பிள்ளையை பற்றி கேள்வி எழுந்த பொழுதும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய பேச்சை தொடர்ந்தான் கங்குவன்.
அடுத்த ஹாப் இயருக்கு செய்ய வேண்டிய வேலைகள், அதற்காக ப்ரைவேட் ஸ்கூல் சார்பா கவர்மெண்டுக்கு வைக்கப்படும் டிமேண்ட்ஸ் என்னென்ன என்று அவன் ஒவ்வொன்றையும் சொல்ல எல்லாவற்றையும் கவனமுடன் கேட்டுக் கொண்டு இருந்தார்கள் அங்கிருந்த அனைவரும்.
ஒவ்வொரு ஸ்கூலுக்கும் ஒரு ஒரு ஸ்கேல் இருக்கும் அதன் அடிப்படையில் சில சீட்டுகள் ப்ரீ சீட் கோட்டாவில் விடப்படும். அதன் சதவீதத்தை குறைக்க தங்களது தரப்பில் இருந்து அரசுக்கு பிரஷர் குடுப்பது பற்றி, பீஸ் ரெட்யூஸ் பற்றி, அண்டு அதை எவ்வளவு தூரம் தீர்மானிக்கிறது என்று ஒரு செட் ஆப் டாக்கிங், அண்ட் ஸ்கூல் வைஸ் நடக்கும் இன்டெர் காம்பெட்டிஷன் ஸ்கூல் ப்ரோக்ராம், டூர், ஸ்டாப் க்வாளிபிகேஷன், அட்மிஷன் லெவலில் இருக்கும் டீட்டைய்ல்ஸ், சில ஆர்கனைஸ் வாலண்டியர்ஸ் பற்றி, ஸ்கூல் அவேர்நேஸ் ப்ரோக்ராம் பற்றி என எல்லாமே டிஸ்கஸ் பண்ணப் பட்டது.
எல்லோரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து அலசி ஆராய்ந்து என மேலும் பேச்சு வார்த்தை நீண்டுக் கொண்டே போனது. இடையிடையே கொறிக்க குடிக்க என விருப்பப்பட்டது வந்தது.
நைட் டின்னெர் வரை இழுக்க, டின்னரும் அங்கேயே அரேஞ் ஆனது.
சமரனுக்கு ஊட்டி விட்டபடி வேரல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். மகனின் முகம் சரியில்லை என்பதை புரிந்துக் கொண்டாலும் இப்பொழுது அவனிடம் செல்ல பெரும் தயக்கமாக இருந்தது.
வேரல் அழைத்து வந்தது அவனின் மகன் என்று அங்கு இருந்த யாருக்கும் தெரியது. பெரிதாக எந்த இடத்துக்கும் மகனை அழைத்துச் செல்ல மாட்டான். முதல் முறையாக வேரலின் ஸ்கூல் ஓப்பெனிங்க்கு தான் அழைத்து வந்து இருந்தான். எனவே வேற யாருக்கும் தெரியவில்லை.
இப்பொழுது அவர்களை நெருங்கினால் நிச்சையம் இது பேசு பொருளாக மாறிவிடும் என்று தள்ளியே நின்றான்.
அதை புரிந்துக் கொண்ட வேரல், சமரனிடம் சொல்லி விட்டாள்.
அவன் சிட்டு குருவியாய் தலை நிமிர்த்தி அவளை பார்த்தாள்.
“நோடா.. கண்ணா.. டோன்ட் க்ரை. என் பேபி ரொம்ப ஸ்ட்ராங்.. சாப்பிடுங்க.. நான் ஊட்டி விடுறேன்” என்று பார்த்து பார்த்து ஊட்டி விட்டாள்.
தூரத்தில் இருந்து அவர்களின் உடல் மொழிகளை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு உள்ளுக்குள் உணவு இறங்கவில்லை. போனை எடுத்து பார்த்து இருந்தான்.
மகனின் போனில் இருந்து பல முறை அழைப்பு வந்து இருந்ததும். அதை தொடர்ந்து வேரலும் அழைத்து இருப்பது தெரிய என்ன பிரச்சன்னையாக இருக்கும் என்று இவனுக்கு தலையை வெடித்தது.
எல்லோரும் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு கிளம்ப, வேரல் தாமதித்து நின்றாள்.
இறுதியாக எல்லோரும் விடை பெற்று கிளம்பி விட, வேகமாய் இவர்கள் இருவரிடமும் வந்தான் கங்குவன்.
“என்ன ஆச்சு?” எடுத்த எடுப்பிலே அவன் அவசரப்பட,
“இங்க வச்சு பேசலாமா?” என்று எம்ப்டியாக இருந்த ஹாலை பார்த்து கேட்டாள்.
“வெளில போகலாம்” என்று முன்னாடி நடந்தான்.
மகனை பார்த்து கை நீட்டினான். அவன் வராமல் இவளின் முந்தானையை பிடித்துக் கொள்ள, என்ன நினைத்தானோ ஒன்றும் சொல்லாமல் தன் காரில் ஏறிக் கொண்டான்.
அவனது காரை தொடர்ந்து தன் காரை செலுத்தினாள் வேரல். ட்ரைவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள்.
இருள் கவிழ்ந்த யாருமில்லா ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கினான்.
அவன் காரை நிறுத்தவும் இவளும் காரை நிறுத்தி விட்டு,
“ஹெட்செட்ல சாங் போட்டு இருக்கேன் கண்ணா. கேட்டுட்டே இதுல கலரிங் பண்ணுங்க.. நான் அப்பட்டா பேசிட்டு வரேன்” என்று தன் ஹென்பேகில் எப்பொழுதும் வைத்து இருக்கும் குட்டி நோட்டையும் க்ரையான்சையும் அவனிடம் கொடுத்து விட்டு, ஹெட்செட் ஒன்றை எடுத்து அவனது தலையில் மாட்டி விட்டு, அவனுக்கு பிடித்த கார்டூன் சாங்சை போட்டு விட்டு வெளியே வந்தாள்.
“என்ன ஆச்சு?” அம்பின் பாய்ச்சலை விட அதி வேகமாக கேட்டான்.
“எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல” என்று ஆரம்பித்த வேரல் நடந்தததை எல்லாம் அவள் சொல்லி முடிக்க, விழிகளில் சிவப்பு நிறம் கூடிப்போய் தொண்டை குழி ஆத்திரத்தின் உச்சியில் ஏறி இறங்க, நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டு வர, அத்தனை ஆக்ரோஷமாய் நின்று இருந்தான் கங்குவன் பெயருக்கு ஏற்றபடி.
“காம்டவுன் மிஸ்டர் கங்குவன்.. உங்க பீலிங்க்ஸ் புரியுது.. ஆனா” என்ற நேரமே,
“ஆனா என்னடி.. ஆனா என்ன.. இப்படி ஒரு கேவலமான செயலை என் பிள்ளைக்கு முன்னாடி அந்த பண்ணாடா நாயி பண்ணி இருக்கா என்னை காமா இருக்க சொல்ற..” என்று இவளிடம் வெடித்தான்.
“ஐயோ நான் காமா இருக்க சொல்றேன்னா இப்ப உங்க கூட உங்க மகன் இருக்கான். அதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு எதா இருந்தாலும் வெளிப்படுத்துங்க. அவனுக்கு நாம என்ன பேசுறோம்னு புரியாது. ஆனா உங்க கோவத்தை அவனால் பார்க்க முடியும் தானே” என்றவளை விழிகள் சிவக்க பார்த்தவன்,
“அதுக்காக அந்த நாய்ங்களை சும்மா விட சொல்றியா?”
“உங்களை யாரு சும்மா விட சொன்னா.. எனக்கு வந்த கோவத்துக்கே அவங்க ரெண்டு பேரையும் கன்னம் கன்னமா அறைஞ்சுட்டேன். அப்போ நீங்க எவ்வளவு கோவப்படனும்னு நான் அளவு வைக்கல. ஆனா இப்போ வேணாம்.. நான் சமரை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ப்ராப்ளம் எல்லாம் சால்வ் பண்ணிட்டு வந்து கூப்பிட்டுக்கோங்க. ஏற்கனவே அவன் பார்க்க கூடாததை எல்லாம் பார்த்துட்டான் கங்குவன்.. இதுக்கு மேல உங்க கோவத்தை பார்த்தா அவன் என்ன நிலைக்கு போவானோ அதை நினைக்கவே எனக்கு பயமா இருக்கு.. சோ ப்ளீஸ்.. இந்த ஒரு முறை பிள்ளையை என் கூட அனுப்பி வைங்க. அவனுக்கு உங்க கோவத்தை பார்க்கிற சக்தி இல்லை” என்றாள்.
அவள் சொன்னது பாதி தான் காதில் விழுந்தது. மத்தது எதுவும் காதிலே விழவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் காதெல்லாம் அடைத்துப் போனது அவனுக்கு.
ஏன் என் பிள்ளைக்கு இந்த நிலைமை.. அவன் இதெல்லாம் பார்க்க கூடிய வயசா... ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசில் கூனி குறுகி நிற்கிறானே.. என பெற்றவனாய் அவனது உள்ளம் படாத பாடு பட்டுப் போனது.
அது மட்டுமா இதற்கு எல்லாம் காரணம் நான் தானே கண் மூடி தனமாக பணியாளர்களை நம்பினது என் குற்றம் தானே.. யாரையும் எதையும் சந்தேகிக்காது விட்டது இப்பொழுது தன் மகனின் நிலையையே கேள்வி குறியாக்கி விட்டதே..
கழிவிரக்கத்தில் குமைந்துப் போனான். அவனது உள்ளம் கிடந்து தவிக்கும் தவிப்பை பார்க்க வேரலுக்கே பாவமாய் போனது.
“கங்குவன்” என்று அவனின் சோல்டரை தொட்டாள்.
“ஹாங்” என்று அதிர்ந்துப் போனான்.
“ப்ளீஸ்.. கங்குவன் இப்படி இருக்காதீங்க”
“நான் தான் தப்பு இல்ல” என்று அவன் அத்தனை வேதனையை உள்ளடக்கி கேட்ட கேள்வியில் இவளுக்கு நெஞ்சை பிசைந்துக் கொண்டு வந்தது.
“நோ இப்ப நீங்க ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய நேரம்.. இப்படி உடைஞ்சு போனா உங்களால எப்படி ஸ்டேப் எடுக்க முடியும்.. ப்ளீஸ் கங்குவன்.. ரிலாக்ஸ்” என்றாள்.
Interesting waiting for next ud
Good.... Waiting for next ud......





