி அவளது கழுத்தில் இருந்த நீர் துளிகளை தன் அதரத்தில் உரிய, அவன் காட்டிய சுகத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

 

Loading spinner

Quote
Topic starter Posted : September 20, 2026 11:19 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top