Notifications
Clear all

அத்தியாயம் 19

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஏய் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். சொல்றது காதுல விழல. இங்க இருந்து போ” என்றபடி வேரலை நெருங்கி வர, பொலிறேன்று அவனின் கன்னத்திலே ஓங்கி ஒரு அரை விட்டாள் வேரல்.

--

“ஏய் என்னடி அடிக்கிற?” அவன் திரும்பி தாக்குவதற்குள் மீண்டும் கன்னத்திலே நான்கு அரை விட்டு இருந்தாள். அதில் நிலை குலைந்துப் போய் விட்டான் அவன்.

“ஏய் அவரை எதுக்குடி அடிக்கிற?” அந்த பெண் பாய்ந்துக் கொண்டு வர,

அவளையும் கன்னம் கன்னமாக அறைந்து இருந்தாள் வேரல்.

பிள்ளை மெதுவாக தலையை தூக்கி பார்த்தான். வேரல் கொஞ்சமும் அசையாமல் நின்ற இடத்திலே இருவரையும் மாறி மாறி அறைந்தது கண்டு ஆச்சரியமாகி போனான்.

அதுவும் தன்னை இது வரை மிரட்டி, அடித்து, தன் அறையை விட்டு வெளியே கீழே தள்ளி விட்டவனின் மூக்கிலே உதிரம் கொட்ட வைத்த வேரலை கண்டு பிள்ளைக்கு பெரும் பிரம்மிப்பாக இருந்தது.

“ஆன்டி இவன் என்னை அடிச்சுட்டான்” என்றான் புகாராய்.

“என்ன பிள்ளை மேல கை வச்சியா?” என்று கேட்டு வேரல் இன்னும் அவனை போட்டு அடித்தாள் அத்தனை ஆவேசமாக.

“கீழையும் பிடிச்சு தள்ளி விட்டான்” அவளின் கையிலும் இடுப்பிலும் இருந்துக் கொண்டு பிள்ளை புகார் மேல் புகார் வாசிக்க, இவளுக்கு மனது தாங்குமா?

“டேய் பரதேசி.. யார் பிள்ளை மேலடா கை வச்சு இருக்க.. இந்த விசயம் மட்டும் இவனோட அப்பாவுக்கு தெரியனும் உனக்கு அன்னையோட சாவு தான்” என்றவள் அவனை கீழே தள்ளி விட்டு அவனின் வயிற்றிலே நாலு உதை உதைத்தாள்.

“ஏய் நீ யாரும்மா.. எங்க இருந்து வந்து இங்க அதிகாரம் பண்ணிட்டு இருக்க.. முதல்ல வெளியே போ.” அந்த பெண் கொஞ்சமும் பயம் கொள்ளாமல் இவளிடம் எகிறிக் கொண்டு வர,

“கன்னம் கன்னமா வாங்குனது பத்தலையா உனக்கு?” கேட்ட வேரல்,

“மரியாதையா இந்த அறையை விட்டு வெளில போ” என்றாள்.

“ஏய் அதை சொல்ல நீ யாருடி” அந்த பணி பெண் கொஞ்சமும் அடங்காமல் வேரலிடம் சண்டைக்கு வர,

“பொறுமையா போகலாம்னு பார்த்தா நீ அடங்க மாட்டிக்கிற.. உனக்கு எல்லாம் புத்தி புகட்டுனா தான் சரி பட்டு வரும்” என்றவள்,

“கண்ணா கண்ணை மூடிக்கோ” என்று பிள்ளையிடம் சொன்னவள் அவனின் முகத்தை இழுத்து தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டவள்,

“அம்மா சொல்றவரைக்கும் கண்ணா கண்ணை திறக்கவே கூடாது சரியா? கூடவே காதையும் பொத்திக்கணும்” என்று அவனிடம் கேட்டுக் கொண்டவள், அவன் முகத்தை புதைத்துக் கொண்டதோடு, கண்ணையும் காதுகளையும் இறுக்கமாக மூடிக் கொண்டவனுக்கு அவள் சொன்ன அம்மா என்ற சொல் தான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

“நீங்க எனக்கு அம்மாவா?” அவனின் நெஞ்சுக்குள் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துப் போனது. ஆனால் வெளியே சொல்லிக்கவே இல்லை. தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டான்.

“சின்ன பிள்ளையை பார்த்துக்க சொன்னா அவனை பார்த்துக்குறதை விட்டுட்டு என்ன காரியம் பண்ணிட்டு இருக்க.. சின்ன பிள்ளைக்கு முன்னாடி இப்படி யாராவது நடந்துக்குவாங்களா? ச்சீ நீங்க எல்லாம் மனுசங்க தானா? கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா?” என்று கேட்டவளை அப்பாவும் அடங்காமல் தான் அந்த பெண் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“அதை எல்லாம் கேட்க நீ யாரு? இதென்ன உன் வீடா.. வீட்டு ஆளுங்களே என்னை எதுவும் கேட்க மாட்டாங்க.. நீ யாருடி என்னை அதிகாரம் பண்ண” கொதித்து எழுந்தவளை கண்டு,

“இந்த வீட்டோட எஜமானி போதுமா?”

“எங்க கழுத்துல தொங்க தொங்க தாலியை காணோம்.. ஒரு வேலை அவரோட வப்பாட்டியா?” என்றவளை அருவெறுப்புடன் பார்த்த வேரல்,

“மரியாதையா இந்த நிமிடமே இந்த வீட்டை விட்டு வெளில போ” என்றாள்.

“அதை சொல்ல நீ யாருடி.. என்னால எங்கயும் போக முடியாது.. என்னவோ நீ சம்பளம் குடுக்குற முதலாளி போல போக சொல்ற” என்று அத்தனை திமிராக சொன்னவளை கண்டு சீ என்று அறுவெறுத்துப் போனாள்.

இந்த கேடு கெட்ட ஜென்மங்களை கண்டு இவளுக்கு உடம்பு கூசிப் போனது.

இன்னும் அந்த பெண் உடையை எடுத்து மாற்றவில்லை. வெறும் போர்வையோடே கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் நின்று இருந்தாள். ஆனால் வேரலுக்கு தான் ஒவ்வாமையாகிப் போனது.

அவ்விடத்தில் நிற்பதே கேவலமாக உணர்ந்தவள், பிள்ளையை அழைத்துக் கொண்டு கீழே போய் விட்டாள்.

கீழே அங்கும் இங்குமாய் சில வேலையாட்கள் இருந்தார்கள். முதல் முறை வந்த மாதிரி நிறைய ஆட்கள் இல்லாமல் போக ஒரே கணத்தில் எல்லாவற்றையும் யூகித்துக் கொண்டாள்.

இங்கு இருந்தவர்களும் இந்த தப்புக்கு உடந்தையாகி இருப்பது தெரிய, நொந்துப் போனவள், பிள்ளையை இங்கு தனியே விடாமல் தன்னோடு அழைத்துக் கொண்டு கரஸ்பாண்டன்ட் மீட்டிங்குக்கு விரைந்தாள்.

அரைமணி நேரம் தாமதமாகி இருந்தது. கரஸ்பாண்டன்ட் மீட்டிங் பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்க வேகமாய் அங்கே சென்று மீட்டிங் ஹாலுக்கு விரைந்தாள்.

“மே ஐ கமின்” என்றபடி உள்ளே வந்தவளை எல்லோரும் தலையை திருப்பி பார்த்தார்கள். பிள்ளையோடு நின்று இருந்தாள் வேரல்.

ரொம்ப வெகு சிலரே வந்து இருந்தார்கள். இருபது முப்பது பேர் தான் மொத்தமே.

அதன் ஹெட்டே கங்குவன் தான் என்று இவளுக்கு தெரியாது. ஸ்கூல் தொடங்கும் பொழுது கூட அதன் பெர்மிட் வேலை, சங்கத்தில் சேர்வது என எல்லாம் அவளின் அப்பாவும் தாத்தாவும் பார்த்துக் கொண்டதால் இவளுக்கு தெரியாமல் போனது.

இங்கே வந்த பிறகு தான் இவன் தலைமை பொறுப்பில் இருப்பதே தெரிந்தது. அதுவும் அவன் அமர்ந்து இருந்த சீட் தான் அதையும் பறை சாற்றியது.

அவளின் கையில் தன் பிள்ளை இருப்பதை பார்த்து கண்கள் ஒரு கணம் இடுங்கியது.

பின் நிதானமாக தன் பேச்சை நிறுத்தியவன்,

“முக்கியமான மீட்டிங்குக்கு இப்படி தான் குழந்தையை கூட்டிட்டு வருவாங்களா மிஸ் நறுவேரல். இதுக்கு தான் சொன்னேன் இந்த மாதிரி அலட்டல் கேசுக்கு எல்லாம் பெர்மிட் குடுக்கதீங்கன்னு சொன்னேன்” எல்லோருக்கும் கேட்கும் படி சொன்னவனை வெறித்துப் பார்த்தவள்,

“ஐ ஆம் சாரி சார்.. இந்த ஒரு முறை மட்டும் எக்ஸ்க்யூஸ் பண்ணுங்க” என்றவளை, முறைத்துப் பார்த்தவன்,

“கோ ஹெட்” என்று விட்டு தன் பேச்சை தொடர்ந்தான் கங்குவன். ஆனால் உள்ளமெங்கும் இவ கையில எப்படி என் பிள்ளை வந்தான் என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : September 11, 2026 10:24 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top